கொள்ளு அல்லது காணம்
இதன் விதை குதிரைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை உணவாகவும் பயன்படுத்துவர். கல்லடைப்பு, இருமல் போன்றவற்றை கொள்ளு குணப்படுத்தும். இதை உட்கொள்ள உடலில் தேவையில்லாத சதைகள் குறவைதுடன் உடல் மெலியும்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.
கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
இணையம் 2009 தந்த இலவச புரோகிராம்கள்
சென்ற ஆண்டில் பல நூற்றுக்கணக்கான பயன்பாட்டு புரோகிராம்கள் இணையத்தில் புதிதாய்க் கிடைத்தன. பலவகையான பிரிவுகளில் இவை இருந்தன. மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேடிப்பிடித்து டவுண்லோட் செய்து பயன்படுத்தினர். இருப்பினும் சில புரோகிராம்கள் அனைவருக்கும் தேவையானதாய் இருந்தன. மிக அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டதன் அடிப்படையில் கீழே உள்ள புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் உங்களுக்குத் தேவையானதாக இருந்தால் இப்போதும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
1. விண்டோஸ் 7: ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் விண்டோஸ், 2009ஆம் ஆண்டு பலநிலைகளில் மக்களைச் சென்றடைந்தது. ஏதாவது ஒரு வகையில் மிக அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் ஆன புரோகிராம் ஆக விண்டோஸ் 7 பதிப்பு இருந்தது. சோதனைப் பதிப்பாக பல நிலைகளிலும், இறுதிச் சோதனைப் பதிப்பாகவும் இது மக்களைச் சென்றடைந்தது. முதலில் ஜனவரியில் (http://lifehacker.com/5127294/windows7betareadyforofficialdownload) என்ற தளத்தில் இதன் சோதனைத் தொகுப்பு கிடைத்தது. ஆனால் இதில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. எனவே உடனே திரும்பப் பெறப்பட்டது; மீண்டும் (http://lifehacker.com/5128018/windows7betaproductkeysnowavailableforreal) தரப்பட்டது. அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இதனை டவுண்லோட் செய்திட முயற்சித்ததில் பிரச்சினை ஏற்பட்டு இதன் காலக் கெடு நீட்டிக்கப்பட்டது.(http://lifehacker.com/5128404/microsoftextendswindows 7betaavailabilityuntiljanuary24th) அடுத்து மே மாதம் இதன் இறுதிச் சோதனை பதிப்பு தரப்பட்டது (http://lifehacker.com/5240198/windows7rcavailablefordownloadnow) இந்த விண்டோஸ் 7 சோதனைப் பதிப்பு தந்த (http://lifehacker.com/5131371/windows7betasmanyfree andlegitthemes) அழகான தீம்களை மக்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
2. போர்ட்டபிள் உபுண்டு லினக்ஸ் (Portable Ubuntu for Windows): லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தன் ஆதரவாளர் எண்ணிக்கையைச் சென்ற ஆண்டில் உயர்த்தியது. இதனால் பல்வேறு பதிப்புகள் வெளியாயின. இவற்றில் அதிகம் டவுண்லோட் செய்யப்பட்ட சிஸ்டம் பைல் உபுண்டு லினக்ஸ் போர்ட்டபிள் எடிஷனாகும். http://sourceforge.net/projects/portableubuntu// என்ற முகவரியில் உள்ள தளத்தில் இருந்து போர்ட்டபிள் எடிஷன் மிக அதிகமாக இறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. விண்டோஸ் டெஸ்க்டாப்பிலேயே இதனைப் பயன்படுத்தலாம் என்ற வசதிதான் இதன் அடிப்படைக் காரணமாக இருந்தது.
3. செவன் ரீமிக்ஸ் எக்ஸ்பி (Seven Remix XP):: விண்டோஸ் 7 பதிப்பு வெளியானவுடன், பலர் தங்களுக்கும் அந்த அனுபவம் வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அதற்கு இடமளிக்கவில்லை. இருப்பினும் விண்டோஸ்7 அனுபவத்தினை எக்ஸ்பி சிஸ்டத்திலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் வெளியான புரோகிராம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் ஆன புரோகிராம்களில் இதுவும் ஒன்று. http://niwradsoft.blogspot.com/என்ற தளத்தில் இது கிடைக்கின்றது.
4. நினைட் (Ninite ): விண்டோஸ் 7 வந்ததனால் உருவான பல பயன்பாட்டு புரோகிராம்களில் இதுவும் ஒன்று. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கம்ப்யூட்டரில் மாற்றுகையில், ஏற்கனவே பயன்படுத்தி வந்த புரோகிராம்களையும் அதற்கான டிரைவர்களையும், மீண்டும் புதிய சிஸ்டத்தில் அமைப்பது பெரிய வேலையாக இருக்கும். மொத்தமாக அவற்றைத் தன்னிடத்தில் வாங்கிக் கொண்டுப் பின் புதிய சிஸ்டத்தில் அவற்றைச் சரியாகப் பதியும் வேலையை இந்த புரோகிராம் செய்கிறது. எத்தனை புரோகிராம்கள் இருந்தாலும் இதன் மூலம் மிக எளிதாக அவை அனைத்தையும் பதிந்துவிடலாம். எனவே தான் இது மிக அதிகமான எண்ணிக்கையில் டttணீ://ணடிணடிtஞு.ஞிணிட்/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்டது.
5. எக்ஸ்பி/விஸ்டாவில் விண்டோஸ் 7 ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் 7 சிஸ்டம் வந்ததனால் ஏற்பட்ட இன்னொரு விளைவு இது. விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் ஏராளம். இதுவரை வந்த விண்டோஸ் சிஸ்டங்களில் உள்ள ஷார்ட் கட் கீகளைக் காட்டிலும் அதிகம். எனவே இவற்றைப் பயன்படுத்திப் பார்க்க விரும்பிய மக்களுக்காக இந்த புரோகிராம் வடிவமைத்துத் தரப்பட்டது. விண்டோஸ் 7 தரும் மிகச் சிறந்த ஷார்ட் கட் கீகளை, அதற்கு முன் வந்த விண்டோஸ் இயக்கங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த புரோகிராம் இயங்குகிறது. இதனை http://lifehacker.com/5133039/windows7 shortcutsenablesthebestwin7shortcutsinxporvista என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
6. ஏவிஜி இலவச ஆண்ட்டி வைரஸ்: வைரஸ்கள் நாளுக்கு நாள் பலவகைகளில் பெருகியதால், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலரும் நாடியது இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத்தான். அந்த வகையில் அதிகம் டவுண்ட்லோட் ஆன புரோகிராம் ஏவிஜி 9 ப்ரீ புரோகிராம் (http://free.avg.com /wwen/download? prd=afg#tba2). இதில் பல கூடுதல் வசதிகள் தரப்பட்டது இதன் சிறப்பாகும். அதிகம் பிரபலமான இலவச ஆண்ட்டி வைரஸ் இது.
7. கூகுள் குரோம்: கூகுள் குரோம் பிரவுசர் வெளியாகி ஓராண்டு தான் ஆகியது. ஆனால் மிக அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசராக இது தொடக்கத்தில் இருந்தே இடம் பெற்றது. இதனை டவுண்லோட் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இதன் வேகத்தைப் புகழ்ந்தனர். ஆனால் தொடர்ந்து பயன்படுத்தாமல் மீண்டும் பழைய பிரவுசருக்கே சென்றவர்கள் ஏராளம். இரண்டாம் பதிப்பு மே மாதமும், குரோம் 3 செப்டம்பரிலும் வெளியாகின.
8. பயர்பாக்ஸ்: பிரவுசர் மார்க்கெட்டில் தொடர்ந்து நிலையாக மக்களைக் கவரும் பிரவுசராக பயர்பாக்ஸ் (http://www.mozilla .com/enUS/firefox/firefox.html) பெயர் எடுத்து வருகிறது. இதன் பயர்பாக்ஸ் பதிப்பு 3.5, 2009 ஆம் ஆண்டில் பிரபலம் அடைந்தது. டவுண்லோட் செய்யப்பட்டதிலும் சாதனை படைத்தது. இதன் சார்பாக வெளியான ஆட் ஆன் தொகுப்புகள் இதன் இயக்கத்திற்கு வலு சேர்த்தன. அந்த வகையில் டவுண்லோட் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளும் அதிகம்.
9. தண்டர்பேர்ட் 3 (Thunderbird 3): மொஸில்லாவின் இன்னொரு மக்கள் அபிமான சாப்ட்வேர் இது. எளிமையான, பயன்படுத்த வேகமான இமெயில் கிளையண்ட் புரோகிராம் இது. இதன் பதிப்பு 3 அண்மையில் வெளியாகி அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தண்டர்பேர்ட் பதிப்பு 2 வெளியானது. தற்போது வெளியாகியுள்ள பதிப்பு 3ல் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. http://www.mozillamessaging.com/enUS/thunderbird/ முகவரியை அணுகவும்.
10. கம்ப்யூட்டர் ரிப்பேர் கிட் (Computer Repair Kit): கம்ப்யூட்டரில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் புரோகிராம்களை இங்கு மொத்தமாக ஒரே புரோகிராமாகப் பெறலாம். இதன் பயன்தன்மை காரணமாகப் பலரால் http://www.technibble. com/computerrepairutilitykit/என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
விண்டோஸ் கூடுதல் பயன் பெற
இணையத்தில் பல தளங்களில் விண்டோஸ் இயக்கத்தொகுப்பின் சில குறைகளை, நிறைவான பயனுள்ள வசதிகளாக மாற்றும் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. கீழே தரப்பட்டுள்ள குறிப்புகளைப் படித்தபின் நீங்கள் நிச்சயம் அவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்த திட்டமிடுவீர்கள்.
1.பென்சஸ் (Fences) : உங்கள் மானிட்டரின் திரை முழுவதும் ஐகான்கள் குவிந்து கிடக்கின்றனவா? சில வேளைகளில் டவுண்லோட் செய்த பைலுக்குரிய ஐகானைக் காண முடியவில்லையா? சிதறிக் கிடப்பதனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பைல்களை அடையாளம் காண முடியவில்லையா? விண்டோஸ் இயக்கம் இவற்றை வகைப்படுத்தி வைக்கும் வசதியைத் தரவில்லை. இந்தக் குறையை நீக்கும் வகையில் செயல்படுகிறது Fences என்னும் இலவச புரோகிராம். ஸ்டார்டாக் என்னும் நிறுவனம் இந்த புரோகிராமினை http://www.stardock. com/products/fences/ என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் தருகிறது. இது உங்கள் ஐகான்களை குழு குழுவாக அமைத்து வேலிகளுக்குள் அமைத்துத் தருகிறது. எனவே மெயில், மூவி, இசைப்பாடல், ஷார்ட் கட்ஸ், கேம்ஸ், இன்னும் சில பிரிவுகளில் வேலி கட்டி ஐகான்களை அதற்குள் வைக்கலாம். திரையில் காலியாக உள்ள இடத்தில் இருமுறை கிளிக் செய்தால் அனைத்து வேலிகளும் அவற்றின் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஐகான்களுடன் மறைந்து போகும். மீண்டும் டபுள் கிளிக் கொடுத்தால் அவை அனைத்தும் மீண்டும் காட்டப்படும். இந்த புரோகிராமினை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த யு–ட்யூப் வீடியோ ஒன்றை http://www.youtube.com/ watch?v=kSTnuRSKymw என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.
2. விண்டோஸ் ஆப்டிமம் (Windows Optimum): முடிந்த அளவிற்கு முழுமையான பயன்பாட்டினை ஆங்கிலத்தில் Optimum என்று கூறுவார்கள். அப்படி விண்டோஸ் இயக்கத்தினைப் பயன்படுத்தத் தான் பல புரோகிராம்கள் உள்ளன. அப்படியானால் இந்த ஆப்டிமம் புரோகிராம் என்ன செய்திடும்? இது விண்டோஸ் இயக்கத்தின் அனைத்து வேலைகளையும் கட்டுப்படுத்தும் சக்தியை உங்களுக்குத் தருகிறது. இப்போது இந்த வேலை முடியாதே என்று விண்டோஸ் கூறும் வேலைகளையும் முடிக்கும் பவர் உங்களுக்கு இதன் மூலம் கிடைக்கும். ஒரு பைலை ரீநேம் செய்திட முயற்சிக்கிறீர்கள்; அல்லது அழிக்க கட்டளை கொடுக்கிறீர்கள். உடனே “”பைலை இன்னொரு அப்ளிகேஷன் அல்லது இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே முடியாது” என்று விண்டோஸ் கூறும் செய்தியைக் காணலாம். இந்த புரோகிராம் இந்த தடைகளைத் தகர்க்கிறது.
இதன் மூலம் விண்டோஸ் சிஸ்டம் வழங்கும் எந்த ஒரு சர்வீஸையும் நிறுத்தலாம்; ரெஜிஸ்ட்ரியில் உள்ள கீகளை நீக்கலாம்; நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராக லாக் இன் செய்யவில்லை என்றாலும் இந்த புரோகிராம் உங்களுக்கு அந்த அனுமதியைத் தருகிறது. ஒரு பைலைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அதனை நீக்கலாம்; “Access denied” A�x “Another application is using the file” என்ற செய்தி எல்லாம் இனிமேல் வராது.எனவே இந்த புரோகிராமினை விண்டோஸ் இயக்கத்தினைப் புதிதாக இயக்குபவர்கள் சற்றுக் கவனத்துடன் கையாள வேண்டும். அல்லது பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். இதனைப் பெற http://netstudio.org/eng/windowsoptimum.html என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
3. மீடியா இன்போ (Media Info): ஒரு ஆடியோ அல்லது வீடியோ பைல்கள் குறித்து, அதன் பைல் ப்ராப்பர்ட்டீஸ் தரும் தகவல்கள் உங்களுக்கு நிறைவைத் தரவில்லையா? அப்படியானால் இந்த சிறிய அப்ளிகேஷன் உங்களுக்கு உதவும். ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் குறித்து, மிக விரிவான தகவல்களை இது தருகிறது. இதன் சிறப்பு இது அனைத்து வீடியோ மற்றும் ஆடியோ பைல் பார்மட்டுகளைக் கையாள்வதுதான். http://mediainfo. sourceforge.net/en என்ற தளத்தில் இதனைப் பெறலாம்.
பெரிய மார்பகம் வேண்டுமா?
பெண்களின் செழிப்பான அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவை மார்பகங்கள். அவை அளவோடு இருந்தால்தான் அழகு. அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அங்கே அழகு கொஞ்சம் `மிஸ்ஸிங்’ ஆகிவிடும்.
சிலபெண்களுக்கு வயதுக்கு ஏற்ற மார்பக வளர்ச்சி காணப்படாது. இப்படிப்பட்டவர்கள் பெரிய மார்பகத்திற்காக ஏங்குவார்கள்.இப்படிப்பட்டவர்கள், தகுந்த மார்பக வளர்ச்சிபெற சில டிப்ஸ் : நேராக நிமிர்ந்து நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குங்கள். தினமும் ஒரு சில நிமிடங்கள் மட்டும் இவ்வாறு செய்தால் போதும். கீழே அமர்ந்து நெஞ்சை நேராக நிமிர்ந்தி வைத்துக்கொண்டு, முச்சினை உள்ளே இழுத்து மெல்ல விடவும். ஓரிரு நிமிடங்கள் இப்படி தொடர்ந்து செய்யவும். தினமும் தவறாமல் ஸ்கிப்பிங் செய்யவும். மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மார்பக வளர்ச்சிக்கான கிரீம் வாங்கி, அதைக்கொண்டு மார்பகத்தில் மசாஜ் செய்யலாம். இந்த கிரீமை பயன்படுத்தினால் ஒரு வாரத்திலேயே பெரிய மார்பகம் பெறலாம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விளம்பரம் செய்யப்படும் கண்ட கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்தாதீர்கள். கிரீம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், பாலாடையை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்யும்போது மார்பகத்தை மிகவும் அழுத்தி தேய்க்கக்கூடாது. வட்டமான முறையில் மசாஜ் செய்வதே சிறந்தது. உணவில் அதிக காய்கறிகளை எடுத்துக்கொள்வதோடு, கிரீம் உணவுகள், பால், முட்டை, சீஸ் போன்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளவும்.
– இவற்றை பின்பற்றி வந்தால் அழகான – அம்சமான மார்பகத்தை நீங்களும் பெறலாம்.
இன்னும் சிலருக்கு மார்பகத்தின் வளர்ச்சி அளவுக்கு மீறியதாக காணப்படும். இவர்களுக்கு அந்த பெரிய மார்பகமே பெரும் தொல்லையாக அமைந்துவிடும்.
இவர்கள் அந்த தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்யலாம்? பெரிய மார்பகம் கொண்டவர்கள் எக்காரணம் கொண்டும் கிரீம்கள் கொண்டு மார்பகத்தை மசாஜ் செய்யக்கூடாது. நடைபயிற்சி, துணி துவைத்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்வது நல்லது. இந்த பயிற்சிகளால் மார்பகத்தின் எடை அதிகமாக குறையும் என்று சொல்ல முடியாது. இதற்கு காரணமே ஹார்மோன் பிரச்சினைதான். அதனால், தகுந்த மருத்துவரின் ஆலோசனையின்படி நீராவி சிகிச்சை அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முலம் சரி செய்துகொள்ளலாம். எக்காரணம் கொண்டும் எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.
சிறிய மார்பகம், பெரிய மார்பகம் என்று ஒருபுறம் பிரச்சினைகள் இருக்க, சிலருக்கு மார்பகம் சரிந்துபோய் வேறுவிதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஒரு பெண் தாய்மை அடைந்த பிறகுதான் இத்தகைய பிரச்சினை பெரும்பாலும் ஏற்படுகிறது. அதாவது, குழந்தைக்கு பாலூட்டுவதற்கு வசதியாக மார்பகத்தில் உள்ள பால்சுரப்பிகள் செயல்பட ஆரம்பிப்பதால், மார்பகத்தின் அளவு பெரிதாவதோடு, அதன் எடையும் கூடுதலாகிறது. இதனால் மார்பகம் சரிந்து விழுகிறது.
இப்படிப்பட்ட பெண்கள் சரியான அளவில் பிராவை தேர்வு செய்து அணிவது முக்கியம். அவர்கள் தேர்வு செய்யும் பிரா அதிக இறுக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். ஒருவேளை, அதிக இறுக்கமான பிராவை தேர்வு செய்து அணிந்து வந்தால், மார்பகமானது பிதுங்கிய நிலைக்கு சென்று, அழகை பாழாக்கிவிடும்.
மேலும், இவர்கள் நின்றுக்கொண்டு கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குதல், கீழே அமர்ந்து முதுகை நேராக நிமிர்த்தி வைத்து ச்சினை உள்ளே இழுத்து மெல்ல விடுதல் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருவது நல்ல பலன் அளிக்கும்.
வலியில்லாமல் வாழலாம் -மூலிகை கட்டுரை(கவிழ்தும்பை)
குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன.
நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.
இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. இலை மற்றும் வேரிலுள்ள எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க் அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின் இயல்பான செயல் பாட்டை ஊக்குவிக்கின்றன.
கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 மி.லி. நீரில் கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும். கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம் வற்றும்.
திகட்டாத செவ்வாழை
வாழை மரம், வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.
வாழையில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் பலரும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிகபசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.
வாழைக்காயை சமைப்பதற்காக மேல் தோலை அழுத்தி சீவாமல், மெலியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது.
வாழைக்காயை இப்படி துவையலாக சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், உடலுக்கு பலமும் அதிகரிக்கும். மேலும் வயிறு எரிச்சல், இருமல் போன்றவைம் நீங்கும். வாழைக்காயை அதிகம் சாப்பிட்டால் வாயுத்தொந்தரவு அதிகமாகும் என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது.
வாழைபிஞ்சுகளை சாப்பிடலாம் என்றாலும் அது மலத்தை இறுக்கி விடும். மேலும் பச்சை வாழைக்காயை சின்னசின்ன துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் நீங்கும்.
வாழை பழத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு பலன் இருக்கிறது. பூவன் வாழைபழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கலால் உண்டான முலநோய் குறையும். ரஸ்தாளி சாப்பிட்டால் பித்த நோய்கள் கட்டுபடும். பேயன் பழம் சாப்பிட்டால் வயிற்று புண்ணை ஆற்றும். நேந்திரன் பழம் ரத்த சோகையை குணமாக்கும். மொந்தன் பழம் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும். மலைவாழையை சாப்பிட்டால் உடல் சூட்டை தணித்து பித்தத்தை போக்கும்.
செவ்வாழை சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது. ஆண்மை பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கருந்துளுவன் வாழைபழத்தில் அதிகளவு அமிலச்சத்து உள்ளது. உடலுக்கு வலு சேர்க்கும். மட்டி ரக வாழைபழத்தில் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. முளையின் நரம்பு வேதியல் கடத்தியான `செரடோனின்’ என்னும் ரசாயன பொருள், வாழைபடும் சாப்பிடுவதால் சுரக்கிறது. இதனால் தூக்கம் நன்றாக வரும்.
பிற உணவுகளை நீக்கிவிட்டு தினமும் ஆறு வாழைபழமும், ஆறு டம்ளர் கொழுப்பு நீக்கிய பால் அல்லது மோர் தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து விடலாம். பத்து நாட்களுக்கு பின்னர், படிபடியாக பாலின் அளவை குறைத்துக் கொண்டு, பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைபழத்தில் உடலின் எடையை அதிகரிக்கும் சோடியம் அதிகமாக இல்லை என்பது குறிபிடத்தக்கது.
சாப்பாட்டுக்கே பாதிச்செலவு
இன்றைய நிலையில் சராசரி இந்தியனின் செலவில் பாதி சாப்பாட்டுக்கே போகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகமான உணவுப் பணவீக்கம், மற்றவற்றின் மீதான செலவைக் கட்டுப்படுத்தியுள்ளது. மற்ற விஷயங்களின் தேவையை அது குறைத்துள்ளது. வருமானத்தில் அதிகமான அளவு உணவுக்கே போவதால் ஏழை மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சராசரியாக இந்தியர்கள் தற்போது தங்கள் வருமானத்தில் 42.8 சதவீதத் தொகையை உணவுக்குச் செலவழிக்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் 16.2 சதவீதத் தொகை வழக்கத்திலல்லாத செலவுகளுக்கும், முன்றாவதாக 8.8 சதவீதத் தொகை போக்குவரத்துச் செலவுகளுக்கும் போகிறது. இதே பட்டியலில் தொடர்ந்து பார்த்தால், 8.2 சதவீதம் பொதுவான சில்லறைச் செலவுகள், 6.2 சதவீதம் கல்விக்கு, 5.8 சதவீதம் ஆடைகளுக்கு, 4.2 சதவீதம் வீட்டு உபயோக சாதனங்களுக்கு, தலா 3.9 சதவீதம் வீடு மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு என்று போகிறது.
கடந்த 2002-ம் ஆண்டில் 1 ருபாயின் வாங்கும் மதிப்பு 100 பைசாவாக இருந்தது என்றால், அது 2005-ல் 88.82 பைசாவாக ஆனது. தற்போது அது 71.84 என்று மிகக் குறைவான அளவை எட்டியுள்ளது. விலை உயர்வுப் பட்டியலில் உருளைக்கிழங்கு முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் மீன் விலை உள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்குபருவமழை குறைவால் விளைச்சல் பாதிக்கப்பட்டது ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். இந்நிலையில் இந்த அபாயப் போக்கைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்பதே மக்களின் கவலை கலந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
சிறுகீரை
தண்டுக்கீரை இனத்தைச் சேர்ந்த சிறுகீரை நிறைய கிளைகளுடன் சுமார் 20 செ.மீ. உயரம் வரை செங்குத்தாக வளரும். இந்தச் செடி மெல்லிய தோற்றமுடையது.
சிறுகீரை சுமார் 10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் அதைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்த வேண்டும். இதைப் பருப்போடு சேர்த்து சாம்பார், கூட்டு, பொரியல் போன்ற கறி வகைகளைச் செய்து சாப்பிடலாம்.
முளைக்கீரையைப் போலவே, சிறுகீரையின் இலைகளையும், தண்டையும் உணவு தயாரிக்கப் பயன்படுத்தலாம். இதன் விதையும் உணவாகப் பயன்படுகிறது.
சிறுகீரையில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. இந்தக் கீரையைத் தினமும் சாப்பிட்டு வந்தால் இதிலுள்ள இரும்புச் சத்து உடலில் இரத்தத்தைப் பெருக்கும். இது வாத நோயை நீக்குகிறது. அதோடு, இந்தக் கீரை கல்லீரலுக்கும் நன்மை செய்கிறது. பித்த சம்பந்தமான நோய்களை இது குணப்படுத்துகிறது. நஞ்சு முறிவாகப் பயன்படுகிறது. அதோடு சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளையும் நீக்குகிறது.
கண் நோய்களுக்கு சிறுகீரை கை கண்ட மருந்து. காசம், சோகை, மூலம், வாயு, உடல் எரிச்சல், தாவரங்களினனால் ஏற்படும் நஞ்சு ஆகியவற்றை இது நீக்கும். சிறுகீரை சுவையையும், பசியையும் தூண்டி உடலுக்கு வலுவைக் கொடுக்கும். சிறுகீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் மிக எளிதாக வளர்க்கலாம்.
சிறுகீரையை தினமும் உணவுடன் சாப்பிட்டு வந்தால் நோய்கள் யாவும் குணமாகி உடலினுடைய அழகும், வனப்பும் அதிகரிக்கும்.
உசர்ட்டாசனம்
உசர்ட் ஆசனம் என்றால் ஒட்டக ஆசனம் எனப் பெயர். மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு கைகளால் பின்னால் இரு கணுக்கால்களையும் பிடித்துக் கொண்டு பிருஷ்ட பாகத்தை காலில் உட்கார்ந்து இருப்பதிலிருந்து கிளப்பி தலையைப் பின்னால் படத்தில் காட்டியபடி தொங்கப் போட வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்:
முதுகெலும்பு பலப்படும். மார்பு விரியும். சுவாசக் கருவிகள் நன்கு வேலை செய்யும். மூக்கடைப்பு, ஆஸ்துமா நீங்கும். மூச்சுத் திணறல், பலகீனம் ஒழியும்.
போலீஸ், மலிட்டரிக்கு வேலைக்குப் போகிறவர்கள் மார்பு அகலம் வேண்டும் என்றால் 15 நாள் இப்பயிற்சியைச் செய்தால் 2 முதல் 3 அங்குலம் மார்பு விரியும். ஆஸ்துமாவுக்கு மிக முக்கியமான ஆசனம். தரையில் கையை வைத்தே முதலில் பழக வேண்டும். பின் 15 நாள், ஒரு மாதம் சென்றபின் கால்களில் கைகளை வைத்து செய்யலாம்.
எல்லாம் ஈஸ்வர சங்கல்பம்! (ஆன்மிகம்)
– ஞானானந்தம்
புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பலவித வழிகளையும் கூறியுள்ளனர் நம் பெரியோர். அவைகளில் அன்னதானம் சிறந்தது. ஒரு அதிதிக்கு ஒருவேளை உணவு அளித்
தாலும் சரி, ஆயிரம் பேருக்கு, “சகஸ்ரபோஜனம்’ செய்வித்தாலும் சரி, புண்ணியம் கிடைக்கும்; ஆனால், இதில் அகம்பாவம், அலட்சியம் இருந்தால் பலன் கிடைக்காது.
“சார்! நம்ம வீட்டில் சகஸ்ர போஜனம் நடந்தது; ரொம்ப பிரமாதம்…’ என்றெல்லாம் பெருமைப்படக் கூடாது; “ஏதோ பகவான் கொடுத்தான். நடத்திக் கொண்டான். நம்மிடம் என்ன சார் இருக்கிறது?’ என்று அடக்கமாக சொல்ல வேண்டும். வர்க்கலை என்கிற தலம் கேரளாவில் உள்ளது. வல்கலை என்ற பெயர் வர்க்கலை என்றாகி விட்டது. இங்கு நூறு யாகங்கள் நடத்தினார் பிரம்மா. ஏராளமான தேவர்கள், ரிஷிகள், மகான்கள் நிறைந்திருந்தனர். எல்லாருக்கும் அற்புதமான சாப்பாடு, தட்சணை அளிக்கப்பட்டது. “இதுபோல் யாகத்தை வேறு யாருமே நடத்தியதில்லை…’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார் பிரம்மா. இவரது கர்வத்தை அடக்க எண்ணி, வயதான கிழவராக வந்து, “பசிக்கிறது…’ என்றார் பகவான். சமையல்காரரிடம், “இவருக்கு வேண்டிய அளவு பசி தீர சாப்பாடு போடும்…’ என்றார் பிரம்மா. சாப்பாட்டுக்கு உட்கார்ந்தார் கிழவர். “ஆ, போஜனம் போடு!’ என்று கையை நீட்டினார். என்ன, ஆச்சரியம்! அங்கு சமையல் செய்து வைத்திருந்த எல்லாமே மாயமாய் மறைந்து விட்டது. “பசி, பசி…’ என்றார் கிழவர். அங்கே ஒரு பிடி சாதம் கூட இல்லை!
பிரம்மாவுக்கு தகவல் தெரிந்து, ஓடி வந்து பார்த்து, “இது என்ன மாயம்?’ என்று யோசித்தார். பின்னர் தான், வந்திருப்பது பகவான் நாராயணனே என்று தெரிந்து, நமஸ்காரம் செய்து, துதி செய்தார். அப்போது, சுயரூபத்துடன் தோன்றி, “பிரம்ம தேவரே, நீர் செய்த யாகத்தில் நான் பூரண திருப்தியடைந்தேன். ஆனாலும், இப்படிப்பட்ட யாகம் யார் செய்திருக்கின்றனர் என்ற அகம்பாவம் உமக்கிருந்தது. அந்த அகம்பாவத்தைப் போக்க, நானே கிழவனாக வந்து, “பசி, பசி…’ என்றேன். உன்னால், என் பசியை தீர்க்க முடியாமல் அகம்பாவம் ஒழிந்தது!’ என்று கூறினார் நாராயணன். பிரம்மாவும் தலைகுனிந்து, மன்னிப்பு வேண்டினார்.
பிறகு, பிரம்மாவின் வேண்டுகோளின்படி இந்த தலத்தில், “ஜனார்த்தனன்’ (பிறவித் துன்பத்தைப் போக்குபவன்) என்ற திவ்ய நாமத்துடன், நாராயணனே வலது கையை நீட்டிக்கொண்டு நிற்கிறார். இதனால் தான் இப்பவும் யார், எந்த நல்ல காரியம் செய்தாலும், முடிவில், ஒரு உத்தரணி ஜலம், ஒரு துளசிதளம் இரண்டையும் சேர்த்து, “ஜனார்த்தன ப்ரியந்தாம்’ என்று சொல்லி கீழே விடுவர். நாம் செய்த நற்காரியத்தின் பலனை ஜனார்த்தனனுக்கு அர்ப்பணம் செய்துவிட வேண்டும்; அதுவே, அவனை திருப்திப்படுத்தும். அவன் திருப்தியடைந்தால் நம் நலத்துக்கு குறைவே இராது! அதாவது, நல்ல காரியங்களை செய்; புண்ணியம் தானாக வரும்; ஆனால், நாம்தான் செய்தோம் என்று கர்வப்படாதே. அகம்பாவம் பலனைக் கெடுத்துவிடும். “எல்லாம் ஈஸ்வர சங்கல்பம்!’ என்று சொல்லிக் கொள்; பகவான் உன் பக்கம் இருப்பார்.