பெண்கள் நீண்ட ஆயுள் வாழ்வது ஏன்?


ஆண்களைவிட பெண்களின் வாழ்நாள் அதிகம். இது ஏன்? இந்தக் கேள்விக்கு தற்போது விடை கிடைத்து உள்ளது. ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோ வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் சாகா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்து உள்ளனர்.

பெண்களின் ஜீன்கள் இதற்கு காரணமாக இருக்கிறதா? என்ற ரீதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சில எலிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சில எலிகள் வழக்கமான முறையில் கருத்தரித்து குட்டிகள் போட்டன.

மேலும் இரண்டு பெண் எலிகளில் ஆண் எலியின் வளராத உயிரணுவை ஆய்வக முறையில் செயற்கையாக வளர்த்து பெண் கருமுட்டையுடன் சேர்த்து கருத்தரிக்க வைக்கப்பட்டது. இதேபோல் வளர்ந்த ஆண் உயிரணுவுடன் வளராத பெண் கருமுட்டைகளை சேர்த்தும் சோதிக்கப்பட்டது.

இவ்வாறு செயற்கை தன்மையாக பிறந்த எலிகளில் வளர்ந்த பெண் கருமுட்டையின் உதவியால் பிறந்த எலிகள் மற்ற எல்லா எலிகளைவிட கூடுதல் ஆயுள் வாழ்ந்தது. அதாவது எலிகளின் சராசரி ஆயுட்காலமான 600 முதல் 700 நாட்களைவிட கூடுதலாக 186 நாட்கள் வாழ்ந்தன.

இதில் இருந்து விஞ்ஞானிகள் சில முடிவுக்கு வந்தனர். அதாவது பெண்கள் எளிமையான வாழ்வு வாழ்வதே அவர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் என்பது தெரியவந்தது. ஆண்கள் கடினமான வேலை செய்வதாலும், அதிகமான பொறுப்புகள், அதனால் உருவாகும் மன அழுத்தம் போன்றவற்றாலும் வாழ்நாள் குறைந்துவிடுகிறது.

ஆய்வாளர் கெனோ கூறும்போது, “மனித வாழ்க்கையில் இதற்கான முழுக் காரணம் தெளிவுபடுத்தப்படாவிட்டாலும், பாலூட்டிகளின் வாழ்க்கையில் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரின் மரபுப்பண்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.

%d bloggers like this: