தாகம் எடுத்தால்-தண்ணீர்


தாகம் எடுத்தால் தான் பெரும்பாலானோர் தண்ணீர் குடிக்கின்றனர். பெண்கள் வெளியிடங்களுக்கு செல்வது என்றால் தண்ணீர் பக்கமே தலைகாட்ட மாட்டார்கள். இதெல்லாம் நல்லதல்ல; அடிக்கடி தண்ணீர் அருந்துவதுதான் உடலுக்கு நல்லது.

ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர்கூட குடிக்காமல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தலைவலி ஏற்படுவதோடு நமது கவனமும் சிதறும்.

உடற்பயிற்சி செய்யும்போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால், அப்போது நமது உடலில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு வியர்வை துளி முலமும் உப்புச்சத்தை இழக்கிறோம். இயல்பாக நமது உடலில் ஒரு நாளைக்கு 2-ல் இருந்து 3 லிட்டர் நீர்ச்சத்து சுரக்க வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் திரவ உணவு முலமே இதனை அடைய முடியும்.

இயல்பான தட்பவெப்ப நிலையில் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது போதுமானது. கடும் வெப்பம் நிலவும் கோடை காலத்திலும், உடற்பயிற்சியின்போதும் வழக்கத்தைவிட கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

%d bloggers like this: