Daily Archives: ஜனவரி 11th, 2010

புகையில்லா சிறை

`புகைப்பதற்கு’த் தடை விதிக்கபட்ட ஒரு மேலைநாட்டுச் சிறையால் குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. `பிரிட்டீஷ் ஐலில்’ உள்ள அநதச் சிறை, ஐரோப்பாவின் ஒரே `முற்றிலும் புகையில்லா சிறை’யாகும். பல கோடி ருபாய் செலவில் நவீனமாகக் கட்டபட்ட இந்த புதிய சிறைச்சாலை 2008-ம் ஆண்டு திறக்கபட்டது. ஏற்கனவே அத்தீவில் இருந்த பழைய விக்டோரியா சாலை சிறைச்சாலைக்கு பதிலாக இந்தச் சிறை உருவாக்கபட்டது. இங்கு புகைப்பதற்கு அனுமதி கிடையாது. இச்சிறை திறக்கபட்டதற்கு பின், குறிபிட்ட `பிரிட்டீஷ் ஐலில்’ தீவில் குற்றங்கள் 14 சதவீத அளவு குறைந்துவிட்டன. ஆச்சரியபட்டுபோன அதிகாரிகள் அதுபற்றி ஆய்வு செய்தபோது, பிடிபட்டால் சிறையில் `புகை’யில்லாமல் வாட வேண்டும் என்ற பயத்திலேயே பலரும் குற்றச் செயல்களில் ஈடுபடத் துணியவில்லை என்பது தெரியவந்தது. தற்போது இந்தச் சிறையில் 100 கைதிகளே உள்ளனர்.

புத்தாண்டில் புதிதாய் சிந்திப்போம்

புத்தாண்டில் புதிதாய் சிந்திப்போம். நல்ல மாற்றங்களை ஒவ்வொன்றாய் வாழ்க்கையில் அறிமுகபடுத்துவோம். அதிகாலையில் எழுந்திருக்க பழகுவோம். அப்படியானால் இரவில் அதிக தாமதமின்றி சரியான நேரத்துக்கு தூங்கச் செல்வோம். காலையில் விழிக்கும்போதே சந்தோஷத்தை உணருங்கள். உடற்பயிற்சி செய்து உடலை குஷிபடுத்துங்கள். அன்று முழுவதும் சந்தோஷத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று அதிகாலையிலே உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வசிக்கும் இடந்தான் உங்களின் சொர்க்கம். அந்த சொர்க்கம் வாடகை வீடாகவும் இருக்கலாம். எத்தனை மாதங்கள் குடியிருக்கபோகிறோம் என்ற எண்ணத்தில் சிந்திக்காமல், உங்களை அழகு படுத்துவதுபோல்,

உங்கள் வசிப்பிடத்தையும் அழகு படுத்துங்கள். வீட்டில் தனியாக இருக்கும்போது… பொழுது போகாமல் இருக்கும்போது… வீட்டை அழகுபடுத்தும் ஒவ்வொரு வேலையையும் செய்ங்கள். அழகு என்பது கவர்ச்சியானது, சுத்தமானது. சமையல் அறை, குளியல் அறை, கழிபறை வரை உங்கள் அழகுபடுத்துதல் தொடரட்டும். சம்பாதிபதைவிட, அதை நல்ல வழியில் செலவிடுவதுதான் அதிக மகிழ்ச்சியை தரும். உங்கள் உடன் பிறந்தவர்களை, நெருங்கிய உறவினர்களை கவனிங்கள். ஏதாவது ஒரு தேவைகளுக்காக அவர்கள் ஏங்கிக்கொடிருந்தால், எதிர்பார்க்காத நேரத்தில் உங்களால் முடிந்ததைக் கொடுத்து அவர்கள் அன்பை பெறுங்கள். நிறைய உடை வாங்கி குவிக்கும் போது பழைய உடைகளை என்ன செய்கிறீர்கள்? குவியலாக போட்டுவைத்து அதை குபை ஆக்காமல், தேவைபடுகிறவர்களுக்கு கொடுங் கள். கிழிந்த பின்பு கொடுபதைவிட அதை சுமாரான அழகுடன் தோன்றும் போதே கொடுத்துவிடுங்கள். புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை துரிதபடுத்துங்கள். உங்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் இல்லை என்றால், உங்கள் கைக்கு இதுவரை நல்ல புத்தகம் கிடைக்கவில்லை என்று அர்த்தம். புத்தகங்களை தேடுவது நல்ல நபரை தேடுவது போல். புத்தகங்களை தேடிபிடிக்கவும் நேரத்தை ஒதுங்குங்கள். விடுமுறை நாட்களில் அல்லது வேலை இல்லாமல் இருந்தால் லகம் செல்லுங்கள். அங்கே கிடைக்கும் புது புது புத்தகங்கள் உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். உடல் அழ கை மேம்படுத்துவதிலும், முக அழகை மெருகூட்டுவதிலும் கவனத்தை செலுத்துவது பெரும்பாலானவர்களுக்கு பிடித்த விஷயம். உங்களை ங்கள் அழகில் மேம்படுத்தும்போது மகிழ்ச்சி அதிகரிக்கவே செய்ம். பண வசதியிருந்தால் பிட்டி பார்லருக்கு சென்று உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகு படுத்திக் கொள்ளுங்கள். அபடிச் செல்லும்போது அந்த நாள் உங்கள் மனதுக்கும் மகிழ்ச்சி தரும் நாளாகிவிடும். பண வசதி இல்லாவிட்டால், வீட்டிலே உள்ள பல பொருட்களால் உங்களை அழகுபடுத்த முடிம். அதை பற்றி புத்தகங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ங்கள் ஓய்வாக இருக்கும் நாளில் வீட்டிற்கு தேவையான பொருட்களை பட்டியலிடுங்கள். இதில் அத்தியாவசியமாகத் தேவைபடும் பொருட்களுக்கான பட்டியலை தயாரித்துக்கொடு ஷாபிங் கிளம்புங்கள். குடும்பத்தோடு கிளம்பிபோனால், ஒரே கல்லில் இரு மாங்காய். பொருட்களை வாங்கியது மாதிரி இருக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து பேசி, ஷாபிங் செய்தது போலவும் இருக்கும். அன்றைய ஒரு நேர உணவை உங்களுக்கு பிடித்த ஹோட்டலில் குடும்பத்தோடு சாபிட்டால் அதுவும் ஒரு மறக்க முடியாத அனுபவம் ஆகிவிடும். ரொம்ப பரபரபாக இருபது போலவும், மனதுக்கு ஓய்வு தேவை என்று உணரவும் செய்தால், அலட்டிக்கொள்ளாமல் ஒரு நாள் விடுபு எடுத்துவிடுங்கள். இசை, நடனம் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு சென்று வாருங்கள். நெருக்கமான நபரை அழைத்துக்கொடு குறுகிய நேர திடீர் பயணம் ஒன்றை மேற்கொள்ளுங்கள். புத்தம் புதிய இடங்களுக்கு சென்று புதிய மனிதர்களை சந்திங்கள். ரொம்ப நாட்களாக சந்திக்க முடியாமல் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று அவர்களுக்கு ஆச்சரிய சந்தோஷத்தைக் கொடுத்து, உங்களைம் ங்கள் உற்சாகபடுத்திக் கொள்ளுங்கள்

விண்டோஸ் – திறன் கூட்டுவோம்

விண்டோஸ் – என்னதான் வேகமாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும், சில வேலைகளை மேற்கொள்கையில் தொடர்ந்து எந்த மாற்றமும் இன்றி அதே பாணியில் தான் இயங்கும். எடுத்துக் காட்டாக வெல்கம் ஸ்கிரீன், ஸ்டார்ட் அப் புரோகிராம்களைக் கொண்டு வருதல், சிஸ்டம் ஷட் டவுண் செய்தல் ஆகியவற்றைக் கூறலாம். இந்த வேலைகளில் சிஸ்டம் பைல்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வேகம் தரும் சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் இலவசம் தான். இந்த புரோகிராம்கள் குறித்த தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.

1. ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer): அடிக்கடி புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல வேளைகளில் என்ன செய்கிறோம் என்று அறியாமல், அவற்றை ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் வைத்து விடுகிறோம். இதனால் ஸ்டார்ட் அப் புரோகிராம் எண்ணிக்கை அதிகமாகிறது. விண்டோஸ் இயக்கம் நிலைக்கு வர நேரமாகிறது. ஸ்டார்ட் அப் டிலேயர் என்னும் இந்த புரோகிராம், ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் உள்ள புரோகிராம்களை, “”நீங்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையா இருங்க, அப்புறமா வாங்க” என்று சொல்லி விண்டோஸ் இயக்கத்தினை அமல்படுத்து கிறது. இதனால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கி மேலும் பணிகளை எடுத்துக் கொள்ள தயாராகிறது. இந்த நிலை வந்த பின்னர், ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் ஏற்றப்படும்.
ஸ்டார்ட் அப் டிலேயரை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன், உங்கள் சிஸ்டத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் அனைத்தையும் இது பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் எதனை எல்லாம் தாமதமாகக் கொண்டு வரலாம் என்று கருதுகிறீர்களோ, அவற்றை இழுத்து வந்து கீழாக உள்ள வெள்ளை பாரில் விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட அப்ளிகேஷனைக் காட்டும் கோடு ஒன்று அங்கு காணப்படும். தாமதம் அதிகமாக இருக்க வேண்டுமா அல்லது குறைவாக இருக்க வேண்டுமா என முடிவு செய்து, அதற்கேற்ப அந்த கோட்டை இழுத்துவிடலாம்.
இந்த இலவச புரோகிராமினை http://www.pcworld.com/article/151952/boot_ faster_with_startup_delayer.html என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இது விண்டோஸ் 7 தொகுப்பிலும் இயங்கும்.

2. குரோம் (Chrome) மாறலாமா?: உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் மிக அதிகம் பயன்படுத்தப் படும் புரோகிராம் எது? தயக்கமின்றி இன்டர்நெட் பிரவுசர் என்று சொல்லலாம். வேகமாக இன்டர்நெட் பிரவுசிங் செய்திட வேண்டு மென்றால், அடிப்படையில் வேகமான இன்டர்நெட் இணைப்பு வேண்டும். அதன் பின் வேகமாக இயங்கும் பிரவுசர் வேண்டும். வேகம் மட்டுமே உங்கள் இலக்காக இருக்கும் பட்சத்தில், நீங்கள் குரோம் பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்கலாம். வேகத்தைப் பொறுத்தவரை, குரோம், பயர்பாக்ஸ் 3.5, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8, ஆப்பரா 10, சபாரி என வரிசையில் இடம் பெறுகின்றன.

3. பவர் செட்டிங்ஸ் (Power Settings): பெர்சனல் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, அதன் இயக்க தன்மையை மெதுவாக்கி, அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்து மின்சாரத்தை மிச்சப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் அது பேட்டரியில் இயங்கவில்லை. எனவே கம்ப்யூட்டர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையையும் அதிக பட்ச திறன் கொண்டு இயங்கும் வகையில் அமைப்பது நல்லது. இதற்கென விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா டிபால்ட்டாக ஒரு பேலன்ஸ்டு (‘Balanced’)
பெர்பார்மன்ஸ் என்ற நிலையைக் கொண்டுள்ளன. இதனை இன்னும் கொஞ்சம் ஊக்குவிக்க ஒரு சிறிய வேலையைச் செய்யலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து கிடைக்கும் ரன் கட்டத்தில் பவர் (Power) என டைப் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Higher Performance என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது அங்கே உள்ள பட்டியலில் இல்லை என்றால் Show Additional Plans என்பதைக் கிளிக் செய்திடவும். இதிலும் ஒவ்வொரு பகுதியாக, எடுத்துக்காட்டாக, ஹார்ட் டிரைவ் ஷட் டவுண் செய்திடும் முன் எவ்வளவு நேரம் சுழலாமல், வேலை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற செட்டிங்ஸ் அமைக்க வேண்டும் என்றால் Change plan settings, Change advanced power settings என்பனவற்றைக் கிளிக் செய்திடவும்.

4. புரோகிராம் நீக்கம்: பெர்சனல் கம்ப்யூட்டர்களை வாங்குகையில், அதனைத் தயாரிக்கும் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர் களுக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகின்ற பல புரோகிராம்களை பதிந்து அனுப்புகின்றனர். இவை ஹார்ட் டிரைவ் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும். சில ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் இருந்து கொண்டு ராம் மெமரியைக் காலி செய்திடும். எனவே இவற்றை நீக்கலாம். இதற்கு கண்ட்ரோல் பேனல் சென்று ஆட்/ரிமூவ் பிரிவைப் பயன்படுத்தி நீக்கலாம். அல்லது ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்ட Revo Uninstaller போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். இது போன்ற புரோகிராம்கள், தேவையற்ற புரோகிராம்களை நீக்குவதுடன், ஏற்கனவே நீக்கப்பட்ட புரோகிராம்கள் தொடர்பான சிறிய பைல்களையும் அறவே காலி செய்திடும்.

5. வெப் ஆப் ட்ரஸ்ட் (Web of Trust):இந்த புரோகிராம் விண்டோஸ் தொகுப்பினை ட்யூன் செய்யாது என்றாலும், அதனைப் பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது. பலமுறை இன்டர்நெட் தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்து, வைரஸ் மற்றும் மால்வேர்களிடம் நம் கம்ப்யூட்டர்கள் மாட்டிக் கொள்கின்றன. எப்படி லிங்க் ஒன்று மோசமாக நம்மை மாட்டிவிடும் மால்வேர் புரோகிராம்களைக் கொண்டுள்ளது என்று தெரிந்து கொள்வது? அதற்கான வழிதான் வெப் ஆப் ட்ரஸ்ட் என்னும் புரோகிராம். இது இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு ஆட் ஆன் தொகுப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் பயர்பாக்ஸுக்கும் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒவ்வொரு லிங்க்கிற்கும் பச்சை (பாதுகாப்பானது), மஞ்சள் (ஆபத்து இருக்கலாம்) மற்றும் சிகப்பு (உறுதியாக ஆபத்தானது) என்றபடி வண்ண ஐகான்களை வழங்கும். அல்லது லிங்க்கின் மீது ரைட் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் மெனுவில் View WOT scorecard என்பதைத் தேர்ந்தெடுத்து நாமாக சோதித்துக் கொள்ளலாம்.
ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்போது நமக்கு எளிதானதாகவும், உற்ற தோழனாகவும் தெரியும்? அது நாம் எதிர்பார்க்கும் வேலையை, குறித்த காலத்தில் செய்து கொடுக்கும் போது, இல்லையா! இதற்கு உங்கள் விண்டோஸ் தொகுப்பைச் சற்று ட்யூன் செய்திடலாம்.
1.குளோஸ் ஆல் விண்டோஸ் (Close All Windows): கம்ப்யூட்டரில் அன்றைக்கான வேலையை முடித்துவிட்டீர்கள். ஷட் டவுண் செய்திடும் முன் திரையில் அதிக எண்ணிக்கையில் புரோகிராம்கள் திறந்து இருப்பது தெரிகிறது. ஒவ்வொன்றாக மூட வேண்டும்; சற்று எரிச்சல் தான். இதற்காகவே குளோஸ் ஆல் விண்டோஸ் என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதனை பதிந்து டாஸ்க் பாரில் போட்டு வைத்திடுங்கள். பின் இதனைக் கிளிக் செய்தால், அனைத்து புரோகிராம்களும் ஒரு பிளாஷ் மாதிரி மூடப்படும். ஏதேனும் ஒரு புரோகிராமில் பைல் சேவ் செய்யப்பட வேண்டி இருந்தால், உங்களைக் கேட்டு டயலாக் பாக்ஸ் தரப்பட்டு வழக்கம்போல சேவ் அழுத்த வேண்டியதிருக்கும்.
2. டாஸ்க் பார் ஓரத்தில்: இப்போதெல்லாம் அகலமான எல்.சி.டி. திரை கொண்ட மானிட்டரை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இதில் இடது வலது ஓரங்களில் சிறிது இடம் விட்டு மற்ற இடங்களில் விண்டோக்கள் கிடைக்கின்றன. ஏன், இதனையும் பயன்படுத்தலாமே. முழுவதுமாக விண்டோ காணப்பட்டாலும், நமக்கு புரோகிராம்களில் மேல் கீழாகத்தானே இடம் தேவைப்படும். எனவே கீழே உள்ள டாஸ்க் பாரை, ஓரத்திற்குக் கொண்டு செல்லலாமே. முதலில் கீழேயே வைத்துப் பார்த்துப் பயன்படுத்திய கண்களுக்கு சற்று வித்தியாசமாகத்தான் தெரியும். பழகிவிட்டால் சரியாகிவிடும். நமக்கு புரோகிராம்களில் வேலை செய்திட அதிக இடம் கிடைக்கும்.
இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Lock the taskbar என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து, டாஸ்க் பாரில் உள்ள காலி இடத்தில் இடது கிளிக் செய்து அப்படியே இழுத்து இடது அல்லது வலது பக்கம் கொண்டு விட்டுவிடவும். ஓரத்திற்கு சென்றவுடன் டாஸ்க் பார் இறுத்திக் கொண்டு விடும். பின் மவுஸை அழுத்தி இருப்பதை எடுத்துவிடவும்.

ஆபீஸ் 2010 – பீட்டா டவுண்லோட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த மெகா வெளியீடு எம்.எஸ். ஆபீஸ் 2010 ஆகத்தான் இருக்கும். அதன் சோதனைத் தொகுப்பு சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கான பேரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறைகள் குறித்து உலகெங்கும் இருந்து பல வாடிக்கையாளர்கள் தகவல்களை அளித்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இதன் சோதனைத் தொகுப்பு, http://www.microsoft. com/office/2010/en/downloadofficeprofessionalplus/default.aspx என்ற முகவரி யில் கிடைக்கிறது.
இங்கு உங்கள் லைவ் அல்லது ஹாட் மெயில் அக்கவுண்ட் மூலம் சென்று பெறலாம். இதனை ஐ.எஸ்.ஓ. பைலாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். பைல் அளவு 684 எம்பி.(32பிட்) 750 எம்பி (64 பிட்). அதன்பின் இன்ஸ்டால் செய்து வரும் 31 அக்டோபர் 2010 வரை பயன்படுத்தலாம். அதன்பின் இந்த சோதனைத் தொகுப்பு இயங்காது. இயக்கம் நிறுத்தப்படுவதற்கு முன் எச்சரிக்கை செய்தி தரப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
முதன் முதலாக 32 மற்றும் 64 பிட்களில் தரப்படும் ஆபீஸ் தொகுப்பு இதுதான். உங்கள் சிஸ்டத்திற்கு உகந்தது எது என்று முடிவு செய்து அதனை டவுண்லோட் செய்திடவும். குறிப்பாக விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள், சரியாக இதனைக் கையாள வேண்டும். தங்களிடம் உள்ள சிஸ்டம் எந்த வகை என்று அறிய ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் மற்றும் சிஸ்டம் மெயின்டனன்ஸ் சென்று பார்க்க வேண்டும். இதில் சிஸ்டம் என்பதனைக் கிளிக் செய்தால், உங்களிடம் உள்ள விண்டோஸ் 7, எத்தனை பிட் வகையைச் சார்ந்தது என்று தெரியவரும். அதற்கேற்ற ஆபீஸ் பீட்டா தொகுப்பை இறக்கிக் கொள்ளலாம்.
தற்போதைக்கு ஆபீஸ் புரபஷனல் ப்ளஸ் மட்டுமே கிடைக்கிறது. ஆபீஸ் புரபஷனல், மற்றும் ஹோம் அண்ட் பிசினஸ் தொகுப்புகள் பின் நாளில் கிடைக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்வதற்கான ப்ராடக்ட் கீ முதலிலேயே தரப்படுகிறது. 25 எண்கள் அடங்கிய கீ, இன்ஸ்டால் செய்த பின் 30 நாட்களுக்குப் பின் பயன்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே தேவை. இந்த கீ, சோதனைத் தொகுப்பை ஆக்டிவேட் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். பின் நாளில் ஒரிஜினல் விற்பனைத் தொகுப்பிற்குப் பயன்படுத்த முடியாது.
மைக்ரோசாப்ட் ஆபீஸ் புரபஷனல் ப்ளஸ் என்ற இதனை டவுண்லோட் செய்து இயக்கினால், புதிய வழிகளில் இது என்னவெல்லாம் வசதிகளைத் தருகிறது என்று அனுபவப்படலாம். இதில் வேர்ட், ஒன் நோட், இன்போ பாத், பவர்பாய்ண்ட், அக்செஸ், ஷேர் பாய்ண்ட் ஒர்க்ஸ்பேஸ், அவுட்லுக், பப்ளிஷர், கம்யூனிகேடர், எக்ஸெல் ஆகியவை உள்ளன.
இது இறுதியாக வடிவமைக்கப்படுவதற்கு முன்னதான சோதனைத் தொகுப்பு என்பதால், இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறிந்து கொள்வது நல்லது. நாம் என்ன என்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிந்து கொள்ளலாம்.
1. முதலில் நீங்கள் முதன்மையானது என்று கருதும் அலுவலக அல்லது வீட்டில் வைத்துப் பயன்படுத்தப் படும் பெர்சனல் கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டாம். இரண்டாவதாக, உபரியாக உள்ள, அதிக முக்கியத்துவம் இல்லாத டேட்டா உள்ள கம்ப்யூட்டரில் பயன்படுத்தவும்.
2. பயன்படுத்த இருக்கும் கம்ப்யூட்டரில் ஏற்கனவே ஆபீஸ் தொகுப்பு இருந்தால், அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடவும்.
3. இன்ஸ்டால் செய்திடும் முன், மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள ரிலீஸ் நோட்ஸ் என்னும் தகவல் குறிப்பைப் படித்துத் தெரிந்து கொள்ளவும். இதனை http://go.microsoft.com/fwlink/?LinkID= 163393&clcid=0x409 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
4. இந்த ஆபீஸ் தொகுப்பு குறித்த தகவல்களை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினால், அதற்கென உள்ள அமைப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். அப்படி ஒரு அமைப்பினை http://social.technet. microsoft.com/Forums/en/office 2010general/threads என்ற முகவரியில் காணலாம். இன்னொரு அமைப்பு http://blogs.technet. com/office20 10/ என்ற முகவரியிலும் கிடைக்கிறது.
5. இன்ஸ்டால் செய்த பின், விண்டோஸ் அப்டேட் இயக்கப்பட்டு அப்டேட் செய்யப்படுவதனை உறுதி செய்து கொள்ளவும்.

டிவி’ பார்ப்பதால் குழந்தைகளின் பேச்சு திறன் குறைகிறது

பிரிட்டனில், “டிவி’ பார்ப்பதிலும் கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும், பெரும்பாலான குழந்தைகள் நேரத்தை கழிக்கிறார் கள். இதனால், அவர்களிடத்தில் பேச்சு திறன் குறைந்து போகிறது என்று ஆய்வு கூறுகிறது. பிரிட்டன் குழந்தைகளின் பேச்சுத் திறன் குறித்து சர்வேயை அரசு தகவல் தொடர்பு அதிகாரி ஜீன் கிராஸ் நடத்தினார்.
இந்த சர்வேயில் பிரிட்டனில் பெரும்பாலான குழந்தைகள் “டிவி’ பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும் பொழுதை கழிக்கின்றனர். அப்போது, அவர்களிடத்தில் பேசுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதன் மூலம் ஆறில் ஒரு குழந்தைக்கு பேசும் திறன் குறைவாக உள்ளது என்று இந்த சர்வே கூறுகிறது.
இந்த சர்வே மேலும் கூறுகையில், 25 சதவீத பிரிட்டன் இளைஞர்கள் தங்களது பேசும் திறனில் சில குறைபாடுகளுடன் உள்ளனர். 5 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடு இருக்கின்றனர். சிறுமியரை பொருத்தமட்டில் 13 சதவீதத்தினர் சிறு குறைபாடுகளோடும், 2 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளில் 34 சதவீதம் குழந்தைகள் முதல் வார்த்தையை, பிறந்த 10 அல்லது 11வது மாதத்தில் உச்சரித்து விடுகின்றனர்.
அதே போல் ஆண் குழந்தைகளில் 27 சதவீதத்தினர் உச்சரித்து விடுகின்றனர். 4 சதவீத குழந் தைகள் மூன்று வயதை தாண்டிய போதிலும் முதல் வார்த்தையை பேசாமல் உள்ளனர். 23 சதவீத குழந்தைகள் பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் போதிய உதவி இல்லாமல் தவிக்கின்றனர் இவ்வாறு இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

`கள்ளநோட்டை’ கண்டுபிடிக்கும் செல்போன்!


போலி ருபாய் நோட்டுகள் இன்று ஒரு பிரச்சினையாக உள்ளன. ஐநூறு, ஆயிரம் ருபாய் நோட்டுகளை பெறுபவர்களிடம் ஒரு சிறுதயக்கம் ஏற்படவே செய்கிறது.

போலி ருபாய் நோட்டைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு கையடக்க வசதி இருந்தால் எப்படியிருக்கும்!

அந்த வகையில் ஒரு வழி கண்டுபிடித்துள்ளார், மைசூரைச் சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவியான நேகா. அவர், கள்ள ருபாய் நோட்டைக் கண்டுபிடிக்கும் வகையில் செல்போனை உருவாக்கியுள்ளார்.

மைசூரில் உள்ள வித்யா விகாஸ் பொறியியல் கல்லூரியில் படிக்கும் நேகா, “நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டுப் புழக்கம்தான் என்னை இந்தத் தொழில்ட்பத்தை உருவாக்கத் தூண்டியது. தேர்ச்சி பெற்றவர்களால் கள்ளநோட்டைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் சாதாரண மனிதர்களால் அது முடியாது. எனவேதான் எல்லோருக்கும் பயன்படும் வகையில் இதை உருவாக்கினேன்” என்கிறார் நேகா.

தனது நோக்கத்தின்படி, சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் `கள்ள பாய் நோட்டை கண்டுபிடிக்கும் கருவி’ இருக்க வேண்டும் என்று நினைத்தார் நேகா. அதனால்தான் அவர் செல்போனை தேர்ந்தெடுத்தார்.

தனது ஆய்வு முயற்சியை ஏழு மாதங்களுக்கு முன் ஆரம்பித்தார் நேகா.

“கள்ளநோட்டுகளின் புழக்கம் குறித்து நுண்ணறிவுப் பிரிவு மேற்கொண்ட பல ஆய்வுகளை நான் படித்தேன். மேலும் ருபாய்த் தாளின் அம்சங்கள், `வாட்டர் மார்க்’,
காந்த மை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்” என்கிறார் நேகா.

இந்தக் கண்டுபிடிப்புக்கான முக்கிய `டிப்ஸ்’ ரிசர்வ் வங்கியிடமிருந்து கிடைத்தது.

“அக்டோபரில் ரிசர்வ் வங்கி சார்பில் ஒரு கண்காட்சி நடைபெற்றது. அதில், ருபாய்த் தாளின் பல்வேறு அம்சங்கள், அது அச்சடிக்கப்படும விதம் குறித்து அதிகாரிகள் தெரிவித்தார்கள்” என்று விளக்குகிறார் நேகா.

கள்ளநோட்டுகள் பற்றி அறிவதற்கு நேகா அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். அப்போது ஒரு வித்தியாசமான பிரச்சினை அவருக்கு ஏற்பட்டது. சட்டப்படி தவறு என்பதால், கள்ளநோட்டைத் தொட நேகாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மிகவும் கெஞ்சிக் கேட்டு, அவற்றைப் பார்ப்பதற்கு அனுமதி பெற்றார் நேகா.

நேகா மேற்கொண்ட தீவிரமான ஆய்வுகள், கள்ளநோட்டுக்கும், அசல் நோட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள வைத்தன.

1. நீங்கள் ஒரு ருபாய் நோட்டை வெளிச்சத்துக்கு எதிராகப் பிடித்தால், மகாத்மா காந்தியின் உருவத்தைக் காணலாம். மிகவும் நுணுக்கமாக கள்ளநோட்டைத் தயாரிப்பவர்கள், காந்தியின் உருவத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஆனால் அசலில் உள்ளது போல போலியில் உருவம் தெளிவாக இருக்காது.

2. அனைத்து ருபாய் நோட்டுகளிலும் `வாட்டர் மார்க்’ இருக்கும். இவை காந்த மையால் ஏற்படுத்தப்படுகின்றன. கள்ளநோட்டுகளில் அனேகமாக இவை இருக்காது.

3. அசல் ருபாய்நோட்டை புறஊதாக் கதிர்களில் காட்டினால் அது ஜொலிக்கும். கள்ளநோட்டு அப்படி ஜொலிக்காது.

இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, கள்ளநோட்டை கண்டுபிடிக்கும் வகையில் தனது செல்போனை மாற்றியமைத்துள்ளார் நேகா.

“நான் செல்போனில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் அதன் வழக்கமான செயல்பாட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒரே விஷயம், செல்போனில் காமிரா வசதி இருக்க வேண்டும்” என்று கூறும் நேகா, மேற்கொண்டு தொழில்ட்ப விவரங்களைத் தெரிவிக்க மறுக்கிறார்.

ஒரு தனியார் மின்சாதன நிறுவனம் சமீபத்தில் நாடளவில் நடத்திய `புதுமையான கண்டுபிடிப்பு சவால்’ போட்டியில் தனது கண்டுபிடிப்புக்கு ஒரு லட்ச பாய் பரிசு பெற்றிருக்கிறார் நேகா. இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 150 பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தொழில்ட்பத்தை ஏதாவது செல்போன் நிறுவனம் ஏற்கும் என்று நம்புகிறார் நேகா.

எல்லா பொருள்களுக்கும் ஏற்ற `சிலிகான்’ பசை


நாம் பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறோம். அவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்டிக், கண்ணாடி, அலுமினியமாகும். இவற்றில் ஓட்டை, விரிசல் விழுந்தால் அவற்றை உபயோகப் படுத்த முடியாத நிலைக்கு போய்விடுகிறது.

உதாரணமாக படத்தில் காட்டியதுபோல ஒரு கத்தரிக்கோலின் கைப்பிடி உடைந்துபோனால், அதை உபயோகிக்க முடியாது. தண்ணீர் பிடிக்கும் பாத்திரத்தின் அடிப்புறத்தில் விரிசல் விழுந்தால் அதை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. எனவே அவற்றை வேறு எதற்காவது பயன்படுத்துகிறோம். இல்லாவிட்டால் பழைய பொருட்கள் கடையில் போட்டுவிடுகிறோம்.

ஒருசிலவற்றின் விரிசல்களை பசையால் ஒட்டிப் பயன்படுத்துவதும் உண்டு. ஆனால் அந்தப் பசை எல்லாப் பொருட்களுக்கும் ஒத்துவராது. மேற்கண்டபடி கத்தரிக்கோலின் கைப்பிடி உடைந்துவிட்டால் `டேப்’ சுற்றி உபயோகித்தால் அதில் இருக்கும் பசை எவ்வளவு நாள் காற்றால் பாதிக்கப்படாமல் இருக்கிறதோ அதுவரை பயன்படுத்தலாம். அதன்பிறகு மீண்டும் கஷ்டம்தான்.

இதுபோன்ற சமயங்களில் பயன்படுத்துவதற்காக எல்லா பொருட்களுக்கும் ஏற்ற சுகுரு என்ற `சிலிகான் பசை’ தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை பிளாஸ்டிக், கண்ணாடி, இரும்பு, அலுமினியம் மற்றும் உலோகம், மரக்கட்டை என பல்வேறு தன்மை கொண்ட பொருட்களிலும் பயன்படுத்த முடியும். 24 மணி நேரத்துக்குள்ளாக இந்தப் பசை கெட்டிப்பட்டு பொருட்களின் பாகத்தோடு சிக்கென்று சேர்ந்துவிடுகிறது. இதனால் தொடர்ந்து பயன்படுத்த முடிகிறது.

பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்த விரும்பும் சிக்கனமான இல்லத்தரசிகளுக்கு இந்தப் பசை கைகொடுக்கும்.

வண்ணங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை…


வண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது. உணவுக்கு எவ்வாறு உப்பு அவசியமோ, அதுபோல வாழ்க்கைக்கு வண்ணங்கள் அவசியம். வண்ணங்கள் நமக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தைம் தருகின்றன. அதனால் அனைவரும் வண்ணங்களை விரும்புகின்றனர்.

ஆடை மட்டுமின்றி உணவு, செல்போன்கள், காலணிகள், பைகள், கண்ணாடிகள், தலைமுடி என எல்லாவற்றிலும் வித்தியாசமான வண்ணங்களை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் இன்றைய இளையதலைமுறையினர். கருப்பு-வெள்ளையில் பாரப்பதற்கு போரடித்த புத்தகங்கள் கூட இன்றைக்கு பலவிதமான வண்ணங்களில் வெளிவந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

வண்ணங்களைச் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களை பொறுத்து நம்முடைய மனநிலை அமைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, நீங்கள் அடர்த்தியான வண்ணங்களில் உடை அணியும்போது, சந்தோஷமாக உணர்வீர்கள்; ஒருவிதமான தன்னம்பிக்கை தானாகவே உங்கள் உள்ளத்தில் உருவாகி விடும். அதேநேரம் அடர்த்தி குறைந்த வண்ணங்களால் ஆன உடைகளை நீங்கள் அணியும்போது சோம்பல் உணர்வு தோன்றும்.

இந்தியர்களை பொறுத்த வரையில், அவர்களின் மேனி நிறங்களை வைத்து நன்றாக வகைபடுத்தலாம்.

வெள்ளை- இவர்களுக்கு அடர்த்தியான வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும். சிவப்பு, கடல் ஊதா, கறுப்பு போன்ற வண்ணங்கள் ஏற்றவை.

மாநிறம்- மெஜந்தா, ஆரஞ்சு போன்ற நடுத்தரமான வண்ணங்கள் சிறந்தவை.

கறுப்பு- மெருன், மயில் ஊதா போன்ற வண்ணங்கள் நன்றாக இருக்கும்.

இதைத் தவிர்த்து கறுப்பு-வெள்ளை வண்ணங்கள் அனைவருக்கும் ஏற்றவை. தனக்கு பொருத்தமில்லாத வண்ணங்களின் மேல் ஆசை கொண்டவர்கள், அணிகலன்கள், பர்ஸ், கைபை, ஸ்டோல், செல்போன், கண்ணாடி, காலணி, கைக்குட்டை போன்றவற்றை தான் விரும்பிய வண்ணங்களில் வாங்கி பயன்படுத்தி மகிழ்கிறார்கள்.

மெஜந்தா, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்றவற்றைக் கதகதபான வண்ணங்களாகக் குறிப்பிடுகின்றனர். இந்த வண்ணங்களால் ஆன உடைகளை அணியும்போது வெப்பநிலை சமச்சீராக வைக்கப்பட்டு உடல் கதகதப்பாக இருக்கும்.வெளிர் நீலம், பச்சை, பர்பிள் போன்றவற்றை குளிரான வண்ணங்கள் எனலாம். இந்த வண்ணங்களால் ஆன உடைகளை அணியும்போது மனம் ஒருவிதமான அமைதி நிலையில் காணப்படுகிறது.

அடர்த்தியான வண்ணங்களை மாலை மற்றும் இரவு நேரங்களில் அணிந்து கொள்ளலாம். அப்போதுதான் அவை உயர்ந்த சிறப்பான தோற்றத்தைத் தரும். அதேபோல் அடர்த்தி குறைந்த வண்ணங்களை பகல் நேரங்களில் அணிய வேண்டும். அப்போதுதான் சூரிய வெளிச்சத்திலிருந்து பாதுகாத்து, குளிர்ச்சியாக இருபது போல் உணர வைக்கும்.

அனைத்து வண்ணங்களுடனும் பொருந்திபோகும் தன்மை வெள்ளைக்கு உண்டு. அதுபோல எல்லா விதமான ஆடைகளையும் வெள்ளை வண்ணத்தில் அணியலாம். பொதுவாக வெள்ளை வண்ண உடைகளை அணிந்தாலே ஒரு உயர்ந்த தோற்றத்தைக் கொடுக்கும். அதனால்தான் மிகபெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட எந்த நேரமும் வெள்ளை உடைகளிலேயே காட்சி தருகிறார்கள்.

அலைபாயாமல் மனதை அடக்கி ஒருநிலைபடுத்தும் தன்மை கொண்டதால்தான், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைவரும் வெள்ளை வண்ண உடைகளையே அணிகின்றனர். இது விரைவிலேயே அழுக்கானாலும், பலர் இந்த வண்ணத்தை விரும்பி அணிகின்றனர்.

அணிந்து கொள்பவருக்கு சிறப்பான ஸ்டைலைத் தருவதில் கறுப்பு வண்ணத்துக்கு பெரும்பங்குஉண்டு. பெரும்பாலும் பார்ட்டிகளுக்கு கறுப்பு வண்ண உடைகள் ஏற்றவை. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் பார்ட்டி, விழாக்கள், திருமணம் ஆகிய எல்லாவற்றிலும் கறுப்பு வண்ண உடைகள் முதலிடம் பிடிக்கின்றன. இந்தியாவில் சோக வண்ணமாக இதைக் கருதுவதால் பெரும்பாலும் சுப நிகழ்ச்சிகளுக்கு கறுப்பு வண்ண உடைகளை அணிவதில்லை.

சிவப்பை `பேஷன் கலர்’ என்று குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான பேஷன் டிசைனர்கள் சிவப்பு வண்ணத்தை பயன்படுத்துகின்றனர். காதலர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணங்களுள் சிவப்பு முதலிடம் பெறுகிறது. பெண்களுக்கு மிகவும் பிடித்தது பிங்க். இந்த வண்ண உடைகளை அணிம்போது மென்மை, ரொமான்ஸ் போன்ற உணர்வுகள் தோன்றுகின்றன. தற்போது ஆண்களும் விரும்பும் வண்ணமாக இது உள்ளது. கடல், வானம் என ஊதா வண்ணம் எல்லா இடங்களிலும் விரவிக் கிடக்கிறது. இந்தியில் இதை `நிலா’ என்று அழைக்கிறார்கள்.

பரந்துபட்ட இயற்கையில் பச்சை வணமே பெரும்பங்கு வகிக்கிறது. அடர்த்தியானது, அடர்த்தி குறைந்தது என இரண்டு வகைகள் உண்டு. இன்டீரியரை இந்த வண்ணத்தில் அலங்கரித்தால் நன்றாக இருக்கும். அடர்த்தியாகக் காணப்படும் மஞ்சள் வண்ணம் பார்வையை கூசச் செய்யும். பிரவுன் `பூமியின் வண்ணம்’ எனப்படுகிறது. பெரும்பாலும் ஆண்களே இந்த வண்ணத்தை விரும்பி அணிகின்றனர்.

கறுப்பு, க்ரே, வெள்ளை, கடல் முலம் போன்ற வண்ணங்கள் ஆண்களுக்கு மிகவும் பிடித்தவை. வெள்ளை சட்டைக்கு அடர்த்தியான வண்ணங்களாலான கோட் பொருத்தமாக இருக்கும். அடர்த்தியான வண்ணங்கள் அமைந்த சட்டைக்கு பிளாக் கோட் நன்றாக இருக்கும்.

அலுவலகம் செல்லும்போது வெள்ளை, ஊதா போன்ற வண்ணங்களால் ஆன உடைகளே சிறந்தது. அடர்த்தியான வண்ணங்கள் மனதை திசைதிருப்பி விடும். எனவே, அடர்த்தி குறைந்த வண்ணங்களை பயன்படுத்த வேண்டும். அடர்த்தியான வண்ணங்களை விரும்புபவர்கள் குடை, கைக்குட்டை போன்றவற்றை அடர்த்தியான வண்ணங்களில் வாங்கி பயன்படுத்தலாம்.

சிவப்பு, வயலட், பிங்க், நீலம் என அடர்த்தியான வண்ணங்களையே குழந்தைகள் விரும்புகின்றனர். அவர்களின் அறைச்சுவர்களை பல்வேறு வண்ணங்களால் அலங்கரிக்கலாம். இதனால் வண்ணங்களை பற்றிய புரிதல் அவர்களுக்கு ஏற்படும். விலங்குகளின் படங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை விதவிதமான வண்ணங்களில் எழுதி வைக்கும்போது, குழந்தைகள் வண்ணங்களால் ஈர்க்கபட்டு அவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.

வெள்ளை, கறுப்பு, சிவப்பு, கடல் ஊதா, பிங்க், சில்வர், காப்பர் போன்ற வண்ணங்கள் வசந்த காலத்திற்கு ஏற்றவை. ரோஸ் பிங்க், கடல் ஊதா, ரோஸ் பிரவுன், வெளிர் ஊதா போன்றவை கோடை காலத்திற்கு உகந்ததாக இருக்கும். கறுப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்களை இந்தக் காலத்தில் பயன்படுத்தக் கூடாது. ஆரஞ்சு, கோல்டு, பிரவுன் போன்ற வண்ணங்கள் இலையுதிர் காலத்திற்குச் சிறந்தவை. ஊதா வண்ணத்தை இந்தக் காலத்தில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கோல்டன் மஞ்சள், கோல்டன் பிரவுன், வெளிர் ஆரஞ்சு போன்றவை குளிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். அடர்த்தியான வண்ணங்களை இந்தக் காலத்தில் பயன்படுத்தக் கூடாது.

பான், குட்கா விபரீதம் உஷார்!

* அடிக்கடி எச்சில் துப்புபவரா?
* பான், குட்கா விபரீதம் உஷார்
* “சே, காலைல ஒரு பாக்கெட் வாங்கிப் போடலே, நாக்கு நம…நமக் குதுப்பா; ஒரு வாய் போட்டுட்டேன்னு வச்சிக் கோ, உடம்பெல்லாம் ஜிவ் வுன்னு இருக்குது; வேலையும் செய்ய முடியுது…!’
* “இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட் வாங்கி, அப்பப்ப ஒரு சிட்டிகை போட் டுப்பேன்; மூளைக்கு நல்ல சுறுசுறுப்பா இருக்குப்பா…!’
* “பத்து வருஷமா போட்டுண்டு வர் றேன்; எனக்கு ஒண்ணும் இதுவரைக்கும் வரலே; சும்மா ஏதாவது டாக்டருங்க சொல்லிண்டு இருப்பாங்க…!’
இப்படி படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இப்போது தூங்கி எழுந்ததில் இருந்து புத்துணர்ச்சி கிடைக்க பான், குட்கா சமாச்சாரங்களை வாயில் அடக்கிக்கொண்டு, நாகரிகத்தை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, பொது இடங்களில், வீட்டில் ஆங்காங்கு சொத்…சொத் என்று எச்சில் துப்புவதும், சிவப்பு சாயங்களை வாய் ஒழுக துடைத்துக் கொள்வதும் வாடிக்கையாகி விட்டதைப் பார்த்திருப்பீர்கள். சிகரெட் பிடித்தால் மட்டும் தான் புற்றுநோய் வரும் என்று எண்ண வேண்டாம்; சிகரெட் அல்லாத புகையிலை வஸ்துக் களை வாயில் போட்டு மென்றாலும், அடக்கிக் கொண்டாலும் கூட, வாய் புற்றுநோய் வரும்.
டீன் போய் இப்போது சிறுசுகளுக்கும்
பத்தாண்டுக்கு முன் வரை, ஐம்பது வயதை தாண்டியவர் களுக்குத் தான் புற்றுநோய் ஆபத்து இருந்தது. ஆனால், சில ஆண்டாக, முப்பது வயதில் இருந்தே புற்றுநோய் அபாயம் பரவியது. கடந்த நான்காண்டில், நிலைமை என்ன தெரியுமா? 15 வயதில் இருந்து முப்பது வயதுள்ளவர்களுக்கு இந்த பகீர் நோய் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் எடுத்த சர்வேயில் இன்னும் புதிய விபரீதம் தெரியவந்துள்ளது. அது தான், 14 முதல் 30 வரை உள்ள வயதுடையவர்களுக்கும் வாய்ப்புற்றுநோய் பரவி வருகிறது என்பது தான் அந்தத் தகவல். இப்போதும், பெற்றோர்கள் விழித்துக்கொள்ளவில்லை எனில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம், இப்படிப்பட்ட நோய்களால் பீடிக்கப்படும் கொடூரம் இன்னும் அதிகமாகும் என்பது நிபுணர்கள் எச்சரிக்கை.
பரவி வரும் பான் கலாசாரம்
பான், குட்கா போடும் கலாசாரம் ஏதோ பேஷன் போல பரவி, இப்போது, பள்ளிச் செல் லும் மாணவர்கள், கூலிவேலை செய்யும் தொழிலாளர்கள், கணக்கு முதல் கம்ப்யூட்டர் வரை பணியில் இருக்கும் இளைஞர்கள், வேலையில்லாதவர்கள் என்று பல தரப்பினரையும் தொற்றிவிட்டது.
காலையில் வீட்டை விட்டு கிளம்பியதும், வாயில் பான், குட்கா அடக்கிக் கொண்டு தான் நகருவது என்ற பழக்கம், பலரிடம் வெறியாகிவிட்டது. “இது கெட்டது தான்’ என்று தெரிந்தும், இதைச் சிலர் தொடர்கின்றனர்.
சில மாதங்களுக்குப் பின், சாப்பாடு இல்லாவிட்டாலும், இந்த பாக்கெட் இருந்தால் போதும், என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இளைஞர்களிடம் மிக வேகமாக பரவி வரும் கேடுகெட்ட கலாசாரம் இது. தனி மனிதனை அழிப்பது மட்டுமல்ல, சமுதாயத்தை சீரழிக்கும் சுகாதார அரக்கன் இது.
சொத்… சொத்… எங்கும்
இப்படி பான் சுவைப்பவர்களை பார்த்திருக்கறீர்களா? எப்போது பார்த்தாலும், வாயில் நீர் சுரந்த வண்ணம் இருப்பர். அதனால், அவர்கள் எச்சிலை துப்பியபடியே இருப்பர். எச்சிலை, எக்காரணம் கொண்டும் அவர்களால் விழுங்க முடியாது. பொது இடங்களில் இப்படிப்பட்டவர்களை கவனித்திருந் தால் நீங்களே, எவ்வளவு கேவலம் என்று உணர்வீர்கள். ஐந்து நிமிடத்தில், நூறு தடவையாவது எச்சிலை துப்பியிருப் பர். பஸ் நிறுத்தங்களில், கடையோரங்களில் , தியேட்டர் களில்,கோவில் அருகே இந்த எச்சில், சிவப்பு சாயங்களைக் காணலாம்.
சுவை தெரியாமல் போகும்
இப்படி குட்கா, பான் போடுவது, ஆரம்பத்தில் வேண்டுமானால் விறுவிறுப்பாக இருக்கும்; ஆனால், வாயில் பாதிப்பு ஆரம்பித்தால் தான், அதன் விபரீதம் புரியும்.
* ஆரம்பத்தில் வாய் நமநமக் கும்; அடுத்து, வாயில் சுவர்ப் பகுதிகளில் மரத்துப்போன நிலை ஏற்படும்.
* குட்கா தவிர, எந்த உணவுகளின் டேஸ்ட்களும் தெரியாமல் போய் விடும். இதை உணரும் போது தான், சிலருக்கு பயம் ஏற்படும்.
* பற்களில் பாதிப்பு வரும்; அதுவே, வயிற்றுக்கோளாறு வரை பரவும். வாய் நாற்றம் எடுக்கும்; நாக் கும் நிறம் மாறும்.
*இதன் உச்சகட்டம் தான் வாய்ப்புற்றுநோய்; இது வந்துவிட்டால் பெரும் பாதிப்பை சந்தித்தாக வேண்டும்.
நீங்கள், பான் பராக், குட்கா போட்டு வருபவரா? உங்கள் ஆரோக்கியம் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் குடும்பத்துக்கும் மிக நல்லதாக இருக்கும். செய்வீர்களா?

வெள்ளாட்டுப் பால்

வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு மண்டலம் வரை அருந்தி வந்தால் ஈளை நோய் என்கின்ற மேல் மூச்சு வாங்கச் செய்கின்ற நோயைக் குணப்படுத்தும் காரணம் என்னவெனில், வெள்ளாடு பச்சிலை போன்றவற்றை மேய்ந்து வருவதனால், அந்தப் பொருள்களின் சத்து பாலில் கலக்கிறது. அதனால் அந்தப் பாலை அருந்துபவர்கள் குணம் அடைகிறார்கள்.