Daily Archives: ஜனவரி 24th, 2010

தன்னைத் தானே மயக்கமாக்கியவர்!

ஒரு கத்துக்குட்டி `ஹிப்னாடிச’க்காரர் தன்னைத் தானே மயக்கத்தில் ஆழ்த்திக் கொண்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

ஹெல்மட் கிச்மீயர் என்ற அவர் கண்ணாடிக்கு முன்னால் மயங்கிக் கிடப்பதை அவரது மனைவி ஜோன்னா கண்டார். அவர் சொல்கிறார், “ஹெல்மட், நாற்காலியில் அமர்ந்து கண்ணாடியை வெறித்து பார்த்தபடியே இருந்தார். நான் அவரிடம், `என்னாச்சு?’ என்று கேட்டேன். ஆனால் அவரிடமிருந்து பதிலில்லை. அப்போதுதான் அவர் அருகே `மனதுக்கான ஹிப்னாடிச மருத்துவம்’ என்ற புத்தகம் இருப்பதைக் கண்டேன். `ஹிப்னாடிக் மயக்கவியல்’ என்ற அத்தியாயம் அதில் விவரிக்கபட்டிருந்தது. அதிலிருந்தே நான் என்ன நடந்திருக்கும் என்று புரிந்துகொண்டேன்’ என்கிறார். கணவர் ஹிப்னாடிசம் பழகுவதற்கு ஜோன்னா உதவி வந்தார். ஆனால் குறிபிட்ட `சம்பவம்’ நடைபெற்றபோது அவர் கணவரின் அருகில் இல்லை. தன்னைத் தானே ஆழ்உறக்கத்தில் ஆழ்த்திக் கொண்ட அசட்டு ஹிப்னாட்டிச நிபுணர், ஐந்து மணி நேரம் அப்படியே மயங்கி கிடந்தார்.

அதிக வேலை முளையை பாதிக்குமாம்!

இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.

வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

அவர்கள் மேலும் கூறும்போது, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.

நீங்களும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால்… பிரச்சினை உங்களுக்குத்தான்!

மனித உடலின் ஆதார சுருதி சிறுநீரகம்

சிறுநீரகம் என்றால் பிறப்புறுப்பு என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. சிறுநீரகம் என்பது முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் பாதி மூடப்பட்டுள்ள அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும். நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் ஒன்று சிறுநீரகம். மிகச்சிறிய உறுப்பாயிருப்பினும் சிறுநீரகங்களின் பணி வியக்கத்தக்கது. இரத்தத்திலிருந்து தேவையற்ற பொருள்களைப் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றும் இந்த இரண்டு சிறுநீரகங்களும் நமது உடலின் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை. இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்யிறமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம். சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் மூலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்து கொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன. சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது. நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் மூளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது. திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும். இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம். சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும். சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும். பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது. பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம். கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ள கற்களினால் இறைச்சி, மின், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது. மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த மூலிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

‘அது’க்கும் வந்துவிட்டது ரோபோ ‘ராக்சி…!’-செக்ஸ் ரோபோ

மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளால், உலகம் பல்வேறு வசதிகளைப் பெற்றுள்ளது. விமானம், கப்பல், வாகனங்கள் என துவங்கி, கண்டுபிடிப்புகள் நீண்டுக் கொண்டே போகின்றன. இந்த வகையில், மனிதனின் அரிய கண்டுபிடிப்பு ரோபோக்கள். மனித சமுதாயத்திற்கு ரோபோக்கள் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றன.

முடியாத முதியவர்களுக்கு உதவுதல், ஆபத்தான இடங்களில் பணியாற்றுதல் என ரோபோக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகின்றன. கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வையை இழந்தவர்களுக்கும் ரோபோக்கள் உதவி வருகின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதியில், பெரிய தொழிற்சாலைகள், மருத்துவம், அறுவை சிகிச்சை, விண்வெளி பயணம் உள்ளிட்டவைகளில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன.இந்த வரிசையில், செக்ஸ் உணர்வு அதிகம் கொண்டவர்களை திருப்தி செய்யும் வகையில் ரோபோக்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. “ட்ரூ கம்பானியன்’ என்ற நிறுவனம் இந்த செக்ஸ் ரோபோவை தயாரித்துள்ளது.

அழகிய, கவர்ச்சி மிக்க பெண்ணைப் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோவின் பெயர் ராக்சி.சிந்தடிக் மென்தசை பொருட்களைக் கொண்டு செயற்கையான தோலால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கும், தொடுவதற்கும் உண்மையான பெண்ணை போன்று உணரப்படும் இந்த ரோபோ, செயற்கை அறிவுத்திறனும் கொண்டது.

செக்ஸ் ரோபோவின் உள்ளே ஒரு லேப்-டாப் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. ரோபோவை தொடும் போதே அதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ள உணர்வு கருவிகள் செயல்படத் தொடங்கி விடும். அதற்கேற்ப ரோபோ செயல்படுகிறது. உள்ளே பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர் மூலம் சத்தம் வெளிப்படுகிறது. ஆனால், ரோபாவால் அதன் இஷ்டப்படி நகரவோ, தலை மற்றும் உதட்டை அசைக்கவோ முடியாது. அனைத்தையும் கம்ப்யூட்டர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

செக்ஸ் ரோபோவை வடிவமைத்துள்ள டக்ளஸ் இனேஸ் கூறும் போது, “”ஏ.வி.என்., அடல்ட் என்டர்டெயின்மென்ட் எக்ஸ்போ கண்காட்சியில் முதன் முதலாக செக்ஸ் ரோபோ ராக்சி காட்சிக்காக வைக்கப்பட்டது. ஆண்களின் விருப்பு, வெறுப்புகளை புரிந்து கொள்ளும் வகையில் ராக்சி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்த்தல், பேசுதல், கேட்டல், உணர்தல் ஆகிய நான்கு வித உணர்ச்சிகளையும் இது வெளிப்படுத்தும். வாடிக்கையாளர் கால்பந்து குறித்து பேசினால், அது குறித்து அதுவும் பேசும். கிரிக்கெட் குறித்து பேசினால், அதுவும் திரும்ப பேசும். இப்படி, அனைத்து விஷயங்களிலும் வாடிக்கையாளரை இந்த ரோபோ திருப்திபடுத்தும்.

தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள செக்ஸ் ரோபோவின் உயரம் 170 செ.மீ., எடை 54 கிலோ. வாடிக்கையாளர்கள், தங்களின் பழக்க வழக்கங்களையும், விருப்பத்தையும் முன்கூட்டியே கூறினால், அதற்கேற்ப செக்ஸ் ரோபோ வடிவமைத்து தரப்படும். ரோபோவின் கை, கால்கள் தானாகவே திரும்ப முடியாது. ரோபோவை திருப்பி வைத்தால் பேச தயாராகி விடும். செக்ஸ் ரோபோவை பெற, மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாயுடன் மாத சந்தா கட்டணத்தையும் கட்ட வேண்டும். ஆண் செக்ஸ் ரோபோவும் தயாராகி வருகிறது; அதன் பெயர் ராக்கி ட்ரூ,” என்றார்.

இன்றைய நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் செக்ஸ் ரோபோ விற்பனைக்கு வந்துள்ளது. மிக விரைவில், உலகின் அனைத்து பாகங்களிலும் இதன் விற்பனை துவங்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

‘பேஸ் புக்’கால் கதி கலங்கும் அமெரிக்க இந்திய பெற்றோர்

“உன் பெற்றோர் முட்டாள்கள்’ ; ” உன் தாய் தந்தையர் உன்னைப் புறக்கணிக்கின்றனர். உன்னைக் கட்டுப்படுத்துகின்றனர்’; இவையெல்லாம் பார்ட்டிக்குப் போக வேண்டாம் என்று பெற்றோர்களால் தடுக்கப்பட்ட ஒரு மாணவிக்கு சக மாணவியர் அளித்துள்ள ஆறுதல்.

அமெரிக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், “பேஸ் புக்’கைப் பயன்படுத்தி, தங்களுக்கு விருப்பமானவர்களுடன் பார்ட்டிக்குச் செல்லும் புதிய கலாசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசமான கலாசாரம் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுமோ என்று அங்கு வசித்து வரும் இந்தியப் பெற்றோர்கள் கலக் கம் அடைந்துள்ளனர்.அமெரிக்காவிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தங்கள் புத்தகங்களோடு துப்பாக்கி, மதுப்புட்டி, சிகரெட் பெட்டி போன்றவற்றையும் எடுத்துச் செல்வர் என்பது பழைய கதை. சமீபத்தில், மாணவிகள், தங்களைப் பாதுகாத்துக் கொள் வதற்காக “காண்டம்’ கொண்டு வர வேண்டும் என்று கூட சில பள்ளிகளில் உத்தரவு போடப்பட்டது.

மாணவர்களின் இந்தப் போக்குக்கு பெற்றோர்கள் பலவிதங்களில் தடைபோட்டாலும், இப்போது அவர்களைத் தடுக்க இயலாத வண்ணம் “பேஸ் புக்’ போன்ற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி முகம் தெரியாத நண்பர்களுடன் பார்ட்டிக்குச் செல்லும் வழக்கம் புற்றீசலாகப் பெருகத் தொடங்கியிருக்கிறது.இதற்குப் பெற்றோர்கள் தடைவிதித்தால், “இது மாணவர்களின் உரிமை’ என்று பேஸ்புக்கில் கூட்டம் சேர்த்துக் கொண்டு கொடி பிடிக் கின்றனர். முகம் தெரியாத நண்பர் களுடன் பேஸ் புக்கில் தொடர்பு கொண்டு, அவர்களுடன் எங்கேயாவது பார்ட்டிகளில் கலந்து கொண்டு வீட்டுக்கு நேரம் காலம் இல்லாமல் வருகின்றனர். தட்டிக் கேட்கும் பெற்றோர்களை “பேஸ் புக்’கில் திட்டுகின்றனர். இதற்கு ஒரு மாணவர் கூட்டமே உடந்தையாக இருக்கிறது.இப்படிப்பட்ட கலாசார சீரழிவால், அங்கு வசித்து வரும் இந்தியத் தலைமுறையினர், தங்கள் குழந்தைகளும் கெட்டு விடுமோ என்று கலங்குகின்றனர்.

மூடி மறைக்கபடும் பாலியல் தொந்தரவுகள்!


`ருச்சிகா வழக்கு’ விஷயம் பரபரப்பாக அடிபடும் நேரம் இது. ஆனால் சம்பந்தபட்ட காவல்துறை முன்னாள் உயரதிகாரி தண்டனைக்கு உள்ளானாலும் (வெறும் ஆறு மாத சிறை!) அதில் அர்த்தம் இருக்காது. காரணம், ருச்சிகா இன்றில்லை.

நமது சமுகத்தில் வெளித் தெரியாமல் புரையோடி போயிருக்கும் அவலங்களில் ஒன்றை இது எடுத்துக்காட்டுவதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். மும்பையில் மட்டும் கடந்த 2009-ம் ஆண்டில் 356 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகிள்ளன. இது போல நாடு முழுக்க பெண்கள் மீதான சீண்டல்கள், தொந்தரவுகள், கற்பழிப்புகள் என்று கணக்கு பார்த்தால் அது மலைக்க வைக்கும் எண்ணிக்கையாக இருக்கும். பாதிக்கபட்ட பல பெண்கள், அவமானம், வழக்கு விசாரணை நடைமுறைகளுக்கு பயந்தே கண்ணீரோடு கசப்பை மறைத்து விடுகிறார்கள். அல்லது மறைக்க வைக்கபடுகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கொடுமைகள் அனைத்தும் `பெண்ணின் கவுரவத்துக்கு எதிரான இழைக்கபடும் தீங்கு’ என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒரே பிரிவின் கீழ் கொண்டு வரபடுகின்றன.

புள்ளிவிவரங்கள் கூறும் அதிர வைக்கும் தகவலின்படி, நம் நாட்டில் 18 வயது பூர்த்தியாவதற்கு முன் மூன்று  பெண் குழந்தைகளில் ஒருவரும், ஐந்து பையன்களில் ஒருவரும் பாலியல் ரீதியான சீண்டலுக்கு உள்ளாகிறார்கள்.

“இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னும் ருச்சிகா குடும்பத்தினர் தங்களின் போராட்டத்தை விட்டுவிடவில்லை என்பது பாராட்டுக்குரிய விஷயம்” என்கிறார் பூஜா. இவர், குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக போராடிவரும் `அர்பன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர். “துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருவதேயில்லை” என்கிறார் இவர்.

“மிகவும் குறைவான சம்பவங்கள் புகார் செய்யபடுகின்றன. இது மாதிரியான அத்துமீறல்களுக்கு பெரும்பாலும் நடவடிக்கையும் எடுக்கபடுவதில்லை” என்கிறார் பூஜா.

அவர் வருத்தத்தோடு தெரிவிக்கும் விஷயம், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளைத் தண்டிக்க `குறிப்பான, கடுமையான’ சட்டங்கள் ஏதும் இல்லை என்பது.

“இந்திய தண்டனைச் சட்டத்தின் 509-வது பிரிவு, பெண்களின் கவுரவத்துக்கு இழைக்கபடும் தீங்கைக் கவனிக்கிறது. 376-வது பிரிவு, கற்பழிப்புக்கான தண்டனையை வரையறுக்கிறது. அவற்றுக்கு இடையில் கவனிக்கபடாமல் விடபடும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன”

என்கிறார்.பாலியல் ரீதியாக பாதிக்கபட்ட பலர் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர உதவியுள்ள புஷ்பா வெங்கட்ராமன், பூஜாவின் கருத்தை ஒத்துக்கொள்கிறார்.

“தகாத இடங்களில் தொடுதல், நேரடித் தொடர்பில்லாத குற்றங்களான மோசமான பார்வை, ஆபாச பேச்சு, மோசமான படங்களை செல்போனில் அனுப்புதல் போன்றவை தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை கவனிக்கபடுவது இல்லை” என்கிறார் புஷ்பா.

“பெண்களை பாலியல் ரீதியாகச் சீண்டும் விஷயங்களை பொறுத்தவரை குற்றவாளிகள் ஜாமீன் பெற்றுத் தப்பி விடுகிறார்கள் அல்லது வழக்கு விசாரணைக்கு வருவதற்கே பல்லாண்டுகள் ஆகின்றன அல்லது நீதிமன்றத்துக்கு வெளியிலேயே `சமரசம்’ என்று விஷயத்தை முடித்து விடுகிறார்கள்” என்று கூறும் புஷ்பாவின் குரலில் வருத்தம் இழையோடுகிறது.

“பாதிக்கபட்டவருக்கு நட்பான சூழல், விரைவான விசாரணை, துரிதமான நீதி ஆகியவைதான் தற்போதைய தேவை” என்று வலியுறுத்துகிறார் இவர்.

குற்றவாளிகள் தப்பிப்பதற்கு இந்திய சமுகச் சூழலும் ஒரு காரணமாக இருக்கிறது என்கிறார்கள், இவ்விஷயத்தில் கவனம் செலுத்தும் சமுக சேவகர்கள்.

“பெரும்பாலான நேரங்களில் பாலியல் தொந்தரவை நிகழ்த்துபவர் தெரிந்த நபராகத்தான் இருக்கிறார். அந்த மாதிரியான நேரங்களில் `குடும்ப கவுரவத்தை’க் கட்டிக் காப்பதுதான் பலருக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது” என்கிறார் மனநல மருத்துவர் ரீட்டா டிசவுசா.

கிராம்பின் மருத்துவ குணம்

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

செலவை குறைக்கும் `அற்புத விளக்கு

‘ மாத சம்பளத்தில் கணிசமான தொகை எலக்ட்ரிக் பில்லுக்கு போகிறது. நகர்ப்புறங்களில் வாடகைக்கு குடியிருக்கும் தம்பதிகள், மின்கட்டணத்தை மிச்சப்படுத்த பகல் நேரங்களில் ஜன்னல் வெளிச்சத்திலேயே சமாளிக்கப் பழகுகிறார்கள்.

அதேபோல உலகெங்கும் பயன்படுத்தும் மின்சார பல்புகள் வெளியிடும் வெப்பம், புவி வெப்பமாதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தடுக்கும் விதத்தில் மாற்றுத் தயாரிப்பு பல்புகள் அறிமுகப்படுத்துவது உண்டு.

இதுபோன்ற புதுமையான பல்புகளில் இதுவும் ஒன்று. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தேவையான பக்கத்திற்கு மட்டும் ஒளிரச் செய்ய முடியும். விளக்கு குமிழ் பகுதி 6 பகுதியாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதனை ரிமோட் முலம் இயக்கி நமக்கு தேவையான பக்கம் மட்டும் ஒளிர வைக்கலாம். இதனால் மின்சாரம் மிச்சமாவதோடு மின் கட்டணமும் ஓரளவு குறையும். மேலும் தூக்கம் பாதிப்பு உள்ளிட்ட சில இடையூறுகளும் தவிர்க்கப்படும்.

உங்களின் பொருளாதாரத்தை மிச்சப்படுத்தும் இந்த பல்பின் பெயரே `எகோபல்ப்’ ((Ecobulp) தான்!