2010-ல் வேலைவாய்ப்புகள் பிரகாசம்!

இந்தியாவில் இந்த 2010-ம் ஆண்டில் வேலைவாய்ப்புச் சந்தையில் குறிப்பிடத்தக்க மீட்சி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், சில துறைகளில் கொஞ்சம் `அரிமானம்’ (ஆட்கள் விலகல்) இருக்கும் என்று கூறப்படுகிறது. விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்ட்பம், `பிசினஸ் பிராசஸிங் அவுட்சோர்சிங்’ (பி.பி.ஓ) போன்ற துறைகளில் இந்த `அரிமானம்’ இருக்கலாம் என்று நிறுவனங்களுக்கான நிர்வாகிகள் தேடல் நிறுவனமான `குளோபல்ஹன்ட் இந்தியா’ தெரிவிக்கிறது.

“ஆட்கள் விலகல் என்பது வளர்ச்சிக்கான அடையாளம்தான். வேலைவாய்ப்புச் சந்தை சூடுபிடிக்கத் தொடங்கியதுமே குறிப்பிட்ட துறைகளில் ஆட்கள் விலகலும் அதிகமாக இருக்கும்” என்று குளோபல்ஹன்ட் இந்தியா இயக்குநர் சுனில் கோயல் தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுகையில், பி.பி.ஓ மற்றும் ஐ.டி. துறைகளில் அதிகபட்ச ஆட்கள் விலகல் இருக்கலாம் என்று கூறுகிறார்.

வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவை கடந்த 2009-ம் ஆண்டு மோசமாக அமைந்தது. `ஆட்குறைப்பு’, `இளஞ்சிவப்பு நோட்டீஸ்’ (ஊழியரை வீட்டுக்கு அனுப்பும் உத்தரவு), `ஆட்கள் எண்ணிக்கையைச் சரிப்படுத்தல்’ ஆகியவை நிறுவனங்களில் அதிகம் அடிபடும் வார்த்தைகளாக இருந்தன.

2009-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் வேலைவாய்ப்பு மீட்சிக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. பொருளாதார வளர்ச்சிக்கான அரசின் தூண்டுதல் நடவடிக்கைகளால் முன்றாவது காலாண்டில் நாட்டில் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று `சர்வதேச ஊழியர் அமைப்பு’ கூறுகிறது.

உலகளவில் ஊழியர்களை நியமனம் செய்யும் நிறுவனமான `மேன்பவர்’, ஆட்கள் நியமன வேகமானது பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு இந்த ஆண்டு திரும்பும் என்று தெரிவிக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பெரும் நிறுவனங்கள் ஆட்களை அமர்த்துவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பல்வேறு சேவைகள் துறை, பொது நிர்வாகம், கல்வி, சுரங்கம் மற்றும் கட்டுமானம், நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், ஒட்டுமொத்த மற்றும் சில்லறை விற்பனைத் துறை ஆகியவற்றில் வேலை தேடுவோர் 2010-ல் பிரகாசமான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம் என்று `மேன் பவர்’ நிறுவனம் தெரிவிக்கிறது.

நிறுவனங்களின் வளர்ச்சி, தொழிற்சாலைகளின் வளர்ச்சி ஆகியவற்றின் நோக்கில் 2010-ம் ஆண்டு சிறந்ததாக இருக்கும். இந்த ஆண்டு `தேய்மானம்’ இருக்கும் என்றபோதும் அது உச்சத்தில் இருந்த 2007-ம் ஆண்டை விடக் குறைவாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“பல்வேறு துறைகளில் ஆட்கள் நயமனம் அதிகரிப்பது, ஆட்கள் அதிகமாக விலகுவதற்கும் வழிவகுக்கும். 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் களும், ஐந்தாண்டுகளுக்குக் குறைவான அனுபவம் உள்ளவர்களும் அதிகமாக விலகுவார்கள்” என்று கோயல் கூறுகிறார்.

துறை வாரியான அலசலின்படி பார்த்தால், தகவல் தொழில்ட்பம், விமானப் போக்குவரத்து மற்றும் பி.பி.ஓ துறைகளில் அதிகமான ஆட்கள் விலகல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது 40 முதல் 45 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அடுத்த இடம் பிடிப்பது சில்லறை மற்றும் தொலைத்தொடர்புத் துறை (35 முதல் 40 சதவீதம்).

மருந்து மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் 20 முதல் 25 சதவீதமும், ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறையில் 15 முதல் 20 சதவீதமும் ஆட்கள் விலகல் இருக்கும் என்று வேலைவாய்ப்புத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு மறுமொழி

  1. good and confident this msg for youth

%d bloggers like this: