Daily Archives: திசெம்பர் 24th, 2009

இந்திய மொழிகளில் அசத்தும் ஆலிவுட் படங்கள்!


இந்திய மொழி பேசும் ஆலிவுட் படங்கள் வசூலில் சாதனை புரிந்து வருகின்றன. நேற்று வெளியாகியுள்ள ஜேம்ஸ் கேமரானின் அதிரடி ஆக்ஷன்- சாகசப் படமான `அவதார்’, இந்தியாவில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்களுடன் திரையிடப்பட்டுள்ளது.

இதில் 40 சதவீதம் இந்தி, 36 சதவீதம் ஆங்கிலம், மீதம் தமிழ், தெலுங்கு என்று பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளதாக இந்தப் படத்தின் இந்திய விநியோகஸ்தரான `பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ தெரிவித்துள்ளது.

`வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் `நிஞ்சா அசாசின்’ படத்தையும் இந்த முன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. உள்நாட்டுப் படங்களுடன் ஒப்பிடும்போது குறைவான ரசிகர்களைக் கொண்டுள்ள ஆங்கிலப் படங்கள், அவை உள்ளூர் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும்போது ஏராளமான ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்கின்றன. சாதாரண ரசிகர்களும் அவற்றை நன்கு புரிந்து ரசிக்க முடிவதே காரணம். ஆங்கிலம் அறிந்த படித்தவர்களுக்குக் கூட, ஆங்கிலப் பட நடிகர்களின் அமெரிக்க அல்லது பிரிட்டீஷ் உச்சரிப்பைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதால் அவர்களும் பெரும்பாலும் `டப்பிங்’ படங்களையே விரும்புகிறார்கள்.

சமீபத்தில் இந்திய மொழிகளில் வெளியாகி பணத்தை அள்ளிக்கொண்டிருக்கும் மற்றொரு படம் 2012 (தமிழில் `ருத்ரம்’). இந்தப் படத்தை `சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மெண்ட் (இந்தியா)’ நிறுவனம் 676 பிரிண்ட்களுடன் வெளியிட்டுள்ளது. இப்படமும் ஆங்கிலம் தவிர, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இப்படத்தின் முதல் வார வசூல் 19.15 கோடி. 2007-ல் வெளியான `ஸ்பைடர்மேன் 3′ படத்துக்குப் பின் அதிகமான ஆரம்பகட்ட வசூல் இது.

`பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் (இந்தியா)’ நிறுவனத்தின் பொது மேலாளர் விஜய்சிங் கூறுகையில், “பெரிய ஆலிவுட் படங்கள் நம் நாட்டில் மொழிமாற்றம் செய்யப்படும்போது நன்றாக ஓடுகின்றன. பெரிய பட்ஜெட் படம் என்றால், அதில் முன்றில் இரண்டு பங்கு வருமானம் `டப்பிங்’ படங்கள் முலமே கிடைக்கிறது. `எக்ஸ் மென்’, `ஐஸ் ஏஜ் 3′ ஆகிய படங்கள் எங்களுக்கு நல்ல வசூலைக் கொடுத்தன. இவை இரண்டுமே பிராந்திய மொழிகளில் நன்றாகப் போயின. இந்தச் சந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் மொழிமாற்ற ஆங்கிலப் படங்களில் பங்களிப்பு மொத்த வருவாயில் மேலும் அதிகமாக இருக்கும்” என்கிறார்.

`பாக்ஸ் ஸ்டாரின்’ `ஸ்லம்டாக் மில்லியனர்’, ஆங்கில மற்றும் இந்தி மொழிமாற்றத்துடன் இந்தியாவில் 363 பிரிண்ட்கள் வெளியிடப்பட்டு 40 கோடிகள் குவித்தது. இதில் இந்தி `டப்பிங்’கான `ஸ்லம்டாக் குரோர்பதி’, ஒரிஜினல் ஆங்கிலப் படத்தை விட 30 சதவீதம் அதிக வருவாயை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

`சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம 1982-ல் முதல்முறையாக `காந்தி’ படத்தை ஆறு இந்திய மொழிகளில் `டப்’ செய்தது. தற்போது இந்தப் பிரிவில் மேலும் அதிகமாக முதலீடு செய்யும் திட்டத்தை இந்நிறுவனம் வைத்துள்ளது.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெர்சி தருவாலா, “பழைய பாணியான `டப்பிங்’, 90-களின் மத்தியில் `லாஸ்ட் வேர்ல்டு’ படம் முலம் மீண்டும் புத்துயிர் பெற்றது. தற்போது மொழிமாற்றப் படங்களுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உள்ளது. ஆலிவுட் மொழிமாற்றப் படங்களுக்கு பெருநகரங்கள் கூடுதல் வருவாயை அளிக்கின்றன” என்கிறார்.

அடுத்து ஆலிவுட் படங்களை வங்காள மொழியிலும் வெளியிடும் திட்டத்தை சோனி பிக்சர்ஸ் கொண்டுள்ளது. 1982-ல் சோனியின் `காந்தி’க்குப் பிறகு, `பாரமவுன்ட் பிக்சர்ஸ்’ `ஜுராசிக் பார்க்’ படத்தை 1994-ல் மொழிமாற்றம் செய்தது. 1997-ல் `டைட்டனிக்’ ரிலீசானபோது அது இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

அதேநேரம், அனைத்து ஆலிவுட் மொழிமாற்றப் படங்களும் ஏகோபித்த வரவேற்பைப் பெறுவதில்லை என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள். ஆக்ஷன், திகில், `த்ரில்’, சாகசம், காதல், செக்ஸ் சார்ந்த படங்கள் சிறுநகரங்களிலும் நன்றாக ஓடுகின்றன என்கின்றனர். ஒரு படத்தை மொழிமாற்றம் செய்வதற்கு 1 லட்ச பாய் முதல் 80 லட்ச ருபாய் வரை ஆகிறது.

வருகிற 2011-ம் ஆண்டில் இந்திய திரைப்படத் துறையின் மொத்த வருவாய் 17 ஆயிரம் கோடி ருபாயாக இருக்கும், அதில் ஆலிவுட் மொழிமாற்றப் படங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் என்கிறார்கள்.

மூக்கடைப்பைச் சரி செய்ய

ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.

மூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில் தொற்றி ஜலதோஷம் மோசமடைகிறது. மூக்கில் ஏற்பட்ட தொற்று காது மற்றும் தொண்டைக்கும் பரவுகிறது. இப்படி ஏற்படும்பொழுது பெரும்பாலான மருத்துவர்கள் என்டிபையோட்டிக்கை பரிந்துரை செய்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. மூக்கடைப்பு இருக்கும் பட்சத்தில் மூக்கால் மூச்சு விட ஆரம்பித்துவிடுவார்கள். தூங்கும்பொழுது வாயைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குவார்கள். வயின் மூலம் சுவாசிக்கும்பொழுது கிருமிகள் வடிகட்டப்படுவதில்லை. இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகிறது. தொடர்ச்சியாக வாயனாலேயே சுவாசிக்கும்பொழுது தொண்டை அழற்சி பிரச்னை ஏற்படுகிறது. ஆகையால் மூக்கடைப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்.

ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி


தேவையானப் பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணை – 100 கிராம்
நெய் – 150 கிராம்
பட்டை பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய் -தேவையான அளவு
வெங்காயம் – 500 கிராம்
தக்காளி -500 கிராம்
இஞ்சி – 11/2 ஸ்பூன்
பூண்டு – 11/2 ஸ்பூன்
கொ. மல்லி தழை-1 கப்
புதினா – 11/2 கப்
ப. மிள்காய் – 5
தயிர் – 1கப்
சிகப்பு மிளகாய் தூள் – 11/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி – 1/2 டீஸ்பூன்
தணியா பொடி-1 டீஸ்பூன்
கலர் பொடி – 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் – 1
நெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:

ஓர்பெரியசட்டில் எண்ணையும் நெய் ஊற்றி பாதி வெங்காயம் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும் அதனை தணியாக எடுத்து வைக்கவும்

பின் அதில் பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் .போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்.

ப.மிளகாய் மிளகாய் தூள், மஞ்சல் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி,1/2 மூடி எலுமிச்சைசாறு தக்காளி மீதிகொமல்லிபுதினாபோட்டுவேகவிடவும்

சிக்கன் நன்குவெந்த்தும் எண்ணைய்மேல்வரும்போது 1கப் அரிசிக்கு 11/2கப்சூடுநீர்ஊற்றிகொதிக்கவிடவும்

தண்ணீர் நன்கு கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும்

அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து நன்குவடிகட்டவும்

அரிசியை போட்டு நன்கு கிளரவும்

அரிசிபாதிவேகும்வரைதீயை அதிகமாகவைக்கவும்

முக்கால்பகுதிவெந்தவுடன்தீயைசுருக்கவும்பாதி எலுமிச்சைஜீஸ்ஊற்றவும்

சட்டி்யை சுற்றிலும் துணிகட்டி தம்மில் போடவும்

10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி

சூடாக ராய்தா எண்ணை கத்திரிக்காயுடன் பரிமாறவும்

ராகிபுட்டு பயறு


தேவையானப் பொருட்கள்:
ராகிமாவு – கால் கிலோ
தண்ணீர் – 250 மில்லி
பாசிப்பயறு – கால் கிலோ
தேங்காய் – ஒன்று (சிறியது)
உப்பு – தேவைக்கு

செய்முறை:

முதலில் தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து விரவவும்.

விரவி வைத்த மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.

மாவை மிக்ஸியில் பெரிய கப்பில் போட்டு மூன்று சுற்று சுற்றி எடுக்கவும். இதைப் போல் மாவு முழுவதையும் மூன்று முறையாக சுற்றி எடுக்கவும். இப்பொழுது மாவு பூப்போல ஆகிவிடும்.

பாசிப்பயறை வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.

புட்டுக்குழலில் முதலில் தேங்காய் துருவலை வைத்து பின்பு மாவை வைத்து நிரப்பவும். அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவலை வைத்து நிரப்பவும்.

குக்கரில் தண்ணீர் வைத்து கொதிவந்ததும் அதில் புட்டுக்குழலை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான, சத்தான ராகிபுட்டு தயார். இதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் பரிமாறவும். சீனி மற்றும் தேங்காய் துருவலுடன் சாப்பிடலாம். சீனி விரும்பாதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.

இதயத்தை பாதுகாப்போம்!


இப்போதெல்லாம் எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், கொழுப்பு அதிகம் கொண்ட இறைச்சி வகைகளை பலரும் விரும்பி உண்கிறார்கள். இந்த உணவுகளில் காணப்படும் கொழுப்பு, அவர்களது உணவுக் குழாய், ரத்தக்குழாய்களில் படிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

இதை தடுப்பது அவசியம் என்று தற்போது உணரப்பட்டுள்ளது. அதற்கு நாம் என்ன செய்யலாம்? ரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு அதை சீராக வைத்திருங்கள். சர்க்கரை நோய் இருந்தால் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய், எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றை தவிர்த்திடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள். அதிக அளவில் மது அருந்துவதை உடனே நிறுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளையும், நெய்யால் செய்த பண்டங்களையும் அளவோடு உட்கொள்ளுங்கள். உப்பையும் அளவோடவே சேர்த்துக்கொள்ளுங்கள். நாள்தோறும் காலை மற்றும் மாலையில் 1/2 மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள். முக்கியமாக, உணவு வகைகள் அதிகம் உட்கொள்வதை குறையுங்கள்.

– நீங்கள் இவற்றை பின்பற்றினால் உங்கள் இதயம் பாதுகாப்பாக இருக்கும். ரத்தக்குழாய்களிலும் அடைப்பு ஏற்படாது.

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு எக்ரிலமைட் ஒரு காரணம்

120,000 பெண்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை மற்றும் சினைப்பை புற்றுநோய்க்கு அவர்கள் உணவோடு சேர்த்து உட்கொள்ளும் எக்ரிலமைட் என்ற இரசாயனம் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எக்ரிலமைட் என்ற இரசாயனம் ரொட்டி, காலை உணவு சீரியல்கள், காப்பி, இறைச்சி, உருளைக்கிழங்கு இவற்றைப் பொரிப்பதால், வறுப்பதால், அனலில் வாட்டுவதால் ஏற்படுகிறது.

கருகிப்போன ரொட்டி மற்றும் பொன்னிறத்தில் உள்ள சிப்ஸ் வகைகளில் அதிக எக்ரிலமைட் இருப்பதால் பயனீட்டாளர்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளில்தான் இந்த இரசாயனம் அதிகம் உள்ளது.

திடீர் உணவுகளைக் குறைத்துக்கொண்டாலே எக்ரிலமைட் பாதிப்புக்களை ஓரளவில் குறைத்துக் கொள்ளலாம்.

உணவுகளை அளவுக்கு அதிகமாக சமைக்காமல் இருந்தால் எக்ரிலமைட் உருவாக்கும் ஆபத்துக்களைக் குறைக்கலாம்.

நாவாசனம்


நேராகத் தரையில் படுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டிய படி, தலையையும் காலையும் ஒரே சமயத்தில் தூக்க வேண்டும். முதுகு தரையில் படக்கூடாது. தோணி போன்று உடலை அமைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும். சாதாரண மூச்சு.

பலன்கள்:

இவ்வாசனம் வயிற்றின் மத்திய பாகத்தை நன்றாக அமுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். கணையம் நன்கு இயங்கும். ஜீரணக் கருவிகள் நன்கு வேலை செய்யும். அஜீரணம், ஏப்பம், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல் ஒழியும். பெண்கள் குழந்தை பெற்ற பின் இவ்வாசனத்தைச் செய்தால் வயிறு பெரிதாகாது.