மனஅழுத்தத்திற்கு காரணமாகும் பொருளாதார சிக்கல்!


இப்போதைய பரபரப்பு வாழ்க்கையில் மன அழுத்தத்திற்கு ஆளாகாதவர்களே கிடையாது. ஆனால், ஆண்களைவிட பொறுமைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் பெண்கள்தான் இப்போதெல்லாம் அதிக அளவிற்கு மனஅழுத்தத்திற்கு ஆளாகுவதாக சொல்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

இந்த ஆய்வில் 40 முதல் 59 வயது வரை உள்ளவர்கள் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதும், 12 வயதை கடந்தவர்களில் 20 பேரில் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இவர்களில் சிலர் பொருளாதார பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் சிக்கி இருப்பதும் அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அங்கு பொருளாதார சிக்கலில் சிக்கிய 7 பேரில் ஒருவர் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறாராம்.

இந்த ஆய்வின் முடிவில் பெண்களே அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், மிகவும் கடுமையாக யார் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் என்று கணக்கெடுத்தபோது, அந்த பட்டியலில் ஆண்களே முதலிடம் பிடித்தனர். அவர்களது சதவீதம் 39 ஆகவும், பெண்களின் சதவீதம் 22 ஆகவும் இருந்தது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் தங்களால் இயல்பாக செயல்பட முடிவில்லை என்றும், 27 சதவீதம் பேர் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படி மன அழுத்த பாதிப்புக்கு ஆளாகுபவர்கள், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்களா? என்று அவர்களிடமே கேட்டபோது, பலர் இல்லை என்றுதான் கூறினர்.

%d bloggers like this: