அழுக்கை விரட்டும் சோலார் ஜன்னல்கள்


இனி ஜன்னல்களை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அழுக்கு படியாத சோலார் ஜன்னல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தானாகவே கறையை சுத்தப்படுத்திக் கொள்ளும். இதை இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் பல்கலைக்கழகம் இதற்கான முலப்பொருளை கண்டுபிடித்து உள்ளது.

தாமரை இலை தண்ணீர் ஒட்டாத் தன்மை கொண்டது. இதில் இருக்கும் பெப்டைடு எனப்படும் அமினோ அமில முலக்கூறுகளை இணைத்து புதிய உறையை தயாரித்து உள்ளனர். இது ஒரு மீட்டர் நீளத்தில் 100 கோடியில் ஒரு பங்காக இருப்பதால் மிகமிக சிறியதாக இருக்கும்.

இது அதிக வெப்பத்தின்போது வாக்வம் டியூப்போல செயல்பட்டு அழுக்குகளை உறிஞ்சி சுத்தப்படுத்திவிடும். இதனை ஜன்னல், கதவுகளில் அமைப்பதன் முலம் அவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த கண்டுபிடிப்பு பாலைவனம், கடற்கரை பகுதிகளிலும் மற்றும் பல அடுக்குமாடி கட்டிங்கள் கட்டும்போதும் அதிக பயன் தரும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இது எதிர்பாராத சமயத்தில் நிகழ்ந்த கண்டுபிடிப்பாகும்.

அதாவது அல்சீமர் என்னும் ஞாபக மறதி வியாதிக்கு மருந்து தேடி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதற்கு மருந்தாக தாமரையில் இருந்து விடைகிடைக்கும் என்ற நோக்கில் ஆய்வு நடந்தது. அதில் மற்றொரு சிறந்த முடிவாக இந்த புதிய பொருள் கிடைத்து உள்ளது.

அல்சீமர் வியாதிக்கான தீர்விலும் குறிப்பிட்ட அளவில் வெற்றி கிடைத்து இருப்பதாகவும், விரைவில் ஆய்வு முடிவு வெளியிடப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

%d bloggers like this: