Daily Archives: திசெம்பர் 25th, 2009

தண்ணீர் குடித்தால் காது வலி வருமா?

கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளக்காடாகச் சூழ்ந்து விடுகின்ற மழைத்தண்ணீர் சலிப்பை உண்டாக்கியிருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்குத் தண்ணீர் அன்றாடம் இரண்டு லிட்டர் குடிக்க வேண்டும் என்பது அவசியம். அதைப் பருகும் விதம் எப்படி என்பது இதோ இங்கே கூறப்படுவது சரிதானோ என்று யோசிக்க வைக்கின்றது.

டம்ளர் கணக்கில் தண்ணீர் குடியுங்கள் என்று கூறப்படுகிறது. எப்படிக் குடிக்க வேண்டும் ?

தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.

தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.

ஒருவர் குடித்த டம்ளரில் மற்றொருவர் குடிப்பது சுகாதாரக் கேடு என நீங்கள் கூறலாம்.

இதற்கும் மாற்று வழி உண்டு. ஒவ்வொருவருக்கும் டூத் பிரஷ் இருப்பதுபோல தனித்தனியே டம்ளர் வைத்துக் கொள்ள வேண்டும்.விருந்தினர்க்குக் கொடுக்கப்பட்ட டம்ளரை உடனுக்குடன் அலசிக் கழுவி வைத்துக் கொள்ளலாமே !

முக்கனிகளில் ஒன்றான பலா

முக்கனிகளில் ஒன்றான பலா சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமேக் காய்க்கக் கூடியது. ஆனால் பலாப் பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு சுவையான பலாப் பழத்தில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன.

கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.

அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.

சில இடங்களில் சின்ன சின்ன பலாக்காய்களை விற்பனைக்கு வைப்பார்கள். அது எதற்கு என்று பலருக்கும் தெரியாது.
அந்த பலாக்காயை வாங்கி வந்து கூட்டு செய்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது.

பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.
பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.

எனவே அடுத்த முறை பலாக்காயை எங்கு பார்த்தாலும் வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுங்கள்.

கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி

தாயின் கர்ப்பப்பையில் சிசு வளர்ந்து பத்து மாதங்கள் கழித்து ஜனிப்பது தெரிந்த விஷயம்தான். கர்ப்பப்பையில் குழந்தையின் வளர்ச்சி எப்படி என்று தெரியுமா? நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். குறிப்பாக குழந்தையை சுமக்கும் தாய்மார்கள் முப்பது நாட்கள் வரை கருவின் நிலை தெளிவற்றதாகவே இருக்கும்.

ஒரு மாத காலத்திற்குப் பிறகு சிசுவின் வளர்ச்சியில் வேகம் தென்படுகிறது. கை,கால்கள் உருவாவதற்கான அடிப்படைக் குறிகள் இப்போது தோன்றுகின்றன. மூளைப் பகுதியில் வளர்ச்சி ஏற்படுகின்றது. எட்டாவது வாரத்தில் தான் சிசுவுக்கு ஒரு தெளிவான உருவத் தோற்றம் உ ண்டாகிறது. அப்போது சிசுவின் வளர்ச்சி ஒரு அங்குலமாக இருக்கும்.

ஏழாவது வாரத்திலிருந்தே சிசுவின் உறுப்புகளில் இயக்க உணர்வு தோன்றி விடும். தசைகள் விரிந்து சுருங்கும் இயல்பினை பெற்றிருக்கும். அந்த சமயத்தில் மூக்குப் பகுதி உருவாகத் தொடங்கும். கை, கால்களில் விரல்கள் தோன்றிவிடும். கண்களின் பகுதி முழுமையடைந்தாலும் மூடியே இருக்கும். கருவில் உருவாகும் சிசு நான்காவது மாத வாக்கில் தனது கை விரல்களை நன்கு மடக்கி நீட்டக் கூடிய அளவுக்கு முன்னேற்ற கரமான வளர்ச்சியைப் பெற்று விடுகிறது. சிறுநீரகமும் உருவாகத் தொடங்கிவிடுகிறது.

நான்காவது மாதத்தில் சிசுவின் உடல் வளர்ச்சி இரண்டு மடங்காகிறது. அதாவது அதன் உடலின் நீளம் நாலரை அங்குலமாகி விடுகிறது.

அதற்குப் பிறகு சிசுவின் எலும்புகளில் நல்ல வளர்ச்சி காணப்படும்.

ஐந்து, ஆறு மாதங்களில் சிசுவின் தலையில் முடி வளரத் தொடங்கி விடுகிறது. ஆனால் அதன் கண்களில் பெரிய மாறுதல்கள் ஏற்படுவதி ல்லை.

சிசு பிறக்கும் காலத்திற்குச் சற்று முன்தான் கண்களின் சீரான வளர்ச்சி. கண்களின் நிறம் ஆகியவற்றைக் காண முடிகிறது.

தாயின் வயிற்றிலிருந்து சிசு வெளியேறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகத்தான் உணர்ச்சி, அவை உணரும் உறுப்புகள் ஆகியன இயக்கம் பெறுகின்றனவாம்.

ஏழு மாதங்கள் கடந்து சில நாட்கள் ஆனதும்,எலும்புகள் மற்ற உறுப்புகளின் வளர்ச்சி அனேகமாக முழுமை பெறுகிறது.

இப்படியாகக் கருவில் நடைபெறும் சிசுவின் வளர்ச்சி இயக்கத்தின் கால அளவு, அதாவது கரு உருவான பின் சிசுவின் கர்ப்ப வாச காலம் 266 நாட்களாகிறது.

இளைய தலைமுறையை மிரட்டும் ஞாபக மறதி


பொதுவாக வயது ஆக ஆகத்தான் ஒருவருக்கு முளையின் செயல்பாடு குறையத் தொடங்கும். ஆனால், இன்றைய தலைமுறையினர் இளம் வயதிலேயே, அதாவது 25-30 வயதிலேயே இந்த பிரச்சினையில் சிக்கிக்கொள்வது அதிகரித்து வருவதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வும் அமெரிக்காவில்தான் நடத்தப்பட்டது. 18 முதல் 60 வயது வரை உள்ள உடல் ஆரோக்கியம் கொண்ட சுமார் 20 ஆயிரம்பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களது நினைவாற்றல், முளையின் செயல்பாட்டு திறன், சரியான முறையில் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து சுமார் 7 ஆண்டுகள் வரை இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும், புதிர்களை கண்டறிதல், கதைகளில் வரும் நிகழ்வுகளை நினைவு கூர்தல் ஆகிய திறன் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் முடிவில், 20 முதல் 30 வயதுள்ள இளைய தலைமுறையினர் சில திறன்களை இழந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் ஆய்வாளர்கள்.

இந்த கவலையை தெரிவித்த ஆய்வாளர்களுக்கு இன்னொரு ஆறுதலான செய்தியும் ஆய்வின்போது கிடைத்தது. மொழி தொடர்பான வார்த்தைகள் மற்றும் பொது அறிவானது வயது அதிகரிக்கும்போது, கூடவே அதிகரிக்கிறது என்பதுதான் அந்த செய்தி.

அழகும்… மனதும்..!-மேக்கப் டிப்ஸ்

அழகு என்பது நம் வெளித்தோற்றத்தை மட்டும் காட்டாமல் `பெர்சனாலிட்டி டெவலப்மெண்டையும்’ வெளிக்காட்டுகிறது. எனவே தான் மேக்கப் செய்து கொள்வதை அனைத்து பெண்களும் விரும்புகின்றனர்.

பெண்களின் ஆரோக்கியமான சிந்தனைக்கு, அக அழகோடு, புற அழகும் அவசியம். மேக்கப் என்றாலே ஏதோ நம்மை அப்படியே உருமாற்றி விடக் கூடிய நமக்கு சிறிதும் தொடர்பும் இல்லாத விஷயம் என்று தான் நம்மில் பலரும் நினைக்கிறோம். உண்மையில் சொல்ல போனால் நம் அழகை அதிகரித்துக் காட்டவும், குறைகளை சிறிதளவு மறைத்துக் காட்டவும் மேக்கப் போட்டுக் கொள்கிறோம்.

நாம் எந்த இடத்திற்கு கிளம்புகிறோம் என்பதை மேக்கப் போடும்போது கவனிக்க வேண்டும். நாம் சாதாரணமாக வெளியே ஷாப்பிங்கோ அல்லது நண்பர்கள் வீட்டுக்கோ கிளம்பும்போது திருமண வீட்டுக்கு போவது போல் மேக்கப் போட்டுக் கொள்ளக் கூடாது. சிறந்த மேக்கப் என்பது நாம் போட்டிருக்கும் மேக்கப் வெளியே தெரியாதவாறு போடுவதுதான். அப்போது தான் இயற்கை அழகோடு நாம் தோன்ற முடியும்.

முதலில் நாம் கவனிக்க வேண்டியது, நம் சருமத்திற்கு பொருத்தமான மேக்கப் பொருட்களைத் தேர்வு செய்து வாங்கியோ அல்லது தயாரித்தோ உபயோகிப்பதுதான்.

பொதுவாக, கறுப்பு நிறம் உடையவர்கள் கோதுமை கலரில் உள்ள கிரீம் அல்லது பவுடரை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் நாடகத்திற்கு மேக்கப் போட்டது போல் இருக்கும். எனவே அவரவர் சருமத்திற்கு ஏற்ற கிரீமை உபயோகிப்பது நல்லது.

இன்றைய காலகட்டத்தில் பெண்களும் வேலைக்கு செல்லும் அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் காலையில் எழுந்ததில் இருந்து வேலைக்குக் கிளம்பும் வரை வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல், கணவரை அலுவலகத்திற்கு அனுப்புதல் போன்ற வேலைகளை முடித்து விட்டு தாங்களும் அரைகுறையாக மேக்கப் போட்டுக் கொண்டு அலுவலகம் செல்கின்றனர். இதனால் முகம் மற்றும் சருமத்தில் படியும் புகை, தூசி எல்லாமே அவர்களை இன்னும் அழகற்றவர்களாக்கி விடும். எனவே சிம்பிளான மேக்கப் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.

மேக்கப் செய்து கொள்ள ஆரம்பிக்கும் முன் முகத்தை நன்றாக வெநநீரால் சோப்பு போட்டுச் சுத்தமாகக் கழுவி ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், புரோடக் புல் கிரீமை முதலில் தடவ வேண்டும். இது சருமத்திற்கு ஏற்ற வகையில் மாறிவிடும். பிறகு நம்முடைய சருமத்திற்கு தகுந்த கிரீமை தடவ வேண்டும்.

பவுண்டேஷன் என்பது தான் மேக்கப் செய்து கொள்ள அடிபடை முயற்சி. பவுண்டேஷன் கிரீமை சிறிதளவு எடுத்து முகம் முழுவதும் விரல் நுனியில் எல்லா இடத்திலும் வைத்துக் கொள்ளவும். பின்னர் முகம் முழுவதும் பரவலாகத் தடவிக் கொள்ளவும். முக்கை ஒட்டிம், கைகளுக்கு கீழேயும் கிரீமை மிக லேசாகத் தடவவும். பவுண்டேஷன் கிரீம் தடவிய பிறகு ஸ்பாஞ்சை தண்ணீரில் வைத்து நனைத்து பிழிந்து விட்டு பின்னர் முகம் முழுவதும் தடவ வேண்டும். பின் ஈரமான ஸ்பாஞ்சை வெதுவெதுபான தண்ணீரில் சுத்தமாகக் கழுவி உலர வைக்கவும்.பவுடேஷன் கிரீம்கள் பல நிறங்களில் கிடைக்கும். அதனால் நம் சருமத்திற்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொதுவாகவே, பகல் நேரங்களில் உள்ள மேக்கப், இரவு நேரங்களில் வேறுவிதமாக மாறி முகத்தை அசிங்கபடுத்தி விடும். எனவே, மாலை நேரத்தில் மெல்லிய மேக்கப் சிறந்தது. வெயில் காலங்களில் வாட்டர் புருப் மேக்கப்பும், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் அடர்த்தியான மேக்கப்பும் செய்து கொள்வது நல்லது.

அழகு என்பது மேல்தோற்றத்தில் மட்டும் இல்லாமல் மனது சம்பந்தபட்டதும் கூட. எனவே சகஜமாக பேசி, பழகி, சிரித்து கவலையை மறந்து வாழக் கற்றுக் கொண்டால் அதுவே நாம் அழகாக இருக்க உதவும் ரகசியம்..

வசியபடுத்தும் வாசனைத் திரவியங்கள்

என்னதான் வித்தியாசமான உடையுடன், விதவிதமான அணிகலன்களை அணிந்து வலம் வந்தாலும், ஒருவர் உடம்பிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அவரைச்சுற்றி இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்துவிடும். தன்னிடமிருந்து வெளிபடும் துர்நாற்றத்தை மறைப்பதற்காகவே பெரும்பாலானவர்கள் வாசனைத் திரவியங்களை உபயோகபடுத்துகின்றனர். வெயில் காலத்தில் இதனுடைய பயன்பாடு இன்னும் அதிகரிக்கும். சிலரிடம் துர்நாற்றம் இல்லையென்றாலும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை வாசனையால் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

வாசனைத் திரவியத்தின் வரலாற்றை பார்க் கும்போது மலைப்பு தோன்றுகிறது. பழங் காலத்தில் இருந்தே உலகமெங்கிலும் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தபட்ட தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், முதன்முதலில் வாசனைத் திரவியங் களை பயன்படுத்திய பெருமை எகிப்தையே சேரும். பழம்

பெரும் மருத்துவ முறையான ஆயூர்வேதத்தில் `அத்தர்’ வாசனைத் திரவியமாகக் குறிப்பிடபட்டுள்ளது.

பார்ட்டிகள், விழாக்கள், மீட்டிங்குகளுக்குச் செல்லும்போது மட்டும்தான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. அதேபோல் இன்னார்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுபாடும் கிடையாது. அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களை யார், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சிலர் எளிதில் தூங்குவதற்காக இரவில் தூங்கபோதும் முன்னர் மென்மையான வாசனை வீசும் திரவியங்களை பூசிக் கொள்வர். பொதுவாக வாசனைத் திரவியங்கள் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் தாழ்வு மனபான்மை இல்லாமல் சந்தோஷமாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகக் காட்டுகிறது. தன்னம்பிக்கைடன் செயல்பட முடிகிறது.

ஆண், பெண் இருவருமே வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகின்றனர். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பயன்படுத்துவதைம் காண முடிகிறது. குறிப்பாக இளவயதினர்களிடையே வாசனைத் திரவியங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இளவயது ஆண், பெண் இருவருமே தங்களது எதிர்பாலினர்களைக் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகின்றனர். இயற்கையான நறுமண பொருட்களில் இருந்து தயாரிக்கபடுபவை, செயற்கையாக உருவாக்கபடுபவை என இரண்டுவிதமான வாசனைத் திரவியங்கள் உள்ளன.

விதவிதமான வாசனைகளில், கலர்களில் வாசனைத் திரவியங்கள் கிடைக்கின்றன. இவை அடைத்து விற்கபடும் பாட்டில்களும், அவற்றின் முடிகளும் பல்வேறு டிசைன்களில் காணபடுகின்றன. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனி வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதேபோல் பாரம்பரிய முறை, நவீன முறை என இரண்டு விதமான முறைகளில் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கபடுகின்றன.

வகைகள்

பூளாரல்: நறுமணம் தரக்கூடிய பூக்களில் தயாரிக்கபடுபவை. இவற்றை பயன்படுத்தும்போது ஒருவிதமான `ரொமான்ஸ்’ உணர்வு உண்டாகும்.

புருட்டி: பழங்களின் சாற்றில் இருந்து தயாரிக்கபடுபவை.

ஓசியானிக்: கடலில் உள்ள பொருட்களால் தயாரிக்கப்படுபவை. இவற்றில் ஸ்ட்ராங், மைல்டு என இரு வெரைட்டிகள் உண்டு.

க்ரீன்ஸ்: மரங்களின் வேர்கள், இலைகள், விதைகள் ஆகியவற்றில் தயாரிக்கபடுபவை. இளவயதினர்களுக்கு ஏற்றது. டின்னர் பார்ட்டிகளுக்கு பயன்படுத்தலாம்.

ஓரியண்டல்: வெண்ணிலா போன்ற ப்ளேவர்களில் தயாராகும் வாசனைத் திரவியங்கள். மாலைநேர பார்ட்டிகளுக்கு உகந்தது.

உட்டி: சந்தனம், ரோஸ் உட் போன்றவற்றில் தயாரிக்கபடுபவை.

வெயில் காலங்களில் லேசான வாசனைத் திரவியங்களைம், குளிர்காலங்களில் `ஹெவி’யான வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் அல்லது நடிகை என்ன வாசனைத் திரவியத்தை பயன்படுத்துகிறார்களோ, இவர்களும் அதையே உபயோகிக்கிறார்கள். இயற்கையான நறுமண பொருட்களில் மட்டுமின்றி, கெமிக்கல்ஸ், ஆயில், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்தும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கபடுகின்றன. டி.வி. மற்றும் பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்களே வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றன. பிரபல கம்பெனிகளின் தயாரிப்புகள் சற்று விலை அதிகமாக இருக்கும்.

உடலில் பூசிக்கொள்பவை, உடையில் பூசிக்கொள்பவை என இரண்டுவிதமான வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு எது உகந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உடலில் பூசும் வகையிலான வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களாக பார்த்து பயன்படுத்த வேண்டும்.

வாசனைத் திரவியங்களை பொறுத்த வரையில் பாட்டிலில் இருக்கும்போது ஒருவிதமான வாசனையும், உடலில் பூசிக்கொண்டபின் வேறுவிதமான வாசனையும் உண்டாகும். எனவே, வாங்கும்போதே உடைகளில் சிறிது தெளித்து முகர்ந்து பார்த்து வாங்க வேண்டும். சிலவற்றில் பூசிக்கொண்டதும் வாசனை தோன்றாமல், சிறிது நேரம் கழித்தே தோன்றும். இதுபோன்ற வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.

ராசிகளும், வாசனைகளும்

மேஷம் – எலுமிச்சை, புதினா

ரிஷபம் – லாவண்டர், சந்தனம்

மிதுனம் – பழங்கள்

கடகம் – ரோஸ், லில்லி

சிம்மம் – ஆரஞ்ச், புதினா, சந்தனம்

கன்னி – சந்தனம், ரோஸ் உட்

துலாம் – ஓரியண்டல்

விருச்சிகம் – பூக்கள்

தனுசு – ஓசியானிக்

மகரம் – ஓரியண்டல், மல்லிகை, ரோஸ்

கும்பம் – பழங்கள்

மீனம் – ஓசியானிக், க்ரீன்ஸ்

பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது, முடிகளின் மீது படாதவாறு கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அதில் உள்ள ஆல்கஹால் முடிகளின் மீது பட்டால் நரைத்து விடும். பயன்படுத்திய பின் பாட்டில்களை காற்று புகாதவாறு இறுக்கமாக முடி வைக்கவும். சூரிய ஔ நேரடியாக படாதவாறு வாசனைத் திரவியங்களை பத்திரபடுத்த வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட வாசனைத் திரவியங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டாம். அளவோடு பயன்படுத்த வேண்டும். அதிகமாக உபயோகிக்கும் பட்சத்தில் சரும பாதிப்புகள் ஏற்பட வாய்புண்டு.

வாங்கும்போது கடை பிடிக்க வேடியவை வாசனைத் திரவியங்களை வாங்கும் முன், மணிக்கட்டின் மீது சிறிதளவு தெளித்து பாருங்கள். சிறிது நேரம் கழித்து அலர்ஜி எதுவும் ஏற்படவில்லையென்றால், அதை வாங்கலாம். அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் வேறொன்றை பரிசோதிபது நல்லது. அந்தந்த சீசனுக்கேற்ப மைல்டானது, ஹெவியானது என பிரித்து வாங்குங்கள். விலை அதிகமாக இருந்தாலும் தரமான பிராண்டட் வாசனைத் திரவியங்களை மட்டும் வாங்குங்கள். அவைதான் சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும். ஆல்கஹால் அதிகமாக உள்ளவை, குறைவாக உள்ளவை என இரண்டு வெரைட்டிகள் உள்ளன. உங்கள் சருமத்திற்குச் சிறந்தது எது என்பதை பார்த்து வாங்குங்கள்.

இறைச்சியில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்

பிராணிகளிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுகளில் உயர்தர புரதங்களும் இன்னும் சில சத்துக்களும் இருந்தாலும் கூட அவை சில சமயங்களில் மரணத்திற்கு இட்டுச் சல்லும் அளவுக்கு அபாயகரமானவையும் கூட. சிவப்பு இறைச்சி புற்றுநோய்க்கு வித்திடும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.

சிவப்பு இறைச்சி, பெருங்குடல் ஆசன புற்றுநோய்க்கு இட்டுச் செல்லும் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் சிவப்பு இறைச்சியைத் தவிர்க்குமாறும் பதனிடப்பட்ட இறைச்சிகளை முற்றிலும் தவிர்க்குமாறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இறைச்சி உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவது எப்படி?

சிவப்பு இறைச்சிகளில் அளவுக்கு அதிகமான குருதிச்சிவப்பு இரும்பு (haem iron) இருக்கிறது. (உதா : இறைச்சி, இறைச்சி உணவுப் பொருட்கள், இரத்த உணவுப்பொருட்கள்). குருதிச் சிவப்பு அல்லாத இரும்புச் சத்து தாவர உணவுகளில் இருக்கிறது. (உதா : தானியங்கள், பீன்ஸ், காய்கறிகள், தௌபு, அத்தி, கொண்டைக்கடலை மற்றும் ஏப்ரிகோட்.)

குருதிச் சிவப்பு இரும்பில் புற்றுநோயை வரவழைக்கும் என்-நைட்ரோசோ இருக்கிறது. இந்த வகை சிவப்பு குருதி இரும்பு டிஎன்ஏவுக்கு சேதத்தை விளைவித்து புற்றுநோய் செல் வளர்ச்சிகளுக்கு வித்திட்டு விடுகிறது.

சிவப்பு இறைச்சியில் உள்ள இந்த வகை இரும்பு பெருங்குடலில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

சமைக்கும் முறை

சில வகை சிவப்பு இறைச்சிகள் அப்படியே நெருப்பில் அதிகமான சூட்டில் வாட்டி எடுக்கப்படுகின்றன. இப்படி வாட்டி எடுக்கப்படும்பொழுது இந்த இறைச்சி கருகி புற்றுநோயை வரவழைக்கும் ஹேடேரோசைக்ளிக் எமைன் என்ற இரசாயனங்கள் வெளிப்படுகின்றன.

தசை இறைச்சிகளான பன்றி, மாடு, மீன் போன்றவற்றை சமைக்கும்பொழுது ஹேடேரோசைக்ளிக் எமைன் வளிப்படுகிறது. இதுவரைக்கும் சுமார் 17 விதமான புற்றுநோயை வரவழைக்கும் ஹேடேரோசைக்ளிக் எமைன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரசாயனங்கள் உருவாகுவதற்கு சூடு மிக முக்கியமான காரணமாகும். பொரித்தல், அணலில் வாட்டுதல், பார்பர்கியூ போன்றவை எல்லாம் மிகப் பெரிய அளவில் இந்த இரசாயனங்களை வெளிப்படுத்துகின்றன. அவணில் வேகவைப்பது, பேக் செய்வது குறைவான சூட்டில் செய்யப்படுவதால் குறைவான அளவு ஹேடேரோசக்ளிக் எமைனையே வெளிப்படுத்துகின்றன. சூடு அதிகமாக இருக்கும் பொழுது ஹேடேரோசைக்ளிக் எமைனும் அதிகமாக வெளிப்படுகிறது.

கொழுப்பு விகிதம்

இறைச்சியில் கெட்டி கொழுப்பு ஒமேகா-6 கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. இதற்கு புற்றுநோயை வரவழைக்கும் தன்மை உண்டு. நாம் இன்று உட்கொள்ளும் பெரும்பாலான இறைச்சிகளில் கெட்டி கொழுப்பு (கெட்ட கொழுப்பு) அதிகமாகவும், கெட்டி அல்லாத கொழுப்பு (ஆரோக்கியமான கொழுப்பு) குறைவாகவும் இருக்கிறது.

கொழுப்பின் அளவை விட எந்த ரகத்தைச் சேர்ந்த கொழுப்பு என்பதே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது.

பதனிடப்பட்ட இறைச்சிகள்

நீங்கள் உட்கொள்ளும் சிவப்பு இறைச்சி வெகு நாட்களுக்குப் முன்பதாகவே அறுக்கப்பட்ட பதனிடப்பட்ட இறைச்சியாக இருக்கக்கூடாது. இப்படிப்பட்ட இறைச்சியை நீங்கள் அறவே உட்கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட சிவப்பு இறைச்சிதான் பெருங்குடல்-ஆசன புற்றுநோய்க்கு முதன்மையான காரணம். இறைச்சியைப் பதனிடும் பொருட்டு அதில் நைட்ரேட் என்ற இரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். இந்த நைட்ரேட் இறைச்சியைப் பதனிடவும், இறைச்சிக்கு வர்ணம் கொடுக்கவும், இறைச்சியின் சுவையைக் கூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நைட்ரேட் நம்முடைய குடலுக்குள் புற்றுநோயை உருவாக்கும் வஸ்துவாக உருமாறுகிறது.பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரேட்டும் அதிகமாக இருக்கிறது. சோடியம் நைட்ரேட் அறவே உணவில் சேர்க்கப்படக்கூடாத ஒரு பொருளாகும்.

இறைச்சியின் துணை கொண்டு தயாரிக்கப்படும் சோசேஜ், ஹோட் டோக் போன்றவையும் இதே முறையில்த¡ன் தயாரிக்கப்படுகின்றன.

சிவப்பு இறைச்சி, பதனிடப்பட்ட இறைச்சி மற்றும் பதனிடப்பட்ட இறைச்சியின் துணை கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களை பயனீட்டாளர்கள் ஒரு நாளைக்கு சுமார் 1.7 அவுன்ஸ் அளவில் உட்கொள்ளும்பொழுது பெருங்குடல்-ஆசன புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 21% அதிகரிக்கிறது.

பஸ்சிமோத்தாசனம்

விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் & இரு கால்களை ஒன்றாகச் சேர்த்துப் படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு சுவாசத்தை உள்ளிழுத்து ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் உள்ள ஆள்காட்டி விரலினால் கால்களின் பெருவிரலை இறுக்கிப்பிடிக்க முயற்சிக்கவும். விரல்கள் எட்டவில்லையாயின், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலைப் பிடித்திடவும். பின் முகத்தால் கால்களின் மூட்டுகளைத் தொட முயற்சிப்பதோடு, வயிற்றை மூச்சை வெளியேவிட்ட நிலையில் எக்கவும். கைகளின் இரு மூட்டுக்களும் படத்தில் காட்டியவாறு தரையைத் தொட முயற்சிக்கவும். ஒரு முறைக்கு 10 வினாடிகள் செய்யவும். 2 முதல் 4 முறை முயற்சிக்கவும். தலை கொஞ்சம் கொஞ்சமாய் குனியச் செய்யவும். ஒவ்வொறு முறைக்கும் சற்று இளைப்பாறி மீண்டும் செய்யவும்.

பலன்கள்:

வயிற்றுப் பகுதித் தசைகள் பலம் பெறும். கல்லீரல், மண்ணீரல், இரைப்பை, கணையம், மூத்திரக்காய் இவைகள் புத்துணர்ச்சி பெற்று தமது கடமைகளைச் சரிவரச் செய்வதோடு, இவ்வுறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாயினும் முற்றிலும் நீங்கும். பசியின்மை நீங்கும். நீரழிவு நோய் முற்றிலும் நீங்கும். இளமை மேலிடும். பெண்கள் இவ்வாசனத்தையும், சர்வாங்காசனத்தையும் செய்து வந்தால் மாதாவிடாயின்போது உண்டாகும் இடுப்பு வலி, வயிற்று வலி, மலட்டுத்தனம் முதலியன நீங்கும்.