Daily Archives: திசெம்பர் 23rd, 2009

திருமண வாழ்வின் ரகசியங்கள்!

உலகில் எல்லாமே மாறிக் கொண்டிருப்பதை போல திருமணங்களும், திருமண வாழ்க்கை முறைகளும் மாறிக் கொடிருக்கின்றன. அதனால் இன்றைய திருமணங்கள் எப்படி இருக்கின்றன என்பது பற்றி ஜெர்மனியில் ஒரு விரிவான ஆராய்ச்சியே நடந்திருக்கிறது. 1980-ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை நடத்தபட்ட அந்த நீண்ட கால ஆய்வு பல சுவாரசியமான, எதிர்பாராத உண்மைகளை வெளிபடுத்தியிருக்கிறது.

அவற்றில் சில…

திருமணம் ஒரு `கால் கட்டு’ அல்லது `கை விலங்கு’ என்று வேடிக்கையாகவோ, சீரியசாகவோ கூறினாலும், மற்றவர்களை விட திருமணமானவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அடிப்படையாக `கொடுத்தல்’ என்பதுதான் உள்ளது என்கிறது அந்த ஆய்வு. `சட்டதிட்டமான’ திருமண வாழ்வு (`சனிக்கிழமையன்று குழந்தைகளை, கணவர் கவனித்துக் கொண்டால், ஞாயிற்றுக்கிழமை காலை அவர் நண்பர்களோடு வெளியே செல்லலாம்’ என மனைவி அனுமதி வழங்குவது போன்றவை) சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதிக திருப்தி தராததாகவும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. அதற்கு மாறாக தம்பதி ஒருவருக்கொருவர் ஆர்வத்தோடு வேலையை பங்கிட்டுக் கொள்வது திருப்தியையும், சந்தோஷத்தையும் தருகிறது என்கிறார்கள்.

வீட்டு வேலையை பகிர்ந்து கொள்ளும் கணவரை மனைவிக்கு பிடிக்கிறது என்று இதுநாள் வரை கூறிவந்தார்கள். ஆனால் அதனால் மட்டும் கணவன் மீது மனைவிக்கு அன்பு பொங்கி விடுவதில்லை, அவள் மனநிறைவு பெற்று விடுவதும் இல்லை என்கிறது புதுஆய்வு.

கணவனும் மனைவியும் சம்பாதிக்கும் குடும்பம் பற்றிய ஆய்வில் தெரிய வந்திருக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?

மொத்த வருமானத்தில் முன்றில் இரண்டு பங்கு வருவாயை கணவர் ஈட்டும் குடும்பத்தில் மனைவி மகிழ்ச்சியாக இருக்கிறாராம். அதற்கு பல காரணங்களை அடுக்குகிறார்கள். கணவரை விட மனைவி குறைவாக வருமானம் ஈட்டும்போது அவரால் நிதி பொறுப்புகளிலிருந்து விலகியிருக்க முடிகிறது, குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளவும் முடிகிறது என்கிறார்கள். அதிகமாகச் சம்பளம் பெறும் மனைவிகள் அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதேநேரம் கசப்போடு வீட்டிலும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனைவிக்குச் சம்பளம் குறைவாக இருக்கும் நிலையில் தம்பதிகளின் பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கபட்டிருக்கின்றன. பள்ளிக்கு குழந்தையை யார் அழைத்துச் செல்லும் முறை அல்லது `ஷாப்பிங்’குக்கு யார் செல்வது என்பது போன்ற அன்றாட வேலை அழுத்தங்கள் குறைகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

திருமண உறவில் எப்போதும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்பது அவசியமில்லை என்பது பொதுவான கருத்து. இது தொடர்பாக `மகிழ்ச்சி: புதிய அறிவியல் பாடங்கள்’ என்ற நுலில் விவரித்துள்ள பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் லேயார்டு, `திருமண வாழ்க்கைத் துணையின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை விட, தமது சொந்த விஷயத்திலேயே அதிக கவனம் செலுத்துபவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என்கிறார்.

இன்றைய திருமண வாழ்க்கையில் குழந்தைகளின் நிலையும் அலசபட்டிருக்கிறது. சமுகமானது நீதி, நெறி, கலாச்சார மாற்றத்துக்கு உட்பட்டு வருகிறது. குழந்தை பருவம் முதலே பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும் முற்றிலும் வேறுபட்ட சூழலில் வளர்க்கபடுகிறார்கள். கணவன்- மனைவி- குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பங்களும், கணவன்- மனைவி இருவருமே பணிபுரிவதும் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகள் உணர்வுரீதியான பாதுகாப்புக் குடையின்றியே வளர்கிறார்கள் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் தங்களைத் தாங்களே உணர்ந்துதான் வாழ்க்கையை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பெரியவர்கள் பல்லாண்டுகளாக உருவாக்கிய நியதி மற்றும் கலாச்சார கட்டமைப்பை குழந்தைகள் ஒரே நாளில் உடைக்க விரும்புகிறார்கள். இளந்தம்பதிகளை பொறுத்தவரையில், அவர்களுக்காக நேரம் ஒதுக்கவே அவர்களுக்கு நேரமில்லை. தனக்குத் தலைவலித்தால் டீ போட்டுக் கொடுத்து கணவன் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கிறாள். ஆனால் கணவனோ வீட்டிலும் அலுவலக வேலையில் முழ்க வேண்டியவனாக இருக்கிறான்.

கணவன், மனைவிக்கிடையிலான உறவும் ஆரோக்கியமாக வளர்வதற்கு கால அவகாசம் தேவைபடுகிறது, ஒருவருடன் இன்னொருவர் நிஜமாகவே அதிக நேரத்தைக் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இன்றைய தம்பதிகள் தமது தனிபட்ட விருப்பங்கள், ஆசைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கபட வேண்டும், சுதந்திரம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். கணவன் அல்லது மனைவியாகவே இருந்தாலும் ஓரளவுக்கு மேல் தலையிடுவதை விரும்புவதில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான பார்கவா, `இந்தியாவில் குடும்ப அமைப்பு உடைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மனைவிகளின் முயற்சியால்தான் அது இன்னும் கொஞ்சம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது அவளும் சுதந்திரத்தை விரும்பினால், நம்மால் நமது சமுக விதிகள், நம்முடைய குடும்ப அமைப்பு போன்றவற்றை அதிக காலத்துக்குக் கட்டிக்காக்க முடியாது’ என்று குண்டைத் தூக்கி போடுகிறார்.

இந்திய குடும்ப அமைப்பின் ஆதாரமாக உள்ள குடும்பத் தலைவிகள் பற்றிய புதிய ஆய்வு, இன்னும் சில வியப்பூட்டும் விஷயங்களைத் தெரிவிக்கிறது.

இந்திய பெண் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறாள். `நேற்றைய’ இந்திய பெண்ணுக்கும், `இன்றைய’ இந்திய பெண்ணுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள். தனது குடும்பம், குழந்தைகள், சமுகத்துக்காக இன்றைய இந்திய குடும்ப பெண் தனது அடையாளத்தை இழக்கவோ, அமைதியாகக் கஷ்டத்தைச் சுமக்கவோ தயாராக இல்லை என்கிறார்கள்.

திருமண வாழ்வின் மகிழ்ச்சிக்கான அடிபடையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய குடும்பத் தலைவியானவள் தீவிரமாக, எந்தக் குற்ற உணர்ச்சிமின்றி மகிழ்ச்சியைத் தேட ஆரம்பித்திருக்கிறாள். அதற்காகத் தனது திருமண வாழ்க்கையையே கூட விட்டுக் கொடுக்க அதிகம் தயங்குவதில்லை, என்கிறது ஆய்வுத் தகவல்.

பெண்ணானவள், குடும்பத்தில் மிதியடியாய் உழைத்த காலம் போய்விட்டது. சுயஅதிகாரம் பெற்ற இன்றைய மனைவிகள் கணவன்மாரை கேள்வி கேட்கத் தயங்குவதில்லை.

-“ஏன் நான்தான் சமைக்க வேண்டும் என்கிறீர்கள்? உங்களை போல நானும்தான் களைத்து போகிறேன். நீங்கள் ஏன் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு, அழைத்து வரக் கூடாது? நானும் அலுவலக பணியில் பிசியாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

-உங்களுக்காக நான் ஏன் எனது உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்? எனது விருப்பங்களை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது”

… இப்படி போகின்றன கேள்விகள்.

இவையெல்லாம் வீட்டுக்குள் முடங்கி போகும் விஷயங்கள் இல்லை. பிரச்சினைகள் தீர்க்கபடவில்லை, சரிபட்டு வரவில்லை என்றால் திருமண பந்தத்திலிருந்து விலகி நடக்கவும் பெண்கள் தயாராக இருக்கிறார்கள். அதிலும் பெண்கள் அடிபடையான விஷயங்களில் விட்டுக்கொடுக்க முன் வருவதில்லை.

மும்பையைச் சேர்ந்த மித்தாலிக்கும், இங்கிலாந்துவாழ் இந்திய மருத்துவ மாப்பிள்ளைக்கும் திருமணம் நிச்சயிக்கபட்டது. திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை அடிக்கடி இந்தியா பறந்துவர, நெருக்கமாக பழகினர். பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். ஆனால் முதலிரவிலேயே, கணவனால் தன்னை தாம்பத்ய ரீதியாக திருப்திபடுத்த முடியாது என்பதை புரிந்துகொண்டார் மித்தாலி. நான்காவது நாளே திருமணத்தை முறித்துக்கொள்ளும் முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

“மற்றபடி அவர் நல்ல கணவர்தான். ஆனால் இந்தத் திருமணத்தில் எதிர்காலமில்லை. ஏன் நான் சமரசம் செய்துகொண்டு போக வேண்டும்? நான் அடுத்து நகர விரும்புகிறேன்” என்கிறார் மித்தாலி.

நவீன இந்திய பெண்ணின் முகம்தான் இந்த மித்தாலி. இப்படி நிறைய மித்தாலிகள் உருவாகிக் கொடிருக்கிறார்கள். `திருமண வாழ்க்கை என்பது வாழத்தான்’ என்பது இவர்கள் வாதம்!

துபாயிலிருந்து `திரும்புவோருக்கு’ ஆறுதல்!


துபாய் பொருளாதார நெருக்கடி காரணமாக வளைகுடா பகுதியிலிருந்து திரும்புவோருக்குக் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கிருந்து தாய்நாடு திரும்புவோருக்கு உதவும் விதமாக விரைவில் ஒரு சிறப்பு நிதியுதவித் திட்டத்தை அறிவிக்கவிருக்கிறது மத்திய அரசு.

இதுதொடர்பாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார அமைச்சகத்தைச் சேர்ந்த ஓர் உயரதிகாரி கூறும்போது, “பொருளாதார நெருக்கடி காரணமாக வளைகுடாவில் இருந்து இந்தியா திரும்பும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக ஓர் ஒட்டுமொத்தத் திட்டத்தை அறிவிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

“இந்த நிதியானது அடிப்படையில், வெளிநாடுகளில் வேலையை இழந்து இந்தியா திரும்புவோருக்கு உதவுவதாக அமையும். அந்த நோக்கிலேயே இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என்று வெளிநாடுவாழ் இந்திய விவகார அமைச்சகத்தின் செயலாளர் கே. மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கான அடிப்படையான விஷயங்களை வரையறுக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த `தாயக வருகை மற்றும் மறுகுடியேற்ற நிதி’யானது முக்கியமாக, வளைகுடா பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்த மத்திய நிலை பணியாளர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதாக அமையும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனஅழுத்தத்திற்கு காரணமாகும் பொருளாதார சிக்கல்!


இப்போதைய பரபரப்பு வாழ்க்கையில் மன அழுத்தத்திற்கு ஆளாகாதவர்களே கிடையாது. ஆனால், ஆண்களைவிட பொறுமைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் பெண்கள்தான் இப்போதெல்லாம் அதிக அளவிற்கு மனஅழுத்தத்திற்கு ஆளாகுவதாக சொல்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

இந்த ஆய்வில் 40 முதல் 59 வயது வரை உள்ளவர்கள் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதும், 12 வயதை கடந்தவர்களில் 20 பேரில் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இவர்களில் சிலர் பொருளாதார பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் சிக்கி இருப்பதும் அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அங்கு பொருளாதார சிக்கலில் சிக்கிய 7 பேரில் ஒருவர் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறாராம்.

இந்த ஆய்வின் முடிவில் பெண்களே அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், மிகவும் கடுமையாக யார் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் என்று கணக்கெடுத்தபோது, அந்த பட்டியலில் ஆண்களே முதலிடம் பிடித்தனர். அவர்களது சதவீதம் 39 ஆகவும், பெண்களின் சதவீதம் 22 ஆகவும் இருந்தது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் தங்களால் இயல்பாக செயல்பட முடிவில்லை என்றும், 27 சதவீதம் பேர் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படி மன அழுத்த பாதிப்புக்கு ஆளாகுபவர்கள், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்களா? என்று அவர்களிடமே கேட்டபோது, பலர் இல்லை என்றுதான் கூறினர்.

பராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்

கம்ப்யூட்டர் பிரச்னைகளைத் தீர்க்கும் போர்ட்டபிள் புரோகிராம்களை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்றால் அதுவே பராமரிக்கும் பிளாஷ் டிரைவாக மாறிவிடும். இங்கே போர்ட்டபிள் புரோகிராம் என்பது இயக்கக் கூடிய புரோகிராம்களாகும். இவற்றை இயக்க இன்னொரு கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. அதனால் தான் இவற்றை பிளாஷ் டிரைவில் புரோகிராம்களாகவே பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம் என்று எழுதப்பட்டது. இவை பெரும்பாலும் தனி நபர் பயன்படுத்தும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் சில பிரச்னைகளுக்குத்தான் தீர்வுகளைத் தரும். அத்தகைய புரோகிராம்களை இங்கு காணலாம்.
1. சிகிளீனர் (Cleaner)சிகிளீனர் புரோகிராமி னைப் பலரும் தங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, தேவைப்படாத பைல்களைக் கம்ப்யூட்டரை விட்டு நீக்குவதற்குப் பயன்படுத்துகின்றனர். பிளாஷ் டிரைவில் இருந்தவாறு பயன்படுத்த, இதன் போர்ட்டபிள் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதனை இலவசமாகப் பெற http://www.piriform.com /ccleaner/download/portableஎன்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும். இந்த புரோகிராம் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் உள்ள உடைந்த வரிகளை நீக்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள் வைத்திருக்கும், நம்மைப் பற்றிய பெர்சனல் தகவல்களை எடுக்கிறது. குக்கீஸ், கேஷ் மெமரியில் பதிவாகும் விஷயங்களை நீக்குகிறது. செக்டிஸ்க் பைல் துண்டுகளைக் கண்டறிந்து வெளியேற்றுகிறது. ரெஸ்டோர் பாய்ண்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை பராமரித்துத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்கிறது.
2. ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller):  இதனை பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்து புரோகிராம்களை எளிதாக அன் இன்ஸ்டால் செய்திட முடியும். ஏற்கனவே அன் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களின் நீக்கப்படாத விஷயங்கள் இருந்தால், அவற்றை அழகாக எடுத்தெறிகிறது. போர்ட்டபிள் பதிப்பு http://www.revouninstaller.com/ revouninstaller.zip என்ற முகவரியில் கிடைக்கிறது. அதனை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதியவும்.
3.ஈஸி கிளீனர் (Easy Cleaner)இது சிகிளீனர் மேற்கொள்ளும் பல வேலைகளையும் செய்கிறது. அது செய்யாத ஒரு அருமையான பணியை மேற்கொள்கிறது. அதிகமாக ஓவர்லோட் ஆகிவிட்ட ஹார்ட் டிரைவினைச் சரி செய்கிறது. டிரைவ் மற்றும் தேர்ந்தெடுத்த போல்டர் மற்றும் சப்போல்டர்களின் பயன்படுத்தப்பட்ட அளவினைப் படம் போட்டு காட்டி பணியாற்றுகிறது. இதனையும் பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். இதனை http://personal.inet.fi/business /toniarts/ecleane.htm என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
4. சூப்பர்ஆண்ட்டி ஸ்பைவேர் ஆன்லைன் சேப் ஸ்கேன் (Super Anti Spyware Online Safe Scan) : மால்வேர் எனப்படும் ஸ்பை வேலை மேற்கொள்ளும் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் போர்ட்டபிள் புரோகிராம்களைப் பல மாதங்கள் தேடிய பின் இது இருப்பது தெரிந்தது. மிகச் சிறப்பாக இது வேலை செய்கிறது. டாஸ் புரோகிராம் போல இது செயல்படுகிறது. இதனை இயக்கியவுடன் விண்டோ இன்டர்பேஸ் ஒன்று தந்து நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, ஸ்பை வேர்களைக் கண்டறிகிறது. இதன் சிறப்பு இந்த புரோகிராம் அடிக்கடி அப்டேட் செய்யப்படுவதுதான். இதனை http://www.superantispyware. com/onlinescan.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, அப்படியே பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம்.
5. ஹைஜாக் திஸ் (HijackThis) : ட்ரென்ட் மைக்ரோ நிறுவனம் தரும் புரோகிராம். இது எந்த மால்வேர் புரோகிராமினையும் பிக்ஸ் செய்வதில்லை. ஆனால் கண்டவுடன் நமக்கு ஒரு ரிப்போர்ட் தருகிறது. இதனை நாம் படித்து அறிந்து கொள்ள முடியாது. அப்படியே இந்த தளம் தரும் ஆன்லைன் அமைப்புகளில் பேஸ்ட் செய்தால், மால்வேர்களை நீக்கும் வழிகள் கிடைக்கும். http://hjtdata.trendmicro.com/hjt/analyzethis/index.php என்ற தளத்தில் இது கிடைக்கிறது.
6. ரெகுவா Recuva) ): . இதன் போர்ட்டபிள் புரோகிராம் http://www.piriform. com/recuva/download/portable என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இது பிளாஷ் டிரைவில் இருப்பது மிக அவசியம். அறியாமல் அழித்த பைல்களை நீக்கும் பணியை இதன் மூலம் அழகாக மேற்கொள்ளலாம். சிகிளீனர் தயாரித்து வழங்கும் நிறுவனமே இதனையும் தயாரித்து வழங்குகிறது.

போதைப் பாக்கு…


மனித இனம் நவீன வளர்ச்சியில் நிறைய பயன்களை அடைந்தாலும் அதற்கு எதிர்வினையாக பல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கின்றது.

ஆரோக்கிய சீர்கேடான பழக்கங்கள் பல அன்று முதல் இன்று வரை மனித இனத்தை அடிமைப்படுத்தியுள்ளது.

மது, புகை என பலவகைகளில் விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் நாளடைவில் உயிரைக் குடிக்கும் எமனாகிறது.

பாக்கு என்ற போர்வையில் நுழைந்துள்ள போதைப் பொருளைப் பற்றியும் அதனால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

முன்னோர்கள் உணவுக்குப்பின் தாம்பூலம் தரிப்பார்கள். அதாவது வெற்றிலைப் பாக்கு போடுவார்கள். வெற்றிலையும், பாக்கும், சுண்ணாம்பும் சேர்ந்து சீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். சிலர் இந்த கலவையுடன் புகையிலையையும் சேர்ப்பார்கள்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இதனை போதைக்காக உபயோகிக்கும் பழக்கம் உண்டானது. அதனால் பாக்குடன் புகையிலையை அதிகமாகச் சேர்த்து அதனுடன் வாசனையை உண்டாக்கும் சில பொருட்களைச் சேர்த்து புதிதான ஒரு சுவையுடன் தயாரித்தார்கள். இவற்றை வாயில் போட்டவுடன் சுறுசுறுவென்று ஒருவிதமான மயக்கத்தை உண்டுபண்ணும்.

இந்த வகையான பாக்கிற்கு அடிமையானவர்கள் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பாக்கெட்டுகள் வரை உபயோகிக்கிறார்கள்.

பாமரர் முதல் பணக்காரர் வரை இந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டுள்ளது. குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள், கடுமையான வேலை செய்பவர்கள் போதைக்காகவும், வேலையின் கடினம் தெரியாமல் இருப்பதற்காகவும் இதனை அதிகமாக பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாக்கு வெறும் கிறுகிறுப்பை மட்டும் தராமல் பலவித ஆபத்தான நோய்களையும் உண்டாக்குகிறது.

போதைப் பாக்கால் ஏற்படும் கேடுகள்

போதைப் பாக்குகளில் உள்ள போதைப் பொருள்கள், வாயின் உட்பகுதி, நாக்கு, பல் ஈறுகளின் மென்மையான பகுதிகளை அரித்து புண்களை எற்படுத்திவிடுகின்றன. இந்தப் புண்களால் எந்தவகையான உணவையும் எளிதில் சாப்பிட முடியாது. வாயின் உள்பகுதி சிவந்து வெந்து காணப்படும். சிலர் அந்த நீரை உள்ளே விழுங்கிவிடுகின்றனர். இந்த விஷம் கலந்த நீர் வாயின் உள்ளே இறங்கும்போது தொண்டை மற்றும் உணவுக் குழாயை அரித்து தொண்டைப்புண், வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகிறது.

மேலும் பற்களின்மேல் படிந்துள்ள பாக்குத் துகள்கள் ஈறுகளை பலமிழக்கச் செய்கின்றன.

இதனால் பற்கள் எளிதில் விழுந்துவிடுவதுடன் வாய்ப் புற்றுநோய் (கேன்சர்) ஏற்படவும் வாய்ப்பாகின்றது.

மேலும் இவை தொண்டைப் பகுதியைத் தாக்கி வாயிலும் வயிற்றிலும் புண்களை உண்டாக்குகிறது. இதனால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல் உருவாகிறது. மேலும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி ஈரலைப் பாதிக்கிறது. ஈரல் பாதிக்கப்படுவதால் பித்தம் அதிகரித்து மூளையை செயலிழக்கச் செய்கிறது.

மேலும் பித்த அதிகரிப்பால் உடலில் உள்ள இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் பல கொடிய நோய்கள் தொற்றிக்கொள்ள ஏதுவாகிறது.

குடல் புண் எற்படவும் இது காரணமாகிறது.

மேலும் பாக்கு போடுவதால் பற்கள் கறை படிந்து காணப்படும். பிறரிடம் உரையாடும்போது எச்சில் தெறிக்கும். இதனால் சில நேரங்களில் மற்றவர்களின் அருவருப்பான பார்வைக்கு ஆளாக நேரிடும்.

பாக்கு போட்டு கண்ட இடங்களில் எச்சில் துப்புவதால் சுகாதாரம் கெடுகிறது, மேலும் பல தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டாகிறது.

போதைப் பாக்கை மறக்க

எந்த ஒரு கெட்ட பழக்கமும் நாம் கருவில் இருக்கும்போதிலிருந்தே வந்ததல்ல. நம் மனதை அலைபாயவிட்டு கற்றுக்கொண்டவைகளே இவைகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தீய பழக்கத்தை கற்றுக் கொள்வதற்கு மனம் எப்படி உதவுகிறதோ.. அதேபோல்தான் அதை மறப்பதற்கும் மனமே உதவும்…

அதாவது முதலில் மனதை கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.

பாக்கு போடும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் பாக்கிற்குப் பதிலாக உடலுக்கு நலம் தரும் உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம், கிராம்பு போன்ற பொருட்களில் ஏதாவதொன்றை வாயில் போட்டு சுவைக்கலாம். இது உடலுக்கு நன்மை தருவதோடு, பாக்குபோடும் எண்ணத்தையும் மறக்கச் செய்யும்.

அரசு இந்தவகையான போதைப் பாக்குகளைத் தடைசெய்து இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

மனிதன் மனது வைத்தால் எதையும் வெல்லலாம்.

இந்த பாக்கை வெல்ல முடியாதா..?

கண்களைக் காக்க…


ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும்.  ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும்.

உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று.

இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை அதிகப்படுத்தி அதன்மூலம் வெளியேறிவிடுகின்றது. கண்கள்வறட்சி ஏற்படுவதைத் தடுக்க இமைகள் தானாக மூடித் திறக்கின்றன.

மனிதனின் அவசியத் தேவையான கண்களுக்கு சரியான பராமரிப்பில்லாமல் கண்கள் எளிதில் பார்வையை இழக்கின்றன.

இன்றும்கிராமங்களில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் பலர் கண்ணாடி அணியாமல்படிப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் ரசாயனம் கலக்காத இயற்கை உணவுகளே.

ஆனால்இன்று இரண்டு மூன்று வயது குழந்தைகள் கூட கண்ணாடி அணிந்திருப்பதைப்பார்க்கிறோம். அவசர கதியில் தயாரிக்கப்படும் இன்ஸ்டன்ட் உணவுகள்,சத்தில்லா உணவுகள், மற்றும் கண்களை பாதிக்கும் தொலைக் காட்சிப் பெட்டி,கணினி… என பட்டியல் நீளும்.

கண்பார்வைக் கோளாறு ஏற்படக் காரணம்

· உறவினர் முறையில் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுகின்றது.

· கருவிலிருக்கும் போது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைபாட்டாலும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது.

· சரியான உணவு உண்ணாமல் இரத்தச் சோகை ஏற்பட்டாலும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.

·தூக்கமின்மையாலும், மங்கிய ஒளி அல்லது கண் கூசும் அளவு வெளிச்சம் உள்ளஇடங்களில் வேலை செய்பவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.

·தற்போதைய கணினி உலகில் கண்களுக்குத் தான் அதிக வேலை உண்டாகிறது. இரவுகண்விழித்து கணினி முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்குறைபாடு எளிதில் உண்டாகும்.

· ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம்அதிகரித்தால் முதலில் தாக்கப்படுவது காண் பார்வை நரம்புகளே… இதனால்தான்காமாலை நோய்களின் அறிகுறி கண்களில் தெரியவரும்.

· மது, புகை, போதைப் பொருள்கள் உண்பவர்களின் கண்கள் எளிதில் பாதிப்படையும்.

·தொலைக்காட்சியின் முன் அமர்ந்து அதிக நேரம் தூக்கமில்லாமல்நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் கண்கள் வறட்சி கண்டு கண்பார்வை குறைபாடுஉண்டாகும்.

· நீரிழிவு நோய்க்காரர்களுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.

· அடிக்கடி தலைவலி, தலைச்சுற்றல், கிறுகிறுப்பு உள்ளவர்களுக்கும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.

வரும்முன் காக்க

·கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ அல்லது வலி, ஏற்பட்டாலோ கண்மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை யில்லாமல் கண்களுக்குமருந்துகள் இடக் கூடாது.

· அதிக வெயிலில் அல்லது வெப்பமான பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.

· ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல தூக்கமே கண்களைப் பாதுகாக்கும்.

·கணினியில் வேலை செய்பவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்யக் கூடாது. அவ்வப்போது குறைந்தது 5 நிமிடமாவது விழிகளை சுழலவிட்டுபின் கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்வதுபோல் இருக்க வேண்டும்.

· உணவில் தினமும் கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது.

· எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

· மது, புகை, போதை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

· உடல் சூடு அடையாமலும், பித்த மாறுபாடு அடையாமலும் இருப்பதற்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

· மங்கலான ஒளியில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· அதிக வெயில் இருக்கும்போது சூரியனைப் பார்க்கக்கூடாது.

· நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

· அதிக மன அழுத்தம், டென்ஷன் கூட பார்வை நரம்புகளைப் பாதிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோழி சாப்ஸ்

தேவையானப் பொருட்கள்:

கோழி – 1 கிலோ
பச்சை மிளகாய் – 10
இஞ்சி – 2 அங்குலம்
பெரிய மிளகாய் – 1
முட்டை – 3
உப்பு தேவையான அளவு

செய்முறை:
1 கிலோ கோழியை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 அங்குலம் இஞ்சி, 10 பச்சை மிளகாய்கள் 1 பெரிய வெங்காயம், இவற்றை அரைத்துக் கொள்ளவும். கோழிக்கறித் துண்டுகளுடன் அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும். ப்ரஷர் குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதன் மீது பிசிறி வைத்துள்ள கோழிக்கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தை வைத்து மூடி, குக்கரின் மூடியையும் மூடவும். வெயிட் வைக்கவும் விசில் சப்தம் கேட்டதும் இறக்கவும். குக்கர் திறந்து வந்த பின், கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தை வெளியே எடுத்துக் கொள்ளவும். 3 முட்டைகளை தேவையான உப்பு கலந்து நன்கு, நுரைக்க அடித்துக் கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் 100 கிராம் ஊற்றி காய்ந்ததும், தீயை மிதமாக்கவும். கோழிக்கறித்துண்டுகளை ஒவ்வொன்றாக அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு தடவைக்கு 6 துண்டுகள் வீதம் போட்டு பொறிக்கலாம்.

பாலக் தோசை


தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பாலக் (பசலைக்கீரை)- ஒரு கப், பச்சை மிளகாய் -3, பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி, பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பாலக் எல்லாம் சேர்த்து நைஸாக அரைத்து வைக்கவும். 5 மணி நேரமாவது புளிக்கவேண்டும். புளித்து பொங்கியதும் தோசைகளாக வார்க்கவும். கீரையில் வழவழப்பு இருப்பதால் உளுந்தை குறைத்துப் போடவேண்டும். வித்தியாசமான மாலை டிபன், இந்த தோசை.

டிப்ஸ்…. டிப்ஸ்….-23.12.2009

சொற்களை எப்போதும் எண்ணலாம்
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003 பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்குகையில் அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் மீண்டும் கூட்டிப் பார்க்க வேண்டும் என விரும்பினால் Recount என்ற பட்டன் கிடைக்கும்.
டேபிளில் வரிசையாக எண்களை அமைக்க
வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள Numbering என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.
ஒரே இடத்தில் அனைத்து டிக்ஷனரிகளும்
ஆங்கிலச் சொல் ஒன்றின் பொருள் வேண்டுமா? இணையத்தில் பல டிக்ஷனரிகள் உள்ளன. இவற்றின் தளங்கள் சென்று தேடலாம். ஆனால் அதற்குப் பதிலாக, ஒரே முயற்சியில் அனைத்து டிக்ஷனரிகளும் தரும் பொருள் வேண்டும் என்றால், கூகுள் செல்லலாம். கூகுள் சர்ச் பாக்ஸில் define:WORD என்ற பார்மட்டில் அந்த சொல்லை டைப் செய்திடவும். இதில் WORD என்ற இடத்தில் நீங்கள் பொருள் தேடும் சொல்லை டைப் செய்திட வேண்டும். உடன் கூகுள் ஆன்லைனில் உள்ள அனைத்து டிக்ஷனரிகளிலும் இந்த சொல்லுக்குப் பொருள் தேடி வரிசையாகத் தரும்.
ஐகான்களை இடம் மாற்றலாம்
மானிட்டர் திரையில் பல ஐகான்கள் இடம் பெறுகின்றன. இவை சில வேளைகளில் சிதறிக் கிடக்கின்றன. சில சரியான இடைவெளியில் அமையாமல் உள்ளன. இப்படி தோற்றம் தராமல் நல்ல முறையில் இவற்றை அமைக்கலாம். ஏன் ஐகானின் அளவைக் கூட மாற்றலாம். எப்படி செட் செய்வது என்று பார்க்கலாமா!
டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties பிரிவைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். கிடைக்கும் விண்டோவில் உள்ள Appearance டேபில் கிளிக் செய்திடவும். அங்குள்ள Advance பட்டனில் அதன்பின் கிளிக்கிடவும். அங்கு Item என்ற பிரிவில் உங்கள் ஐகானை எப்படி எல்லாம் வளைக்கலாம் என்று காணலாம். எடுத்துக் காட்டாக நெட்டு வரிசையிலும் படுக்கை வரிசையிலுமாக ஐகான்கள் அமைக்கப்படும் இடைவெளியை மாற்றலாம். அனைத்தையும் முடித்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் செட் செய்தபடி ஐகான்கள் அமைந்திருக்கும்.
தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க
வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.
தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் AutoFormat As You Type என்ற டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.