Daily Archives: திசெம்பர் 28th, 2009

அவங்க திருந்திட்டாங்க; நாமளோ…?- குளிர்பானங்களுக்கு தடை


* அமெரிக்கா போடுது குளிர்பானங்களுக்கு தடை
* இந்திய இளைஞர்களோ ருசித்து குடிக்கறாங்க
* “எனக்கு ஒரு செஷ்வான் நூடூல்ஸ், ஆலு மட்டர், அத்தோடு ஒரு கோக்’ என்று ஓட்டலில் இளசுகள் ஆர்டர் செய்வது இப்போது வழக்கமாகி விட்டது.
* குறிப்பிட்ட டிபன் பாக்கேஜ்களுடன் கோக் பாட்டில் இலவசம் என்று சலுகை மெனுக்களை பல ஓட்டல்களில் காணலாம். அதற்கு செம வரவேற்பு வேறு.
* முன்பெல்லாம் சுற்றுலா சென்றால், இட்லி, சப்பாத்திகளை தயார் செய்து எடுத்துப் போவதுண்டு. இப்போதோ, கவர்ச்சி பாக்கெட்களில் உள்ள மொறுமொறுக்கள், அத்தோடு, இரண்டு லிட்டர் கூல் டிரிங்க் பாட்டில் வாங்கிவைத்தால் போதும். இப்படி, “சாப்ட் டிரிங்க்’ மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகளவில் பரவி விட்டது. மற்ற உணவு வகைகளில் உள்ள கொழுப்பு சத்தை விட, கேன், பாட்டிலில் அடைக்கப்பட்ட, “கார்பன்’ ஏற்றப்பட்ட கூல் டிரிங்க்குகளில் கலோரி மிக அதிகம்.
சர்க்கரை நோய், இதய பாதிப்புக்கு இது தான் அடிப்படை காரணம். தினமும் இரண்டு சாப்ட் டிரிங்க் குடித்து வரும் இளைஞர் ஒருவர், சில ஆண்டுகளில் மிகவும் குண்டாகி விடுகிறார்; அப்புறம் என்ன, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் என்று டாக்டர்களை தேடிப் போக வேண்டியது தான்.
ஒரு நாளைக்கு 44 கிராம் தான்!
குளிர்பானம் குடிக்கக் கூடாது என்பதல்ல; ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களில் இருந்து சாறெடுத்து அப்படியே குடிப்பது நல்லது தான். ஆனால், பாட்டிலில் அடைக்கப்பட்ட, “கார்பன்’ அழுத்தம் தரப்பட்ட (கார்பனேட்டட்) கூல் டிரிங்குகள் தான் உடலுக்கு ஆபத்து.
குளிர்பானங்களில், வைட்டமின், நார்ச்சத்து போன்றவை இல்லாமல் இல்லை. ஆனால், அதையும் தாண்டி, இனிப்பு சத்து அதிகம். ஒருவர் ஒரு நாளைக்கு 44 கிராம் இனிப்பு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். காபி, ஜூஸ் போன்ற பல வகை உணவுகளில் இந்த அளவு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், ஒரு பாட்டில் குளிபானம் குடித்தால், அதில் இதை விட அதிகமாகவே இனிப்பு சத்து உள்ளது. ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு குளிர்பான பாட்டில் குடித்தாலே போதும், அவர் உடல் எடை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.
டீன்-ஏஜ் பெண்களுக்கும்
இளைஞர்களுக்கு குளிர்பானங்களால், உடல் எடை அதிகரித்து, சர்க்கரை அளவு கூடி விடுகிறது; ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்றால், இளம் பெண்களுக்கு எலும்பு தின்மை குறைகிறது. கால்சியம் சத்துக்களை குளிர்பானத்தில் உள்ள இனிப்பு சத்து பறித்துவிடுகிறது என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டீன்-ஏஜ் பெண்களுக்கு அப்போது குளிர்பானம் குடிப்பது குஷியாகத்தான் இருக்கும். 40 வயதை அடையும் போது தான் மூட்டுவலியில் ஆரம்பித்து, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான் உணர முடியும். அப்போது டாக்டரிடம் ஓடத்தான் நேரம் சரியாக இருக்கும்.
அவங்க மாறிட்டாங்க
கடந்த மூன்றாண்டாகவே, அமெரிக்காவில் பல ஆய்வுகளில் குளிர்பான அபாயம் குறித்து தகவல்கள் வெளிவந்தன. ஆனால், குளிர்பான தயாரிப்பாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுத்து விட்டனர். ஆனால், குழந்தைகள் கூட பெரியவர்கள் போல குண்டாக ஆவது தெரியவந்தபோது தான் சுகாதாரத்துறை அதிர்ந்தது. இதையடுத்து பள்ளிகளில் குளிர்பானங்களுக்கு தடை போடப்பட்டது. விளைவு, இப்போது பள்ளி மாணவர்கள் 65 சதவீதம் பேர் குளிர்பானம் குடிப்பதை நிறுத்தி விட்டனர்.
இங்கே ரத்தின கம்பளம்
ஆனால், படித்த , திறமை வாய்ந்த நம் இளைஞர்கள், கேன், பாட்டில் குளிர்பானங்களில் தான் அன்றாட டிபன், சாப்பாட்டையே காண்கின்றனர். வீட்டில் சாப்பாடு செய்யவில்லை என்றால், கவலையில்லை, ஒரு இரண்டு லிட்டர் குளிர்பான பாட்டில் போதும். ஓட்டலுக்கு போனால், டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வைப்பது வழக்கம். இப்போது, வாண்டூஸ்களுக்கு கூட, ஒரு குளிர்பான பாட்டிலோ, கேனோ வைத்தால் தான் டிபனே உள்ளே இறங்கும். அந்த அளவுக்கு மாற்றியது யாராக இருந்தாலும், பெற்றோரை தான் குறை சொல்ல வேண்டும்.
தடை இங்கே பயனில்லை
சர்க்கரை வியாதிக்கு, இதய பாதிப்புக்கு குளிர்பானம் முக்கிய காரணம் என்று தெரிந்தும், இந்தியாவில் தடை செய்ய அரசுகளுக்கு தைரியமில்லை; காரணம் சந்தை பொருளாதாரம் பாதிக்கும் என்பது தான்.
கேரளா தான் முதலில், பள்ளிகள் அருகே குளிர்பானம் விற்க தடை விதித்தது. ஆனால், அங்கும் இப்போது தலைகீழாகி விட்டது. சட்டம் போட்டால் பயனில்லை. அவரவர் திருந்த வேண்டும் என்ற நிலை தான் இப்போது உள்ளது.
திறமையா – ஒபிசிட்டியா?
நம் இளைஞர்களிடம் திறமை எக்கச்சக் கம்; அதுபோல, அமெரிக்கா எதையெல் லாம், “கெட்டது’ என்று கழற்றி விடுகிறதோ, அதையெல்லாம் வரவேற்பதும் நாம் தான். உடலை கெடுக்கும் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் இளைஞர்களிடம் சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துவிட்டனர். திறமையா, ஒபிசிட்டியா என்பதை இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்; உணராவிட்டால், காலம்தான் பதில் சொல்லும்.

பேரீச்சை

உலகின் பழமையான நாகரிகமான “மெசபடோமியா”வில்தான் முதன் முதலாகப் பேரீச்சம்பழத்தின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள பேரீச்சம்பழம் கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் “சத்துணவுப்பழமாக” உலக மக்களால் உண்ணப்பட்டு வருகின்றது.

ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்.

தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.

எங்கேனும் அடிபட்டதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும்போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.

தினசரி 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அ மிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.

முடி பராமரிப்புக்கு பேரீச்சம்

1. 100 கிராம் உயர்ரக பேரீச்சம் பழத்தை எடுங்கள்.
2. இதைக் கொட்டையுடன் தட்டி, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
3. ஒரு நாள் இதை அப்படியே விடுங்கள்.
4. ஊறிய பேரீச்சம் பழத்தை அரைத்து வடிகட்டுங்கள்.
5. இதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சுங்கள்.

2010 காலண்டர் வேண்டுமா!

வரப்போகிறது ஜனவரி. எது இருக்கிறதோ இல்லையோ! நம் அறையில் காலண்டர் ஒன்று வேண்டும். எங்கு தேடியும் இலவசமாகக் கிடைக்கவில்லையா? இன்டர்நெட்டில் ஒரு தளம் நாடு வாரியாக, விடுமுறை நாட்களுடன் காலண்டரைத் தருகிறது. மாதவாரியாகவும், ஆண்டு முழுமைக்கும் ஒன்றாகவும் இதனைப் பெறலாம். இவை பி.டி.எப். பைலாகவும், டாகுமெண்ட் பைலாகவும் கிடைக்கின்றன. தரும் காலண்டரில் மாற்றங்கள் செய்திட வேண்டும் என எண்ணினால், டாகுமெண்ட் பைலாக இறக்கிக் கொள்ளுங்கள். இதனை அச்செடுக்கலாம்; அல்லது கம்ப்யூட்டரிலேயே பைலாக வைத்தும் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: http://www.calendarlabs. com/onlinecalendar.php இங்கு சென்றவுடன் நாடு தேர்ந்தெடுத்து அமைத்து ஓகே தந்துவிட்டால், உடன் காலண்டர் கிடைக்கும்.
இதே போன்று காலண்டர் தரும் தளங்கள் வேறு சிலவும் உள்ளன.

அவை:

http://www.printactivities.com/Calendars /Calendars.html

http://www.hooverwebdesign.com/2010freeprintablecalendartemplates.html

http://www.vertex42. com/calendars/printablecalendars.html

ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்கள்

வைரஸ்கள் மட்டுமே தொல்லை தந்து கொண்டிருந்த நேரத்தில், நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதற்காகவென்றே உருவாக்கப்பட்டு உலவ விடப்பட்டவை தான் ஸ்பைவேர் புரோகிராம்கள். இதனை மால்வேர் எனவும் சிலர் கருதி வகைப்படுத்துகின்றனர். இவை நேரடியாகக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பிரச்சினை செய்யாது என்றாலும், நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடுவதில் ஈடுபடுகின்றன. இவற்றை வடிவமைத்தவர் களுக்கு இந்த தகவல்கள் அனுப்பப்பட்டு நம் பெர்ச்னல் வாழ்க்கையில், நம் பேங்க் நிதி பரிமாற்றங்களில் கெடுதல் செய்கின்றன. எனவே இவற்றை அவ்வப்போது நீக்குவதற்கு நமக்கு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன.
இணையத்தில் பல இலவச ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்த நபர்களின் எண்ணிக்கையை வைத்து, மிகப் பிரபலமான சில புரோகிராம்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
1. AdAware Free: தொடர்ந்து மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம் இது. இதன் அண்மைக் காலத்திய பதிப்பு 8.1.1. ஆகும். விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் இயங்குகிறது. இதனை இயக்க பெண்டியம் 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிப் இருந்தால் போதும். ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் 100 எம்பி இதற்கெனத் தேவை. இதன் பைல் அளவு 89198 கேபி.
சென்ற வாரம் வரை இதனை 1,59,34,537 பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருவதாக இதன் இணைய தளத்தில் தகவல் உள்ளது. இந்த புரோகிராமினைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் லாவா சாப்ட். இதன் இணைய தளம்

http://www.lavasoft.com/ இதனை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய தளத்தின் முகவரி : http://www.pcworld.com /downloads/file/fid,7423order,1/description.html

2. Spybot Search & Destroy: சேபர் நெட்வொர்க் கிங் (http://www.safernetworking.org/en/index. html) என்னும் நிறுவனம் இதனைத் தயாரித்து வழங்குகிறது. இதன் அண்மைக் காலத்திய பதிப்பு 1.6.2. ஆகும். விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் இயங்குகிறது. இதனை இயக்க பெண்டியம் 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிப் இருந்தால் போதும். ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் 100 எம்பி இதற்கெனத் தேவை. இதன் பைல் அளவு 16026 கேபி. இறுதியாக மே 20 அன்று புதுப்பிக்கப்பட்டது. சென்ற வாரம் வரை 85,42,006 பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளனர்.
இலவசமாக இதனை டவுண்லோட் செய்திடலாம். கீழ்க்காணும் முகவரியிலும் இது டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. http://www.pcworld.com /downloads/file_download/fid,22262order,4c, antispywaretools/download.html

3. சி.டபிள்யூ. ஷ்ரெடர் (CWShredder): இதன் பெயர் பைலை மற்றவர் படிக்க முடியாமல் அழிக்கும் தன்மையுடையதாகத் தெரிந்தாலும், இதுவும் ஆண்ட்டி ஸ்பைவேர் பைல் வகையைச் சேர்ந்ததுதான். இது பிரபலாமவதற்குக் காரணம், ஸ்பை ஸ்பாட் மற்றும் ஆட்–அவேர் ஆகிய இரு புரோகிராம்களும் நீக்க முடியாத ஒரு ஸ்பைவேர் புரோகிராமினை இது நீக்கியதுதான். ஆனால் இந்த புரோகிராம் அவ்வப்போது அப்டேட் செய்யப்படவில்லை; இருந்தாலும் மிகச் சிறப்பாக இயங்கி தன் பணியைச் செய்கிறது. இதனைப் பெற http://www.pcworld. com/downloads/file/fid,23551order,1/description.html என்ற முகவரிக்குச் செல்லவும்.
4.விண்டோஸ் டிபெண்டர் (Windows Defender): ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கு பெயர் பெற்ற, பிரபலமான ஏ.வி.ஜி. நிறுவனத் தயாரிப்பு. பொதுவாக ஸ்பைவேர் புரோகிராம்கள் நமக்குத் தெரியாமல் ஸ்டார்ட் அப் புரோகிராமாக நம் கம்ப்யூட்டரில் இடம் பெற்று, நாம் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன் தானும் இயங்கி, தன் ஸ்பை வேலையைத் தொடங்கும். எனவே ஸ்டார்ட் அப்புரோகிராம்களின் மீது கண் வைத்துக் கண்காணித்தால், பெரும்பாலான ஸ்பைவேர் புரோகிராம்களை முடக்கிவிடலாம். விண்டோஸ் டிபெண்டர் அதைத்தான் செய்கிறது. இதனை டவுண்லோட் செய்திட http://www.pcworld.com/downloads/file/fid, 24761order,1/description.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
5. ஸ்பைவேர் கார்ட் (SpywareGuard): முதலில் இதனை பிரவுசர் ஹைஜாக் ப்ளாஸ்டர் என்ற பெயரில் அழைத்தனர். இதனை http://www.pcworld.com /downloads/file/fid,22955order,1/description.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். ஐந்து லட்சம் பேருக்கு மேல் இதுவரை இதனை டவுண்லோட் செய்துள்ளனர்.
மேலே குறிப்பிட்ட ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களுடன் இன்னும் சில புரோகிராம்களும் இணையத்தில் இலவசமாய்க் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறிப்பிட்ட சில ஸ்பைவேர்களை மையமாகக் கொண்டே தயாரிக்கப்பட்டவை. அந்த ஸ்பைவேர் இருப்பதாகத் தெரிந்தால், அவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். அல்லது அவற்றை டவுண்லோட் செய்து ஒருமுறை இயக்கி நீக்கலாம்.

பயர்பாக்ஸ் ட்ரிக்ஸ்

பயர்பாக்ஸ் பிரவுசர் குறித்து பல்வேறு டிப்ஸ்களும் தகவல்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இந்த டிப்ஸ்களே அதன் பயன்பாட்டிற்கும் அடிப்படையாய் அமைகின்றன. அண்மையில் அதிகம் அறியப்படாத வசதிகள் சிலவற்றை பயர்பாக்ஸ் தொகுப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்பட்டது. அவை அனைத்துமே ஒருவருடைய பிரவுசிங் அனுபவத்தினை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் அமைப்பதாக உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
1. டேப்களுக்கு காப்பி அமைக்க: ஒரு குறிப்பிட்ட டேப்பில் அதற்கான திறக்கப்பட்ட தளம் இருக்கும். இப்படியே நிறைய தளங்களைத் திறக்கலாம். சில வேளைகளில் இரு முனைகளில் உள்ள டேப்களில் உள்ள தளங்களை அடுத்தடுத்து பார்க்க வேண்டியதிருக்கும். அப்படியானால் ஒரு முனையில் உள்ள டேப்பினை அடுத்த முனையில் உள்ள தளம் அருகே இழுத்து வைக்கலாமா? அதற்குப் பதிலாக அந்த டேப்பிற்கு ஒரு காப்பி எடுத்து, இன்னொரு முனையின் அருகே அமைத்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா! அதெப்படி ஒரு டேபிற்கு காப்பி அமைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதா! ஆனால் காப்பி அமைக்க முடியும் என்பதே உண்மை. எந்த டேப்பிற்கு காப்பி அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதன் மீது கர்சரை வைத்து, பின் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே அதனை இழுத்து வந்து, டேப் பாரில் காலியாக உள்ள இடத்தில் விடவும். இப்போது விட்ட இடத்தில் அந்த டேபிற்கான காப்பி கிடைக்கும். இதனையும் திறந்து இயக்கலாம். தேவையில்லை என்றால் ஒன்றை மட்டும் மூடிவிடலாம்.
2.டூல்பாரில் சிறிய ஐகான்கள்: இது ஒரு சின்ன வசதிதான். இருந்தாலும் பலர் இதனை விரும்பிப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணுகிறேன். நேவிகேஷன் பட்டன்களை சிறிதாக அமைக்க விரும்புகிறீர்களா! டூல்பாரில் உள்ள ஹோம் ஐகான் மீது கர்சரைக் கொண்டு ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் கஸ்டமைஸ் (Customize) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் கட்டத்தில் உள்ள ஐகான்களை நீக்கலாம்; அல்லது புதியனவற்றை இணைக்கலாம். அதே நேரத்தில் யூஸ் ஸ்மால் ஐகான்ஸ் என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் ஐகான்கள் அனைத்தும் சிறியதாகக் காட்டப்படும்.

வல்லாரை

வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.

இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.

வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.

இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.

சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.

வல்லாரை கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து அது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

வல்லாரை வைத்தியம்

1. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.
2. தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.

3. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

4. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.

5. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.

6. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

7. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

சுப்தவஜிராசனம்

முழங்கால்களை மடக்கி, பாதங்களின் மேல் பிருஷ்டபாகம் நன்கு படும்படி அமர வேண்டும். பின்னர் இரு முழங்கைகளின் உதவியால் முதுகைத் தாங்கி மெதுவாக முதுகை வளைத்து விரிப்பில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தலையை மடக்கி தரையில் இருக்கும்படி தலையைப் பின்புறமாக வளைத்து அமரவும். பின்னர் கைகளைக் கோர்த்து மார்பில் வைக்க வேண்டும். சித்திரத்தைப் பார்த்துக் கவனித்துச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முதுகை
வளைத்து படுக்க வைக்க வேண்டும். அடுத்து ஆசன நிலையில் இருக்கும் போது ஒரே நிலையில் மெதுவாகச் சுவாசம் செய்ய வேண்டும். சுவாசத்தை மெதுவாக வெளியிட்டவாறு ஆசனத்தைக் கலைக்க வேண்டும்.

பலன்கள்:

ஜனனேந்திரிய பாகங்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளக்கிறது. தசை நாளங்கள், நரம்புக் கோளங்கள் முதலியவற்றை நன்கு இயங்கச் செய்கிறது. கர்ப்பாசய உறுப்பு நன்கு அழுத்தப்படுவதால் வலுப்பெறும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும். கருத்தரித்த மாதத்திற்குப் பின்னும் மாதவிடாய் ஆன காலத்திலும் இந்த ஆசனம் செய்தல் கூடாது. மச்சாசனம் செய்ய முடியாதவர்கள் இவ்வாசனம் செய்யலாம்.