Daily Archives: ஜனவரி 13th, 2010

`சூயிங்கம் கொள்ளையர்கள்’!

கொள்ளையர்கள் `சூயிங்கம்’ கொள்ளை யடித்துச் சென்ற வினோத சம்பவம் ரஷியா வில் நடைபெற்றிருக்கிறது. தெற்கு ரஷியா வில் ஒரு `பார்க்கிங்’ பகுதியில் நிறுத்த பட்டிருந்த லாரியில் இருந்து 17 லட்சம் ` பபிள்’ ( . 26.68 லட்சம்) மதிப்புள்ள 250 பெட்டி சூயிங்கம்மை 3 திருடர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

“அடையாளம் தெரியாத முன்று பேர் பார்க்கிங் பகுதிக்குத் தடதடவென்று வந்திருக்கிறார்கள், அங்கிருந்த காவலாளியை மிரட்டிக் கட்டி போட்டிருக்கிறார்கள். பின்னர் அங்கே நின்றிருந்த மெர்சிடிஸ் லாரியிலிருந்து சூயிங்கம் பெட்டிகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்” என்கிறார் காவல் துறை அதிகாரி.

கொள்ளையர்கள் சூயிங்கம்மை மென்று துப்ப அள்ளிச் சென்றார்களா அல்லது விற்பதற்குக் கொண்டு சென்றார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். இந்த வழக்கு விசாரணை `ஜவ்வாக’ இழுத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை!

சிறிய கார்களின் விற்பனை அதிகரிக்கும்!


நாட்டில் சிறிய கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டியே இந்தியாவில் உள்ள பன்னாட்டுக் கார் நிறுவனங்கள் சிறிய கார்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளன.

உதாரணத்துக்கு உலகிலேயே பெரிய கார் நிறுவனமான ஜப்பானின் டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷனைக் கூறலாம். இந்நிறுவனம் 2015- 2016-ல் இந்தியாவில் தங்களின் கார் விற்பனை 8 மடங்கு அதிகரிக்கும் என்று நம்புகிறது. அந்த இலக்கை அடைய சிறியரக கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறது.

“2015- 2016-ல் இந்திய மோட்டார் வாகன சந்தையில் முக்கிய இடம் பிடிப்பதுதான் எங்களின் நோக்கம். நாங்கள் இந்தியாவுக்கு வந்த முதல் பத்து ஆண்டுகளுக்கும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் பெருத்த வித்தியாசம் இருக்கும். அதற்கான அடித்தளத்தைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு முதல் நாங்கள் விரிவாக்கப் பணிகளைத் தொடங்குவோம்” என்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன நிர்வாக இயக்குநர் ஹிரோஷி நககாவா கூறுகிறார்.

தற்போது ஆண்டுக்கு 18 லட்சம் கார்கள் விற்பனையாகும் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் 3.2 சதவீதப் பங்கையே கொண்டிருக்கிறது. 2010 மார்ச்சுடன் முடிவடையும் நிதியாண்டில் தங்கள் கார்களின் விற்பனை எண்ணிக்கை 54 ஆயிரத்து 500 ஆக இருக்கும் என்று டொயோட்டா கணக்குப் போடுகிறது.

தனது முதல் சிறிய காரை இந்த ஆண்டு அறிமுகம் செய்யவிருக்கிறது டொயோட்டா. அது, நடைபெறவிருக்கும தேசிய மோட்டார் வாகன கண்காட்சியில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

2015- 2016-ல் 4 லட்சம் கார்கள் அல்லது 10 சதவீத சந்தைப் பங்கு என்ற இலக்கை எட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகையிலான சிறிய கார்களை தமது நிறுவனம் அறிமுகம் செய்ய வேண்டும் என்கிறார் நககாவா.

“நாங்கள் மேலும் பல வகை கார்களை அறிமுகப்படுத்த வேண்டும், சர்வீஸ் மற்றும் விற்பனை நெட்வொர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பது வெளிப்படை. உலக சந்தையில் எங்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து தக்க வைக்க முயலுகிறோம். ஆனால் விரிவாக்க, வளர்ச்சிப் பணிகள் இந்தியாவிலும், சீனாவிலும்தான் நடக்கப் போகின்றன” என்று தமது நிறுவனத்தின் எண்ண ஓட்டத்தைக் காட்டுகிறார் நககாவா.

ஆயினும் இந்தியாவில் தற்போதைக்கு ஒரு `என்ஜின் தொழிற்சாலை’யை நிறுவும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்கிறார் இவர்.

“ஒரு `என்ஜின் அண்ட் டிரான்ஸ்மிசன்’ தொழிற்சாலையை நிறுவுவது எங்களின் திறனை அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால் தற்போதைய நிலையில் அந்த அளவு முதலீடு செய்ய முடியாது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 2 லட்சம் வாகனங்கள் விற்றால்தான் அந்த அளவிலான முதலீடு சரியாக இருக்கும்” என்று விளக்கம் கொடுக்கிறார் நககாவா.

பெங்களூக்கு அருகே அமையும் தனது இரண்டாவது தொழிற்சாலையில் டொயோட்டா 3 ஆயிரத்து 200 கோடி பாய் முதலீடு செய்யப் போகிறது. அங்கு சிறிய ரக கார் உற்பத்தியாகும். இந்த ஆண்டு மத்தியில் தயாராகும் அந்தத் தொழிற்சாலை, ஆண்டின் இறுதியில் சிறிய ரக காரை டொயோட்டா உற்பத்தி செய்ய உதவும் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக 4 பூமிகள்!


நாம் வசிக்கும் பூமி சூரிய குடும்பத்தில் இருக்கிறது. பூமியில் மட்டுமே உயிரினங்கள் வசிக்கின்றன.

மற்ற கோள்களில் உயிர்கள் வசிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளன. இருப்பினும் துணைக்கோளான சந்திரன், செவ்வாய் ஆகியவற்றில் தண்ணீர் இருப்பது அறியப்பட்டு உள்ளதால் அங்கும் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்பு உண்டு என்கிறது விஞ்ஞானம். இந்த சந்தேகத்துக்கு இன்னும் சில ஆண்டுகளில் விடை கிடைக்கலாம்.

அதேபோல விண்வெளி ஆராய்ச்சியில் பூமி போன்ற தன்மை கொண்ட கோள்கள் எதுவும் இருக்கிறதா? என்றும் தீவிரமாகத் தேடப்படுகிறது. இந்த தேடல் முயற்சியால் கடந்த ஆண்டில் பாறைகளால் ஆன கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு பாதி அளவு தண்ணீர் நிறைந்த கோள் ஒன்றும் அறியப்பட்டது. இவற்றிலும் உயிர்கள் வசிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக் கின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது பூமி போன்ற தன்மை உடைய மேலும் 4 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவையும் சூரிய குடும்பத்திற்கு அருகிலேயே சுற்றுகின்றன.

இவற்றில் 3 கோள்கள் 61 விர்ஜினிஸ் எனப்படும் விருச்சிக ராசி நட்சத்திரக் கூட்டத்தின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இந்த முன்றும் சூரியனின் இரட்டைப்பிறவி போன்ற தோற்றம் உடையவை. இதன் எடை பூமியைப்போல் 5 முதல் 24 மடங்குவரை அதிகமாகும். 4-வது கோள் 23 லிப்ரா எனப்படும் துலாம் ராசி நட்சத்திரக் கூட்டத்தைச் சேர்ந்தது.

இந்த 4 கோள்களுமே வாழ்வதற்கு ஏற்ற தன்மை கொண்ட பாறைகளால் ஆனது. இவை பூமியில் இருந்து சில ஒளியாண்டு தூரத்தில்தான் அமைந்துள்ளன.

இந்த புதிய கோள்களை அமெரிக்காவின் நி சவுத்வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

சீரகம்

இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்; நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வல நீங்கும். அபரிமிதமான பித்தத்தைத் தணிக்கும். மயக்கத்தைப் போக்கி விடும். பித்த நீர் வாயில் ஊறுவதை நிறுத்தும். சீரகத்தில் பொன் சத்து இருப்பதாகச் சித்தர்கள் கூறியுள்ளார்கள். “நீ இதனையுண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாயாக” என்று அவர்கள் கூறியுள்ளதை நினைவுபடுத்துகிறேன். அதனால் தான், சீரகத்தைத் தூள் செய்து சீரணி இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.

கம்ப்யூட்டர் பாதுகாப்பு

கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து புழக்கத்தில் இருக்கும்  சொற்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கீழே தந்துள்ளோம்.

1. ஆண்ட்டி வைரஸ் (Anti Virus): அப்ளிகேஷன் சாப்ட்வேர். இன்றைய அளவில் கிடைத்துள்ள வைரஸ் புரோகிராம்களில் காணப்படும் சிக்னேச்சர் என்னும் கோடிங் முறையின் அடிப்படையில், ஹார்ட் டிஸ்க்கினை ஸ்கேன் செய்து, அதில் ஏதேனும் வைரஸ், ட்ரோஜன், வோர்ம் ஆகியன இருந்தால், அந்த புரோகிராம்களைக் கண்டறிந்து அழிக்கும். அல்லது குவாரண்டைன் என்னும் தனி இடத்திற்கு அனுப்பும். நமக்கும் எச்சரிக்கை கொடுக்கும். நீக்க முடியவில்லை என்றால், ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் இடத்தைக் காட்டி எச்சரிக்கை செய்திடும்.

2. அட்டாக் (Attack): நம் அனுமதி பெறாத ஒரு நபர் அல்லது ஒரு புரோகிராம், நம் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டில், பல்வேறு காரண காரியங்களுக்காகக் கொண்டு வரும் செயல்பாடு.

3.பேக் டோர் (Back Door): இதனைச் சில சமயங்களில் ட்ரேட் டோர் (Trap Door) எனவும் அழைக்கின்றனர். அப்ளிகேஷன் புரோகிராமில், புரோகிராமை வடிவமைத்தவரால் அமைக்கப்படும் வழி. புரோகிராமில் ஏதேனும் பிழை இருந்தால், இந்த வழியாக புரோகிராமின் வரிகளை அடைந்து செப்பனிடுவார். ஆனால் இது போன்ற வழி இருப்பது அடுத்தவருக்குத் தெரிந்தால், புரோகிராம் செயல்படும் தன்மையையே அவர் மாற்றிவிடலாம்.
4. பயர்வால் (Firewall): இது ஒரு சாப்ட்வேர் அல்லது ஹார்ட்வேர். உங்கள் கம்ப்யூட்டரின் நெட்வொர்க்கைக் காப்பாற்றும் வசதி. இன்டர்நெட் அல்லது நெட்வொர்க் மூலமாக அனுமதியின்றி, உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் புரோகிராமினைத் தடுத்து நிறுத்தும். உங்களுக்கும் எச்சரிக்கை தரும். சில வேளைகளில் உங்கள் அனுமதியைப் பெற்று அந்த புரோகிராமினை அப்போதும் அடுத்து வருகையிலும் அனுமதிக்கும்.
5.ஹைஜாக்கிங் (Hijacking) : கம்ப்யூட்டரின் செயல் பாட்டில் குறுக்கீடு செய்து, இயக்கத்தினை முடக்குவது. கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டி ருக்கும் நீங்கள், சற்று வெளியே செல்கையில், கம்ப்யூட்டரைக் கைப்பற்றி பயன்படுத்துவதனையும் இந்த வகையில் சேர்க்கலாம். அடுத்த வகை இன்டர்நெட் வழியாக நுழைந்து கம்ப்யூட்டரின் இயக்கத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்வது.
6. ஹோல் (Hole): உங்கள் சிஸ்டத்தின் பலவீனமான ஓர் இடம். உங்கள் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் சாப்ட்வேரில் இருக்கலாம். இதன் வழியாக உங்கள் அனுமதியின்றி ஒருவர் அனுப்பியுள்ள புரோகிராம், கம்ப்யூட்டர் உள்ளே வரலாம்.
7. எச்.டி.டி.ப்பி.எஸ். (HTTPS Hypertext Transfer Protocol Secure): இணையத்தில் உள்ள புரோட்டோகால் அம்சங்களில் இது எச்.டி.டி.பி.யில் ஒரு வகை. தனித்தன்மை கொண்ட, தனி நபர் அல்லது நிறுவனங்கள் சார்ந்த முக்கிய தகவல்கள் பரிமாறப்படும் தளங்களில் இந்த வகை புரோட்டோகால் வகை அமைக்கப்படும்.
8.கீ (Key) : விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் விண்டோஸில் அமைக்கப்படும் செட்டிங்ஸ் சரியாக அமைந்திட உதவுபவற்றை இப்படிக் குறிப்பிடுவார்கள். புரோகிராம் ஒன்று கம்ப்யூட்டரில் நிறுவப்படும் போதும், நீக்கப்படும்போதும் இந்த கீகள் மாற்றப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் நுழைந்து இந்த கீகளில் உங்கள் அனுமதியின்றி மாற்றங்கள் செய்திட்டால், கம்ப்யூட்டர் இயக்கம் பிரச்சினைக்குள்ளாகும்.
9. கீ லாக்கர்ஸ் (Keyloggers) : அடிப்படையில் இது புரோகிராம் ஒன்றில் கீகளின் அழுத்தம் பயன்பாட்டிற்காகப் பதியப்படுவதனைக் குறிக்கும். ஆனால் இப்போதோ, கெடுதல் விளைவிக்க எண்ணும் நபர்கள், கம்ப்யூட்டர் ஒன்றில் அழுத்தப்படும் கீகளைப் பதிவு செய்திட ஸ்பைவேர் புரோகிராம்களை அனுப்பி, கீகளின் அழுத்தங்களைப் பெற்று, அதன் அடிப்படையில் ரகசியமான தகவல்களைப் (பாஸ்வேர்ட் போன்ற) பெற்று, பின் அவற்றைப் பயன்படுத்தி நாசம் விளைவிக்கும் எண்ணத்தில் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
10. @mm : வைரஸ் ஒன்றின் இறுதியில் இந்த அடையாளம் காணப்படும். எடுத்துக் காட்டாக W32netsky@mm. இந்த அடையாளம் மாஸ் மெயிலர் என்பதைக் குறிக்கிறது. மாஸ் மெயிலர் என்பது வைரஸ் ஒன்றின் பெயர். இதனால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கின் பல பகுதிகளிலிருந்து, மின்னஞ்சல் முகவரிகளைப் பெற்று, அவை அனைத்துக்கும் தன் செய்தி அஞ்சலை அனுப்பும். பின் அனுப்பப்பட்ட கம்ப்யூட்டரில் பரவும். சிலவற்றில் ஒரு எம் (m) மட்டும் காணப்படும். அது மெயிலர் என்பதை மட்டும் குறிக்கிறது. இந்த வகை மெயிலர் வைரஸ் தான் பரவுவதற்கு ஒரு இமெயிலின் துணையைக் கொள்ளும்.
11. பே லோட் (PayLoad): இது வைரஸ் ஒன்றின் பகுதியாகும். இது எப்போதும் அழிவைத்தரும் செயல்களில் இறங்காது; ஆனால் தேவையில்லாத ஒன்றாகும்.
12. ரெப்ளிகேஷன் (Replication) ): பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை ஒரு வைரஸ் பாதித்தவுடன், அது தன்னையே காப்பி செய்து கொள்ளும் பணியில் இறங்கும். பின் அந்தக் கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களையும் பாதிக்கும்; இமெயில் முகவரிகள் மூலமாக மற்ற கம்ப்யூட்டர்களையும் பாதிக்கும். அடுத்த கம்ப்யூட்டரை அடைந்தவுடன் இதே வேலையை மேற்கொள்ளும். இவ்வாறு சில நிமிடங்களில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களில் பரவி கெடுதல் வேலையை நடத்தும். தன்னைத்தானே காப்பி செய்திடும் வேலையை இந்த சொல் குறிக்கிறது.
13. வேரியன்ட் (Variant): வைரஸ் புரோகிராம் ஒன்றில், ஒரிஜினல் வைரஸ் புரோகிராம் வரிகளைப் போன்று அமைக்கப்படுவை இப்படிக் குறிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் பணியைத் திசை திருப்பும் வேலையை இவை மேற்கொள்கின்றன.
14. வைரஸ் டெபனிஷன்ஸ் பைல் (Virus Definition File): ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களால் பயன்படுத்தப் படும் டேட்டா பைல்களாகும். இவற்றின் மூலம் தான் ஏற்கனவே உலவி வரும் வைரஸ் புரோகிராம்கள் கண்டறியப்படுகின்றன.