`சூயிங்கம் கொள்ளையர்கள்’!

கொள்ளையர்கள் `சூயிங்கம்’ கொள்ளை யடித்துச் சென்ற வினோத சம்பவம் ரஷியா வில் நடைபெற்றிருக்கிறது. தெற்கு ரஷியா வில் ஒரு `பார்க்கிங்’ பகுதியில் நிறுத்த பட்டிருந்த லாரியில் இருந்து 17 லட்சம் ` பபிள்’ ( . 26.68 லட்சம்) மதிப்புள்ள 250 பெட்டி சூயிங்கம்மை 3 திருடர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

“அடையாளம் தெரியாத முன்று பேர் பார்க்கிங் பகுதிக்குத் தடதடவென்று வந்திருக்கிறார்கள், அங்கிருந்த காவலாளியை மிரட்டிக் கட்டி போட்டிருக்கிறார்கள். பின்னர் அங்கே நின்றிருந்த மெர்சிடிஸ் லாரியிலிருந்து சூயிங்கம் பெட்டிகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்” என்கிறார் காவல் துறை அதிகாரி.

கொள்ளையர்கள் சூயிங்கம்மை மென்று துப்ப அள்ளிச் சென்றார்களா அல்லது விற்பதற்குக் கொண்டு சென்றார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். இந்த வழக்கு விசாரணை `ஜவ்வாக’ இழுத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை!

%d bloggers like this: