Daily Archives: ஜனவரி 12th, 2010

`கீரை ஜோசியம்’!

கிளி ஜோசியம்… எலி ஜோசியம் என்று பலவகை ஜோசியங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நம்மவர்களையே மிஞ்சும் வகையில் லண்டன் பெண்மணி ஒருவர் `கீரை ஜோசியம்’ கூறுகிறார். அவர் கீரைக் கட்டை மேலே வீசியெறிகிறார். அது கீழே தரையில் வந்து விழும் விதத்தை வைத்து ஜோசியம் கூறுகிறார். அப்போது சம்பந்தபட்டவர்கள் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை இவர் கூறுகிறார். கடந்த ஆண்டு பிரபல `பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் இருந்து யார் யார் வெளியேற்றபடுவார்கள் என்று கூறினார். இந்த 2010-ல், இங்கிலாந்து அரச குடும்பத்தில் ஒரு நிச்சயதார்த்தம் நடக்கும் என்பவர், அக்குடும்பத்தில் முக்கியமான ஒருவர் இறப்பார் அல்லது தீவிரமாக உடல் நலம் பாதிக்கபடுவார் என்றும் `குண்டு’ போடுகிறார்.

இந்தியாவில் இணையதளத்தில் செக்ஸ் படங்களுக்கு தடை

புதுடில்லி : வெளிநாடுகளில் பாலியல் சம்பந்தமான படங்கள், விஷயங்களைத் தேடித் தரும் இணையதளங்களின் தேடல் இயந்திரங்கள் (சர்ச் இன்ஜின்), இந்தியாவில் மட்டும் அதுபோன்ற காட்சிகளைத் தருவதில்லை. மாறாக அவ்வாறு தேடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கின்றன.

தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம் – 2000ல் சில திருத்தங்கள் சமீபத்தில் செய்யப்பட்டன. அதன்படி, செக்ஸ் தொடர்பான காட்சிகள், விஷயங்கள், இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.இச்சட்டம், 150 ஆண்டுகள் பழமையான இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 292வது பிரிவை அடிப்படையாகக் கொண்டது. அப்பிரிவில் ஆபாசம் அல்லது காமத்தைத் தூண்டும் விஷயம் என்பதற்கு விளக்கமாக, “பார்ப்பவர்கள் அல்லது படிப்பவர்கள் அல்லது கேட்பவர்களின் மனதில் காமத்தைத் தூண்டிவிட்டு ஒழுக்கத்தைச் சிதைக்கும் விஷயம்’ என்று கூறப்பட்டுள்ளது. பல மத சம்பிரதாயங்கள் கோலேச்சிவரும் இந்தியாவில்தான் பிற நாடுகளை விட பாலியல் விஷயங்கள், இணையத்தில் தேடப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புதிய சட்டத் திருத்தம், இணையதளங்களில் சில மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. இணையதளத்தில் பிரபல தேடல் இயந்திரங்களான யாஹூ, பிளிக்கர் போட்டோ போன்றவற்றில் பாலியல் தொடர்பான ஆபாசமான காட்சிகள், செய்திகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கொரியாவிலும் இந்தக் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட்டின் “பிங்’ தேடல் இயந்திரமும் பாலியல் விஷயங்களைத் தருவதில்லை. சமீபத்தில் ஆந்திர கவர்னர் என்.டி.திவாரியின் மீதான பாலியல் புகார், ஒரு குடும்பப் பெண் தன் அந்தரங்கங்களை எல்லாரும் பார்க்கும்படியாக இணையதளத்தில் வெளியிட்டது, பின் மத்திய அரசு அதைத் தடை செய்தது போன்றவை, பாலியல் தொடர்பான விஷயங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்துவிட்டன என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்தும் கருவி


யானை அடிப்படையில் சாதுவான உயிரினம். ஆனால் உருவதில் பெரியது. பார்க்கப் பரவச முட்டும் யானைகள், சில நேரங்களில் நெஞ்சுக்குள் திகிலூட்டிவிடும்.

கோவில் திருவிழாக்கள், சர்க்கஸ் கூடாரம் ஆகிய இடங்களில் யானைகள் மக்களோடு நெருக்கமாகிவிடுகின்றன. வீதிவலமாக அழைத்து வருவதும் உண்டு.

இப்படி வரும் யானைகள், திடீரென்று மதம் பிடித்து திமிறி ஓடுவது அனைவருக்கும் அச்சம் தரும். அப்போது அதன் அருகில் யாரும் செல்ல முடியாது. இதேபோல் யானை வெறிபிடித்து தாக்கியதில் பலர் இறந்துள்ளனர். இதில் யானைப் பாகர்களும் அடக்கம்.

யானைகளுக்கு இப்படி வெறிபிடிப்பதை தடுக்க புதிதாக ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை மும்பையைச் சேர்ந்த என்ஜினீயர்கள் உருவாக்கி உள்ளனர். `வயலன்ட் எலிபன்ட் கண்ட்ரோல் கியர்’ எனப்படும் இந்தக் கருவியை யானையின் பின்னங்காலில் மாட்டிவிடலாம். அதன்பிறகு ரிமோட் முலம் இயக்கலாம்.

இந்தக் கருவியை பொருத்தி இருக்கும்போது யானைக்கு மதம்பிடித்தால் ரிமோட் முலம் யானையை கட்டுப்படுத்தலாம். அந்தக் கருவியானது யானையின் நரம்பு மண்டல செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி மயக்க நிலைக்கு கொண்டு செல்லும். இதனால் உடனடியாக யானையின் வெறி கட்டுப்படுத்தப்படும். உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் தவிர்க்கப்படும். இதன்விலை 30 ஆயிரம் ருபாய் ஆகும்.

ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?


நமக்கு முன்னேற்றம் தேவை. அதற்கு ஒவ்வொரு நாளையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இருக்கும் நேரத்தை வீணாய் கழித்துவிட்டு `நேரம் போதவில்லை’ என்றும், `நான் நினைத்தது நடக்கவில்லை’ என்றும் சாக்குப்போக்கு சொல்லித் திரிந்தால் முன்னேற்றம் முடங்கித்தான் கிடக்கும்.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு முக்கியமானது, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி நாம் பார்க்கலாம்.

நேரத்தை சரியாக பயன்படுத்துவதில் முதல் மந்திரமே திட்டமிட்டு செயல்படுவதுதான். இதில் திட்டமிடுவது வேறு, செயல்படுவது வேறு. எல்லோரும் திட்டமிடுகிறார்கள், செயல்படுகிறார்கள். ஆனால் திட்டமிட்டபடி செயல்படுவது கஷ்டம்.

இதைத் தவிர்த்து முழுமையாக செயல்பட விரும்பினால் முதலில் நாம் ஒரு செயலை ஒரே முறையில் செய்து முடிக்கப் பழக வேண்டும். அப்படியானால்தான் அடுத்தடுத்த செயல்களை திட்டமிட்டபடி செய்ய முடியும்.

அடுத்ததாக எந்த ஒரு செயலையும் திட்டமிட்டபடி நூல்பிடித்தாற்போல செய்ய முடியாது. அதற்கு காரணம், நாம் மட்டும் இங்கு தனித்து இல்லை. சமுகமாக வாழ்கிறோம். நமக்காக, குடும்பத்துக்காக, ஊருக்காக என்று கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறோம். அதனால் மற்றவர்களின் தலையீடு நிச்சயம் இடையே வருகிறது.

உதாரணமாக நீங்கள் ஒரு பணியை செய்யும்போது, பெற்றோர் ஒரு வேலையை செய்யச் சொல்லலாம். அதை உங்கள் பணிக்கு முன்பாக முடிக்க வேண்டிய அவசரம் என்று வற்புறுத்தலாம். இதனால் உங்கள் திட்டப்படி ஒரு செயலை செய்ய முடியாமல் போகலாம்.

இதுபோன்ற இடையூறைத் தவிர்க்க உங்கள் திட்டத்தை இரண்டாக வகுக்க வேண்டும். ஒன்று உங்கள் பணி (திட்டம்) சார்ந்தது. மற்றொன்று சூழல் (குடும்பம், சமுகம், உறவு, ஓய்வு) சார்ந்ததாக பிரிக்க வேண்டும். இதில் இத்தனை மணி நேரம் பணிக்கு, இதில் இருந்து இத்தனை மணி நேரம் மற்றவற்றிற்கு என்று பிரித்தாலும் சிக்கலைச் சந்திப்போம்.

நமது இலக்கை அடைய இவ்வளவு பணியைச் செய்ய வேண்டும். அதற்கு இவ்வளவு காலம் ஆகும் என்று வகுக்க வேண்டும். அதன் இடையே சூழல்சார்ந்த நேர ஒதுக்கீடும் இடம் பெறவேண்டும். ஆனால் அன்றைய நாளின் பயன்பாட்டை கணக்கிடும்போது நாம் திட்டப்படி இலக்கிற்கான பணிகளை சரியாகச் செய்து முடித்திருக்கிறோமா என்பதைக் கவனிக்க வேண்டும்.

இப்படி செயல்படும்போது முடிக்காத பணிகளைக் கண்டு திகைக்கக் கூடாது. நாம் அந்தப் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் போனதற்கு என்ன காரணம்? அதில் நாம் எந்த வகையில் சம்பந்தப்பட்டு இருக்கிறோம் என்று அடையாளம் காணுங்கள். அடுத்த நாள் அதை தவிர்க்க முயலுங்கள்.

உங்களின் திட்டம் குறித்து அனுபவ ரீதியாக சிலரிடம் கலந்து ஆலோசிக்கலாம். அவர்களிடம் கிடைக்கும் சாதகமான, பயனுள்ள ஆலோசனைகளை திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு பணியை அந்த நேரத்தில் செய்து முடிக்காமல் விட்டுவிட்டால் பணிகள் தேக்கம் அடைகிறது. இது ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும். சோம்பலையும் வளர்க்கும். அது ஒரு குப்பைக்கூளம் போன்றது எனலாம். இந்தப் பணி அசுத்தம் மற்ற பணிகளையும் பாதிக்கும். அதனால்தான் ஒரே முறையிலும், தேக்கமில்லாமலும் செய்ய முடித்தாலே வெற்றியை நெருங்கிவிடலாம் என வலியுறுத்தப்படுகிறது.

அதேபோல் இலக்கிற்கு இடைப்பட்ட காலத்தில் சந்தோஷம் தரும் செய்திகள், துக்கம் தருபவை, கொண்டாட்டம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. சந்தோஷம் வந்தால் நான் எதிர்பார்த்ததுதான் என நினையுங்கள். துக்கம் வந்தாலும் எதிர்பாராத இந்த இழப்பை சரி செய்வேன், அதற்காக உழைப்பேன் என்று எண்ணுங்கள்.

இறுதியாக நாம் உணர வேண்டியது வெற்றியாளர் களின் நேரம் தவறாமையைத்தான். ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்புலமாக `நேரம் தவறாமை’ இருக்கும். இதைப் பின்பற்றுவது ஆரோக்கியமான வளர்ச்சியைத் தரும். நன்மதிப்பையும் பெற்றுத்தரும். இது ஒரு டானிக் மாதிரி நம்மை ஊக்குவிக்கும்.

அதை நாமும் கடைபிடிப்போம். கடைபிடித்தால் வெற்றி பெறுவோம்!

மிளகு

இதனைப் பெரும்பாலும் சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த மிளகை இடித்துத் துணியினால் சலித்து, நாள் தோறும் மூன்று சிட்டிகை வீதம், வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கும். வாரத்திற்கு ஒரு முறை மிளகுக் குழம்பு வைத்துச் சாப்பிட்டு வந்தால் கீல் வாயு நோய் குணமாகும்.

அத்திக்காய்

அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி, நன்றாக அலம்பி என்றால் சத்து போகின்ற வரை அலம்புவது அல்ல, ஒரே தடவை அலம்பி, துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும். இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது கஷ்டமான மலர்ச்சிக்கலைப் போக்குகிறது. பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் அயச் சத்து அதிகமாக இருக்கிறது.

டாப்10- டவுன்லோட் 2009

சென்ற ஆண்டில் இலவசமாகக் கிடைத்த, எளிய ஆனால் பயன் அதிகம் தந்த சில புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் இவை பற்றி அறியாதவர்கள், இவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
1.வி.எல்.சி (VLC): மீடியா பிளேயர்களுக்கான புரோகிராம். மீடியாவில் எந்த பார்மட்டில் ஒரு பைலைக் கொடுத்தாலும் அதனை இயக்கும். வீடியோ பைல்களை, ஐபாட் சாதனத்திற்கேற்ற வகையில் மாற்றித்தரும். சிடி, டிவிடிக்களைப் பிரித்து சிறிய பைல்களாக மாற்றித்தரும். கிடைக்கும் தளம் : http://www.videolan.org/vlc/

2. பாக்ஸ் இட் ரீடர் (FoxIt Reader): அடோப் ரீடர் தொகுப்பின் இடத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சிறிய பி.டி.எப். ரீடர் புரோகிராம். விண்டோஸ், விண்டோஸ் மொபைல், லினக்ஸ் மற்றும் பிற சிஸ்டங்களுக்கும் கிடைக்கிறது. கிடைக்கும் தளம்: http://www.foxitsoftware.com/pdf/reader/

3. பிட்ஜின் அண்ட் அடியம் (Pidgin and Adium): இந்த இரண்டும் இன்ஸ்டன்ட் மெசேஜ் கிளையண்ட் புரோகிராம்ஸ். பிட்ஜின் விண்டோஸ் சிஸ்டத்திலும், ஏடியம் மேக் சிஸ்டத்திலும் இயங்கும். சிறிய எளிதான புரோகிராம். கிடைக்கும் தளம்: http://adium.im

4. இர்பான் வியூ (IrfanView) : மிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும், எடிட் செய்வதற்கும் உரிய சிறிய புரோகிராம். இதில் அதிகமான எண்ணிக்கையில் கீ போர்ட் ஷார்ட் கட்களைப் பயன்படுத்தலாம். கிடைக்கும் தளம்: http://www.irfanview.com

5. பயர்பாக்ஸ்: சென்ற ஆண்டில் மிக அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் புரோகிராம். கிடைக்கும் தளம்: http://www.mozilla.com/enUS/firefox/personal.html

6. செவன் ஸிப் (7Zip): பைல்களைச் சுருக்க, விரிக்க உதவிடும் புரோகிராம். அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம். பல்வேறு ஸிப் பைல் பார்மட்களைக் கையாள்கிறது. கிடைக்கும் தளம்: http://www.7zip.org/

7. ஆப்பரா (Opera) : பலரால் அதிகம் கவனிக்கப்படாத, ஆனால் மிகச் சிறந்த பிரவுசர். கூடுதல் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையில் ஷார்ட் கட் கீகள் ஆகியவை கொண்ட எளிய சிறிய புரோகிராம். http://www.opera. com/browser/

8. ஸ்கைப் (Skype): இன்டர்நெட் வழி பேசி தொடர்பு கொள்வதனை மக்களிடையே பிரபலமாக்கிய புரோகிராம். இன்றும் வீடியோ கான்பரன்சிங் மற்றும் இருநபர் பேச்சு வழி தொடர்புக்கு சிறந்த புரோகிராமாகக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடு கடந்து வாழும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசிட, வெப்காம் வழி பார்த்துப் பேசிட இது சிறப்பாக உதவுகிறது. விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பல மொபைல் சிஸ்ஸங்களுக்கு எனத் தனித்தனி பதிப்புகள் கிடைக்கின்றன. கிடைக்கும் தளம்: http://www.skype. com/

9. க்யூட் பி.டி.எப். ரைட்டர் (CutePDF Writer): டாகுமென்ட்களை பி.டி.எப். பைலாக மாற்ற அதிகமான எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் புரோகிராம். கிடைக்கும் தளம்: http://www.cutepdf.com/

10. கீப் பாஸ் (KeePass): எத்தனை பாஸ்வேர்ட் களைத்தான் நினைவில் வைத்திருப்பது? கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி இது. அவர்களுக்காகவே இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் உதவுகிறது. இதற்கான மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். பிற பாஸ்வேர்ட்களை இந்த புரோகிராம் நினைவில் வைத்து உங்களுக்கு உதவும். கிடைக்கும் தளம்: http://keeppass.info/

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு…


இந்தியாவின் பாரம்பரிய உடைகளில் சேலை சிறப்பான இடத்தை பெறுகிறது. பழம்பெரும் இலக்கிய நுலான மகாபாரதத்தில், பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலியை கவுரவர்கள் துகிலுரியும்போது, கிருஷ்ணர் மிக நீளமான துணியைக் கொடுத்து காப்பாற்றியதாகக் குறிப்பிடபட்டுள்ளது. அதன் பின்னரே சேலை தோன்றியதாக சொல்லபடுகிறது. பாவாடை, பிளவுஸ் அல்லது ரவிக்கை அல்லது சோளி ஆகியவற்றுடன் சேர்த்தே புடவையை அணிய முடியும். பெண்களை அழகாக காட்டக்கூடிய உடைகளுள் முதலிடம் பிடிப்பதும் சேலைதான்.

இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் சேலையை பயன்படுத்தினாலும், தென்மாநிலங்களில் அதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. முதலில் வேட்டி மட்டுமே நெய்ய பட்டதாகவும், அதை பின்பற்றியே சேலை உருவாக்கபட்டதாகவும் கூறுவர். புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மாவின் பெரும்பாலான ஓவியங்களில் சேலைகள் இடம்பெற்றிருக்கும். கேரள பாரம்பரிய சேலைகளை அவர் ஓவியங்களில் பயன்படுத்திள்ளார்.

இன்னார்தான் சேலை அணிய வேண்டும் என்ற வரைமுறை ஏதும் கிடையாது. எந்த பெண் வேண்டுமானாலும் புடவை கட்டிக் கொள்ளலாம். அதேபோல் இந்தக் காலகட்டத்துக்கு அல்லது குறிபிட்ட சூழ்நிலைக்கு மட்டும்தான் சேலை ஒத்து வரும் என்ற விதிமுறையும் கிடையாது. எல்லாக் காலங்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் பொருந்தி வரக்கூடியது சேலைதான் என்பது தனிச்சிறப்பு.

பிளெய்ன், எம்ராய்டரி, பிரிடட் என பலவிதங்களில் டிசைன் செய்யபட்ட சேலைகள் கிடைக்கின்றன. அலங்காரக்கல், மணிகள், ஜமிக்கி, ஜர்தோசி என வேலைபாடுகள் நிறைந்த சேலைகளே தற்போது பெண்களால் அதிகம் விரும்பி வாங்கபடுகின்றன. சேலையின் டிசைனுக்கு பொருத்தமாக சோளி, ரவிக்கைகளும் டிசைன் செய்யபடுகின்றன.

பொதுவாக சேலை 51/2 மீட்டர் நீளமுடையதாக இருக்கும். சேலை கட்டும்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு இடுப்பில் வலதுபுறம் சொருகிக் கொள்வர். பின்னர் இடதுபுறத்திலிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு விரலையும் சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்லது 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகுவர். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்கபடும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்வர். இது `முந்தி’ அல்லது `முந்தானை’ என்று அழைக்கபடும். ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் முந்தானையை வலதுபுறம் அணியும் பழக்கம் உடையவர்கள்.

ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு வெவ்வேறான வடிவங்களில், டிசைன்களில் சேலைகள் கிடைக்கின்றன. கச்சார் நிவி என்று அழைக்கபடும் சேலை வகை வேட்டி போலவே ப்ளீச் செய்யபட்டிருக்கும். குஜராத்தைச் சேர்ந்தவர்கள் முந்தானை பின்பக்கத்தில் இருந்து முன்பக்கம் தொங்குமாறு சேலை அணிவர். அதேபோல் வலது தோளில் முந்தானை இருக்குமாறும் அணிவர். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களும் பின்பக்கத்தில் இருந்து முன்பக்கமாக சேலை அணிவர். வேட்டி கட்டுவது போன்ற ஸ்டைலில் இது அமைந்திருக்கும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சாதாரணமான ஸ்டைலிலேயே சேலை அணிவர். குடகு ஸ்டைல் என்பது பின்பக்கம் மடிப்பு வைத்து, அதாவது பின்கொசுவம் வைத்துக் கட்டுவது. கோன்ட் ஸ்டைல் மத்திய இந்தியாவில் உள்ள பெண்களால் பயன்படுத்தபடுகிறது. முதலில் தோளில் முந்தானையை அணிந்த பின்னர் மடிப்பு (கொசுவம்) வைத்துக் கட்டுவதே கோன்ட் ஸ்டைலாகும். `முண்டும் நேரியலும்’ என்ற சேலை வகை இரண்டு விதமான துணிகளைக் கொண்டு அணியபடும். இவை தவிர, சோளி, ரவிக்கை இல்லாமலும் சேலைகள் அணியப்படுகின்றன.

பிளவுஸ் என்று அழைக்கபடும் ரவிக்கைகளும் பலவிதமான டிசைன்களில் கிடைக்கின்றன. சேலை அணிம்போது மட்டுமின்றி சட்டை, டி-சர்ட் அணிம்போது ரவிக்கை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. சிவப்பு, மெருன், அடர் பர்பிள், வெள்ளை போன்ற வண்ணங்கள் பெரும்பாலானவர்களால் அதிகம் விரும்பி அணியப்படுகின்றன. அலங்காரக்கல், மணிகள், கோல்டு லேஸ், கண்ணாடி வைத்து தைக்கபடும் ரவிக்கைகளை அணியும்போது நன்கு எடுப்பாகத் தெரியும்.

சேலை அணிவதற்கு பாவாடை இன்றியமையாத ஒன்றாகும். எலாஸ்டிக் பாவாடையைத் தவிர்த்து, நாடா உள்ள பாவாடையை மட்டுமே அணிய வேண்டும். அதையும் இறுக்கமாகக் கட்டாமல் சற்றுத் தளர்வாக இருக்கும்படி கட்ட வேண்டும். காட்டன், சில்க், சாட்டின், பாலியஸ்டர் போன்ற துணிகளால் ஆன பாவாடைகள் பெரும்பாலானவர்களால் விரும்பி அணியப்படுகின்றன.

சேலையைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:

அணிபவர்களின் நிறத்திற்கும், உருவத்திற்கும் ஏற்ற சேலையாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் உயரத்துக்கு பொருத்தமான சேலையாகவும் இருக்க வேண்டும். அதிக உடல் எடையுள்ளவர்கள் மைசூர் சில்க், ஜார்ஜெட், ஷிபான் போன்ற சேலைகளை அணியலாம். உயரம் குறைவாக இருபவர்கள் பெரிய பார்டர் உள்ள சேலைகளை அணிந்தால் நன்றாக இருக்கும். மெல்லிய உடல்வாகு கொண்டவர்களுக்கு ஆர்கென்சா, காட்டன், டிஷ் சேலைகள் நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.

பார்ட்டி, விழாக்கள், திருமணம் இப்படி எங்கு உபயோகிப்பதற்காக சேலை வாங்குகிறீர்கள் என்பதையும் கவனித்து, அதற்கேற்றார்போல் தேர்ந்தெடுக்க வேண்டும். துணியும் தரமானதாக இருக்க வேண்டும். இளவயதினர்களுக்கு மெலிதாகவும், அடர்த்தியான வண்ணங்களும் உள்ள சேலைகள் நன்றாக இருக்கும். வயதானவர்களுக்கு க்ரே போன்ற வெளிர் வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும்.

அலுவலகம் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது முந்தானையை ரவிக்கையுடன் சேர்த்து பின் குத்திக் கொள்வது நல்லது. விழாக்களுக்குச் செல்லும்போது வலதுபுறம் உள்ள பார்டரை மட்டும் ரவிக்கையோடு சேர்த்து பின்குத்தி, மீதமுள்ளவற்றை லேசாக சரியவிட்டுச் சென்றால் அசத்தலாக இருக்கும்.

தற்போது சேலை கட்டத்தெரியாதவர்களுக்காக `ஆட்டோமெட்டிக்` சேலைகள் தயாரிக்கபட்டுள்ளன. கல்லூரி மாணவிகள், வெளிநாட்டினர் போன்ற சேலை கட்டத் தெரியாதவர்கள் இந்த ஆட்டோமெட்டிக் சேலையை எடுத்து அப்படியே அணிந்து கொள்ளலாம். மடிக்கவோ, சுற்றவோ தேவையில்லை. அணிவதற்கு ஒருசில நிமிடங்களே போதுமானது.

சேலை உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. ரிவர்சபில் சேலை, பாக்கெட் சேலை, வஸ்திரகலா பட்டு போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.

பயர்பாக்ஸில் சைபர் சர்ச்

கூகுள் சர்ச் இஞ்சின் தான் இன்று உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சினாக உள்ளது. இதனாலேயே கூகுள் தந்த குரோம் பிரவுசரிலும் அதன் சர்ச் பாரிலேயே கூகுள் தேடுதல் திறன் தரப்பட்டுள்ளது. இதனால் பலர் கூகுள் குரோம் பிரவுசருக்கு மாறினார்கள்.
இதனைத் தொடர்ந்து பயர்பாக்ஸ் பிரவுசருக்கும் ஒரு தேடுதல் ஆட் ஆன் தொகுப்பு இணையத்தில் வெளியானது. இது சைபர் சர்ச் (Cyber search) என அழைக்கப்படுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பு ஏறத்தாழ குரோம் பிரவுசரின் சர்ச் இஞ்சின் திறனுடன் இயங்குகிறது. இதனால் இணையத் தேடல் எளிதாகிறது.
இந்த ஆட் ஆன் தொகுப்பினை எப்படி டவுண்லோட் செய்து இயக்குவது எனப் பார்க்கலாம்.
1.உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே பயர்பாக்ஸ் பிரவுசர் இருந்தால் அதனை இயக்கிக் கொள்ளவும். இல்லாதவர்கள் http://www.mozilla.com/enUS/firefox/personal.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று பிரவுசருக்கான பைலை டவுண்லோட் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இயக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து சைபர் சர்ச் ஆட் ஆன் தொகுப்பை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதற்கு https://addons.mozilla.org/enUS/firefox /addon/7931 என்ற முகவரியில் உள்ள தளத்தை நாடவும். அங்கு “add to Firefox” என்று இருக்கும் பச்சை வண்ண பட்டனில் கிளிக் செய்திடவும். தானாக ஆட் ஆன் இணைக்கப்படும். இனி மீண்டும் பயர்பாக்ஸ் பிரவுசரை மூடி மீண்டும் திறக்கவும். இப்போது சைபர் சர்ச் இயக்கத்திற்குத் தயாராய் இருக்கும்.
3. இனி நீங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்திடும்போதே, தளங்கள் வேகமாகத் தேடித் தரப்படுவதனைக் காணலாம்.

சூரியத் திருவிழா!-பொங்கல் (ஆன்மிகம்)

கண்கண்ட தெய்வமான சூரியனுக்காக நடத்தும் விழா பொங்கல். சூரியனின் ஒளிக்கதிர்கள் இல்லாமல் உலகம் இல்லை. பயிர், பச்சைகள் விளைய அவனே காரணமாகிறான். அவனது வெம்மையால், பூலோகத்தில் இருக்கும் தண்ணீர் ஆவியாகி மீண்டும் மழையாகக் கொட்டுகிறது. அதனால் தான், தங்கு தடையின்றி விவசாயம் நடக்கிறது. நமது பசி தீர்க்கும் இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனே பொங்கல்.
சூரியபகவான், உணவளிக்கும் வள்ளல் மட்டுமல்ல, கடுமையான நோய்களை போக்கும் மருத்துவராகவும் திகழ்கிறார். யார் ஒருவர், தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்கிறாரோ, அவருக்கு நோய் என்பதே இல்லை. இதனால் தான் மகான்கள், “அதிகாலையில் சூரியனைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் வீணே…’ என்கின்றனர்.
அவர், கிருஷ்ண பகவானின் மகனான சாம்பனுக்கே நோய் தீர்த்தவர் என்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா?
கிருஷ்ணருக்கு பல தேவியர் இருந்தாலும் ருக்மணி, பாமா, சாம்பவதி ஆகியோரே முக்கிய தேவியர். இவர்களில் சாம்பவதிக்கு பிறந்த மகன் சாம்பன். ஒருமுறை, சூரியனின் மகிமையை உலகுக்கு அறிவிக்கும் வகையில், தன் குடும்பத்திலேயே ஒரு குழப்பத்தை உண்டாக்கினார் கிருஷ்ணன்.
தன் மனைவியருடன் அவர் நீராடிக்கொண்டிருந்த போது, அவர்கள் அறியாமல் சாம்பனும் நீராடினான். தங்கள் மகன் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்ற அக்கறையில், தாயார்கள் அவனையே கவனித்துக் கொண்டிருந்தனர்; கிருஷ்ணனை சரிவர கண்டுகொள்ளவில்லை.
பின்னர், கிருஷ்ணனுக்கு சாம்பன் வந்தது தெரிந்து விட்டது. அவன் மீது கோபப்படுவது போல் நடித்தார். “பெற்றோருக்கு தெரியாமல் எப்படி நீராட வரலாம்?’ எனக் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் வந்துவிட்டது. “எதிர்த்தா பேசுகிறாய்?’ என்ற கிருஷ்ணன், அவனுக்கு தோல்நோய் ஏற்படும்படி சபித்து விட்டார்.
இந்த நோய் நீங்குவதற்கு நாரதரிடம் ஆலோசனை கேட்டான் அவன். சூரிய பகவானின் தரிசனம் கிடைத்தால், நோய் குணமாகும் என அவர் சொல்லவே, காட்டிற்குச் சென்று சூரிய பகவானைக் குறித்து கடும் தவத்தில் ஆழ்ந்தான் சாம்பன். சூரியனும், அவனது தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார். ஆனந்தமும், பரவசமும் அடைந்த சாம்பனிடம், “என்ன வரம் வேண்டும், கேள்…’என்றார் சூரியன்.
“தங்களுடைய தரிசனம் கிடைத்த பிறகு வரம் எதற்கு?’ என்றான் சாம்பன். அவனது ஆசையில்லாத மனம் கண்ட சூரியன் மகிழ்ந்து, “கண்டிப்பாக வரம் தந்தே தீருவேன்…’ என்றார்.
“உங்களது தரிசனம் எனக்கு தினமும் கிடைக்க வேண்டும். என் தோல் நோய் நீங்க வேண்டும்…’ என வரம் கேட்டான்; சூரியனும் அவ்வாறே வரம் கொடுத்தார். இதையடுத்து, சூரியனுக்கு சில கோவில்களைக் கட்டினான் சாம்பன்.
சூரியனுக்கு நம் நாட்டில் பல கோவில்கள் இருந்தன. காஷ்மீரில் – மார்த்தாண்ட்; ராஜஸ்தானில் – சிரோஹ; மேற்கு வங்காளத்தில் ஆடியால் போன்ற இடங்களில் கோவில்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன; ஆனால், இப்போது ஒரிசாவிலுள்ள கொனார்க், தமிழகத்திலுள்ள சூரியனார் கோவில் ஆகியவை மட்டுமே உள்ளன.
இதில், சூரியனார்கோவிலில், தன் தேவியரான உஷா, பிரத்யுஷாவுடன் இருக்கிறார் சூரியன். இந்தக் கோவிலில் பிற கிரகங்கள் சூரியனைச் சுற்றி உள்ளன. இந்தியாவில், இத்தகைய அமைப்பில் வேறு எந்தக் கோவிலும் இல்லை. தமிழகத்தில், சூரியனுக்கு கோவில் இருப்பது நமக்கு பெருமை. சூரியத்திருநாளான பொங்கலன்று, இவரை வணங்குவோம்.