டயட் சோடா கிட்னிக்கு ஆபத்து

டயட் சோடா என்ற பெயரில் சில குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதிலும், மற்ற குளிர்பானங்களை போல, அதிக இனிப்பு கலக்கப்படுகிறது. இதனால், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகிறது என்பதை விட, இன்னொரு பெரிய ஆபத்து உள்ளது. அது தான், கிட்னியை பாதிப்பது. டயட் சோடா குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு சிறுநீரக செயல்பாடு குறைகிறது என்பதை அமெரிக்க நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
ஜூஸ் தருவது ஏன் தெரியுமா?
உண்ணாவிரதம் இருப்பவர்கள், அதை முடிக்கும் போது, ஏன் ஜூஸ் தந்து முடிக்க வைக்கின்றனர் சக தலைவர்கள். காபி, டீ கொடுக்கக் கூடாதா? கூடவே கூடாது.
வயிற்றில் சக்தி குறைந்த நிலையில், மீண்டும் முழு உணவை ஏற்க வேண்டுமானால், ஜூஸ் மட்டுமல்ல, அதிக குடிநீரும் குடிக்க வேண்டும். அப்போது தான், உடலில் உள்ள தீயசத்துக்கள் வெளியேறும். உணவும் சிரமமின்றி சாப்பிட முடியும். ஜீரணசக்தி பாதிக்காது.
காய்கறி, பழங்களில் தோலை சீவாதீங்க!
சிலருக்கு தோலை உரித் தால் தான் பழங்களை சாப்பிட பிடிக்கும். அதுபோல, காய்கறிகளிலும் தோலை நீக்கினால் தான் சாப்பிடுவர். ஆனால், மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
“காய்கறி, பழங்களில், தோலை நீக்கவேகூடாது; அதில் தான் நார்ச் சத்தே உள்ளது. உரிக்காத பழங் களில் கலோரி குறைவாக இருக்கும். உரித்தால் அதிகமாக இருக்கும்’ என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காபியில் சர்க்கரை குறைச்சிடுங்க
காபியில் சர்க்கரை அதிகம் போட்டுக்கொள்பவரா? அப்படியானால், படிப்படியாக குறைத்துக்கொள்ளுங்கள். 40 வயது வரை சிக்கல் இல்லை. அதற்கு முன்பே ஒபிசிட்டி இருந்தால், சர்க்கரை உட்பட கலோரி சார்ந்த உணவுகளை தவிர்ப்பதே நலம். நாற்பது வரை உணவில் கட்டுப்பாடு இருந்து விட்டால், அதன் பின் சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ அண்டவே அண்டாது.
வெள்ளைன்னா உஷாருங்க!
ஐம்பதை கடந்து விட்டால், அதுவரை எந்த உ<டல் பிரச்னையும் இல்லாமல் இருந்து விட்டீர்களானால், உணவில் வெள்ளைன்னா குறைத்துக் கொள்வதே நல்லது. வெள்ளை சாதம், சர்க்கரை, உப்பு, தயிர், பால் போன்வற்றில் கட்டுப்பாடு தேவை. அரிசி சாதத்தை குறைத்துக்கொண்டு, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டால், பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.

%d bloggers like this: