‘பேஸ் புக்’கால் கதி கலங்கும் அமெரிக்க இந்திய பெற்றோர்

“உன் பெற்றோர் முட்டாள்கள்’ ; ” உன் தாய் தந்தையர் உன்னைப் புறக்கணிக்கின்றனர். உன்னைக் கட்டுப்படுத்துகின்றனர்’; இவையெல்லாம் பார்ட்டிக்குப் போக வேண்டாம் என்று பெற்றோர்களால் தடுக்கப்பட்ட ஒரு மாணவிக்கு சக மாணவியர் அளித்துள்ள ஆறுதல்.

அமெரிக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், “பேஸ் புக்’கைப் பயன்படுத்தி, தங்களுக்கு விருப்பமானவர்களுடன் பார்ட்டிக்குச் செல்லும் புதிய கலாசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசமான கலாசாரம் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுமோ என்று அங்கு வசித்து வரும் இந்தியப் பெற்றோர்கள் கலக் கம் அடைந்துள்ளனர்.அமெரிக்காவிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தங்கள் புத்தகங்களோடு துப்பாக்கி, மதுப்புட்டி, சிகரெட் பெட்டி போன்றவற்றையும் எடுத்துச் செல்வர் என்பது பழைய கதை. சமீபத்தில், மாணவிகள், தங்களைப் பாதுகாத்துக் கொள் வதற்காக “காண்டம்’ கொண்டு வர வேண்டும் என்று கூட சில பள்ளிகளில் உத்தரவு போடப்பட்டது.

மாணவர்களின் இந்தப் போக்குக்கு பெற்றோர்கள் பலவிதங்களில் தடைபோட்டாலும், இப்போது அவர்களைத் தடுக்க இயலாத வண்ணம் “பேஸ் புக்’ போன்ற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி முகம் தெரியாத நண்பர்களுடன் பார்ட்டிக்குச் செல்லும் வழக்கம் புற்றீசலாகப் பெருகத் தொடங்கியிருக்கிறது.இதற்குப் பெற்றோர்கள் தடைவிதித்தால், “இது மாணவர்களின் உரிமை’ என்று பேஸ்புக்கில் கூட்டம் சேர்த்துக் கொண்டு கொடி பிடிக் கின்றனர். முகம் தெரியாத நண்பர் களுடன் பேஸ் புக்கில் தொடர்பு கொண்டு, அவர்களுடன் எங்கேயாவது பார்ட்டிகளில் கலந்து கொண்டு வீட்டுக்கு நேரம் காலம் இல்லாமல் வருகின்றனர். தட்டிக் கேட்கும் பெற்றோர்களை “பேஸ் புக்’கில் திட்டுகின்றனர். இதற்கு ஒரு மாணவர் கூட்டமே உடந்தையாக இருக்கிறது.இப்படிப்பட்ட கலாசார சீரழிவால், அங்கு வசித்து வரும் இந்தியத் தலைமுறையினர், தங்கள் குழந்தைகளும் கெட்டு விடுமோ என்று கலங்குகின்றனர்.

%d bloggers like this: