அழகும்… மனதும்..!-மேக்கப் டிப்ஸ்

அழகு என்பது நம் வெளித்தோற்றத்தை மட்டும் காட்டாமல் `பெர்சனாலிட்டி டெவலப்மெண்டையும்’ வெளிக்காட்டுகிறது. எனவே தான் மேக்கப் செய்து கொள்வதை அனைத்து பெண்களும் விரும்புகின்றனர்.

பெண்களின் ஆரோக்கியமான சிந்தனைக்கு, அக அழகோடு, புற அழகும் அவசியம். மேக்கப் என்றாலே ஏதோ நம்மை அப்படியே உருமாற்றி விடக் கூடிய நமக்கு சிறிதும் தொடர்பும் இல்லாத விஷயம் என்று தான் நம்மில் பலரும் நினைக்கிறோம். உண்மையில் சொல்ல போனால் நம் அழகை அதிகரித்துக் காட்டவும், குறைகளை சிறிதளவு மறைத்துக் காட்டவும் மேக்கப் போட்டுக் கொள்கிறோம்.

நாம் எந்த இடத்திற்கு கிளம்புகிறோம் என்பதை மேக்கப் போடும்போது கவனிக்க வேண்டும். நாம் சாதாரணமாக வெளியே ஷாப்பிங்கோ அல்லது நண்பர்கள் வீட்டுக்கோ கிளம்பும்போது திருமண வீட்டுக்கு போவது போல் மேக்கப் போட்டுக் கொள்ளக் கூடாது. சிறந்த மேக்கப் என்பது நாம் போட்டிருக்கும் மேக்கப் வெளியே தெரியாதவாறு போடுவதுதான். அப்போது தான் இயற்கை அழகோடு நாம் தோன்ற முடியும்.

முதலில் நாம் கவனிக்க வேண்டியது, நம் சருமத்திற்கு பொருத்தமான மேக்கப் பொருட்களைத் தேர்வு செய்து வாங்கியோ அல்லது தயாரித்தோ உபயோகிப்பதுதான்.

பொதுவாக, கறுப்பு நிறம் உடையவர்கள் கோதுமை கலரில் உள்ள கிரீம் அல்லது பவுடரை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் நாடகத்திற்கு மேக்கப் போட்டது போல் இருக்கும். எனவே அவரவர் சருமத்திற்கு ஏற்ற கிரீமை உபயோகிப்பது நல்லது.

இன்றைய காலகட்டத்தில் பெண்களும் வேலைக்கு செல்லும் அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் காலையில் எழுந்ததில் இருந்து வேலைக்குக் கிளம்பும் வரை வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல், கணவரை அலுவலகத்திற்கு அனுப்புதல் போன்ற வேலைகளை முடித்து விட்டு தாங்களும் அரைகுறையாக மேக்கப் போட்டுக் கொண்டு அலுவலகம் செல்கின்றனர். இதனால் முகம் மற்றும் சருமத்தில் படியும் புகை, தூசி எல்லாமே அவர்களை இன்னும் அழகற்றவர்களாக்கி விடும். எனவே சிம்பிளான மேக்கப் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.

மேக்கப் செய்து கொள்ள ஆரம்பிக்கும் முன் முகத்தை நன்றாக வெநநீரால் சோப்பு போட்டுச் சுத்தமாகக் கழுவி ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், புரோடக் புல் கிரீமை முதலில் தடவ வேண்டும். இது சருமத்திற்கு ஏற்ற வகையில் மாறிவிடும். பிறகு நம்முடைய சருமத்திற்கு தகுந்த கிரீமை தடவ வேண்டும்.

பவுண்டேஷன் என்பது தான் மேக்கப் செய்து கொள்ள அடிபடை முயற்சி. பவுண்டேஷன் கிரீமை சிறிதளவு எடுத்து முகம் முழுவதும் விரல் நுனியில் எல்லா இடத்திலும் வைத்துக் கொள்ளவும். பின்னர் முகம் முழுவதும் பரவலாகத் தடவிக் கொள்ளவும். முக்கை ஒட்டிம், கைகளுக்கு கீழேயும் கிரீமை மிக லேசாகத் தடவவும். பவுண்டேஷன் கிரீம் தடவிய பிறகு ஸ்பாஞ்சை தண்ணீரில் வைத்து நனைத்து பிழிந்து விட்டு பின்னர் முகம் முழுவதும் தடவ வேண்டும். பின் ஈரமான ஸ்பாஞ்சை வெதுவெதுபான தண்ணீரில் சுத்தமாகக் கழுவி உலர வைக்கவும்.பவுடேஷன் கிரீம்கள் பல நிறங்களில் கிடைக்கும். அதனால் நம் சருமத்திற்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொதுவாகவே, பகல் நேரங்களில் உள்ள மேக்கப், இரவு நேரங்களில் வேறுவிதமாக மாறி முகத்தை அசிங்கபடுத்தி விடும். எனவே, மாலை நேரத்தில் மெல்லிய மேக்கப் சிறந்தது. வெயில் காலங்களில் வாட்டர் புருப் மேக்கப்பும், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் அடர்த்தியான மேக்கப்பும் செய்து கொள்வது நல்லது.

அழகு என்பது மேல்தோற்றத்தில் மட்டும் இல்லாமல் மனது சம்பந்தபட்டதும் கூட. எனவே சகஜமாக பேசி, பழகி, சிரித்து கவலையை மறந்து வாழக் கற்றுக் கொண்டால் அதுவே நாம் அழகாக இருக்க உதவும் ரகசியம்..

%d bloggers like this: