Daily Archives: ஜனவரி 15th, 2010

பூண்டு

உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இதனால், வாயு சம்பந்தமான நோய் நிவர்த்தி அடைகிறது. பூண்டைத் துவையல் செய்தும் சாப்பிட்டு வரலாம். இரத்தக் கொதிப்பிற்குப் பூண்டைச் சுட்டு இரண்டு மூன்று திரியைக் கொடுத்து வரலாம். வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்திவிடும். பூண்டு இலேகியமாகவும் செய்து சாப்பிடலாம். இதை நெடுநாள் வைத்திருந்து சாப்பிடலாம்.

க‌ண்களு‌க்கே‌ற்ற கு‌ளி‌ர்‌ச்‌சியான க‌ண்ணாடிக‌ள்

கூலிங் கிளாசின் மிக முக்கியமான பகுதி அதன் கண்ணாடி அல்லது லென்ஸ். வாங்குவதற்கு முன் லென்ஸ் சரியாக உள்ளதா அல்லது பார்வையை கோணலாக்குகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
ஒரு கண்ணை மூடிக் கொண்டு கண்ணாடி வழியே கதவு முனை போன்ற நேரான பொருளைப் பார்க்கவும். நேராக இல்லாமல் கதவின் முனை கோணலாக தெரிந்தால், வேறு கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கவும்.

பொதுவாக கண்ணாடி, பாலிகார்பனேட் பிளாஸ்டிக், அக்ரிலிக் ஆகியவற்றால் லென்ஸ்

தயாரிக்கப்படுகிறது. இவற்றில் கண்ணாடியால் ஆன லென்ஸ் சிறந்தது என்றாலும் இதன்

விலையும், எடையும் அதிகம். அத்தோடு எளிதில் உடைந்து விடும்.

அடுத்தபடியாக பாலிகார்பனேட் பிளாஸ்டிக் சிறந்தது. இதில் விரைவில் கோடுகள் விழாது, கண்ணாடி லென்ஸை விட உறுதியானது. விலை மலிவான அக்ரிலிக்கால் ஆன லென்ஸில் வெகு சீக்கிரம் கீறல்கள் விழ வாய்ப்புண்டு.பல்வேறு நிறங்களில் லென்ஸ் கிடைக்கின்றன. கிரே மற்றும் பச்சை நிறங்களில் உள்ள லென்ஸ் உலகத்தை உள்ளபடியே காட்டும்.

கையிலேயே இருக்கு மருந்து

1. கறிவேப்பிலை செடிக்கு புளித்த மோரை நீருடன் கலந்து ஊற்றி வர செடி நன்கு துளிர்த்து வளரும்.
2. அருகம்புல்லில் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது . அந்தச் சாற்றில் தாது உப்புகளும் , வைட்டமின்களும் அதிகம்.
3. கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி , குமட்டலைத் தடுக்க பாலில் cட்டையின் வெண்கருவையும் , சிறிது சோடாவையும் கலந்து சாப்பிடவேண்டும்.
4. பொரித்த உணவுப் பண்டங்களை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ஒரு ரொட்டித் துண்டைப் போட்டு வைத்தால் உணவுப் பண்டங்கள் நமர்த்து போகாமல் இருக்கும்.
5. மகிழம் பூவை நிழலில் உலர்த்தி சந்தனம் சமமாகச் சேர்த்து இடித்து பூசி குளித்தால் சூடு தணியும் சக்தி பெருகும் . உடல் பலப்படும் . உடல் வலி நீங்கும் . புண்கள் குணமாகும்.
6. ஆறிய வெந்நீரில் விபூதியை குழைத்து நெற்றி , முக்கின் மேல் பூசிக்கொண்டால் ஜலதோஷம், தும்மல் விரைவில் குணமாகும்.
7. ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி வெது வெதுப்பான நீரில் போட்டு வைத்து பின் அத்தண்ணீரால் வீட்டைத் துடைத்தால் ஈ , எறும்பு அண்டாது.
8. செம்பருத்தி இலையை உலர வைத்து மிக்சியில் பொடியாக்கி வைத்துக் கொண்டு வாரம் மூன்று முறை இப் பொடியைத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும்.
9. புதினா இலையை சாறு எடுத்து குளிக்கும் முன் அரை மணி முகத்தில் தேய்த்து ஊறிய பின் குளித்தால் முகத்தில் சுருக்கம் வராது.
10. இரவு நேர விளக்கு நீல நிறமாக இருந்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகளிக்கும் அமைதியும் சக்தியும் கிடைக்கும். எனவே படுக்கையறையில் நீல நிற விளக்கைப் பயன்படுத்தலாமே!

குங்குமம் வைப்பதன் நன்மைகள்!

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவைமூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண்அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதகிடைக்கும்.

ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.

உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக்

கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும்.

குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்களுக்குமிகவும் நல்லது. இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக்கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்!

சுதந்திரத்தையே விற்ற நாடு மொனாகோ

ஆண் வாரிசு இல்லாமலேயே அந்த இளவரசர் இறந்துவிட்டால் மொனாகோ ஃபிரான்ஸுக்குச் சொந்மாகிவிடும்!
சென்னையை விடுங்கள், அதிலுள்ள ஒரு சராசரி தொகுதி அளவுக்குக்கூட இருக்காது மொனாகோ. இரண்வு சதுரகிலோமீட்டரைவிடக் குறைவான பரப்பளவு. அப்படியானால் பிரபல பன்னாட்டு நிறுவனங்கள் மொனாகோவில் தங்கள் கிளைகளைத் திறக்க ஆர்வம் காட்டுவது ஏன்? தெரிந்து கொள்ள மொனாகோவின் சரித்திரப் பக்கங்களைக் கொஞ்சம் புரட்ட வேண்டும்.
சில வருடங்களுக்கு முன் இப்போது இருப்பதைவிடக் குறைவான பரப்பளவு கொண்டதாகத்தான் மொனாகோ இருந்தது. கடல் கொஞ்சம் பின்னடைந்ததால் இலவசமாக 100 ஏக்கர் பரப்பளவு வந்து சேர்ந்திருக்கிறது!
1861க்குப் முன்பு இப்போதைப் போல இரண்டு மடங்கு அதிகமானதாக இருந்தது மொனாகோ. என்ன செய்ய…! நிதி தேவைப்பட, தன்னில் பாதியை ஃபிரான்ஸுக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மொனாகோவுக்கு. இதனால் நிலப்பகுதியை மட்டுமல்லாமல் அதில் உள்ள இயற்கை வளங்களையும் சேர்த்தே இழந்ததனால் மொகாகோவின் பொருளாதாரத்துக்கு மிகவும் பபிதப்பு. அதைச் சரிக்கட்ட அப்போதைய இளவரசர் மொனாகோவில் மாண்டே கார்லோவை உருவாக்கினார். அதற்குப் பிறகு உலகத்து கோடீஸ்வரர் எல்லாம் இங்கு வந்து ஆனந்தமாகத் தங்கள் பணத்தைத் தொலைத்துவிட்டுப் போவது வாடிக்கையாகிவிட்டது.
மாண்டே கார்லோ பகுதியில் உலகப் புகழ்பெற்ற காசினோக்கள் (சூதாட்ட நிலையங்கள்) இருக்கின்றன. (007 ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் தகவல் – முதல் ஜேம்ஸ்பாண்ட் கதைகூட மொனாகோவில் உள்ள காசினோக்களைப் பின்னணியாகக் கொண்டு உருவானதுதான்)
தனக்கு ராணுவப் பாதுகாப்பு வேண்டும் என்று ஃபிரான்ஸை அணுகியது மொனாகோ. ஒப்பந்தம் போட்டுக் கொள்ளத் தயாரானது ஃபிரான்ஸ். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு முக்கிய நிபந்தனை மொனாகோவை அதிரவைத்தது!
இனி மொனாகோ தன் சுதந்திரத்தை ஃபிரான்ஸுக்கு விட்டுத் தந்துவிட வேண்டும். மறுத்தது மொனாகோ. மீண்டும் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை, கடைசியில் மிக மிக விநோதமான ஒரு நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டது மொனாகோ.
அப்போது மொனாகோவை ஆண்டுவந்த இளவரசர் மூன்றாம் ரெய்னியர் திருமணமாகாத இளைஞர். ஆண் வாரிசு இல்லாமலேயே அவர் இறந்துவிட்டால் மொனாகோ ஃபிரான்ஸுக்குச் சொந்தமாகிவிடும்!
இவளரசருக்குத் திருமணம் செய்து கொள்ளும் �ண்ணமே இல்லை என்று தெரிந்தே ஃபிரான்ஸ் இதனை வலியுறுத்தியது.
மனம் மாறியதோ அல்லது உடன்படிக்கை காரணமாக மனத்தை மாற்றிக் கொண்டாரோ தெரியாது; இளவரசர் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தார். அந்தப் பெண் உலகெங்கும் பல ஆண்களின் கனவுநாயகியாக விளங்கிய நடிகை கிரேஸ் கெல்லி.
திருமணம் நடந்தது. குழந்தையும் பிறந்தது. அது ஆண் வாரிசு! விடுதலை என்று ஆனந்த் கூத்தாடினார்கள் மக்கள்.
இன்றுவரை மொனாகோவில் மன்னர் ஆட்சிதான். இதன் அதிகாரப்பூர்வமான பெயர்கூட (பிரின்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை அடிப்படையாகக் கொண்ட) The Principality of Monaco என்பதுதான். ஏழு நூற்றாண்டுகளாக மொனாகோவை ஆட்சி செய்வது கிரிமால்டி குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள்தான்.
1297ல் ஃபிராங்காயில் கிரிமால்டி என்பவர் துறவி வேடத்தில் ஒரு சின்னப் பையனோடு நுழைந்து மொனாகோ கோட்டையைத் தம் வசமாக்கிக் கொண்டதிலிருந்தே அது அவர்கள் ராஜ்ஜியம்தான். (சமீபகாலமாக, போனால் போகிறது என்று ஒரு தேசியக்குழுவுடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க பெரிய மனது செய்திருக்கிறார் இளவரசர்).
1943ல் இத்தாலிய ராணுவம் மொனாகோவைக் கைப்பற்றியது, ஒருவிதத்தில் கொடுங்கோல் ஆட்சிதான். பின் ஜெர்மனியைச் சேர்ந்த நாஜிக்களின் பிடிக்குள் அது சென்றது இந்த நிலையில்தான் மூன்றாம் ரெய்னியர் பட்டத்துக்கு வந்து ஃபிரான்ஸின் ராணுவ உதவியைக் கோரினார். 56 வருடங்கள் இவர் தொடர்ந்து ஆட்சி புரிந்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மொனாகோவில் இன்று ஐந்தில் ஒருவர்தான் உள்ளூர்வாசி. வெளிநாடுகளிலிருந்து மொனாகோவுக்கு வந்துநிரந்தரமாகத் தங்குபவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் என்ன தெரியுமா? காசினோக்களா? இல்லை மொனாகோவில் வருமானவரி கிடையாது என்பதுதான் முக்கியக் காரணம். இதனால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் மொனாகோவில் தங்கள் கிளையைத் திறப்பதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றன.
ஆனால் இதற்கும் வந்தது வேட்டு. பல நாடுகளும் இப்படித் தங்கள் செல்வம் மொனாகோவில் குவிவதைக் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, மொனாகோ சமீபகாலமாக ஒரு வித்தியாசமான நடைமுறையைப் பின்பற்றுகிறது.
வெளியூரிலிருந்து வந்து தங்குபவர்களுக்கு வருமானவரி உணடு. காசினோக்களில் தாராளமாக அவர்கள் சூதாடலாம். மண்ணின் மைந்தர்களுக்கு வருமான வரி கிடையாது. ஆனால் அவர்கள் காசினோக்களில் தாராளமாக அவர்கள் சூதாடலாம். மண்ணின் மைந்தர்களுக்கு வருமானவரி கிடையாது. ஆனால் அவர்கள் காசினோக்களில் ஆடக்கூடாது. ஆடுவது மட்டுமல்ல, நுழையவே கூடாது!
சூதாட்டத்துக்கு மட்டுமல்ல வேறொரு சாகச விளையாட்டுக்கும் உலகப்புகழ்பெற்றது. மொனாகோ, இங்கே நடைபெறும் மொனாகோ கிராண்ட் ஃப்ரீ பந்தயம் ஒரு மாபெரும் திருவிழா. உலகின் பல பகுதிகளில் இந்தப் பந்தயம் நடந்தாலும், மொனாகோவில் ஜெயிப்பது தனிப்பெருமைதான். காரணம் இங்கு அமைந்துள்ளது. மிகவும் சவாலான பந்தயப் பாதை. நடுவே மிக மிகக் குறுகுலான கடினமான சந்துகளையேல்லாம் கடக்க வேண்டும்.
1983ல் ஐ.நா.சபையின் உறுப்பினரானது மொனாகோ. 2002ல் ஃபிரான்ஸுக்கும் மொனாகோவுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. இனி கிரிமால்டியின் வம்சம் மொனாகோவை ஆளக்கூடாது. தனி சுதந்திர நாடாகவே மொனாகோ இருக்கும். ஆனால் அதற்கான ராணுவ பாதுகாப்பை ஃபிரான்ஸ் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்!
ஃபிரான்ஸ் முதலாளியா? முள் முதலாளியா? இப்படி ஒரு கேள்வி அடிக்கடி எழுந்தாலும் மொனாகோ மக்கள் தங்களுக்கு விட்டுவிட்டுக் கிடைத்துவரும் சுதந்திரத்தை அனுபவித்துப் பூரிக்கிறார்கள்தான்.
* மொனாகோவில் இது தலைநகரம், இது நாடு என்று எந்தப் பிரிவுக்கோடும் கிடையாது. அதுவே இது. இதுவே அது! அங்கே தங்கியிருப்பவர்களில் 84 சதவிகிதம் வெளிநாட்டவர்கள்.
* கிரேக்க வார்த்தையான மொனோக்கோஸ் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான் மொனாகோ. அந்த கிரேக்க வார்த்தைக்கு அர்த்தம் ஒரே குடியிருப்பு.
* மொனாகோ கொடியை வரைவது ரொம்ப சுலபம். மேல்பாதி சிகப்பு, கீழ்பாதி வெள்ளை அவ்வளவே.
* ஹெர்குவிஸ் தெரியுமல்லவா? பலத்துக்கு� உதாரணமாகக் கருதப்படும் கிரேக்க வீரன். அவன் ஒரு முறை மொனாகோ வழியாகச் சென்றானாம். அங்கிருந்த தெய்வங்களையெல்லாம் அனுப்பிவிட்டானாம். எனவே ஹெர்குலஸுக்கு என்றே ஒரு ஆலயமும் இங்கு எழுப்பப்பட்டிருக்கிறது.
* புகையிலையிலிருந்து தபால்துறைவரை பலவும் அரசின் பிடியில்தான்.
* ஐரோப்பாவில் இருந்தாலும், ஐரோப்பிய யூனியனில் மொனாகோ உறுப்பினர் அல்ல. எனினும் நாணயம் யூரோதான்! மொனாகோவில் பாரம்பரியச் சின்னங்கள் கலந்த யூரோ நாணயங்களை வெளிவிடுகிறது மொனாகோ.
* அதிகாரபூர்வமான மதம் கத்தோலிக்க மதம்.
* மொனாகோவில் எத்தனை நகராட்சிகள் தெரியுமா? இரண்டுக்கு முந்தைய எண் எது? ஆம், அதுதான் விடை!

ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!


நகர்புறங்களில் கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர்களே கிடையாது. பெடரும் முதல் பாத்ரும்வரை ஏ.சி. பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொசுக்களிடம் தினமும் கடி வாங்கிக் கொள்கின்றனர்.

அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள், கிரீம் மற்றும் மேட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!

கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

பொதுவாக மாலைநேரங்களில்தான் கொசுக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கும். அந்தநேரத்தில் கதவு, ஜன்னல்களை பூட்டிவிடுவது வழக்கம். அப்படிச் செய்வதால், வீட்டிற்குள் புதிய காற்று வருவது தடை செய்யப்பட்டு விடுகிறது.

காற்று வர வழியில்லாமல் முற்றிலும் அடைபட்ட நிலையில் உள்ள வீட்டின் அறைகளுக்குள் விளக்குகளை எரிய விடுவது, சமைப்பது, அவைகளுக்கு மத்தியிலேயே வீட்டில் உள்ள அனைவரும் சுவாசிப்பது… போன்றவற்றால் பிராண வாயுவான ஆக்ஸிஜனின் அளவு குறைந்துபோய் விடுகிறது.

இந்த சூழ்நிலையிலும், வீட்டிற்குள் புகுந்துவிடும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச் சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இப்படிச் செய்வதால், அவற்றில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையும், தீங்கு ஏற்படுத்தும் வாயுக்களும் மட்டுமே வீட்டிற்குள் அதிகம் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது. ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்துபோய் விடுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சுவாசிக்கும்போது, அவர்களின் உடலுக்குள்ளும் காற்றின் வழியாக நச்சுத்தன்மை புகுந்து விடுகிறது.

முன்னறிவிப்பு இன்றி உடலுக்குள் புகுந்த இந்த நச்சுத்தன்மையை விரட்ட உடலானது எதிர்வினை புரிகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜலதோஷம், சளி பிடித்தல், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு அலர்ஜி என்கிற ஒவ்வாமையும் இதனால் ஏற்பட்டு விடுகிறது. அத்துடன், மேலும் பல பாதிப்புகளையும் நம் உடல் ஏற்க வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.

கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட் ஆகியவற்றை பயன் படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளில் நிருபித்துள்ளனர்.

கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.

மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.

இப்படியெல்லாம் பயமுறுத்தினால், நாங்கள் கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்று கேட்கிறீர்களா?

அதற்கும் வழி இருக்கிறது. அந்த வழி கொசு வலைக்குள் புகுந்து கொள்வதுதான்!

விஷமுள்ள டைனோசர்


பிரம்மாண்ட உயிரினமான டைனோசர்கள் அழிந்துவிட்டன. அவற்றைப் பற்றிய தகவல்கள் எப்போதுமே வியப்புக்குரியவை. உலகமெங்கும் கிடைக்கும் புதை படிவங்களின் அடிப்படையில் அவற்றின் பண்புகள், தன்மைகள் பற்றிய ஏராளமான விஷயங்களை நாம் அறிந்து வருகிறோம்.

டைனோசர்களில் தாவரங்களை உண்ணும் சாதுவான டைனோசர்கள் இருந்தன. அதேபோல் மற்ற மிருகங்களை வேட்டையாடி உண்ணும் அசைவ டைனோசர்களும் இருந்திருக்கின்றன. பறவை போன்ற இறக்கை உள்ள டைனோசர்களும் அறியப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் தற்போது, விஷமுள்ள டைனோசர் இனமும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

டைனோசர்கள் பிரம்மாண்டமாக இருந்தாலும் வேட்டையாடித்தாங்கி உண்ணும் என்பதாகவே இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் கிடைத்த ஆய்வு முடிவுப்படி விஷத் தன்மை உடைய டைனோசர்களும் இருந்துள்ளன, அவை விஷத்தை பயன்படுத்தி உணவு தேடிக் கொண்டுள்ளன என்பது தெளிவாகி இருக்கிறது.

துருக்கி அருகில் கிடைத்த ஒரு வகை டைனோசரின் படிமங்கள் இதை உறுதிப்படுத்துகிறது. இந்த டைனோசருக்கு இறக்கைகளும், வித்தியாசமான தாடைப்பகுதியும் உள்ளன. ஏற்கனவே அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் 2000-ம் ஆண்டு வரிப்பள்ளங்களைக் கொண்ட டைனோசரின் பற்கள் கிடைத்தன. அப்போதே விஷத்தன்மை உடைய டைனோசர்கள் இருக்கக்கூடும் என்று நம்பப்பட்டது.

தற்போது இதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. இந்த புதிய டைனோசருக்கு `சினார்னித்தோசரஸ்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவற்றின் தாடைப்பகுதியில் வரிப்பள்ளங்களைக் கொண்ட பற்களும், விஷம் சுரக்கும் சுரப்பிகள் இருந்ததற்கான தடயங்களும் இருக்கின்றன.

இவை பாம்புகள்போல பதுங்கி இருந்து பாய்ந்து விஷத்தன்மையால் வேட்டையாடி உண்டு வந்துள்ளன. இந்த டைனோசரை அமெரிக்காவின் கான்சாஸ் பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்து உள்ளது.

இந்தவகை டைனோசர்களுக்கு இறக்கைகளும் இருப்பது பரிணாம உருமலர்ச்சிக் கொள்கைக்கான சிறந்த சான்றாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

மோனாலிசாவின் சிரிப்புக்கு கொழுப்பே காரணம் : இத்தாலி பேராசிரியர் கண்டுபிடிப்பு

உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவின் மயக்கும் புன்னகையின் பின்னணியில், “கொழுப்பு’ இருக்கிறது; இப்படிசொல்லியிருக்கிறார் பிரபல இத்தாலி மருத்துவ பேராசிரியர் ஒருவர்.

மோனாலிசா – இத்தாலியை சேர்ந்த பிரபல ஓவியர் லியானார்டோ டாவின்சி தலைமையில் ஓவியர்கள் குழு, 1503 -1506க்கு இடையே வரைந்தது. ஆயில் பெயின்ட் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஓவியம், 1519 ல் லியானார்டோ இறந்த பின் , பலர் கைக்கு மாறியது. பல லட்சத்துக்கு கைமாறிய இந்த ஓவியம், கடைசியில் பிரான்ஸ் மியூசியத்துக்கு வந்து சேர்ந்தது. அதற்கு முன், பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் படுக்கை அறையில் கூட, சில காலம் வைக்கப்பட்டு இருந்தது. யாரை வைத்து இந்த ஓவியத்தை லியானார்டோ வரைந்தார் என்பது இன்றளவும் மர்மம் தான்.

இத்தாலியிலுள்ள பலெர்மோபல்கலைக் கழகத்தில், நோய் உடற்கூறியல் பேராசிரியராக இருப்பவர், விட்டோ பிரான்கோ. இவர், உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களைப் பற்றி மருத்துவக் கண்ணோட்டத்தில் ஆராய்ச்சி செய்து வருகிறார். “ஓர் ஓவியன், ஓவியத்தைப் பார்க்கும் கண்ணோட்டத்திலிருந்து வித்தியாசமானது எனது பார்வை. அது, இசையை ஒரு கணித வல்லுனன் பார்க்கும் பார்வையோடு ஒத்தது. உலகப் புகழ் பெற்ற ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ள கதாநாயகர்கள், தேவதைகள், புராண புருஷர்கள் அந்த ஓவியங்களைத் தீட்டியவர்களின் உடற்கூறுகளையும், அதில் புதைந்துள்ள நோய் அறிகுறிகளையும் பிரதிபலித்து உள்ளனர்’ என்கிறார், விட்டோ பிரான்கோ.

பியாரோ டெல்லா வரைந்த ஓவியங்களில் சிலவற்றில், குரல்வளை வீக்கம் இருப்பதாக இவர் கண்டறிந்துள்ளார். அதேபோல், டாவின்சியின் சமகாலத்தவரான மிக்கேல் ஏஞ்சலோ சிறுநீரகக் கல் கோளாறு, கீல்வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர். ஏஞ்சலோவின் புகழ்பெற்ற “ஏதென்ஸ் ரபேலின் பள்ளி’ ஓவியத்தில், இந்த நோய்கள் கொண்டவர்களாக சித்திரங்கள் தீட்டப் பெற்றிருப்பதாக பிரான்கோ குறிப்பிடுகிறார். ஓவிய உலகத்தின் உன்னதம் பெற்றவரான இத்தாலியை சேர்ந்த லியானார்டோ டாவின்சி வரைந்து, இன்றளவும் உலகையே தனது மோகனப் புன்னகையால் மயக்கிக் கொண்டிருக்கும், மோனாலிசாவின் அந்த மயக்கும் புன்னகைக்கு என்ன காரணம் தெரியுமா..? அவளது கண்களின் கீழ்ப் பகுதியில் திரண்டுள்ள கொழுப்புச் சத்துதான் என்கிறார் பிரான்கோ. மற்றொரு ஓவியரான டியாகோவின் ஓவியங்களில், குள்ளத் தன்மை, எலும்புகள் வளர்ச்சியின்மை, பருவத்துக்கு முன்பே பூப்படைதல் போன்ற நோய்கள் தென்படுவதாகவும் பிரான்கோ கூறுகிறார்.

டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்….15.1.2010

விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்
சகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகளின் ஒரு தொகுப்பு முன்பு தரப்பட்டது. இதோ இரண்டாவது தொகுப்பினையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
Win + Pause சிஸ்டம் கண்ட்ரோல் பேனல் ஆப்லெட் காட்டப்படும்.
Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். டிபால்ட்டாக மை கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
Win + F பைல் அல்லது போல்டர்களைத் தேடுவதற்கான சர்ச் விண்டோ திறக்கப்படும்.
Win + Ctrl + F நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை சர்ச் செய்வதற்கான சர்ச் விண்டோ காட்டப்படும்.
Win + L உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்; அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரிடையே மாறிக் கொள்ளலாம்.
Win + M திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
Win + Shift + M மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் மீண்டும் திரைக்கு வரும்.
Win + P பிரசன்டேஷன் டிஸ்பிளே வகை தேர்ந்தெடுக்கப்படும்.
Win + R ரன் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
Win + U அக்செஸ் சென்டர் திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்பியில் யுடிலிட்டி மேனேஜர் போல இது திறக்கப்படும்.
Win + X விண்டோஸ் மொபிலிட்டி சென்டர் திறக்கப்படும்.

டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட்
ஏறத்தாழ அனைத்து புரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் உண்டு. இவை ஸ்டார்ட் மெனுவில் பார்க்கலாம். இல்லாதவற்றிற்கு நாமாக ஷார்ட் கட் அமைத்திடுகையில் அது டெஸ்க்டாப்பிலேயே அமைக்கப்படும். ஷார்ட் கட் இல்லாத புரோகிராமிற்கு அமைக்க விரும்பினால், ஸ்டார்ட் (Start) கிளிக் செய்து ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்துப் பின் அந்த குறிப்பிட்ட புரோகிராமின் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் சென்ட் டூ (Send To) என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் பிரிவுகளில் டெஸ்க் டாப் (Desktop) என்பதைத் தேர்ந்தெடுத்தால், டெஸ்க் டாப் மீது ஷார்ட் கட் அமைக்கப்படும்.

கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட்
அதிக பக்கங்களில் இருக்கும் வேர்ட் டாகுமெ ண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுத்து முடிக்கையில், தாள்கள் எல்லாம் வரிசையாக பக்கம் 1,2,3 என இல்லாமல் 40,39 என இருப்பதைக் காணலாம். இதனை மீண்டும் ஒவ்வொரு தாளையும் சரி செய்திட இன்னும் அதிக நேரம் ஆகும். இதனை எப்படி மாற்றலாம்? அச்சிட்டபின் நமக்கு வேலை இல்லாமல் செய்திடலாம்?
* கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இவ்வாறு அச்சிட்டுப் பெற கீழே கொடுத்துள்ளபடி செட் செய்திடவும்.
* Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Printing options” என்ற பகுதியில் உள்ள “Reverse print order” என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.

அர்த்த சிரசாசனம்

கெட்டியான விரிப்பில் மண்டியிட்டு உட்காரவும். விரல்களைச் சேர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மேல் அமர்த்தவும். உச்சந்தலையைத் தரையில் அமர்த்தி, பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு குனிந்து அமரவும். பிருஷ்டபாகத்தைத் தூக்கி கால்களை அருகே இழுத்து முக்கோண வடிவமாக நிற்கவும். சாதாரண மூச்சு. கண் மூடியிருக்க வேண்டும். உடல் கனம் யாவும் கையால் தாங்கும்படியாக இருக்க வேண்டும். ஒரு முறைக்கு 1 முதல் 2 நிமிடம் வரை இருக்கலாம். பின் மெதுவாக ஆசனத்தைக் கலைக்க வேண்டும். 2 முதல் 5 முறை செய்யலாம். சிரசாசனம் செய்யுமுன் 15 நாட்கள் இவ்வாசனம் கண்டிப்பாய்ச் செய்ய வேண்டும்.

பலன்கள்:

சிரசாசனத்தில் சொல்லப்பட்ட பலன்கள் 80 சதம் இதற்குக் கிடைக்கும்.

மிகப் பலகீனமானவர்கள், வயதானோர், மாணவர்கள், சிறுவர், பெண்கள் இவ்வாசனத்தை மட்டும் தினம் காலை மாலை 3 நிமிடம் செய்தால் நல்ல ஆரோக்கியம், உடல் பலம், சுறுசுறுப்பு, ஞாபகசக்தி, உடல் தெம்பு, கண்பார்வை உண்டாகும்.