Daily Archives: ஜனவரி 20th, 2010

2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம்

* இஸ்ரேல் நாட்டின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்ட நாட்டின் அதிநவீன ரிசாட்-2 என்ற உளவு செயற்கைக்கோளை முதன்முறையாக ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புதிய சாதனை படைத்துள்ளது. ரேடார்கள் பொருத்தப்பட்ட ரிசாட்-2 செயற்கைக் கோள் எல்லைப் பகுதிகளில் நாட்டின் கண்ணாக செயல்படும். எதிரிகளின் ஊடுரு வலைத் தடுக்கவும், தீவிரவாதிகளுக்கு எதி ரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பாதுகாப்புப்படையினருக்கு இது பேருதவி யாக இருக்கும்.

* அண்டார்டிகா பகுதியில் புதிய ஆராய்ச்சி மையம் அமைக்க இந்தியா திட்டமிட் டுள்ளது. இந்த மையம் வரும் 2012-ம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. உலகின் மிக அதிகமான குளிர் பிரதேசமான அண் டார்டிகாவில் ஒன்பது நாடுகள்தான் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங் கள் அமைத்துள்ளன. இப்பெருமையை விரைவில் இந்தியா மீண்டும் பெறவுள்ளது. தற்போது இந்தியா சார்பில் மற்றொரு மையம் புதிதாக நிறுவப்படவுள்ளது. இதற்கு “பாரதி’’ என பெயரிடப்பட்டுள்ளது

* இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசிய பறவை மயில், அதோடு தேசிய நீர்வாழ் விலங்காக டால்பின் அறிவிக்கப்பட் டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலை மையில் டெல்லியில் நடந்த கங்கை நதி ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

* கடல்பரப்பில் நடமாடும் சந்தேகத்துக் குரிய கப்பல்களையும், படகுகளையும் அடையாளம் காண உதவும் டிரான்ஸ் பான்டர் கருவியை இஸ்ரோ தயாரித் துள்ளது. இஸ்ரோ தயாரித்துள்ள இந்தக் கருவிக்கு தானியங்கி அடையாளம் காணும் கருவி (Automatic Identification System) என்று பெயர். இது கனடா நாட்டு உதவி யுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கடலில் வரும் கப்பல் எந்த அளவில், எந்த வடிவில் இருந்தாலும் அதன் நடமாட்டத்தைத் துல்லியமாக அறிய இது உதவும்.

* உலகிலேயே அதிகமாக யுரேனிய வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் 2-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானுடன் இந்தியா விரைவில் அணுசக்தி உடன்பாட்டை மேற்கொள்ள உள்ளது. இந்தியாவின் குடியரசு தினவிழா வில் கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸரபயேவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான அணுசக்தி உடன்பாடு கையெழுத்தானது.

* ஒலியைவிட வேகமாகச் செல்லக் கூடிய பிரமோஸ் ஏவுகணை “பிளாக்-2′ ரகத்தின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. ராஜஸ் தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் பாலை வனப்பகுதியில் இச்சோதனை வெற்றிகரமாக நடந்தது. 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டது. அடுத்த இரண்டரை நிமிடங்களுக்குள் அது இலக்கை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது.

* இந்தியா ரஷ்யாவிடமிருந்து அகுலா-11 என்ற புதிய தலைமுறை முதலாவது அணு நீர்மூழ்கிக் கப்பலை பெற்றது. இந்த அணு நீர்மூழ்கிக் கப்பலால் இந்தியக் கடற் படையின் கடலுக்கடியில் இருந்து தாக்கும் திறன் பல மடங்கு அதிகரிக்கும். கடந்த 25 ஆண்டு களாக அணு நீர்மூழ்கிக் கப்பல் ஏதும் இல்லாமல் இந்தியக் கடற்படை செயல் பட்டு வருகிறது.

* அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று குறிப்பிட்ட இலக்கினை தாக்கவல்ல அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒரிசா கடல்பகுதியில் இருந்து, சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை யின் தாக்குதல் இலக்கிற்கான தொலைவு 3 ஆயிரம் கி.மீ. என்று பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

* அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு மையம் உலகம் முழுவதும் 900 நதிகளை ஆய்வு செய் தது. அதில் இந்தியாவின் கங்கை நதி உட்பட 45 நதிகளின் தண்ணீர் அளவு குறைந்து வருவதாகவும், இந்த நதிகளில் இருந்து கடலில் கலக்கும் தண்ணீர் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் புவி வெப்பமடைவது தொடரும் நிலையில் கங்கை நதி உட்பட 45 நதிகளின் நீரின் அளவு மேலும் குறைந்து 50 ஆண்டு களில் இந்த நதிகளே இல்லாமல் போய்விடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* நாட்டில் உள்ள முக்கியமான வேலை வாய்ப்பு அலுவலகங்கள் கணினிமய மாக்கப்படும் பணிகள் விரைவில் நிறை வடைய உள்ளன. இதனால் முக்கிய வேலை வாய்ப்பு அலுவலகங்கள் ஒன்றாக இணைக் கப்பட்டு அரசு மற்றும் பொதுத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல் களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதி செய்யப்படும்.

* அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கி லாந்து, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அந்த நாடுகளின் வரிசையில் இப்போது இந்தியாவும் சேர்ந்து உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இந்தியா தயாரித்து உள்ளது.

* மகாராஷ்டிரா மாநிலத் தலைநகரான மும்பையின் பாந்த்ரா – ஒர்லி பகுதிகளை இணைக்கும் கடல் வழிப்பாலம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கம்பிகள் இணைப்புடன் கூடிய கடல் மேல் அமைந்த இந்தியாவின் முதல் நீளமான பாலம் இதுவாகும்.

* உலகளவில் பழமையான பண்பாடு, கலா சாரங்களை கொண்ட மொழிகள், விளை யாட்டு, பண்டிகை, விழாக்கள், கலைகள் ஆகியவற்றை கண்டறிந்து யுனெஸ்கோ தனது பட்டியலில் சேர்த்துக் கொள்கிறது. இதில் மைசூரில் நடைபெறும் தசரா விழா, சிரவணபெலகொலா மஹாமஸ்தாபிஷே கம், நாட்டுபுறபாடல் மற்றும் கோலாட் டம் ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது

* 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. உடல் ஊனமுற்றோருக்கு 18 வயது வரை இலவசக் கல்வியை இந்த மசோதா உறுதி செய்கிறது.

* ஆசியாவில் முதல்முறையாக, இந்தியாவில் ஒரு பெண் ரயில் இன்ஜின் டிரைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஆசியாவின் முதல் மோட்டார் பெண் என்று பெயர் பெற்றவர். மகாராஷ்டிரா மாநிலம் சதாரா வில் பிறந்த சுரேகா ஜாதவ் என்ற பெண்தான் இந்த பெருமைக்குரியவராவார்.

* நமது நாட்டின் கடல் பரப்பில் எங்கெல் லாம் மீன் வளம் உள்ளது என்பதையும், கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்யும் திறனையும் கொண்ட ஓசன்சாட்-2 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத் தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம்

* தூர்தர்ஷன் தனது பொன்விழா ஆண்டில் தடம் பதித்துள்ளது. தூர்தர்ஷன் கடந்த 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தில்லியில் 25 கிலோமீட்டர் சுற்றள வுக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங் கியது.

* ஐக்கிய நாடுகளுக்கான உலக சுற்றுலா அமைப்பின் நிர்வாகக் குழுவுக்கு மீண்டும் தேர்வாகி உள்ளது இந்தியா. இந்த பதவியின் காலம் நான்கு ஆண்டுகள். கடந்த 19 ஆண்டுகளாக இந்த அமைப்பின் நிர்வாகக் குழுவில் இந்தியா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது

* இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்திரயான்-1 என்ற செயற்கை கோளை, சந்திரனுக்கு அனுப்பியது.அந்த செயற்கைகோளில் அமெரிக்காவின் விண் வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) தயாரித்த “”எம்-3” என்ற சக்திவாய்ந்த கருவி இணைக் கப்பட்டு இருந்தது. இந்த கருவி சந்திரனின் மேற்பரப்பில் இருந்து ஏராளமான போட்டோ படங்களை எடுத்து அனுப் பியது. இவற்றை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். இந்த ஆராய்ச்சி யில், சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதி ஆகி இருக்கிறது.

* கடல் வளம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் “ஓஷன் சாட்-2′ என்ற செயற்கைகோளை உருவாக்கினார்கள். இந்த செயற்கைகோளுடன் ஐரோப்பிய நாட்டு பல்கலைக்கழகங்களின் 6 சிறிய செயற்கைகோள்களும் “பி.எஸ்.எல்.வி-சி-14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப் பட்டது.

* நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச் சுறுத்தலை தடுப்பதற்கும், சட்ட விரோத மாக குடியேறுபவர்களை தடுக்கவும் அனை வருக்கும் அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவெடுத்து இதற்கான அறிவிப் பையும் வெளியிட்டது.
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு

முடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. ஐம்பெருங் குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங் கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட ஜனநாயகக் குருத்துகள் எனலாம்.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919Š-ஆம் ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டமாக நடை முறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .

அப்போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது. இரட்டையாட்சி முறையை ஏற்க வில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.

மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.

சென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதர வுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ் வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.

1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதல மைச்சராகப் பொறுப்பேற்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர். இரண்டாம் உலகப்போரில் இந்தி யாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.

1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.

இந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழி லாளர்களுக்குநலன் விளைவித்தார் ராஜாஜி. அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக் கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங் கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார்.

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.

மூத்தவர்கள் பதவி விலகி, புதியவர்களுக்கு வழிவிடுவது என்ற அவரது திட்டத்தின்படி முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகிய தால் 1963-ல் பக்தவத்சலம் முதல்வரானார். இவ ரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. மாண வர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி முதல்வர்.

1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப் பேற்றுக் கொண்டார். இரண்டாண்டுகளுக் கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்த திருமணச் சட்டம், இரு மொழித் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, போக்குவரத்து நாட்டுடைமை, இரண் டாம் உலகத்தமிழ் மாநாடு ஆகியவை இவரது ஆட்சியின் சாதனைகளாகும். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா காலமானார்.

அண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-1971, 1971-76, 1989-91, 1996-2001, 2006 முதல் தற்போது வரை என 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ளார். இதில் இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகபிற் படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித்திட்டம், குடிசை மாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்து சாதனை களாகும். தொழில்வாய்ப்புகள் பலவற்றை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக மதுவிலக்கைத் தளர்த்தியது இவரது ஆட்சியே. மாநிலத்தில் உள்ள பல பாலங்கள், கட்டிடங்கள் இவரது ஆட்சியில் கட்டப் பட்டவை. வள்ளுவர்கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், குமரிமுனையில் வள்ளுவர் சிலை ஆகியவை இவர் படைத்த பண்பாட்டுச் சின்னங்களாகும்.

தி.மு.கவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். தனது தலைமையில் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து இயற்கையெய்தும் வரை அதே பொறுப்பில் இருந்தவர். சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற் சாலை ஆகியவை இவரது ஆட்சியின் சாதனை களாகும். சுயநிதி தொழிற்கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் தோன்றின. ஏழை- எளிய மக்களின் நலனை மனதிற்கொண்டு இவர் ஆட்சி செய்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவரது துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இவரால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆட்சி கலைக்கப் பட்டது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார். 1991-96, 2001-2006 என இருமுறை முதல்வராகி 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய் துள்ளார். இடையில், சட்டச்சிக்கல் காரண மாக இவரது பதவி பறிபோனதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அனைத்து மகளிர் காவல்நிலையம், கோவில் களில் அன்னதானம், மழை நீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர் ஆகியவை இவரது ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங் களாகும். சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை, காஞ்சி சங்கராச் சாரியார் கைது ஆகியவை ஜெயலலிதா ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகளாகும். பொடா சட்டத்தைப் பயன்படுத்தி நக்கீரன் ஆசிரியர் கோபால், அரசியல் தலைவர்கள் வைகோ, நெடுமாறன் ஆகியோரை கைது செய்தது, அரசு ஊழியர் கள் மீதான நடவடிக்கைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, ஆளுநர் மீது தாக்குதல், மகாமக குளத்தில் ஏற் பட்ட பலிகள், விவசாயிகளின் பட்டினிச் சாவு, நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த அவலம், வளர்ப்பு மகன் ஆடம்பரத் திரு மணம் ஆகியவை இவரது ஆட்சி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கின.

தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி அமைந்ததால் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ள அதே வேளையில், காவிரி பிரச் சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாற்று விவகாரம் , கச்சத்தீவு ஒப்பந்தம் என தமிழகத்தின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. ஜன நாயகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடு களுக் குத் தூண்டுகோலாக அமைவது எதிர் கட்சி களின் செயல்பாடுகளேயாகும். காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூலி உயர்வுச் சட்டம், நில உச்சவரம்பு சட்டம் ஆகியவை விவசாயிகளின் நலனுக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களின் விளைவுகளே. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு கிடைத்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சி (வன்னியர் சங்கம்) நடத்திய போராட்டங்களே அடிப்படை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமைகளைப் பெறுவதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட் டவை தொடர்ந்து போராடி வருகின்றன. சிறு பான்மை அமைப்புகள், சமுதாய இயக்கங் கள் ஆகியவை நடத்தும் போராட்டங்களின் தாக்கம் அரசின் திட்டங்களை விரைவுபடுத்து கின்றன. எனவே, ஆட்சியில் பங்கு பெற முடியா விட்டாலும் மக்களுக்கானப் போராட்டங் களை நடத்தும் கட்சிகள் தங்கள் கொள்கை களில் வெற்றி பெறுகின்றன.

நீதிக்கட்சி-காங்கிரஸ் – தி.மு.க- அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்துள்ளன. இந்த ஆட்சிகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களினால் சமூகநீதி-சமுதாய நல்லிணக்கம்- தனிநபர் வளர்ச்சி- புதிய தொழில்நுட்பம்- ஏழைகளுக்கான நலத் திட்டங்கள்- புதிய முதலீடுகள்-பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் தமிழகம் இந்தி யாவின் பல மாநிலங்களுக்கும் முன்னோடி யாகத் திகழ்கிறது. பரவலான தொழில் வாய்ப்பு கள், நீராதாரங்களைப் பெருக்குதல், சிறு தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி போன்ற துறைகளில் பல படிகள் முன்னேற வேண்டி யுள்ளது. சுயநலன், ஊழல், அரசியல் காழ்ப் புணர்ச்சி, தனிநபர் மீதான தாக்குதல் இவற் றைப் பின்தள்ளி மாநில நலனை ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மனதில் கொண்டு செயல்பட்டால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற்ற மாநிலமாகத் திகழும்.

பேஷன் டிப்ஸ்

கூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது.

கிளாஸ் அணிவது வெறும் ஃபேஷன் என்று நினைத்து, கண்டதை அணிந்துவிட வேண்டாம். கண்ணுக்கே உலை வைத்துவிடக் கூடும்.

கால் பகுதி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை முழங்காலுக்கு மேல் வெட்டி அதை ஷார்ட்ஸாக மாற்றலாம்.

குர்த்தா பொதுவாக முழங்காலுக்கு மேல் 4 முதல் 4 அங்குலம் உயரம் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.

ஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.

உடைகள் வாங்கும் போது கவனம். இறுக்கமான உடைகள் உங்களை குண்டாக காட்சியளிக்க வைக்கும். சரியாக பொருந்தும் உடைகளே சிறந்தவை.
மெல்லிய நெடுக்குக் கோடுகள் (Vertical Stripes) போட்ட உடைகள் உங்களுக்கு மெலிந்த தோற்றத்தை தரும்.

பழைய `டாப்ஸ்‘ அல்லது `சல்வார் கமீஸை‘ புதியதாக மாற்ற எளிய வழி. புதிய பட்டன், லேஸ் அல்லது எம்பிராய்டரி சேர்த்தால் புது உடை ரெடி!ஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.

கோடை காலத்தில் எப்பொழுதும் ‘பேஸ்டல்‘ நிற உடைகளை அணியுங்கள்

புதிய ஃபேஷன் : குட்டையான கை அல்லது கையில்லாத ‘ஸ்லீவ் லெஸ்‘ உடை

பழைய ஃபேஷன் : நீண்ட கை வைத்த உடைகள்

பயர்பாக்ஸ் பேட்ச் பைல்


அண்மையில் பயர்பாக்ஸ் 3.5.6 பிரவுசரில் உள்ள பல பிரச்னை களைத் தீர்க்கும் அப்டேட் பேட்ச் பைல் ஒன்றை, மொஸில்லா வெளியிட்டுள்ளது. இவற்றில் சில மிக ஆபத்தான வையாக இருந்தன. 62 இடங்களில் பிழை கண்டறியப்பட்டு, இந்த பேட்ச் பைல் மூலம் சரி செய்யப்பட்டுள்ளன. இதனுடன் கிடைத்துள்ள வெளியீட்டுக் குறிப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் மிக மிக முக்கியமான மூன்று பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகையில் பயர்பாக்ஸ் பிரவுசர் மெமரியில் பிரச்னைகளை ஏற்படுத்தியது எனவும், அது சரி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவை தவிர 62 இடங்களில் இருந்த சில குறைகளும் களையப்பட்டுள்ளன. இந்த பேட்ச் பைலை கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிப் பயன்படுத்தலாம். http://enus.www.mozilla.com/enUS/products/download.html?product=firefox3.5.6&os=win&lang=enUS இதனால் நமோரகா (Namoroka) என்ற பெயரில் வெளியிடப்படப் போவதாக இருந்த பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 3.6 இன்னும் கொஞ்சம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது.

`வடக்கே’ சூடு பறக்கும் காபி!

ஒருநாளை சுறுசுறுப்பாகத் தொடங்கப் பலருக்கு உதவுவதே காபிதான். அது இல்லாவிட்டால் பொழுதே விடியாது. தென்னிந்தியர்கள் விரும்பி ருசிக்கும் பானம் என்றாலும், வடஇந்தியர்களுக்கும் விருப்பமானதுதான் காபி. தென்னிந்தியாவில் காபி `கபே’களில் விற்பனை சற்றே சரிவடைந்திருக்கும் நிலையில், வடஇந்தியாவில் உயர்ந்து வருகிறது.

இந்தச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கும் தகவல்படி, வடஇந்தியாவில் 2005-2008-ம் ஆண்டு காலகட்டத்தில் சங்கிலித் தொடர் காபி கபேக்களில் விற்பனை .84 சதவீதம் கூடியுள்ளது. அதற்கு அடுத்ததாக மேற்கிந்தியாவில் 0.72 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது. கிழக்கில் இலேசான உயர்வாக 0.17 சதவீதம் அதிகரித்
துள்ளது.

ஆனால், ஆச்சரிய ட்டும் விதமாக `இந்திய காபியின் தொட்டில்’ என்று கருதப்படும் தென்னிந்தியாவில், குறிப்பிட்ட காலகட்டத்தில் காபி விற்பனை 1.73 சதவீதம் சரிவடைந்துள்ளது.

காபி அதிகமாகப் பருகும் பாரம்பரியம் இல்லாத பகுதிகளில், வீட்டுக்கு வெளியே ஒரு சமுகப் பானமாக அது பருகப்படுகிறது.

ஒரு முன்னணி காபி `கபே’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான அலோக் குப்தா, `காபி பாரம்பரியம்’ இல்லாத பகுதிகளில் இந்த ஆண்டு 30 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார். தற்போது நாடெங்கும் 821 கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் கிளைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்.

காபி பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேசிய தலைநகரப் பிராந்தியம், குஜராத், உத்தராஞ்சல் போன்றவை காபி கபே நிறுவனங்களின் முக்கிய இலக்காகியுள்ளன.

இத்தாலிய காபி தொடர் நிறுவனமான `பரிஸ்டா லவாஸா’வின் தலைமைச் செயல்பாட்டு அலுவலரான சஞ்சய் கவுட்டினோ, “தென்னிந்தியாவில் மக்கள் பானம் பருகும் முறையில் பரீட்சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வது கடினம். ஆனால் மற்ற பகுதிகளிலும் நல்ல வாய்ப்பும், சந்தை வளர்ச்சிக்கான வழியும் உள்ளது” என்கிறார்.

தங்கள் நிறுவனத்தின் 80 சதவீத புதிய கிளைகள் `காபி பாரம்பரியம்’ அல்லாத பகுதிகளிலேயே அமைக்கப்படுவதாக இவர் கூறுகிறார்.

வடஇந்தியாவில் காபி கபேக்களுக்கான தேவை அதிகரித்து வந்த போதிலும் பொருட்களை அனுப்பும் செலவு அதிகரிப்பதும், 12.5 சதவீத `வாட்’ வரியும் தங்களை புதிய முயற்சிகளில் ஈடுபட விடாமல் தடுப்பதாக `கோதாஸ் காபி’ நிறுவனத்தின் பங்குதாரரான சி.பி. சந்தன் கூறுகிறார்.

இந்தச் சந்தை நிபுணர்கள் கூறுகையில், தென்னிந்தியா அல்லாத பகுதிகளில் வழக்கமான காபி, `எக்ஸ்பிரஸோ’ மற்றும் பிற வகைகளின் விற்பனை அதிகரிப்புக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர்.

தாகம் எடுத்தால்-தண்ணீர்


தாகம் எடுத்தால் தான் பெரும்பாலானோர் தண்ணீர் குடிக்கின்றனர். பெண்கள் வெளியிடங்களுக்கு செல்வது என்றால் தண்ணீர் பக்கமே தலைகாட்ட மாட்டார்கள். இதெல்லாம் நல்லதல்ல; அடிக்கடி தண்ணீர் அருந்துவதுதான் உடலுக்கு நல்லது.

ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர்கூட குடிக்காமல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தலைவலி ஏற்படுவதோடு நமது கவனமும் சிதறும்.

உடற்பயிற்சி செய்யும்போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால், அப்போது நமது உடலில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு வியர்வை துளி முலமும் உப்புச்சத்தை இழக்கிறோம். இயல்பாக நமது உடலில் ஒரு நாளைக்கு 2-ல் இருந்து 3 லிட்டர் நீர்ச்சத்து சுரக்க வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் திரவ உணவு முலமே இதனை அடைய முடியும்.

இயல்பான தட்பவெப்ப நிலையில் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது போதுமானது. கடும் வெப்பம் நிலவும் கோடை காலத்திலும், உடற்பயிற்சியின்போதும் வழக்கத்தைவிட கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

இஞ்சியின் மகத்துவம்

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

இஞ்சியை உணவில் சேருங்கள்:
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இஞ்சியை, தட்டி தேனீர் கொதிக்க வக்கும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து தேனீர் பருகலாம். சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது.
சில சமையல் வகைகளில் இஞ்சியை மசித்துப் போட்டு செய்வார்கள். அதுபோன்ற உணவு வகைகள் வயிற்றைக் கெடுப்பதில்லை.

அலர்ஜி ஏன்?

அலர்ஜி காரணமாக பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள மக்களே அதிக ஒவ்வாமையால் (அலர்ஜி) பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் நகர்ப்புற மக்களையே இந்த ஒவ்வாமை அதிகம் தாக்குகிறது.

இயந்திரமயமான வாழ்க்கை முறை காரணமாக 40 சதவீதம் பேர் ஒவ்வாமையால் அவதியுறுகின்றனர்.

ஒவ்வாமை என்பது சுகாதாரமற்ற சூழலுக்கு சுகாதாரத்துடன் விளங்கும் ஒரு பொருள் செல்லும்போது வெளிப்படுத்தும் எதிர்விளைவே ஒவ்வாமையாகும்.

ஆற்றல் மிகுந்த ஒவ்வாத பொருள் உடலுக்குள் செல்லும் நிலையில், அது குறித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக உஷ-õர் செய்வதுதான் அலர்ஜி.

இதனால் தொடர்ந்து தும்மல், மூக்கு, கண்களில் எரிச்சல், நீர் ஒழுகுதல், சருமத்தில் தடிப்பு போன்றவை ஏற்படும். இதுவே ஒவ்வாமையின் அறிகுறியாகும்.

அலர்ஜி எதனால் ஏற்படுகிறது. இதனால் உடல் பாதிக்கப்படுமா என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றும்.

பரம்பரையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களுக்கு அலர்ஜி உண்டாகும். பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச்சூழலால்தான் பெரும் பாலானோருக்கு அலர்ஜி உருவாகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் சுகாதார சீர்கேடு அதிகம் ஏற்படுகிறது. நகரத்தை சுற்றி எண்ணற்ற தொழிற் கூடங்கள் அமைந்துள்ளன. நகர வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல இலட்சங்களை தாண்டிவிட்டது. இந்த தொழிற்சாலைகளும், வாகனங்களும் விடும் புகையே காற்று மண்டலத்தை மாசடைய செய்துவிட்டன. இந்தக் காற்றை சுவாசிக்கும் மனிதர்களின் உடலானது பலவகையில் பாதிக்கப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் ஒவ்வாமை.

கழிவுநீர், சுகாதாரமற்ற குடிநீர், உணவு, தேங்கி நிற்கும் சாக்கடை நீர், நாற்றம் வீசும் குப்பைகள், மனிதக் கழிவுகள் இவற்றாலும் உடலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பாகிறது.

மேலும் சிலருக்கு உணவுப் பொருட்களாலும் ஒவ்வாமை உண்டாகும். முட்டை, பால், கருவாடு, கத்தரிக்காய் போன்றவற்றாலும், புளித்துப்போன பொருட்களாலும் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்.

நவீன காலத்தில் வேதிப்பொருள்கள் கலந்த குளியல் சோப், ஷாம்பு வகைகள் இவற்றாலும், தரமற்ற ஆடைகளாலும் ஒவ்வாமை ஏற்படலாம்.

குளிரூட்டப்பட்ட அறைகளில் நீண்ட நேரம் இருப்பவர்கள், உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய மாத்திரை, மருந்துகள் இவற்றாலும் ஒவ்வாமை உண்டாகிறது.

சிகரெட் புகை, வேதிப் பொருள்கள், குளிர்காற்று உள்ளிட்ட தட்பவெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் நாசிகளில் உள்ள திரவப் படலம் வீக்கம் உண்டாகி அலர்ஜி ஏற்படுகிறது.

வீட்டைப் பொருத்தவரை தூசு, நுண் பூச்சி, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளின் முடியில் குடியிருக்கும் நுண்ணிய கிருமிகள், தலையணை, மெத்தை விரிப்பு, போர்வை இவைகளில் ஒளிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத மாசுப் பொருட்கள் ஒவ்வாமையை உருவாக்க காரணமாகின்றன.

கரப்பான் பூச்சி, எலிகள், கம்பளிப் பூச்சி இவைகள் சருமத்தில் அலர்ஜி உண்டாக்கும்.

தோட்டங்களுக்கு விடப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் அலர்ஜி உருவாகிறது.

ஒவ்வாமையானது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இதற்கு முக்கிய காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இன்மையே. உடலுக்கு ஒவ்வாத பொருட்களை அழிக்கும் தன்மையுடைய வெள்ளையணுக்கள் சக்தியின்றி இருப்பதால் ஒவ்வாமை உண்டாகிறது.

இதனால் தொடர்ந்து ஜலதோஷம், தும்மல், மூக்கின் சுவாசப் பாதையில் அடைப்பு, வறட்டு இருமல், முகப்பகுதியில் வலி, எந்த வாசனையைம் அறியமுடியாத நிலை, குரலில் மாற்றம், ஒற்றைத் தலைவலி, தலையில் நீர் கோர்த்துக்கொள்வது போன்றவை உண்டாகும்.

மேலும் ஒவ்வாமை காரணமாக காது பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு காதுவலி உண்டாகும். நாள் செல்லச்செல்ல காதில் சீழ் வடிய ஆரம்பிக்கும்.

ஒவ்வாமை பெரும்பாலும் மூக்கு தொடர்புடைய சுவாசப் பாதைகளையே அதிகம் பாதிக்கும்.

இந்த ஒவ்வாமையால்தான் நுரையீரலின் மூச்சுக்குழாய்களில் அலர்ஜி ஏற்பட்டு ஆஸ்துமா வாக மாறிவிடுகிறது.

சில சமயங்களில் மூக்குப் பாதைகளில் உள்ள திசுக்கள் வீக்கம் அடைந்து மூக்கு எலும்பை அரிக்கத் தொடங்கிவிடும். மேலும் இது சைனஸ் அறைகளைத் தாண்டி கண், மூளை போன்றவற்றிற்கு பரவ ஆரம்பித்து இறுதியில் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

பொதுவாக குழந்தைகளுக்கு ஒவ்வாமை சரியான தூக்கமின்மையை உண்டாகும். படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் தவிப்பார்கள். காது சரிவர கேட்காது. பசி எடுக்காது. வளர்ச்சியில் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால் அவை நாளடைவில் அரிக்கத் தொடங்கி புண்களை உருவாக்கி சருமத்தை பாதிப்படையச் செய்யும்.

ஒவ்வாமையை தடுக்க

· அடிக்கடி ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி எதனால் ஒவ்வாமை உண்டானது என்பதை ஆராய்ந்து அதற்கேற்றார்போல் சிகிச்சை மேற்கொண்டால் ஒவ்வாமையிலிருந்து விடுபட முடியும்.

· உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளான கீரைகள், பழங்கள், போன்றவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

· அதிக தூசு உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள். அப்படி செல்ல நேர்ந்தால் மூக்குக் கவசம் அணிந்துகொள்ளுங்கள்.

· அதுபோல் இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும் மூக்குக் கவசம் அணிந்து கொள்வது நல்லது.

· குளிர்ந்த பானங்களைத் தவிர்த்தல் நல்லது. வெயிலில் அலைந்து திரிந்து வந்தவுடன் குளிர்ந்த நீரைப் பருகக் கூடாது.

· உடலுக்கு ஒவ்வாத உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

· அதிக தும்மல், மூக்கில் நீர்வடிதல் தொடர்ந்து இருந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

· நன்கு காய்ச்சிய குடிநீரைப் மட்டும் பருக வேண்டும்.

ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களையும் இடங்களையும் தவிர்த்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.

ஹேக்கர்களின் புதிய இலக்குகள்

கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது.
அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் புரோகிராம்களுக்குள் புக முயற்சிப்பதனையும் ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கேற்ற வகையில் அவற்றை முறியடிக்க தங்கள் நிறுவனம் பேட்ச் பைல்களைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றுடன் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஆப்பிள் நிறுவனத் தின் குயிக் டைம் புரோகிராமில் இத்தகைய தாக்குதல்கள், அண்மைக் காலங்களில் அதிகமாகி உள்ளதையும் மேக் அபி நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது.
மேலும் இது பற்றிக் கூறுகையில், சோஷியல் நெட்வொர்க் தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் இந்த தாக்குதல் அதிக அளவில் இந்த ஆண்டு இருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால் பன்னாட்டளவில் இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த சைபர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டு அமலாக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த வகை குற்றங்கள் குறையவும் வாய்ப்புகள் உள்ளன.

சூர்ய சக்தி -ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

குழந்தைகளுக்குத் தாய் ஸ்தன்யபானம் பண்ணுவிக்கிற மாதிரி லோகமாதா அத்தனை ஜீவராசிகளுக்கும், தாவரங்களுக்குங்கூட சூர்ய சந்திரர்களின் கிரண தாரைகளால் பாலூட்டுகிறாள். தாவரங்களுக்கும் ஜீவன் உண்டு. ஜகதீஷ் சந்திரபோஸ் இந்த (சென்ற) நூற்றாண்டு ஆரம்பத்தில் இதை ஸபன்ஸ்படி நிரூபித்துக் காட்டுவதற்கு ரொம்ப முன்னால், வேத காலத்திலிருந்தே தாவஙர்களுக்கு உயிரும் உணர்ச்சியும் உண்டு என்பதை நமக்குத் தெரியும்.
சூர்ய சந்திரர்களின் பிரகாசத்தால் உணவூட்டுகிறாள்; உயிரூட்டுகிறாள் என்றால் என்ன அர்த்தம்? தாவரங்கள் நேராகத் தாங்களே. ஜீவ சத்தை சூர்யனிடமிருந்து பெறுகின்றன. அதோடு நிற்காமல் பரோபகாரமாக இப்படி நேரே சூர்யனிடமிருந்து ஜீவ சத்தைப் பெற முடியாத நமக்காகவும் தாவரங்களே நாம் அடுப்பு முட்டிச் சமைக்கிற மாதிரி சூர்ய உஷ்ணத்தில் அந்த சூர்ய சக்தியையே நமக்கு ஜீர்ணமாகிற மாதிரி ரூபத்தில் சேமித்து வைத்துக் கொள்கின்றன.
சூர்ய சக்தியாலேயே biosphere என்கிறதாக இந்த லோகம், ஜீவ லோகமாக இருக்கிறது. சூர்யனுடைய வெளிச்சத்திலே ஓயாமல் ரீலீஸாகிக் கொண்டேயிருக்கும் சக்தி ஸகல அணுக்களுக்குள்ளேயும் வியாபித்தும், தாவர வர்க்கத்தில் மேலே சொன்னாற்போல ஃபோட்டோஸிந்தஸிஸ் உண்டாக்கியுந்தான் ஜீவ ப்ரபஞ்சத்தை நடத்துகிறது என்று இப்போது ஸயன்ஸில் சொல்வதை எத்தனையோ யுகம் முந்தியே நம்முடைய வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. தாவரம் மாதிரியே நாமும் நேரே அந்த சக்தியைப் பெறுகிறதற்குத்தான் காயத்ரி முதலான மந்த்ரங்களைக் கொடுத்திருக்கிறது. பல படி மேலே போய் தேஹ சக்தியோடு நிறுத்திக் கொள்ளாமல் புத்தி சக்தி, பரமார்த்திகமான ஸாதண சக்தி ஆகியவற்றையும் அவனிடமிருந்து க்ரஹித்துக் கொள்வதற்கு காயத்ரியைக் கொடுத்திருக்கிறது. அங்கே ஸவிதா, ஸாவித்ரி என்று நம்மைப் பெற்றெடுத்து வாழ்வு தருகிற ப்ரியமான தாயாகவே சூர்ய சக்தியைச் சொல்லியிருக்கிறது. இந்த சக்தியும் ஆதிசக்தியான பராசக்தி என்ற மூலமான தாயாரின் அங்கந்தான் – பாலூட்டும் அங்கந்தான் – என்கிறார் ஆசார்யாள்.
– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.