`வடக்கே’ சூடு பறக்கும் காபி!

ஒருநாளை சுறுசுறுப்பாகத் தொடங்கப் பலருக்கு உதவுவதே காபிதான். அது இல்லாவிட்டால் பொழுதே விடியாது. தென்னிந்தியர்கள் விரும்பி ருசிக்கும் பானம் என்றாலும், வடஇந்தியர்களுக்கும் விருப்பமானதுதான் காபி. தென்னிந்தியாவில் காபி `கபே’களில் விற்பனை சற்றே சரிவடைந்திருக்கும் நிலையில், வடஇந்தியாவில் உயர்ந்து வருகிறது.

இந்தச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கும் தகவல்படி, வடஇந்தியாவில் 2005-2008-ம் ஆண்டு காலகட்டத்தில் சங்கிலித் தொடர் காபி கபேக்களில் விற்பனை .84 சதவீதம் கூடியுள்ளது. அதற்கு அடுத்ததாக மேற்கிந்தியாவில் 0.72 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது. கிழக்கில் இலேசான உயர்வாக 0.17 சதவீதம் அதிகரித்
துள்ளது.

ஆனால், ஆச்சரிய ட்டும் விதமாக `இந்திய காபியின் தொட்டில்’ என்று கருதப்படும் தென்னிந்தியாவில், குறிப்பிட்ட காலகட்டத்தில் காபி விற்பனை 1.73 சதவீதம் சரிவடைந்துள்ளது.

காபி அதிகமாகப் பருகும் பாரம்பரியம் இல்லாத பகுதிகளில், வீட்டுக்கு வெளியே ஒரு சமுகப் பானமாக அது பருகப்படுகிறது.

ஒரு முன்னணி காபி `கபே’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான அலோக் குப்தா, `காபி பாரம்பரியம்’ இல்லாத பகுதிகளில் இந்த ஆண்டு 30 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார். தற்போது நாடெங்கும் 821 கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் கிளைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்.

காபி பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேசிய தலைநகரப் பிராந்தியம், குஜராத், உத்தராஞ்சல் போன்றவை காபி கபே நிறுவனங்களின் முக்கிய இலக்காகியுள்ளன.

இத்தாலிய காபி தொடர் நிறுவனமான `பரிஸ்டா லவாஸா’வின் தலைமைச் செயல்பாட்டு அலுவலரான சஞ்சய் கவுட்டினோ, “தென்னிந்தியாவில் மக்கள் பானம் பருகும் முறையில் பரீட்சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வது கடினம். ஆனால் மற்ற பகுதிகளிலும் நல்ல வாய்ப்பும், சந்தை வளர்ச்சிக்கான வழியும் உள்ளது” என்கிறார்.

தங்கள் நிறுவனத்தின் 80 சதவீத புதிய கிளைகள் `காபி பாரம்பரியம்’ அல்லாத பகுதிகளிலேயே அமைக்கப்படுவதாக இவர் கூறுகிறார்.

வடஇந்தியாவில் காபி கபேக்களுக்கான தேவை அதிகரித்து வந்த போதிலும் பொருட்களை அனுப்பும் செலவு அதிகரிப்பதும், 12.5 சதவீத `வாட்’ வரியும் தங்களை புதிய முயற்சிகளில் ஈடுபட விடாமல் தடுப்பதாக `கோதாஸ் காபி’ நிறுவனத்தின் பங்குதாரரான சி.பி. சந்தன் கூறுகிறார்.

இந்தச் சந்தை நிபுணர்கள் கூறுகையில், தென்னிந்தியா அல்லாத பகுதிகளில் வழக்கமான காபி, `எக்ஸ்பிரஸோ’ மற்றும் பிற வகைகளின் விற்பனை அதிகரிப்புக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர்.

%d bloggers like this: