தலைவ‌லி வருவது எதனா‌ல்

பலரு‌க்கு‌ம் கால‌ம் காலமாக தலைவ‌லி‌ப் ‌பிர‌ச்‌சினை இரு‌க்கு‌ம். ஆனா‌ல் அவ‌ர்களோ எ‌ளிதாக வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரை ஒ‌ன்றை வா‌ங்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.

ஆனா‌ல் உலக‌த்‌தி‌ல் பலரு‌க்கு‌ம் தலைவ‌லி எ‌ன்ற ஒரு ‌வியா‌தி ‌நி‌ச்சய‌ம் வ‌ந்‌திரு‌க்கு‌ம். ஒ‌வ்வொரு தலைவ‌லி‌க்கு‌ம் ப‌ல்வேறு காரண‌ங்க‌ள் இரு‌க்கலா‌ம்.

மாணவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் அ‌திகமான தலைவ‌லி வரு‌ம். அத‌ற்கு‌க் அவ‌ர்களது கண் கோளாறு காரணமாக இரு‌க்கு‌ம். க‌ண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம்.

கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும். சாதாரணமாக கண் மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தாலோ தலைவலி வரும் நப‌ர்களு‌ம் உ‌ண்டு.

ரத்த அழுத்தம் அதிகரித்தல் அ‌ல்லது பல் சொத்தை, சைனஸ் பிரச்சினை ஆகிய காரணங்களாலும் தலைவலி வரும்.

எ‌ந்த காரண‌த்‌தி‌ற்காக தலைவ‌லி வரு‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து அத‌ற்கு‌ண்டான மரு‌ந்துகளை உ‌ட்கொ‌ள்வதுதா‌ன் ஆரோ‌க்‌கிய வா‌ழ்‌‌வி‌ற்கு வகை செ‌ய்யு‌ம்.

%d bloggers like this: