Daily Archives: ஜனவரி 16th, 2010

ச‌ல்வா‌ர் க‌மீ‌ஸ் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்


ஆடைக‌ளி‌ல் பல வகைக‌ள் உ‌ண்டு. ஒ‌வ்வொருவரு‌ம், தா‌ங்க‌ள் உட‌ல் எடை, உயர‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு தகு‌ந்த ஆடைகளை தே‌ர்‌ந்தெடு‌த்து, நா‌ம் செ‌ல்லு‌ம் இட‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றவாறு அ‌‌ணி வே‌ண்டு‌ம்.

மாநிறம் கொண்ட பெண்கள் மரூன், சிவப்பு மற்றும் நீலம் போன்ற நிறங்களைக் கொண்ட சல்வார் கமீஸ் அணிவது நல்லது.

சல்வார் கமீஸ் ரெடிமேட் வாங்குவதை விட உங்கள் அளவிற்கேற்ப தைப்பது தான் சிறந்தது.

கமீஸின் நீளத்தைக் குறைவாகவே வைப்பதால் நீங்கள் உயரமாகக் காட்சியளிப்பீர்கள். உங்கள் தோள் அகலமாக இரு‌ந்தா‌ல் பஃப் கை கொண்ட கமீஸை அ‌ணியா‌தீ‌ர்க‌ள்.

உங்கள் கைகள் தடித்து இருந்தால் கை வைக்காத கமீஸை அணிய வேண்டாம். குறைந்தது ஐந்து இஞ்ச் நீளம் கொண்ட கையுடன் கூடிய கமீஸை அணிவதால் உங்கள் கைகள் மெலிந்து தோற்றம் அளிக்கும்.

நீங்கள் மெல்லிய உடல் வாகு கொண்டவராக இருந்தால் சைனீஸ் காலர் கொண்ட கமீஸ் அணிவது நல்லது. அதனால் உங்கள் உயரம் கூடுதலாகத் தெரியும். ஆனால் உங்கள் எடை அதிகமாக இருந்தால் இவ்வாறான கமீஸ்களை அணிய வேண்டாம்.

வருகிறது பாக்டீரியா `வெடிகுண்டு’

`வெடிகுண்டு’ விஞ்ஞானம் வளர வளர ஆயுதங்களும் பெருகி வருகின்றன. ஒளியையும், காற்றையும் எதிர்காலத்தில் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்று பிரபல ஜோதிடர் நாஸ்டர்டாமஸ் கணித்துக் கூறி இருக்கிறார். வளர்ந்து வரும் அறிவியல் நவீனங்களும் அதை உண்மைப்படுத்தும் விதத்திலேயே ஆயுதங்களைக் குவித்து வருகின்றன.

சமீபத்தில் அமெரிக்கா, ஒளியை சிறிய அளவிலான ஆயுதமாக பயன்படுத்தும் யுக்தியை கண்டுபிடித்து உள்ளது. ஆனால் அது ராணுவவீரர்களின் மருத்துவ உதவிக்கு பயன்படும் கத்தி என்று அமெரிக்கா அறிவித்தது. இதேபோல விதவிதமான ஆயுதங்கள் பல நாடுகளிடம் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர இருக்கிறது பாக்டீரியா வெடிகுண்டு.

பாக்டீரியா என்பது நுண்ணுயிரியாகும். இதில் சைனோ பாக்டீரியா என்ற ஒரு வகை பாக்டீரியாக் களில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி பெட்ரோலியம் தயாரிக்கிறார்கள்  இதே பாக்டீரியாவில் வேறுசில மாற்றங்களை ஏற்படுத்தினால் அது வெடிக்கும் தன்மை உடையதாக மாறிவிடுகிறது.

அதாவது இந்த பாக்டீரியாவுடன், பாக்டீரியாபேஜ் எனப்படும் மற்றொரு வகை பாக்டீரியாக்களின் ஜீன்களைச் சேர்த்தால் அது இந்த மாற்றத்தைப் பெறுகிறது. பின்னர் அந்த பாக்டீரியாக்கள் `நிக்கல்’ என்ற உலோகத்தை நுகரும் வாய்ப்பு ஏற்பட்டால் வெடித்துச் சிதறுகிறது. எனவே இதனை சிறிய வெடி குண்டாக பயன்படுத்த முடியும்.

பாக்டீரியாக்கள் நுண்கிருமிகள் என்பதால் வேகமாகப் பரவும். அதில் இந்த மாற்றங்களைச் செய்து அனுப்பினால் எதிரிகளின் கோட்டைக்குள் எவ்வித பரிசோதனையிலும் சிக்காமல் உள்ளே நுழைந்து தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிடும். எனவே இது ஒரு ஆபத்தான ஆயுதமாக அவதாரம் எடுக்க இருக்கிறது.

தொப்பை இருக்கிறதா…? நோய்கள் தேடி வரும்… உஷார்

அதிக எடை கொண்ட நடுத்தர வயதினரைப் பல் வேறு நோய்கள் சீக்கிரம் தாக்கும் என்றும், அதன் விளைவாக அவர்கள் வெகு விரைவிலேயே மர ணத்தைத் தழுவ வேண்டி வரும் என்றும் புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த நடுத்தர வயதினரான ஆயிரத்து 758 பேரிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை, அமெரிக்க இதயக் கழகத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பொதுவாக உடல் வளர் சிதை மாற்றத்தின் அடிப் படையில் இயங்கி வருகிறது. இந்த வளர்சிதை மாற்றம் என்பது நமது உணவு மற்றும் உடற்பயிற்சியின் அடிப்படையில் நடப்பது. சரியான சத்தான உணவு உட்கொள்ளாதது, முறையான தேவையான உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் வளர்சிதை மாற் றத்தில் கோளாறு ஏற்படும். அந்தக் கோளாறால் நீரிழிவு, தொப்பை போடுதல், ரத்தத்தில் சர்க் கரை அளவு கூடுதல், டிரைகிளிசரைடு என்ற கொழுப்பு தேவைக்கும் குறைவாக இருத்தல் போன்ற பிரச் னைகள் தோன்றும். வளர் சிதை மாற்றக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஒருவர், இந்த நோய்களால் தாக்கப் பட்டு அற்பாயுசில் உயிரிழக்க வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு அதிக எடை கொண்டவர் களுக்கும், சாதாரண உடல் எடை கொண்டவர் களுக்கும் சமமாகவே இருந்ததாக பழைய ஆய்வுகள் தெரிவித்தன.

இந்நிலையில், சமீபத் தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக எடை கொண்டவர் களுக்கு இதுபோன்ற வளர்சிதை மாற்றக் கோளாறு இல்லையென் றாலும் அவர்கள் நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இரண்டரை மடங்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆய்வில் 63 சதவீதம் பேர் அதிக எடையால் இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

வெங்காய வைத்தியம்

* வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தடை நீங்கும். சிறுநீரை நன்கு வெளியாக்கும்.

* குளிர்சுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வர சுரம் தணியும்.

* உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும்.

* மயக்கமுற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றை பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.

* காதிரைச்சல், காதில் சீழ்வடிதல் முதலிய நோய்களுக்கு வெங்காயச்சாற்றை இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர அவை குணமாகும்.

* பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சர்த்து உண்டு வர மூலச்சூடு தணியும்.

* வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்து வந்தால் இதய நோய்களைத் தவிர்க்கலாம். பல வகையான தோல் நோய்களுக்கும் இது பயன்படுகிறது.

* இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வருவது நல்லது.

* முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகும் சேர்த்து நன்கு அரைத்து உண்டு வர வ¡ந்திபேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். இது வாந்திபேதியின்போது உண்ட¡கும் தாகம், அயர்ச்சி முதலியவைகளுக்கு நல்லது.

* பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.

* நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள்:-

ஈரப்பதம் – 86.6%
புரதம் – 1.2%
கொழுப்புச்சத்து – 0.1%
நார்ச்சத்து – 0.6%
தாதுச்சத்து – 0.4%
கார்போஹைட்ரேட்டுகள் – 11.7%

இதம் தரும் இலைகள்

இலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆதலால்தான் பழங்காலத்தில் இலைகள் பெரும்பாலும் மருந்தில் முலக் கூறுகளாக பயன்படுத்தபட்டன. நமக்கு எளிதாக கிடைக்கும் சில இலைகளின் அபூர்வ பயன்பாடுகளை இங்கே காண்போம்.

செம்பருத்தி இலைகள், பூக்கள் மிகுந்த மருத்துவ பயன்கள் கொண்டவை. இலைகள் தசைவலியை போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் உடையவை. வழுவழுப்பான தன்மை கொண்ட இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது. பூக்கள் குளிர்ச்சி பொருந்தியதால் சருமம் அழகாகும். சிவப்பு பூக்கள்தான் மருத்துவ சிறப்பு வாய்ந்தவை. செம்பருத்தி பூவில் தங்கச்சத்து உண்டு என்று மருத்துவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்பக் கோளாறையும் நீக்கிவிடும்.

ரோஜா, அழகான மலர் மட்டுமல்ல… அசத்த லான மருத்துவ குணங்களும் கொண்டது. ரோஜாவின் வாசனையை முகர்தல் இருதயத் திற்கு பலனைக் கொடுக்கும். சளி குறையும். வெறும் வயிற்றில் பத்து ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால் மேனி மின்னும். மேலும் ரத்தம் சுத்தமாகும். ரோஜா இதழ்களுடன் வெற்றிலை, பாக்கு ஆகியவை சேர்த்து மென்று தின்றால் வாய் நாற்றம் நீங்கும்.

துளசி இலையில் புரதம், கார்போஹைட்ரேட், அமிலச் சத்துகள் மற்றும் உலோகச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. துளசி வேர் பட்டைத் தூள் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும். நாக்கில் தோன்றும் எல்லாவித குறைபாட்டையும் நீக்கும் குணம் உடையது. சருமத்தை சுத்தம் செய்து மென்மை தரக் கூடியது.

வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக் களுக்கு தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகபருக்கள் மறையும். ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைபோல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வர, அம்மை வடு மறையும். வேப்பம்பூவை காய்ச்சி, அதனுடன் நெல்லிக்காய் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் சரும நோய்கள் நீங்கும்.

கறிவேப்பிலையிலிருந்து தயாரிக்கபடும் எண்ணை, அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தபடுகிறது. இது சோப்புகளில் வாசனையை நிலைக்கச் செய்யும். தலை முடி நரைப்பதைத் தடுத்து கேசத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். கறிவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, வேப்பிலையின் கொழுந்து சிறிது சேர்த்து அரைத்து தலையில் பூசி வந்தால் நரை மறையும்.

புதினா இலைகளின் சாறு குளிர்ச்சி தரக் கூடியது. பருக்கள் மற்றும் வடுக்களுக்கு மருந்தாகவும், தோலின் வனப்பை ஊக்கபடுத்தும் டானிக்காகவும் பயன்படுகிறது. இதன் எண்ணை சருமத்திற்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது. குளியல் தைலங்களிலும், இதன் பயன்பாடு அதிகம். பொடுகை அகற்றி கேசத்தின் வேர்க்கால்களில் ஊடுருவி கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

கொத்தமல்லி இலையின் சாறை சருமத்தின் சொரசொரப்பான பகுதிகளில் காலையில் தேய்த்து, மாலையில் குளித்து வந்தால் தோல் தடிப்பு மாறி வழவழப்பாகும். கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். கொத்தமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கபட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டது. வாசனை பொருட் களில் அதிகஅளவில் கொத்தமல்லி பயன்படுகிறது.

தேயிலையில் இருக்கும் `காபின்’ என்ற பொருள் நரம்பு மண்டலத்தின் செயலை ஊக்குவிக்கிறது. கிரீன் டீ என குறிக்கப்படும் தேயிலை தற்போது அழகு சாதன பொருட்களில் பங்கு வகிக்கின்றது. தேயிலையில் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நோயை தடுக்கக் கூடிய `ஆன்டி ஆக்ஸிடென்டுகள்’ உள்ளன. முளையை ஊக்கபடுத்து தல், ஞாபக சக்தி, இளமையைத் தக்க வைத்தல், ஆரோக்கியம் ஆகியவை தேயிலைக்கு உரிய குணங்கள். பற்சிதைவு போன்ற பல் தொடர்பான நோய்களைத் தடுக்கும் வைட்டமின் சி, டி, கே மற்றும் புளோரைடுகள் ஆகியவை இதில் அதிகம் உள்ளன.

கண் மை தயாரிக்கும் முறை

ஒரு செப்புப் பாத்திரத்தை எடுத்து அதன் அடிப்பகுதியைக் கழுவி நன்றாக சுத்தம் செய்து, சுத்தமான துணியால் துடைத்து, புதிதாக உறைத்து அரைக்கப்பட்ட சந்தனத்தை அதில் தடவிக் கொள்ள வேண்டும். மூன்று கற்கள் கொண்ட அடுப்பு அல்லது திரி ஸ்டவ்வின் பாத்திரம் தாங்கும் ஸ்டாண்டின் மீது பாத்திரத்தை வைக்க வேண்டும். ஸ்டாண்டின் அடிப்புறம் விளக்கெண்ணெய் ஊற்றி எரியவிடப்பட்ட அகல் விளக்கு அல்லது உயரம் குறைவான குத்து விளக்கு வைக்க வேண்டும். விளக்கின் சூடு பாத்திரத்தின் அடியில் பூசப்பட்ட சந்தனத்தின் மீது படப்பட அங்கே குவியல் குவியலாக மை சேரும். போதிய அளவு மை சேர்ந்த உடன் பாத்திரத்தை இறக்கி பாத்திரத்திலிருக்கும் கரித்தூ
ளை ஈரம்படாத ஒரு காகிதம் அல்லது பீங்கான் மீது உதிர்த்து விடவும். போதிய அளவு மை சேர்ந்ததும் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து மை பக்குவத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த மையோடு தேவையான வாசனைப் பண்டங்களை சேர்த்துக் கொள்ளலாம். கண்களுக்கு மை தீட்டும் போது முடிந்தவரை அடர்த்தியாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தா‌ய்‌ப்பா‌‌‌‌லி‌‌ல் இரு‌ந்து ஆபரண நகைகள்

த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம்
ஜொ‌லி‌க்க வை‌க்கும். ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் போன்ற ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.

இ‌ந்தக் குழு முத‌‌ன்முத‌லி‌ல் ‘பா‌ல் நெ‌க்ல‌ஸ்’-களை‌த் தயா‌ரி‌‌த்துள்ளது.

‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம். பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.

தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை’ போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன்
உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர்.

இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் “பா‌ல் மு‌த்து‌” (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட
ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல்
அளிக்கக்கூடிய விஷயம்.

நின்ற பாத ஆசனம்

இவ்வாசனம் சிரசாசனம், அர்த்த சிரசாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம். ஒற்றைக் காலில் நிற்பது. வலது காலில் நின்று கொண்டு இடது காலை மடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து ஆசனவாயில் படும்படி நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக் கூடாது. பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். நின்று கொண்டு காலை பத்மாசனத்திற்குப் போடுவது போன்றும் செய்யலாம். மூச்சு சாதாரணமாக விடலாம். பழங்காலக் கோவில்களில் இதுபோன்ற ஆசன நிலையில் உள்ள சிற்பங்கள் பல காணலாம்.

பலன்கள்:

இவ்வாசனம் பார்வைக்கு மிக இலகுவாகத் தோன்றினாலும் இதன் பலன் மிக அதிகம். தியானம், மன ஒருமைப்பாடு, திடசிந்தனை இவைகளுக்கு சிறந்த ஆசனம். வாதம், நரம்புத் தளர்ச்சி, சோம்பேறித்தனம் இவைகள் ஒழியும். மனச் சஞ்சலம் ஒழியும். திடமனது ஏற்படும். காரியங்களைச் செம்மையாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பயம் ஒழியும். ரத்த ஓட்டம் சீர்படும். மன அமைதி பெறும். சஞ்சலங்கள் ஏற்படாது.

பாக்யங்கள் யாவும் தரும் பஞ்சாயுதத் துதி !

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன். அண்டியவரைக் காப்பதும், அவர்களின் குறைகளைப்போக்கி நிறைவாழ்வு அளிப்பதுமே தன் கடமையாகக் கொண்ட அந்தப் பரந்தாமனின் கரங்களை அலங்கரிப்பவை ஐந்து ஆயுதங்கள். சூழ்வினை அறுத்து வாழ்வினை வளமாக்கும் சுதர்சனச் சக்கரமும், கம்பீரமாக ஒலித்து கலக்கமும், பயமும் ஓட்டும் பாஞ்சஜன்ய சங்கு ; பக்தர் தம் பகைபயம் போக்கும் கௌமேதகம் எனும் கதை ; அல்லல்கள் அறுத்து அண்டியவரைக் காக்கும் நந்தக வாள் ; சார்ந்தவர்களின் சங்கடங்களைத் துளைத்து ஓட்டும் சார்ங்கம் எனும் வில் ஆகியவையே அந்த ஆயுதங்கள்.
பக்தர் தம் கோரிக்கைகள் ஈடேற பரந்தாமன் அருள்வதற்கு அவருக்கு உதவுபவை இந்த ஐந்து ஆயுதங்களே. எனவே, இந்த பஞ்சாயுதங்களை பக்தியோடு வழிபடுவது, பக்தவச்லனான திருமாலின் திருவருளைப் பெற உதவும் என்கின்றன புராணங்கள்.
அது மட்டுமல்ல, விஷ்ணு நாமம் போன்ற உயர்வான துதிகளையோ ; திருப்பாவை போன்ற எளிமையான பாடல்களையோ சொன்னாலும் , நிறைவாக பஞ்சாயுதங்களைப் போற்றித் துதிப்பது அவசியம். பக்தர் துயர் துடைக்கும் அந்த பத்மநாபனின் திருக்கரத்து ஆயுதங்கள் ஐந்தையும் போற்றும் ஒப்பற்ற துதி இதோ உங்களுக்காக எளிய தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது. மாதங்களில் மிகவும் உயர்ந்ததாக அந்த மாதவனே சொல்லும் மார்கழி மாதத்தில் இத்துதியை தினமும் ஒருமுறையாவது சொல்லுங்கள்.
திருமாலின் திருக்கரத்து ஆயுதங்கள் உங்களுக்குத் தேனான வாழ்வு கிட்டச் செய்யும். கூடவே திருமாலின் திருவருளும், அதனால் திருமகளின் அருளும் உங்கள் இல்லம் சேரும்.
நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிலைக்கும்.
ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்
சுதர்சன சக்ரம்
ஸ்புரத்“ ஸஹஸ்ரார ஸூகாதி தீவ்ரம்
ஸூதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம் :
ஸூரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ :
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே //
தீச்சுடரைப் போல பலமடங்கு ஒளிவிட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும், கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போல பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.
பாஞ்சஜன்யம் – சங்கு
விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்யத்வநிர் தானவ தர்ப்பஹந்தா : //
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே //
மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளிவரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும் தன் கம்பீர ஓசையால் அசுரர்களுக்கு ஒலி அச்சத்தைக் கொடுக்கக்கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானுதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.
கௌதமேதகம் – கதை
ஹிரண்மயீம் மேருஸமான ஸாரம்
கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
வைகுண்ட வாமாக்ரகராபிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே //
பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியது, வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிசபாக்யம் பெற்றதுமாகிய கௌமேதகம் என்ற கதையை சதா சரணமடைகின்றேன்.
நந்தகம் – வாள்
�க்ஷ� ஸூரணாம் கடிநோக்ர கண்டச்
சேதக்ஷரச் சோணித திக்தரதாரம் /
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே //

35-வயதில் முகம் பளிச்சிட

35 வயதில் தான் ஒரு பெண் முழுமையான அழகுடன் இருக்கிறார் என்கின்றனர், அழகியல்ஆய்வாளர்கள். அழகு குறித்த தெளிவான நிலை, கட்டுக்கோப்பான உடல், தாய்மை மற்றும் பூரிப்புஎன ஒரு பெண், 35 வயதில் அழகின் முழுமையை அடைந்து விடுகின்றனர்.

வயது மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்த நிலைக்கு வருதல், மகிழ்ச்சியானவாழ்க்கை, ஒண்ணோ… ரெண்டோ குழந்தைகளை வளர்த்தல் மற்றும் பிரசவம் என்று பல்வேறுநிலைகளை கடந்த நிலையில் தெளிவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.ஆனாலும், 35 வயதுக்கு பின்னர், சருமபாதுகாப்பு அவசியம் என்கின்றனர் அழகுக்கலைநிபுணர்கள். ஏனென்றால் சருமத்தின் செயல்பாடுகள் மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றன.இதனால் தோலில் படை, தேமல் போன்ற சரும சிக்கல்கள் தோன்றும். மேலும் சருமத்தின்மினுமினுப்பும், பளபளப்பும் குறைய ஆரம்பிக்கும். கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றஆரம்பிக்கும்.

சருமத்தில் வருவதுபோல் கூந்தலிலும் மாற்றங்கள் ஏற்படும். முடி உதிர்தல், முடி முறிதல்,பொடுகுத் தொல்லை, கூந்தல் மினுமினுப்பு மற்றும் ஜொலிப்பு குறைதல் ஆகியவை ஏற்படும். 35வயது கடந்தவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பேஷியல் செய்து கொள்வது நல்லது.

சிலருக்கு சரும சுருக்கங்கள் இருக்கும். இதனால் இளமை குறைய ஆரம்பிக்கும். இதற்கு

`தெர்மோ ஹெர்பல் மாஸ்க்’ போடலாம். இதனால் சருமம் இறுக்கமாகி சுருக்கம் நீங்கும். வயதைகுறைத்துக் காட்ட நிறைய பேஷியல் உள்ளது. சருமத்துக்கு தகுந்த பேஷியலை தேர்ந்தெடுத்துபயன்படுத்தினால் இளமை உங்கள் வசமாகிவிடும்.

வயதை சரியாக வெளிக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது கண்கள்தான். கண்களின் ஓரத்தில்…கீழ்பகுதியில் கேரட் சாற்றில் நனைத்த பஞ்சை, ஒத்தி எடுத்தால் சுருக்கம் மறையும். சிலருக்கு கண்களின் கீழ் பகுதியில் நீர்க்கட்டு போன்று வீங்கி இருக்கும். இதற்கு காரணம் கொலஸ்ட்ராலே… இதை நீக்க… முக்கிய மசாஜ் உள்ளது. சிறந்த பிïட்டி பார்லருக்கு சென்றுமசாஜ் செய்து அதை நீக்கிவிடுவது நல்லது.

35 வயதை கடக்கும்போது, ஹார்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும். இதனால் கழுத்து பகுதியில் கருப்பு நிறத்தில் திட்டுக்கள் போன்று பரவும். குறிப்பாக பல பெண்கள் தங்களுடைய வசதியை… செல்வாக்கை வெளியில் காட்டுவதற்காக… தங்க சங்கிலியை தடிமனாகஅணிவார்கள். தங்க செயினின் உராய்வால் கறுப்பு நிறம் போன்று ஏற்படும். இதற்கு பயறு தூள்,எலுமிச்சை சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்த கலவையை அந்த இடத்தில் பூசி மசாஜ் செய்து கழுவினால் கறுப்பு நிறம் நீங்கும்.

குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சருமத்தில் உள்ள செபேஷியல் சுரப்பிகள் செயல்பாடு குறையும்.மினுமினுப்பு குறையும். இதனால் வறட்சி தோன்றி… முதுமை எட்டிப் பார்க்கும். 35 வயதைகடப்பதால் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை ஏற்படுவதால் மருந்து சாப்பிடுவோம். இதில் உள்ளரசாயனங்கள் உடலில் கலப்பதாலும் வறட்சி ஏற்படும். வாரத்திற்கு ஒருமுறை எண்ணை தேய்த்துகுளித்து வந்தால் வறட்சியை கட்டுப்படுத்தும். படை மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் பிïட்டிபார்லருக்கு சென்று மாற்றி சருமத்தை பாதுகாக்கலாம்.

வயது ஏறஏற கால்களின் மென்மை குறைந்து கரடுமுரடு தன்மைக்கு மாறி வரும். இதற்குஇரவில் தூங்குவதற்கு முன்பாக லேசான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து கால்களை மூழ்கவைக்கவும். கால்மணி நேரம் கழித்து கால்களை எடுத்து… பாதங்களை தேய்த்து கழுவினால்மென்மையாகி அழகாக மாறும். மேலும்
உடம்பும் புத்துணர்ச்சி பெறும்.

அதேபோல், கைகளில் சருமம் வறண்டு… நரம்புகள் வெளியே தெரிந்தால் இளமையாகதோற்றமளிக்காது. நகம் கூட நிறம்மாறி காணப்படும். இதற்கு தினமும் காலை, இரவு வேளைகளில் `ஆன்டி ஏஜிங் க்ரீம்’ அல்லது பேபி லோஷன்களை பயன்படுத்தி மசாஜ் செய்தால்ரத்த ஓட்டம் அதிகரித்து கைகள் இளமையாகும்.

35 வயதில் தலைமுடிக்கு டை போடுவது அவ்வளவு நல்லதல்ல. இப்படி 35 வயதிலேயே

கூந்தலுக்கு டை போடும் பழக்கம் உள்ளவர்கள், கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து டை போடமாட்டார்கள். அதுமட்டுமின்றி, தலைமுடியும் செம்பட்டை நிறத்துக்கு மாறிவிடும்.50 வயதுவரை ஹென்னா பயன்படுத்தலாம். அப்படியே டை போடும் அவசியம் என்றால், டார்க்பிரவுன், பர்கன்டி ஷேட் ஆகிய நிறத்தை பயன்படுத்தலாம். ஹேர் டையில் இருக்கும் அமோனியா தலைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஆதலால் அமோனியா இல்லாத ஹேர்டையை பயன்படுத்துவது நல்லது. அமோனியா இல்லாத ஹேர் டை தற்போது மார்க்கெட்டில் அதிகமாக கிடைக்கின்றன.ஹேர் டை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு படை தோன்றும் வாய்ப்பு அதிகம். ஹேர் டைபயன்படுத்துபவர்கள் மாதம் ஒருமுறை `ஹேர் ஸ்பா’ செய்து கொள்ளவும்.

`மோய்சரேஷர்’, காம்பெக்ட், பவுண்டேஷன் ஆகிய மூன்றும் கலந்த கிரீம் பயன்படுத்துவதுநல்லது.

கண்களுக்கு காஜல் பென்சிலை பயன்படுத்திய பிறகு, பீலிகளுக்கு கிரீம் நிறத்தில் ஐ ஷேடோ கொடுக்க வேண்டும்.

உதடுகளுக்கு இளநிறத்தில் லிப்ஸ்டிக் போட வேண்டும். இயற்கையாக இருக்கும் நிறம் கெட்டுப் போகாமல் இருக்க `லிப் பாம்’ பூசிவிட்டு லிப்ஸ்டிக் போடுவது நல்லது.