Daily Archives: ஜனவரி 9th, 2010

`பைத்திய’ மகன்!

அமெரிக்காவில் மகனின் தொல்லையால் வெறுத்து போன தாய், போலீசை அழைத்துவிட்டார். பாஸ்டனைச் சேர்ந்த அந்த பெண்மணியின் 14 வயது மகன் ஒரு வீடியோ கேம் பைத்தியம். ஒருநாள் நள்ளிரவு தாண்டி ஏறக்குறைய அதிகாலை வரை மகன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டே இருக்க, அவனை படுக்க போகச் சொல்லிச் சொல்லி ஓய்ந்து போய்விட்டார் அப்பெண்மணி. அப்பையன் எல்லா விளக்குகளைம் எரிய விட்டதுடன், வீட்டைச் சுற்றியும் அவ்வப்போது நடை போட்டான். பொறுமையிழந்த தாய், கடைசியில் அவசர உதவிக்கான `911′-ஐ அழைத்தார். உடனே விரைந்து சென்ற போலீசார், அம்மாவின் பேச்சைக் கேட்குமாறு பையனிடம் பொறுமையாக எடுத்துக் கூறினர். விளக்குகளை அணைத்துவிட்டு படுக்குமாறும் புத்திமதி சொன்னார்கள். இதற்கெல்லாமா போலீசுக்கு போனை போடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் காவல் துறை ஜோ ஜனோலி, “இது கொஞ்சம் வித்தியாசமான புகார்தான்… ஆனால் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதல்ல” என்கிறார்

வாழ்க்கை வண்டி குடைசாயாமல் இருக்க…-திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை


பெரியவர்களின் ஆலோசனை அதிகமாகக் கிடைக்காத நிலையில் இன்று இளந்தம்பதியர் வாழ்வின் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். தங்களுக்குள் முட்டி மோதி, திருமண வாழ்வை மேலும் சிக்கலாக்கிக் கொள்கின்றனர். எனவேதான் `திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை’ என்பது தற்போது பிரபலமாகி வருகிறது.

இதில், ஆணும் பெணும் முக்கியமான விஷயங்களை திருமண ஆலோசகரிடம் விவாதித்துத் தெளிவடைய முடிகிறது.

திருமண ஆலோசனையில் அடிக்கடி விவாதிக்கபடும் விஷயங்கள்: திருமணத்தை ஒரு பொருளாகக் கொண்டு, அதை பற்றிய ஆண், பெண் இருவரின் அறிவு விவாதிக்கபடுகிறது. இருவரின் குடும்ப அமைபுகள். இருவரின் எதிர்பார்ப்புகள். ஆண்கள், பெண்களுக்கான வேலைகள். இருவரின் லட்சியங்கள், கனவுகள் பற்றி விவாதிக்கலாம். எதிர்காலத்தை பற்றிய எண்ணங்கள். பொருளாதாரம் ஒரு முக்கிய விஷயமாக விவாதிக்கபடுகிறது. வேலையை பகிர்ந்து கொள்வது, யார் பணத்தைக் கையாளுவது என்பது குறித்து விவாதிக்கபடுகிறது. ஆவண பணிகள், வங்கி விஷயங்கள் ஆகியவற்றை யார் கவனித்துக்கொள்வது என்பது குறித்து பேசபடுகிறது. வீட்டுவேலைகள் குறித்து பேசபடுகிறது. நபர்கள், குடும்பம் பற்றிய விஷயங்கள் விவாதிக்கபடுகின்றன. மதம் மற்றும் பண்டிகைக் கொண்டாட்ட பாரம்பரியங்கள் குறித்து பேசபடுகிறது.

“பிரச்சினையைத் தவிர்க்க ஆண் அவரது சொந்த வீட்டு விஷயங்களையும், பெண் அவரது பிறந்தக விஷயங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதன் முலம், தவறான புரிதல்களுக்கு இடமில்லாது போகும். திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்கிக்கொள்வது எப்படி என்பது பற்றியும், பிரச்சினைகள் எழும்போது அவற்றை எப்படிச் சரிசெய்வது என்பது பற்றியும் ஆலோசகர் ஆலோசனை வழங்கலாம்.

இது திருமணத்துக்கு முந்தைய ஆலோசனைதான் என்றபோதும், புதிதாகத் திருமணமானவர்களும் இந்த ஆலோசனையை பெறலாம். விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, திருமண வாழ்க்கை விஷயங்களை அலசலாம். விவாகரத்து அதிகரிப்பதற்கு, பொறுப்பைத் தட்டிக் கழிப்பது, விட்டுக் கொடுப்பதற்கு மாறாக அதீதமான சுதந்திர உணர்வு போன்றவை காரணமாக அமைகின்றன.

திருமண வாழ்வைக் காப்பாற்றுவதற்கான ஆலோசனைகள்: பிரச்சினை எழும்போது அதைத் தீரப்பதற்கான விதிகளை அறிந்துகொள்ளுங்கள். பரஸ்பர அன்புத் தேவைகளை அறியுங்கள். வாழ்வில் அலுப்பு ஏற்படும்போதெல்லாம் உறவில் ஒரு
மறுமலர்ச்சி கொடுப்பதற்கான வழிகளை அறியுங்கள். எதிர்பாராத சந்தோஷங்களை ஒருவருக்கொருவர் அளித்துத் திருமணத்தை உயிர்போடு வைத்திருங்கள். வாழ்க்கைத் துணைக்கு மதிப்பு அளிப்பது என்பது, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு மதிப்பு அளிப்பதும்தான். திருமண வாழ்வின் உரிமையையும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அக்கறை தானே வரும். திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும்போது சரியான நபர்களின் அல்லது தொழில்முறை ஆலோசகர்களின் ஆலோசனையை நாடுங்கள்.

நிலவில் மிகவும் குளிர்ச்சியான பகுதி


இரவில் குளிர்ச்சி தருவது நிலவு. ஆனால் சூரிய குடும்பத்திலேயே வெதுவெதுப்பான கிரகம் சந்திரன்தான். இருந்தாலும் நிலவின் குளிர்ச்சியான பகுதி தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

நாசா விண்வெளி மையத்தின் எல்.ஆர்.ஓ. என்ற நிலவை ஆராயும் விண்கலம் இதை கண்டுபிடித்தது. நிலவின் தென் மேற்குப் பகுதிதான் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இரவில் மைனஸ் 294 டிகிரி செல் சியஸ் குளிருக்குச் செல்கிறது.

நிலவு 1.54 டிகிரி சாய்வாக இருந்து பூமியை சுற்றி வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப மாற்றம் அதிகமாக வித்தியாசப்படுவதில்லை. நில நடுக்கோட்டுப் பகுதியில் மட்டும் சற்று அதிகமான வெப்பமும், அதிகமான குளிரும் நிலவுகிறது.

நிலநடுக்கோட்டுப் பகுதியில் பகலில் 127 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அதே பகுதியில் இரவு மிக அதிகமான குளிரும் ஏற்படுகிறது. சூரியன் 6 மாதகாலம் பூமியின் தென் அரைக்கோளத்திலும், மற்ற 6 மாதம் வட அரைக்கோள பாதையிலும் சுற்றிவரும். சமீபத்தில் அக்டோபரில் தென் அரைக்கோளத்தில் பயணித்தபோது வெப்ப அளவீடுகள் கணிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நிலநடுக்கோட்டின் தென்பகுதியில் மைனஸ் 238 செல்சியஸ் வரையும், தென்மேற்கு பகுதியில் மைனஸ் 294 செல்சியஸ் வரையும் குளிர் நிலவுகிறது. ஆனால் வடபகுதியில் அதிகஅளவில் வேறுபாடுகள் இல்லை.

கிரகங்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவது இந்த மாறுபாட்டுக்கு காரணம் ஆகும். நிலவின் குளிர்ச்சியான தென்மேற்குப் பகுதிக்கு `ஹெர்மைட்’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.

நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து…

இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.

இந்திய உணவில் இரண்டு வகை உண்டு. தென்னிந்திய உணவு வகை, வட இந்திய உணவு வகை.

தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.

இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேயைõன அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.

இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.

இதற்கு உளுந்து, மாடம், மாஷம் என்ற பெயர்களும் உண்டு. இதன் விதை (பருப்பு) வேர் மருத்துவப் பயன் கொண்டது.

செய்ய உருந்திற்குச் சிலேத்மவனி லற்பிறக்கும்
வெய்யபித்தம் போமந்தம் வீறுங்காண் -மெய்யதனில்
என்புருக்கி தீரும் இடுப்புக் கடுபலமாம்
முன்பு விருத்தியுண்டாய் முன்

(அகத்தியர் குணபாடம்)

நோயின் பாதிப்பு நீங்க

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை

வெறுமுளுந்திற் செய்வடைக்கு மேன்மேலும் -வாதம்

உறும்பித்தம் சற்றே யொடுங்கும்-நறுந்தீ

பனம்போம் புசிப்பியு பருகநன்றாம் வாலி

யனம்போ னடையாயறி

(அகத்தியர் குணபாடம்)

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

நடுக்கு வாத தைலம்
உறுதியுள்ள உளுந்ததுவும் பலம் ஈரைந்து
ஓதிய சேவகன் மூலம் பலமிரண்டு
சுறுதியுடன் முக்குறுணி சலத்திலிட்டு
சுண்டவே கஷாயமது படிமூன்றுக்குள்
பொறுதயுடன் நல்லெண்ணெய் படியோரொன்று
புகட்டி அதில் ஆவின்பால் படி இரண்டு
அறுதியாய் கலந்தணில் மருந்தைக் கேளு
ஆனசிறுபுள்ளடி சாரணையின் வேரே
வேரான அசுவகெந்தி சிற்றரத்தை
விளைந்த அகில்முக்கடுகு இந்துப்பு தானும்
சீரான வசம்பு சதகுப்பை யோடு
செவ்விய மோர் வகை கழஞ்சு திறமாயாட்டி
நேரான எண்ணெயதில் கரைத்துக் காய்ச்சி
பிசகாமல் மெழுகு பதம்தனில் வடித்து
மேரான உடல்பூச நடுக்கு வாதம்
விட்டகலும் இன்னமொரு விவரம் கேளே…

உளுந்து பத்து பலம் (350 கிராம்)

சிற்றாமுட்டி வேர் இரண்டு பலம் (70 கிராம்)

தண்ணீர் மூன்று குறுணி (16 லிட்டர்)

சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காக அதாவது 4 லிட்டராக வரும் வரை காய்ச்சி அதனுடன் ஒருபடி நல்லெண்ணெய் (1.3 லிட்டர்) இரண்டுபடி (2.6 லிட்டர்) பசுவின் பாலில் கலக்கவும். அதனுடன் சிறுபுன்னை, சாரணையின் வேரும் மேலும்

அதனுடன் அசுவகெந்தி, சிற்றரத்தை, அகில் திரிகடுகு, இந்துப்பு, வசம்பு, சதகுப்பை, செவ்வியம் இவற்றை வகைக்கு ஒரு கழஞ்சு (5 கிராம்) எடுத்து அரைத்து, எண்ணெயில் கரைத்து அடுப்பேற்றிக் காய்ச்சி, மெழுகு பதம் வரும்போது வடித்து உடம்பில் பூச நடுக்கு வாதம் குணமாகும்.

(சுக்கிர சிந்தாமணி நூலிலிருந்து)

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.

உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

கு‌ல்க‌ந்தின் ப‌யன்கள்

சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.

வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).
தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும். ரோஜா இதழ்களில் உள்ள எண்ணை‌ய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து.

முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.