கம்ப்யூட்டர் பாதுகாப்பு

கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து புழக்கத்தில் இருக்கும்  சொற்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கீழே தந்துள்ளோம்.

1. ஆண்ட்டி வைரஸ் (Anti Virus): அப்ளிகேஷன் சாப்ட்வேர். இன்றைய அளவில் கிடைத்துள்ள வைரஸ் புரோகிராம்களில் காணப்படும் சிக்னேச்சர் என்னும் கோடிங் முறையின் அடிப்படையில், ஹார்ட் டிஸ்க்கினை ஸ்கேன் செய்து, அதில் ஏதேனும் வைரஸ், ட்ரோஜன், வோர்ம் ஆகியன இருந்தால், அந்த புரோகிராம்களைக் கண்டறிந்து அழிக்கும். அல்லது குவாரண்டைன் என்னும் தனி இடத்திற்கு அனுப்பும். நமக்கும் எச்சரிக்கை கொடுக்கும். நீக்க முடியவில்லை என்றால், ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் இடத்தைக் காட்டி எச்சரிக்கை செய்திடும்.

2. அட்டாக் (Attack): நம் அனுமதி பெறாத ஒரு நபர் அல்லது ஒரு புரோகிராம், நம் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டில், பல்வேறு காரண காரியங்களுக்காகக் கொண்டு வரும் செயல்பாடு.

3.பேக் டோர் (Back Door): இதனைச் சில சமயங்களில் ட்ரேட் டோர் (Trap Door) எனவும் அழைக்கின்றனர். அப்ளிகேஷன் புரோகிராமில், புரோகிராமை வடிவமைத்தவரால் அமைக்கப்படும் வழி. புரோகிராமில் ஏதேனும் பிழை இருந்தால், இந்த வழியாக புரோகிராமின் வரிகளை அடைந்து செப்பனிடுவார். ஆனால் இது போன்ற வழி இருப்பது அடுத்தவருக்குத் தெரிந்தால், புரோகிராம் செயல்படும் தன்மையையே அவர் மாற்றிவிடலாம்.
4. பயர்வால் (Firewall): இது ஒரு சாப்ட்வேர் அல்லது ஹார்ட்வேர். உங்கள் கம்ப்யூட்டரின் நெட்வொர்க்கைக் காப்பாற்றும் வசதி. இன்டர்நெட் அல்லது நெட்வொர்க் மூலமாக அனுமதியின்றி, உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் புரோகிராமினைத் தடுத்து நிறுத்தும். உங்களுக்கும் எச்சரிக்கை தரும். சில வேளைகளில் உங்கள் அனுமதியைப் பெற்று அந்த புரோகிராமினை அப்போதும் அடுத்து வருகையிலும் அனுமதிக்கும்.
5.ஹைஜாக்கிங் (Hijacking) : கம்ப்யூட்டரின் செயல் பாட்டில் குறுக்கீடு செய்து, இயக்கத்தினை முடக்குவது. கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டி ருக்கும் நீங்கள், சற்று வெளியே செல்கையில், கம்ப்யூட்டரைக் கைப்பற்றி பயன்படுத்துவதனையும் இந்த வகையில் சேர்க்கலாம். அடுத்த வகை இன்டர்நெட் வழியாக நுழைந்து கம்ப்யூட்டரின் இயக்கத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்வது.
6. ஹோல் (Hole): உங்கள் சிஸ்டத்தின் பலவீனமான ஓர் இடம். உங்கள் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் சாப்ட்வேரில் இருக்கலாம். இதன் வழியாக உங்கள் அனுமதியின்றி ஒருவர் அனுப்பியுள்ள புரோகிராம், கம்ப்யூட்டர் உள்ளே வரலாம்.
7. எச்.டி.டி.ப்பி.எஸ். (HTTPS Hypertext Transfer Protocol Secure): இணையத்தில் உள்ள புரோட்டோகால் அம்சங்களில் இது எச்.டி.டி.பி.யில் ஒரு வகை. தனித்தன்மை கொண்ட, தனி நபர் அல்லது நிறுவனங்கள் சார்ந்த முக்கிய தகவல்கள் பரிமாறப்படும் தளங்களில் இந்த வகை புரோட்டோகால் வகை அமைக்கப்படும்.
8.கீ (Key) : விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் விண்டோஸில் அமைக்கப்படும் செட்டிங்ஸ் சரியாக அமைந்திட உதவுபவற்றை இப்படிக் குறிப்பிடுவார்கள். புரோகிராம் ஒன்று கம்ப்யூட்டரில் நிறுவப்படும் போதும், நீக்கப்படும்போதும் இந்த கீகள் மாற்றப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் நுழைந்து இந்த கீகளில் உங்கள் அனுமதியின்றி மாற்றங்கள் செய்திட்டால், கம்ப்யூட்டர் இயக்கம் பிரச்சினைக்குள்ளாகும்.
9. கீ லாக்கர்ஸ் (Keyloggers) : அடிப்படையில் இது புரோகிராம் ஒன்றில் கீகளின் அழுத்தம் பயன்பாட்டிற்காகப் பதியப்படுவதனைக் குறிக்கும். ஆனால் இப்போதோ, கெடுதல் விளைவிக்க எண்ணும் நபர்கள், கம்ப்யூட்டர் ஒன்றில் அழுத்தப்படும் கீகளைப் பதிவு செய்திட ஸ்பைவேர் புரோகிராம்களை அனுப்பி, கீகளின் அழுத்தங்களைப் பெற்று, அதன் அடிப்படையில் ரகசியமான தகவல்களைப் (பாஸ்வேர்ட் போன்ற) பெற்று, பின் அவற்றைப் பயன்படுத்தி நாசம் விளைவிக்கும் எண்ணத்தில் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
10. @mm : வைரஸ் ஒன்றின் இறுதியில் இந்த அடையாளம் காணப்படும். எடுத்துக் காட்டாக W32netsky@mm. இந்த அடையாளம் மாஸ் மெயிலர் என்பதைக் குறிக்கிறது. மாஸ் மெயிலர் என்பது வைரஸ் ஒன்றின் பெயர். இதனால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கின் பல பகுதிகளிலிருந்து, மின்னஞ்சல் முகவரிகளைப் பெற்று, அவை அனைத்துக்கும் தன் செய்தி அஞ்சலை அனுப்பும். பின் அனுப்பப்பட்ட கம்ப்யூட்டரில் பரவும். சிலவற்றில் ஒரு எம் (m) மட்டும் காணப்படும். அது மெயிலர் என்பதை மட்டும் குறிக்கிறது. இந்த வகை மெயிலர் வைரஸ் தான் பரவுவதற்கு ஒரு இமெயிலின் துணையைக் கொள்ளும்.
11. பே லோட் (PayLoad): இது வைரஸ் ஒன்றின் பகுதியாகும். இது எப்போதும் அழிவைத்தரும் செயல்களில் இறங்காது; ஆனால் தேவையில்லாத ஒன்றாகும்.
12. ரெப்ளிகேஷன் (Replication) ): பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை ஒரு வைரஸ் பாதித்தவுடன், அது தன்னையே காப்பி செய்து கொள்ளும் பணியில் இறங்கும். பின் அந்தக் கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களையும் பாதிக்கும்; இமெயில் முகவரிகள் மூலமாக மற்ற கம்ப்யூட்டர்களையும் பாதிக்கும். அடுத்த கம்ப்யூட்டரை அடைந்தவுடன் இதே வேலையை மேற்கொள்ளும். இவ்வாறு சில நிமிடங்களில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களில் பரவி கெடுதல் வேலையை நடத்தும். தன்னைத்தானே காப்பி செய்திடும் வேலையை இந்த சொல் குறிக்கிறது.
13. வேரியன்ட் (Variant): வைரஸ் புரோகிராம் ஒன்றில், ஒரிஜினல் வைரஸ் புரோகிராம் வரிகளைப் போன்று அமைக்கப்படுவை இப்படிக் குறிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் பணியைத் திசை திருப்பும் வேலையை இவை மேற்கொள்கின்றன.
14. வைரஸ் டெபனிஷன்ஸ் பைல் (Virus Definition File): ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களால் பயன்படுத்தப் படும் டேட்டா பைல்களாகும். இவற்றின் மூலம் தான் ஏற்கனவே உலவி வரும் வைரஸ் புரோகிராம்கள் கண்டறியப்படுகின்றன.

%d bloggers like this: