Daily Archives: ஜனவரி 7th, 2010

தலைவ‌லி வருவது எதனா‌ல்

பலரு‌க்கு‌ம் கால‌ம் காலமாக தலைவ‌லி‌ப் ‌பிர‌ச்‌சினை இரு‌க்கு‌ம். ஆனா‌ல் அவ‌ர்களோ எ‌ளிதாக வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரை ஒ‌ன்றை வா‌ங்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.

ஆனா‌ல் உலக‌த்‌தி‌ல் பலரு‌க்கு‌ம் தலைவ‌லி எ‌ன்ற ஒரு ‌வியா‌தி ‌நி‌ச்சய‌ம் வ‌ந்‌திரு‌க்கு‌ம். ஒ‌வ்வொரு தலைவ‌லி‌க்கு‌ம் ப‌ல்வேறு காரண‌ங்க‌ள் இரு‌க்கலா‌ம்.

மாணவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் அ‌திகமான தலைவ‌லி வரு‌ம். அத‌ற்கு‌க் அவ‌ர்களது கண் கோளாறு காரணமாக இரு‌க்கு‌ம். க‌ண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம்.

கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும். சாதாரணமாக கண் மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தாலோ தலைவலி வரும் நப‌ர்களு‌ம் உ‌ண்டு.

ரத்த அழுத்தம் அதிகரித்தல் அ‌ல்லது பல் சொத்தை, சைனஸ் பிரச்சினை ஆகிய காரணங்களாலும் தலைவலி வரும்.

எ‌ந்த காரண‌த்‌தி‌ற்காக தலைவ‌லி வரு‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து அத‌ற்கு‌ண்டான மரு‌ந்துகளை உ‌ட்கொ‌ள்வதுதா‌ன் ஆரோ‌க்‌கிய வா‌ழ்‌‌வி‌ற்கு வகை செ‌ய்யு‌ம்.

பொடுகு தொல்லையா?

தேங்காய் பால் – 1/2 கப், எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.

அருகம்புல்லின் சாறர தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.
வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு குளித்து வந்தால் பொடுகு நீங்கும். சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் நல்லது.
வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டித் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.
பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுடன் கண்டிஷனராகவும் இருக்கும். இதில் ஒன்றை பயன்படுத்திப் பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறுங்கள். நீங்களும் அழகுடன் திகழ்வீர்கள்.

கதறுதே… காது…

இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மனிதர்கள் முன்பெல்லாம் மேகத்தில் ஏற்படும் இடி ஓசைதான் அதிகம் கேட்டுள்ளனர். இந்த ஓசையால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் நம் முன்னோர்கள் இடி, மின்னலின் போது வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள்.

அன்று இடி ஓசையால் பாதிக்கப்பட்ட மனிதன் இன்று அதைவிட பல மடங்கு சப்தத்தைக் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் யுத்த நாடுகளின் குண்டு சப்தங்கள், மற்றொரு பக்கம் மலை பாறைகளை உடைப்பதற்காக வைக்கப்படும் வெடி சப்தங்கள். வாகனங்களின் இரைச்சல்கள், தொழிற்சாலைகளின் சப்தம் என பலவகையான சப்தங்கள் ….

பொதுவாக காதின் உட்புறச் சவ்வானது மிக மெல்லிய படலமாகும். மனிதனின் காதானது குறைந்த அளவு சப்தத்தையே உள்வாங்கிக் கொள்ளும்.

இப்படி மென்மையான ஒலியை மட்டும் வாங்கும் காதுகளுக்கு அதிபயங்கரமான ஒலிகளை எந்நேரமும் கேட்க நேருவதால் காதுகளின் செவிப்பறை கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் சக்தியை இழக்கச் செய்கின்றது.

நம் முன்னோர்கள் காடுகளையும், ஆங்காங்கே மரங்களையும் அதிகமாக வளர்த்தனர். நாட்கள் செல்லச் செல்ல இருப்பிடம் கருதி வனங்களை அழித்து கட்டிடக் காடுகளாக்கிவிட்டனர்.

மரங்கள் அதிக சப்தங்களை உள்வாங்கிக் கொள்ளும் சக்திகொண்டவை. ஆனால் காங்கிரீட் கட்டிடங்கள் சப்தங்களை எதிரொலிக்கும் தன்மை கொண்டவை. இதனால் சாதாரணமாக ஒலிகள் கூட எதிரொலிக்கப்பட்டு மிகையான சப்தமாக வெளிவருகிறது.

மேலும் நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வாகனங்கள் எப்போதும் ஒருவிதமான இரைச்சலுடனேயே செல்கின்றன.

இந்த சப்தங்களினால் காதுகளின் கேட்கும் சக்தி குறைகின்றது. மேலும் மன அழுத்தம், டென்ஷன், இனம்புரியாத ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது. அதனால் பித்தம் அதிகரித்து மேல் நோக்கி பாய்ந்து தலைவலியை ஏற்படுத்துகின்றது. இதனால் இரத்தம் சூடாகி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. ஜீரண மண்டலமும் பாதிக்கப்படுகிறது.

சிலர் இரவில் எந்த விதமான சப்தங்களும் இல்லாமல் தூங்கச் சென்றால் தூக்கமின்றி தவிப்பார்கள். காரணம் அவர்கள் காதுகளில் மின் விசிறி சத்தத்தைக் கேட்டு தூங்கியதால் இந்த சப்தம் இல்லாதபோது சரியான தூக்கம் இருப்பதில்லை. செல்போன்களின் மூலம் காதுகளில் ஒலிவாங்கியை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கிறார்கள். இவைகளும் காதுகளுக்கு மேற்சொன்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

சிலர் வாகனங்களில் செல்லும்போது அவசரத்திற்கு உபயோகப்படுத்தும் காற்று ஒலிப்பானை அடிக்கடி உபயோகித்துக் கொண்டே இருப்பார்கள். தேவையில்லாமல் கூட ஒலி எழுப்புவார்கள். இதனால் வாகனங்களில் முன்னும் பின்னும் செல்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் விபத்துக்கள் கூட ஏற்பட நேரிடுகின்றது.

தீபாவளி பண்டிகையின்போதும், அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களின் போதும் அதிக அளவு பட்டாசுகளை வெடித்து அருகில் உள்ளவர்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்து கின்றனர்.

கருவில் வளரும் குழந்தைகளுக்கு இத்தகைய சப்தங்களால் பல பாதிப்புகள் உண்டாகின்றன. அதிக சப்தத்தால் கருவை சுமக்கும் தாய் அதிர்ச்சிக்குள்ளாகும் போது அந்த அதிர்வால் கருவில் வளரும் குழந்தை கேட்கும் சக்தியை இழக்கும் நிலையும் ஏற்படலாம்.

அதிக சப்தங்களை ஏற்படுத்தும் வாகனங்கள், தொழிற்சாலைகள், பட்டாசுகளுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

இவ்வாறு ஏற்படும் சப்தங்களால் உருவாகும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு வேண்டும்.

ஐம்புலன்களில் காதுகளும் மிக முக்கியமான உறுப்பாகும்.

அதிக சப்தமுள்ள பகுதிகளில் குடியிருக்காமலும், காதுகளில் அதிக நேரம் செல்போன் வைத்து பேசாமலும், அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்காமலும் காதுகளுக்கு தீங்கு விளைவிக்காத அளவில் ஒலியைக் கேட்டு வந்தால் மன அழுத்தமும் ஏற்படாது. காதுகளும் பாதுகாக்கப்படும்.

நரம்புகளை பலப்படுத்தும் மீன்


ஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது. குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும்.

தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது. அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. இந்தக் கொழுப்புச்சத்தில் இரண்டு வகை இருப்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு டி.எச்.ஏ., இ.பி.ஏ. என்று பெயரிட்டு உள்ளனர்.

ஒமேகா-3 குறைபாடு ஏற்பட்டால் இதயவியாதி, நினைவுத்திறன் குறைபாடு, பைபோலார் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். தற்போது ஒமேகா-3ன் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த வியாதியோடு தொடர்புடைய சத்துக்குறைவு தெளிவாகி இருக்கிறது.

இ.பி.ஏ. என்ற வேதிப்பொருள், முளையுடன் சம்பந்தப்பட்டது. எனவே நினைவுத்திறனில் பாதிப்பு வருவதற்கு இ.பி.ஏ. குறைபாடும் ஒரு காரணம். அதேபோல் இரு ரசாயனங்களும் நரம்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புபடலமாக இருப்பதால் நரம்பு மண்டல உறுதிக்கும் அவை காரணமாக இருக்கிறது.

எனவே தேவையான அளவு மீன் உணவு சாப்பிட்டு ஒமேகா-3 அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் நரம்பு மண்டலம் உறுதி பெறும். நரம்பு மண்டலம் பலப்பட்டால் உடலும் உறுதிபெறும் என்பது உண்மை.

ஆய்வாளர் நார்மன் சலீம் கூறும்போது, “கொழுப்பு கெட்டது என்ற எண்ணத்தை மாற்றக்கூடியது ஒமேகா-3. எல்லோரது உணவிலும் டி.எச்.ஏ. சீராக கலந்திருப்பது உடல்நலத்துக்கு சிறந்தது” என்றார்.

சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ வைத்துக் கொள்ளலாமா?


உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள்.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், முளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!

சிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் போட சென்று விடுவார்கள். இன்னும் சிலர், தம் அடிக்க ஓதுங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று, அவற்றை சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், சிறிது தூரம் வாக்கிங் செல்பவர்களும் உண்டு. சிலர் ` முட்’ வந்து செக்ஸ் வைத்துக்கொள்வதும் உண்டு.

இப்படி, சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் நடந்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வது நல்லதுதானா?

சாப்பிட்டவுடன் பழங்கள் உண்பது பலருடைய வழக்கம். இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, பழங்களானது உணவைவிட எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், சாப்பிட்ட உணவு ஜீரணமாக அதைவிட நேரம் அதிகமாகும். நீங்கள் உட்கொண்டது அசைவமாகவோ அல்லது எண்ணெய், நெய் கொண்டு செய்த உணவாகவோ இருந்தால், அதைவிட கொஞ்சம் நேரம் கூடுதல் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது, அவை உடலுக்குள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடலுக்குள் போன உணவுக் கலவையில் உள்ள பழங்கள் எளிதில் ஜீரணமாகி, முழுவதுமாக செரிமானம் ஆகாத நிலையில் உள்ள உணவுடன் கலந்து பிரச்சினைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலையும் உருவாகி விடுகிறது.

அதனால், உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக்கொள்வதே
நல்லது.

சாப்பிட்டவுடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ, இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் மாற்ற முடியாத செயல். இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வு ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.

உணவு உட்கொண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் சாப்பிட்ட உடன் புகை பிடிப்பதற்கு இன்றே தடா போட்டுவிடுங்கள்.

சாப்பிட்ட சிறிதுநேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். டீயில் அதிக அமிலச்சத்து காணப்படுகிறது. இந்த அமிலம், உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றது. அதனால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே டீ குடிக்கும் வழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.

சாப்பிட்ட உடன் தூங்குவது பலரது பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. இப்படி பழக்கப்படுத்திக் கொள்வதால் வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.

சிலர் உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்திக் கொள்வார்கள். அதாவது, வயிறு முட்ட சாப்பிடப்போய் முச்சுவிடுவதற்கு வசதியாக இப்படிச் செய்வது வழக்கம். இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.

சாப்பிட்ட பின் குளிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்தால், உணவை செரிக்க பயன்படும் ரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்கிறது. அதனால், வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அந்த உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஸோ… எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட உடன் குளிப்பதற்கு டவலை தூக்கிவிடாதீர்கள்.

சாப்பிட்ட உடனே கொஞ்ச தூரம் நடந்தால் உட்கொண்ட உணவு செரிக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சாப்பிட்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மை.

இன்னொரு முக்கியமான விஷயம்… சாப்பிட்ட உடன் செக்ஸ் வைத்துக்கொள்வதும் தவறு. மீறி வைத்துக்கொண்டால், உணவு செரிமானத்தில் மட்டுமின்றி, செக்ஸ் பற்றிய மனம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். எப்போது என்றாலும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதே நல்லது.

டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…. 7.1.2010

டவுண்லோட் செய்த பைல் எங்கே?
பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்திடுவோம். அல்லது எங்கே டவுண்லோட் செய்திட என்று ஒரு சிறிய விண்டோவில் கேட்கும்போது, கம்ப்யூட்டர் டைரக்டரியை பிரவுஸ் செய்து, போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுப்போம். சில வேளைகளில், சில தளங்களில் இந்த டயலாக் பாக்ஸ் எல்லாம் கிடைக்காதபடி செய்து வைத்திருப்பார்கள். நாமும் டவுண்லோட் செய்திடுவோம். டவுண்லோட் செய்தபின் எங்கு அந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. பல இடங்களில் தேடி அலுத்துப் போய்விடுவோம். இது போன்ற நேரங்களில் கீழ்க்காணும்படி செயல்படவும். Tools அழுத்தி பின் கிடைக்கும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + ஜே (Ctrl+J) அழுத்தினாலும் இந்த விண்டோ கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்தால் நீங்கள் டவுண்லோட் செய்த பைல் காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Open Downloading Folder என்பதில் கிளிக் செய்தால், பைல் இருக்கும் போல்டர் காட்டப்படும்.

குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க

வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி:– மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Fonts தேர்ந்தெடுத்து அதில் Effects பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Hidden என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Ctrl+A என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் இtணூடூ+அ கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.

டாஸ்க் பார் / டூல் பார்
பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் இரண்டு டெக்னிக்கல் சொற்றொடர்கள். டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் கலரை மாற்றலாம். இடத்தையும் நாம் விரும்பினால் மாற்றலாம். இந்த பாரை மேற்புறமாக அல்லது இடது வலது பக்கங்களில் அமைத்துக் கொள்லலாம். இதன் இடது பக்கத்தில் தான் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நாம் இயக்கும் புரோகிராம்களின் பைல்களுக்கான பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறந்தால், அவை அனைத்தும், புரோகிராமின் குரூப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் அமையும். எந்த பைலைக் கொண்டு திரையின் மீது கொண்டு வர விரும்புகிறீர்களோ இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.
இந்த டாஸ்க் பாரில் குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால், புரோகிராம்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம், சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் தொடங்கும்போதே இயக்கப்படும் சில புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகார நேரம் இதில் காட்டப்படும்.
டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.

உடனடி சிடி இயக்கத்தை நிறுத்த
கம்ப்யூட்டரின் டிவிடி அல்லது சிடி டிரைவில் ஒரு சிடியைப் போட்டவுடன் அது உள்ளிருக்கும் பைலுக்கேற்ப இயங்கத் தொடங்குகிறது. அல்லது என்ன செய்திட? என்று மெனு கொடுத்துக் கேட்கிறது. கம்ப்யூட்டரின் ஆட்டோ ரன் பைல் சிடியை இயக்குகிறது. இது எதற்கு? சிடி போட்டால் சிவனே என்று இருக்க வேண்டியதுதானே? நமக்கு அதில் உள்ள பைல் வேண்டும் என்றால் நாம் இயக்க மாட்டாமோ? என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லையா? ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா? உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள். சிடி இயங்காது. நின்றுவிடும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.

ஷிப்ட்+எப்5 என்ன நடக்கும்?
வேர்டில் நூற்றுக் கணக்கான ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஆனால் இவற்றில் மிக முக்கியம் என பலரும் கருதுவது ஷிப்ட் + எப்5 கீகள் இணைந்த ஷார்ட் கட் கீ தான். இதனை அழுத்துவதன் மூலம் அதற்கு முன் நாம் டாகுமெண்ட்டில் எங்கு எடிட் செய்தோமோ அந்த இடத்திற்கு கர்சர் தாவும். அடுத்ததாக பொதுவான ஒன்று. அது கண்ட்ரோல் + இஸட். இது அப்போது மேற்கொண்ட செயலை நீக்கும். இதனைத் திருப்பி திருப்பி அழுத்துவதன் மூலம் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் பின் வரிசையில் நீக்கப்படும். ஏதேனும் நீக்கிய ஒன்றை மீண்டும் வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஒய் அழுத்தினால் போதும்.