Daily Archives: ஜனவரி 22nd, 2010

அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்…

சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் இன்றைய இளைய தலைமுறையினரை பாகுபடுத்த முடியாது. பெற்றோரின் அக்கறையான கவனிப்பு, படிப்புக்கேற்ற வேலை என்று எளிதில் வாழ்க்கையில் முன்னேறி விடுவதால் விருப்பம்போல சாப்பிடுகிறார்கள்.

அழகாக உடை அணிந்து செல்லும் இளைய தலைமுறையின ருக்கு குட்டித் தொப்பை(ஆரம்பமாவதை)யை காணமுடிகிறது. இது உடலில் கொழுப்பு அதிகமாகிவிட்டதற்கான அடையாளம்.

இப்படி அடிவயிற்றில் கொழுப்பு படிந்த பிறகும்கூட 10-ல் 9 பேர் அதைப்பற்றிய அக்கறை இல்லாமல் அலட்சியமாக இருக்கிறார் களாம். இதனால் பல விபரீதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு.

வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பாக ஆய்வு நடத்தியது. 12 ஆயிரம் ஐரோப்பிய இளைஞர்களிடம் செய்யப்பட்ட சோதனையில் கிடைத்த முடிவுகள் வருமாறு… இளைஞர்கள் 10க்கு 9 பேர் வரை அடிவயிற்றில் சேரும் கொழுப்பைப் பற்றி சட்டை செய்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் அதன் விளைவுகளைப் பார்க்கவோ, உணரவோ முடியாததுதான். ஆனால் இந்த அடிவயிற்றுக் கொழுப்பு நாளடைவில் வேறு சில பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். உட்புறமாக நாளங்களைச் சுற்றிப் படியும் கொழுப்பானது உடல் உஷ்ணத்துக்கு வழிவகுக்கும். நாளடைவில் ரத்த நாளங்களைப் பாதிக்கும். அதன் வழியாக கல்லீரலையும் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் உற்சாகக் குறைவு, உடற்பாதிப்புகள், சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளையும் கவனிக்காமலே விட்டுவிட்டால் டைப்-2 நீரிழிவு மற்றும் இதயவியாதி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்கள் சீரான இடையளவு பராமரிப்பு: பெண்கள் 31.5 அங்குலம் (80 சென்டிமீட்டர்), ஆண்கள் 35 அங்குலம் (90 சென்டிமீட்டர்) இந்த சராசரி அளவை கடந்தவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும்.

வயிற்றைக் கவனிக்கும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைதாங்க…

2009 நிகழ்வுகளின் தொகுப்பு- விருதுகள்

கோல்டன் குளோப் விருது

உலகம் முழுவதும் திரைப்படம், நாடகம், தொலைக்காட்சித்துறையில் சாதனை படைத் தவர்களுக்கு ஹாலிவுட்டைச் சேர்ந்த திரைப் பட விமர்சகர் அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கிவருகிறது. ஸ்லம்டாக் மில்லியனர்’என்ற ஆங்கிலப் படத்துக்கு மிகச்சிறப்பாக இசை யமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலக புகழ் பெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார்.

81-வது ஆஸ்கார் விருதுகள்

திரைப்படத் துறையில் மிக உயரிய விரு தாக கருதப்படுவது ஆஸ்கார் விருதாகும். ஆஸ்கார் விருதின் 81-—வது விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கோடாக் அரங்கில் நடைபெற் றது. இதில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ‘”ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற ஆங்கில படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் வழங்கப் பட்டன. இந்த படத்துக்கு சிறப்பாக இசை யமைத்த இந்தியாவைச் சேர்ந்த இசை யமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.

இளம் நோபல் விருது

அறிவியல் திறன் போட்டியில் முதலிடம் பெற்ற அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவி ஷிவானி சட்டுக்கு இளம் நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி விருது

மியான்மரில் ஜனநாயகத்தை மீட்கப் போராடி வரும் ஆங் சான் சூகி-க்கு “மகாத்மா காந்தி’ விருது வழங்கப்படவுள்ளது. தென்னாப் பிரிக்காவில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட் டளை அவருக்கு இந்த விருதை அறிவித் துள்ளது. மியான்மரில் ஜனநாயகத் துக்காக போராடும் சூகிசுமார் இருபது ஆண்டு கால மாக வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டுள்ளார். அமைதியான முறையில் ஜனநாயகத்துக்காக போராடி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

மகசேசே விருது

இந்தியாவைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் தீப் ஜோஷி உள்பட 5 பேர் 2009-ம் ஆண்டுக் கான மகசேசே விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டனர். பிலிப்பைன்சின் மறைந்த முன்னாள் அதிபர் மகசேசேவின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு சிறப் பாக சேவையாற்றியதற்காக தீப் ஜோஷிக்கு மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரத ரத்னா விருது

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வசிக்கும் இந்துஸ்தானி பாடகர் பண்டிட் பீம்சென் ஜோஷிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது ஜனாதிபதியிடம் டெல்லிக்கு சென்று பெறமுடியாத சூழ்நிலையில் உடல் நிலை சரியில்லை என்பதால் குடியரசுத் தலை வரின் உத்தரவுப்படி பீம்சென் வீட்டிலேயே சிறிய விழா ஏற்பாடு செய்து அவ்விருதை உள்துறை அமைச்சரின் கூடுதல் செயலர் அக மது வழங்கினார். பாரத ரத்னா விருது 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. (2002- 2007 வரை இவ்விருது வழங்கப்படவில்லை)

கிராமிய விருது

இசைத்துறையில் சிறந்து விளங்குபவர் களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கிராமிய விருது பிரபல இந்திய தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேனுக்கு அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.

இந்திரா காந்தி விருது- 2009

ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் -எழுத்தாளர்- மனித உரிமை ஆர்வலரான பல்ராஜ் புரி தேசிய ஒருமைப் பாட்டுக்கான இந்திரா காந்தி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். தேசிய ஒருமைப் பாட்டுக்காக சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவர் இந்திரா காந்தி விருது வழங்கி கவுரவிக்கப் பட்டார். மேலும் 2005-ல் பத்மபூஷன் விரு தைப் பெற்றவர் பல்ராஜ் புரி என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு சிறப்பு `லேப்டாப்’

கம்ப்யூட்டர் புரட்சி சத்தமில்லாமல் நடக்கிறது. டி.வி.க்கள் போல வீட்டுக்குவீடு கணினி என்ற நிலை பெருகி வருகிறது.

கல்வி வசதி பெற்றுவிட்ட தம்பதியினர், எவ்வளவு சிரமத்தை தாங்கிக்கொண்டும் கணினி வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். பலர் லேப்டாப் வாங்கிவிடுகிறார்கள்.

அப்படி இருக்கும்போது அவர்கள் வீட்டு சுட்டிகள் சும்மா இருப்பார்களா? அப்பா கணினியில் வேலை செய்தால் ஓடிச் சென்று பக்கத்தில் அமர்ந்து கொள்வார்கள். `இது என்னது? இது என்னது?’ என்று கேட்டு வெகு சீக்கிரம் பல விஷயங்களை உள்வாங்கிவிடுகிறார்கள். பல நேரங்களில் `நான் கம்ப்யூட்டரில் விளையாடப்போறேன்’ என்று அடம்பிடித்து சேட்டை செய்ய, இந்த தொந்தரவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பெற்றோர் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

இனி உங்களுக்கு அந்த டென்ஷன் தேவையில்லை. உங்கள் சுட்டிகளுக்கும் தனி லேப்டாப் ரெடியாகிவிட்டது. இது சாதாரண சிலேடு போலதான் இருக்கும். நெகிழும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே குழந்தைகள் கைதவறி கீழே போட்டாலும் உடையாது. வலிமையான பயன்பாட்டுக்கும் ஒத்துழைக்கும். இயக்குவதற்கும் எளிதாக இருக்கும். இதற்கான சிறப்பு ஷிப் மற்றும் மென் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஓ.எல்.பி.சி. என்ற நவீன தொழில்ட்பத்தில் இது தயாரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஈவ்ஸ் பிகார் என்ற நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. இதற்கு சோ3 என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதன் விலை சுமார் 3 ஆயிரத்து 500 ஆகும். விரைவில் விற்பனைக்கு வரும்

வளர்ச்சி காணும் ஏற்றுமதி!

நம் நாட்டின் ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் 18.2 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. பதி முன்று மாத கால தாழ்நிலைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள உயர்வாகும் இது. இந்நிலை, தங்களின் போராட்ட காலம் முடிந்துவிட்டது என்ற நம்பிக்கையை வர்த்தகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்குக் கப்பல் வழி ஏற்றுமதி ஆயிரத்து 300 கோடி டாலர்களுக்கு மேல் தாண்டியுள்ளது. அது குறிப்பிட்ட முந்தைய காலகட்டத்தில் சுமாராக ஆயிரத்து 100 கோடி டாலர்களாக இருந்தது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தகத் தகவல் புள்ளிவிவரங்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவின் துணி மற்றும் ஆடை வகைகள் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவை, நம் நாட்டின் இரண்டு முக்கியமான வெளிநாட்டுச் சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது ஏற்பட்டுள்ள உறுதி காரணமாக கிறிஸ்துமஸ் சீசனின்போது 6 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளன.

சமீபத்தில் வெளிவந்துள்ள தொடர்ச்சியான புள்ளிவிவரங்களின்படி, விரிந்த அளவில் பொருளாதார மீட்சி ஏற்பட்டுள்ளது. 8 சதவீதத்துக்கு மேற்பட்ட வளர்ச்சி எனும் பழைய பொற்காலம் திரும்பும் என்ற நம்பிக்கையை இது உருவாக்கியுள்ளது.

கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதி 22.3 சதவீதம் குறைந்தது. 2008-2009-ம் ஆண்டில் ஏறக்குறைய 10 ஆயிரத்து 300 கோடி டாலர் மதிப்புக்கு இருந்த அது, ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி டாலராக குறைந்துள்ளது.

2008-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆயிரத்து 200 கோடி டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை ஏறக்குறைய 900 கோடி ருபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2010-ல் வேலைவாய்ப்புகள் பிரகாசம்!

இந்தியாவில் இந்த 2010-ம் ஆண்டில் வேலைவாய்ப்புச் சந்தையில் குறிப்பிடத்தக்க மீட்சி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், சில துறைகளில் கொஞ்சம் `அரிமானம்’ (ஆட்கள் விலகல்) இருக்கும் என்று கூறப்படுகிறது. விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்ட்பம், `பிசினஸ் பிராசஸிங் அவுட்சோர்சிங்’ (பி.பி.ஓ) போன்ற துறைகளில் இந்த `அரிமானம்’ இருக்கலாம் என்று நிறுவனங்களுக்கான நிர்வாகிகள் தேடல் நிறுவனமான `குளோபல்ஹன்ட் இந்தியா’ தெரிவிக்கிறது.

“ஆட்கள் விலகல் என்பது வளர்ச்சிக்கான அடையாளம்தான். வேலைவாய்ப்புச் சந்தை சூடுபிடிக்கத் தொடங்கியதுமே குறிப்பிட்ட துறைகளில் ஆட்கள் விலகலும் அதிகமாக இருக்கும்” என்று குளோபல்ஹன்ட் இந்தியா இயக்குநர் சுனில் கோயல் தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுகையில், பி.பி.ஓ மற்றும் ஐ.டி. துறைகளில் அதிகபட்ச ஆட்கள் விலகல் இருக்கலாம் என்று கூறுகிறார்.

வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவை கடந்த 2009-ம் ஆண்டு மோசமாக அமைந்தது. `ஆட்குறைப்பு’, `இளஞ்சிவப்பு நோட்டீஸ்’ (ஊழியரை வீட்டுக்கு அனுப்பும் உத்தரவு), `ஆட்கள் எண்ணிக்கையைச் சரிப்படுத்தல்’ ஆகியவை நிறுவனங்களில் அதிகம் அடிபடும் வார்த்தைகளாக இருந்தன.

2009-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் வேலைவாய்ப்பு மீட்சிக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. பொருளாதார வளர்ச்சிக்கான அரசின் தூண்டுதல் நடவடிக்கைகளால் முன்றாவது காலாண்டில் நாட்டில் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று `சர்வதேச ஊழியர் அமைப்பு’ கூறுகிறது.

உலகளவில் ஊழியர்களை நியமனம் செய்யும் நிறுவனமான `மேன்பவர்’, ஆட்கள் நியமன வேகமானது பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு இந்த ஆண்டு திரும்பும் என்று தெரிவிக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பெரும் நிறுவனங்கள் ஆட்களை அமர்த்துவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பல்வேறு சேவைகள் துறை, பொது நிர்வாகம், கல்வி, சுரங்கம் மற்றும் கட்டுமானம், நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், ஒட்டுமொத்த மற்றும் சில்லறை விற்பனைத் துறை ஆகியவற்றில் வேலை தேடுவோர் 2010-ல் பிரகாசமான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம் என்று `மேன் பவர்’ நிறுவனம் தெரிவிக்கிறது.

நிறுவனங்களின் வளர்ச்சி, தொழிற்சாலைகளின் வளர்ச்சி ஆகியவற்றின் நோக்கில் 2010-ம் ஆண்டு சிறந்ததாக இருக்கும். இந்த ஆண்டு `தேய்மானம்’ இருக்கும் என்றபோதும் அது உச்சத்தில் இருந்த 2007-ம் ஆண்டை விடக் குறைவாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“பல்வேறு துறைகளில் ஆட்கள் நயமனம் அதிகரிப்பது, ஆட்கள் அதிகமாக விலகுவதற்கும் வழிவகுக்கும். 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் களும், ஐந்தாண்டுகளுக்குக் குறைவான அனுபவம் உள்ளவர்களும் அதிகமாக விலகுவார்கள்” என்று கோயல் கூறுகிறார்.

துறை வாரியான அலசலின்படி பார்த்தால், தகவல் தொழில்ட்பம், விமானப் போக்குவரத்து மற்றும் பி.பி.ஓ துறைகளில் அதிகமான ஆட்கள் விலகல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது 40 முதல் 45 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அடுத்த இடம் பிடிப்பது சில்லறை மற்றும் தொலைத்தொடர்புத் துறை (35 முதல் 40 சதவீதம்).

மருந்து மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் 20 முதல் 25 சதவீதமும், ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறையில் 15 முதல் 20 சதவீதமும் ஆட்கள் விலகல் இருக்கும் என்று வேலைவாய்ப்புத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியர்களை பயமுறுத்தும் எலும்பு தேய்மானம்


இப்போதெல்லாம் 40 வயதை தாண்டிவிட்டாலே பல்வேறு நோய்களுடன் முட்டுவலியும் சேர்ந்தே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த பாதிப்பில் இருந்து `ஸ்லிம்’ ஆனவர்கள் பெரும்பாலும் தப்பித்துவிடும் அதேநேரத்தில், உடல் பருமன் கொண்டவர்கள் இதனால் படாதபாடு படுகிறார்கள்.

எலும்பு தேய்மானம் அடைவதால்தான் முட்டுவலி ஏற்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில்தான் எலும்பு தேய்மான (ஆஸ்ட்ரியோ போரசிஸ்) நோய் பாதிப்பு அதிகம் உள்ளது.

தற்போது இந்தியாவில் 6 கோடி பேர் எலும்பு தேய்மான நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். அடுத்த 40 ஆண்டுகளில் 30 கோடி பேரை இந்த நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என்கிறது சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று.

எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்?

கால்சிய குறைபாடுதான்! கூடவே தவறான உணவுப்பழக்க வழக்கமும்! அத்துடன், மது, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்குகிறது.

இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆரம்ப அறிகுறியாக முட்டின் மேல் பகுதியில் லேசான வலி, குதிகாலில் வலி ஏற்படும். சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலி வரும்.

இந்த அறிகுறிகள் ஒருவருக்கு காணப்பட்டால் முட்டு மாற்று சிகிச்சை நிபுணர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

இப்போதெல்லாம் நாம் உண்ணும் உணவுகள் அனைத்திலுமே ரசாயனம் கலக்கப்பட்டுவிட்டது. இதுவும் எலும்பு தேய்மானம் ஏற்பட மற்றொரு காரணமாகிவிடுகிறது.

எலும்பு தேய்மான அறிகுறி உள்ளவர்கள் கால்சியம் சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை தினமும் சாப்பிடுவது நல்லது.

விண்டோஸ் டிப்ஸ்….

விண்டோஸ் இயக்கத்தில் நேரத்தை மிச்சப்படுத்தி விரைவாகச் செயல்பட பல செயல்பாடுகள் உள்ளன. அவற்றில் மிகச் சிறந்தவற்றை இங்கு பட்டியலிடலாம்.
ஆல்ட் + டேப் (Alt+Tab) அழுத்தி, திறந்திருக்கும் புரோகிராம்களிடையே அடிக்கடி நீங்கள் மாறிக் கொள்ளலாம். மவுஸை எடுத்துக் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்திடும் நேரம் மிச்சம்.
ஒரு அப்ளிகேஷனில் பல பைல்களைத் திறந்து வைத்திருந்தால் அவற்றிற்கு இடையே செல்ல கண்ட்ரோல் + டேப் (Control+Tab) பயன்படுத்தவும்.
புரோகிராம்கள் எங்கு இருக்கின்றன என்று தேடி அறிந்து திறக்க வேண்டாம். ரன் பாக்ஸில் அவற்றின் பெயரை டைப் செய்திடுங்கள். Calculator, Control Panel, Paint என டைப் செய்தாலே இந்த புரோகிராம்கள் எல்லாம் கிடைக்கும். இதே போல பல புரோகிராம்களைப் பெறலாம்.
பைல்களின் இடம், வகை தெரிய, அவற்றின் பெயரிலேயே அவற்றைக் காட்டும் வகையில் செட் செய்திடலாம். இதனால் பைல் இடம் தேடி அலைய வேண்டியதில்லை. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் ஆர்கனைஸ் (Organize) மெனுவில் உள்ள Folder Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள், பைல் இருக்கும் இடத்தின் முழு வழி, பைல் எக்ஸ்டென்ஷன் மற்றும் பல பைல் விஷயங்களைப் பைல் பெயரில் காட்டும்படி அமைக்கலாம்.
டாஸ்க் பாரினை சற்று அதிக தகவல் உள்ளதாக மாற்றம் செய்திடலாம். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில் கிடைக்கும் மெனுவில் Properties என்பதில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் சிறிய விண்டோவில் பழைய வகை ஸ்டார்ட் மெனுவிற்குச் செல்ல, எந்த ஐகான்கள் நோட்டிபிகேஷன் ஏரியாவில் வைத்திட, ஸ்டார்ட் பார் மெனுவில் டிபால்ட் புரோகிராம்களாக எவற்றை இணைத்திட என்று பல வழிகளுக்கான திறவுகோல்கள் இருக்கும். இவற்றைக் கிளிக் செய்து டாஸ்க் பாரைச் சிறப்பாகப் பயனுள்ளதாக மாற்றி அமைக்கலாம்.
உங்கள் ஹார்ட் டிரைவைப் பார்ட்டிஷன் மூலம் பிரிக்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஒரு பிரிவை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அப்ளிகேஷன் புரோகிராமிற்கு ஒரு பிரிவினையும், உருவாக்கப்படும் பைல்களுக்கு ஒரு பிரிவினையும் வைத்துக் கொள்ளுங்கள்.
சிறப்பான குறியீடுகள் வேண்டுமா? ரன் பாக்ஸில் கேரக்டர் மேப் (char map) என டைப் செய்து கிடைக்கும் பாண்ட்ஸ் வின்டோவைப் பயன்படுத்தி, சிறப்புக்குறியீடுகளைக் காப்பிசெய்து, பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம்.
திரைக் காட்சிகளை அப்படியே படம் பிடித்து பைலாக மாற்றி அனுப்ப பிரிண்ட் ஸ்கிரீன் அழுத்தவும். பின் படங்களைப் பேஸ்ட் செய்திடும் எந்த புரோகிராமிலும் இதனைப் பேஸ்ட் செய்து பட பைலாக மாற்றிக் கொள்ளலாம். பெரிய அளவில் கூடுதலான பிக்ஸெல்களுடன் தேவை எனில் பி.எம்.பி. பைலாக மாற்றலாம். எளிய இமெயில் உடன் அனுப்ப வேண்டும் எனில் ஜேபெக் அல்லது டிப் பைலாக மாற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
புரோகிராம்களை இயக்க ஷார்ட் கட்களைப் பயன்படுத்துங்கள். அப்ளிகேஷன் ஐகானில் ரைட் கிளிக் செய்து, ப்ராபர்ட்டீஸ் மெனு பெறவும். பின் ஷார்ட் கட்ஸ் டேப் கிளிக் செய்து, கிடைக்கும் ஷார்ட் கட் ஐகானைத் திரையில் வைத்து, கிளிக் செய்து இயக்கவும்.
ஒரு சிலருக்கு இரண்டு கீகளை ஒரு சேர அழுத்துவது சற்று சிரமமாக இருக்கும். ஆனால் பல செயல்பாடு கள், இது போல இரண்டு கீகளை அழுத்துவதன் மூலம் தான் நிறைவேற்ற முடிகிறது. ஏன் ஒரு கீயினை (எ.கா. கண்ட்ரோல், ஷிப்ட், ஆல்ட் போல) அழுத்திப் பின் விரலை எடுத்து அடுத்த கீயை அழுத்தக் கூடாது. செய்யலாமே! இதற்கு ஸ்டிக்கி கீ செயல்பாடு என்று பெயர். இதனை இயக்க ஷிப்ட் கீயினை ஐந்து முறை அழுத்தவும். ஸ்டிக்கி கீ செயல்பாடு தொடங்கும். பின் நீங்கள் கண்ட்ரோல் + சி அழுத்த, கண்ட்ரோல் கீயை அழுத்தி பின் சி கீயினை அழுத்தலாம். இப்படியே, ஷிப்ட், ஆல்ட், விண்டோஸ் கீகளை அழுத்தி செயல்படுத்தலாம்.
இந்த வசதியை நிறுத்த விரும்பினால் மீண்டும் ஷிப்ட் கீயினை ஐந்து முறை அழுத்தவும். திரையில் நெட்டுக் குத்தாக இரண்டு திரைப் பிரிவுகளை வைத்துக் கொண்டு, அவற்றில் இரண்டு புரோகிராம்களை மாற்றி, மாற்றி இயக்க வேண்டுமா?
விண்டோ ஒன்றில் புரோகிராம் ஒன்று திறந்திருக்கையில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, திறக்க விரும்பும் இன்னொரு புரோகிராமின் டாஸ்க் பாரில் உள்ள டேப் மேல் கிளிக் செய்திடவும். பின் டாஸ்க்பாரில் உள்ள காலியான இடத்தில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Tile Vertically என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
கண்ட்ரோல் பேனலில் அனைத்தையும் ஒரு சேரக் காட்டும் பழைய காட்சித் தோற்றம் வேண்டுமா? விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா ஆகியவற்றில் கண்ட்ரோல் பேனலைத் திறந்து Switch to Classic View என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் View by என்பதில் கிளிக் செய்து, மேல் வலது மூலையில் கிடைக்கும் ட்ராப் மெனுவில், நீங்கள் விரும்பும் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.