Advertisements

Daily Archives: ஜனவரி 25th, 2010

விண்டோஸ் 7 – சில வசதிகள்

விண்டோஸ் 7 தொகுப்பு தரும் கூடுதல் வசதிகளினால், பலர் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு விரும்பி மாறியுள்ளனர். புதிதாக விற்பனை செய்யப்படும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பதிந்து தரப்படுகிறது. எனவே வாசகர்கள் பலர் விண்டோஸ் 7 தரும் சின்ன சின்ன வசதிகள் குறித்துத் தொடர்ந்து எழுதும் படி கேட்டுள்ளனர். ஏற்கனவே சில வாரங்களில் இது குறித்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதோ இன்னும் சில!
டாஸ்க் பார் பெரிதா – குறைக்கலாமே!
விண்டோஸ் 7 சிஸ்டத்தின் டாஸ்க் பார், வழக்கத்திற்கு மாறாகச் சற்றுப் பெரிதாகவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மானிட்டர் திரையின் அடிப்பாகத்தில் சற்று அதிகமாகவே இடத்தை எடுத்துக் கொள்கிறது.இதனால் பட்டன்கள் பெரிதாக இருக்கின்றன. நீங்கள் டச் ஸ்கிரீன் பயன்படுத்தினால், எளிதாக பட்டன்களை அழுத்தி கம்ப்யூட்டரை இயக்க முடியும். அதே நேரத்தில் சற்று சிறிதான அளவில் உள்ள மானிட்ட ர்களை இயக்குபவர்களுக்கு இது சிரமத்தைத் தரும் அம்சமாக இருக்கும். டாஸ்க் பார் எடுத்துக் கொள்ளும் இடத்தை அப்ளிகேஷன்களுக்குத் தந்தால் விரைவாகச் செயல்படலாம் என்று பலர் ஏங்குவார்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ள ஒரு வழி உள்ளது. இதன் மூலம் டாஸ்க் பாரினைச் சற்றுச் சுருக்கிக் கொள்ளலாம்.
1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் பிராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.
2. உடன் பல டேப்கள் அடங்கிய Taskbar and Start Menu Properties என்னும் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
3. இதில் Use small icons என்னும் பிரிவில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
4. பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.
இனி டாஸ்க் பார் சிறிய இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஏன், தேவையில்லாத போது இந்த டாஸ்க் பாரை மறைந்து கொள்ளும்படி செய்துவிடலாமே என்று உங்களில் பலர் நினைக்கலாம். தாராளமாக அவ்வாறும் செட் செய்திடலாம். இதற்கு மேலே 2ல் சுட்டிக் காட்டப்பட்டுள்ள Taskbar and Start Menu Properties டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். இதில் டாஸ்க் பார் (Taskbar) என்னும் டேப் திறக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இதில் Taskbar appearance என்பதற்குக் கீழாக Autohide the taskbar என்பதில் டிக் அடையாளம் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். உங்களு டைய செட்டிங்ஸ் சேவ் செய்யப்பட்டு, அவற்றில் அமைத்தபடி டாஸ்க் பார் இயங்கும். இனி உங்கள் அம்புக் குறியினை டாஸ்க் பாரிலிருந்து எடுத்துவிட்டால், டாஸ்க் பார் மறைந்துவிடும். அந்த இடத்திற்கு மீண்டும் கொண்டு சென்றால், டாஸ்க் பார் தோன்றும்.
கடிகாரம், சிஸ்டம் ஐகான்களை மறைக்கலாமா?
விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் கடிகாரம், சிஸ்டம் மற்றும் பிற ஐகான்களை மறைக்க முடியுமா? மறைக்க முடியும் என்றால் பலர் அவற்றை மறைக்கவே விரும்புவார்கள். வால்யூம் கண்ட்ரோல், நெட்வொர்க் இயக்க ஐகான், பவர் லெவல் என பல ஐகான்களை டாஸ்க் பாரிலிருந்து எடுத்துவிடலாம். ஏனென்றால் இவற்றை நாம் பார்ப்பது அரிது. சரி, எப்படி எடுத்துவிடலாம் அல்லது மறைத்துவிடலாம்.
1. டாஸ்க் பாரின் வலது மூலையில் மேலே சுட்டிக் கொண்டிருக்கும் அம்புக் குறி ஒன்றைக் காணலாம். அதன் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். அப்போது Show hidden icons என்று காட்டப்படும். அந்த பட்டனில் கிளிக் செய்து இதண்tணிட்டித்ஞு என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இப்போது Notification Area Icons என்னும் கண்ட்ரோல் பேனல் கிடைக்கும். இந்த விண்டோவின் கீழாக உள்ள Turn system icons on or off என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இதனை அடுத்து எந்த ஐகானில் மாற்றங்கள் தேவையோ, அல்லது எந்த ஐகானை மறைக்க செய்திட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த ஐகானில் கிளிக் செய்து, மெனு பெற்று அதனை ஆப் அல்லது ஆன் செய்திடலாம்.
4. அதன் பின் டயலாக் பாக்ஸில் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.

Advertisements

குண்டு பயணிகள் ‘பறக்க’ இரண்டு மடங்கு கட்டணம்

குண்டாக இருப்பவர்களுக்கு, ஏர் – பிரான்ஸ் விமான நிறுவனம், இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, ஏர் – பிரான்ஸ் விமானத்தில் பயணித்த குண்டு மனிதருக்கு, அந்த விமான நிறுவனம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலித்தது. இது, அந்த பயணியின் மனதை பாதிக்கும் செயல் என்பதால், ஏர் – பிரான்ஸ் நிறுவனத்துக்கு, கோர்ட் அபராதம் விதித்தது. இருப்பினும் இந்த நடைமுறையை கட்டாயமாக்க, ஏர் – பிரான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, ஏர் – பிரான்ஸ் அதிகாரி மோனிக் மேட்சிகூறியதாவது: பயணிகளின் பாதுகாப்பை கருதித் தான், குண்டு பயணிகளுக்கு, இரட்டை கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம். குண்டு பயணிகள், ஒரே இருக்கையில் கஷ்டப்பட்டு உட்கார்ந்தாலும், பாதுகாப்பு பெல்ட் அவர்கள் இடுப்பில் பொருத்த முடியாது. எனவே, குண்டான பயணிகளுக்கு, ஒரு சீட்டுக்கு முழு கட்டணமும், அடுத்த சீட்டுக்கு 75 சதவீத கட்டணமும் வசூலிக்கப்படும்.

விமானத்தில் பயணிகள் அதிகமாக இருக்கும் போது மட்டுமே இந்த கட்டணம். விமானம் காலியாக செல்லும் போது, இந்த கட்டணம் இல்லை. எனவே, விமானத்தில் போதிய பயணிகள் இல்லாத போது, வசூலிக்கப்பட்ட இரட்டைக் கட்டணத்தில் பாதியை திருப்பி கொடுத்து விடுவோம்.அடுத்த மாதம் முதல், விமானத்தில் பயணம் செய்ய பதிவு செய்பவர்களிடம் இந்த இரட்டைக் கட்டணம் வசூலிக்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது.இவ்வாறு மோனிக் கூறினார்.

நகம் ஏலம்!

நியுசிலாந்தில் உள்ளூர் உணவு வங்கிக்கு நிதி திரட்டியவர்கள், அதற்காக ஏலம் விட முடிவெடுத்தது ஒரு வித்தியாசமான பொருளை- நகம்!

ஒருவரின் கால் விரலில் ஓராண்டு காலமாக வளர்ந்து வரும் அந்த நகம் இன்னும் வெட்டபடவில்லை. ஏலம் எடுப்பவர்களுக்கு அதை வெட்டிக் கொடுத்துவிடுவார்களாம் (!). இதுவரை அதிகபட்சமாக 350 ருபாய்க்கு ஏலம் கேட்கபட்டுள்ளது. இணையதள நிறுவனத்தின் பக்கத்தில் அந்த நகம் பற்றிய குறிப்பில் `ஒரு நேர்மையான நியுசிலாந்து ஆணின் நகம்’ என்று குறிபிட்டிருக்கிறார்கள். ஏலத்தில் வெல்பவருக்கு 12 மி.மீ. நீளமுள்ள, மத்திய நிற, செயற்கை வண்ணம் பூசப்படாத நகம் கிடைக்கும், நகத்தை `நன்கொடை’யாக அளிப்பவர் ஊக்கமருந்து எதுவும் சாப்பிடாதவர் (ரொம்ப முக்கியம்!) என்றும் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

நகத்தை வாங்கிக் கொண்டுதான் பணம் கொடுக்க வேண்டுமா, நன்கொடை கொடுப்பது என்று முடிவெடுத்துவிட்டால் சும்மாவே கொடுக்கலாமே என்று முணுமுணுக்கிறீர்களா?

பா‌லி‌ன் மக‌த்துவ‌ம்

பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால்! என்கின்றன வேதங்கள். இ‌தி‌ல் இரு‌ந்தே பா‌லி‌ன் மக‌த்துவ‌த்தை நா‌‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
பா‌லி‌ல் தா‌ய்‌ப்பால‌், பசு‌ம்பா‌ல், எரு‌மை‌ப்பா‌ல், ஆ‌ட்டு‌ப்பா‌ல் என ‌சில வகைக‌க‌ள் உ‌ண்டு. ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ஒ‌வ்வொரு குண‌ம் உ‌ள்ளது.

தா‌ய்‌ப்பா‌ல் எ‌ன்பது ஒ‌வ்வொரு குழ‌ந்தை‌க்கு‌ம், தா‌யிட‌ம் இரு‌ந்து ‌கிடை‌க்கு‌ம் முத‌ல் ம‌ற்று‌ம் ஈடு இணைய‌ற்ற உணவாகு‌ம்.

அடு‌‌த்து பசு‌ம்பா‌ல் எ‌ன்பது இயல்பாகவே இனிப்பானது, உடலு‌க்கு குளிர்ச்சி தருவது. ஆனா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌ஜீரணமாகாது. எருமை‌ப் பா‌ல் அ‌திக‌க் கொழு‌ப்பு ‌நிறை‌ந்தது. உடலு‌க்கு ந‌ல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

ஆ‌ட்டு‌ப் பா‌‌லி‌ல் ம‌னித உடலு‌க்கு‌த் தேவையான ‌‌நிறைய ச‌த்து‌க்க‌ள் உ‌ள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!

பா‌ல் குடி‌த்தது‌ம் புத்துணர்வு தர‌க் கூடியது. பசு‌ம்பா‌ல் குடி‌த்து வ‌ந்தா‌ல் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலா‌ம். சோர் வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மா மரு‌ந்தாக உ‌ள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

இந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு.ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கு‌ம் ஏ‌ற்ற உணவாக பா‌ல் உ‌ள்ளது.

WDஇதில் பிரதானமானது பசும் பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது!

பால், மா‌ட்டி‌ன் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.

நீடித்த நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு/ செயலிழப்பு

நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்

காரணங்கள்

•சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்கள்
•வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல்
•சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம்
நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அளவில் அதிகரிப்பதினால் அசோடிமியா மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.

அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன

•உடல எடை இழப்பு
•குமுட்டல் வாந்தி
•பொதுவான உடல்நலக்குறைவு
•சோர்வு
•தலைவலி
•அடிக்கடி ஏற்படும் விக்கல்
•உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)
பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன

•வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
•இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
•சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
•வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
•மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
•தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
•தோலில் வெள்ளைநிற படிகங்கள்
•கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல்
நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
•அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
•அதிக தாகம் ஏற்படுதல்
•தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
•நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
•சுவாசம் நாற்றம் எடுத்தல்
•உயர் இரத்த அழுத்தம்
•பசியின்மை

எப்பொழுது மருத்துவ நிபுணரை அணுகுவது?

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் குமட்டல் அல்லது வாந்தி இருப்பின் மருத்துவரை அணுகலாம். அன்றாடம் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு குறைந்தாலோ அல்லது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகள் தோன்றினாலே மருத்துவரை அணுகலாம்.

தடுப்புமுறை

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரத்தத்திலுள்ள சர்’க்கரை அளவினை மற்றும் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதின் மூலமும் புகை பிடிக்கும் வழக்கத்திலிருந்து விலகியிருப்பதன் மூலமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதினை தடுக்கலாம்.

சாதா குண்டா… கொழுப்பு குண்டா?

* ஊதினாலும் சுறுசுறுப்பு குறையலே ஓகே தான்
* நடுத்தரமாக இருந்தாலும் “ஒபிஸ்’ன்னா உஷார்
“டேய், நம்ம ஹரியை பாரு, குண்டாகத்தான் இருக்கான்; ஆனா, நல்லா சாப்பிடறான்; சுறுசுறுப்புக்கு குறைவே இல்லை. அது எப்படிடா, அவனுக்கு ரத்த அழுத்தமோ, ஷுகரோ இல்லையே…?’
“ஒனக்கு ஓவர் வெயிட் இல்லை; ஒபிஸ் என்றும் சொல்ல முடியாது; ஆனா, அடிக்கடி சோர்வடைறியே…அதான் சந்தேகமாக இருக்கு. எதுக்கும் டாக்டரை பார்த்துடு…’
“நான் வீட்டுச் சாப்பாடு தான் எப்போதும் சாப்பிடுவேன்; தண்ணீர் கூட வீட்டில் இருந்து பாட்டிலில் பிடித்து ஆபீசுக்கு எடுத்து சென்று விடுவேன்; எனக்கு எப்படி மாரடைப்பு வந்தது?’
“நான் ஊர்மாறி வேலை செய்து வருகிறேன்; ரூம் எடுத்து தங்கியுள்ளேன்; ஓட்டல் சாப்பாடு போரடிக்கத்தான் செய்யுது; என்ன செய்வது? இப்பத்தான் பயமா இருக்கு!’
இப்படி பல தரப்பட்டவர்களும் நம்மில் உள்ளனர். ஆனால், வராது…வராது என்று சொல்லி தைரியமாக இருப்பவர்கள் எல்லாருக்குமே ஏதாவது ஒரு கட்டத்தில் இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வரத்தான் செய்கிறது. இதனால், இப்படிப்பட்ட பலருக்கும் பெரும் குழப்பம் தொடர்கிறது.
எது சாதா? எது “ஒபிஸ்?’
ஒருவர் சராசரியை விட, அதிக எடை உள்ளவராக தோற்றமளிக்கலாம்; ஆனால், அதிக எடை எதனால் வந்தது என்பது தான் முக்கியம். அதன் மூலம் தான் ஒருவர் சாதா குண்டா? கொழுப்பு குண்டா? என்பதை டாக்டர் முடிவு செய்வார்.
சாதா குண்டாக இருந்தால் கலோரி (எனர்ஜி)யை குறைக்கச்சொல்வார்; “ஒபிஸ்’ குண்டாக இருந்தால் கூடுதலாக சிகிச்சை, உடல் பயிற்சி தேவைப்படும். சதைப்பற்று, எலும்பு திண்மை, கொழுப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றால் தான் உடல் எடை அதிகரிக்கிறது. இதில், உணவு, பழக்க வழக்கங்களால் கொழுப்பு அதிகரித்து அதன் மூலம் குண்டு ஏற் பட்டால் அது தான் “ஒபிசிட்டி’ என்பது.
ஒபிசிட்டி வந்தால்…
சதைப்பற்று, எலும்பு திண்மை, தண்ணீர் போன்றவற்றால் ஏற்படும் குண்டு கரைவது எளிது. ஆனால், “ஒபிஸ்’ மூலம் ஏற்படும் குண்டு அதிகரித்தால் ஆபத்து தான். முதலில் ரத்த அழுத்தம், ஷுகர் அளவு லேசாக அதிகரிக்கும்; அப்போது பெரிதாக ஒன்றும் ஏற்படாது. திடீரென, பெரும் கோளாறை ஏற்படுத்தி விடும். இதய நோய், உயர் ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய் மட்டுமல்ல, பித்தப்பை, கல்லீரல் பிரச்னை, சுவாசக்கோளாறு என்று, கேன்சரில் கூட கொண்டு போய் விட்டு விடும்.
என்ன காரணம்?
சாதா குண்டாக இருந்தாலும், “ஒபிசிட்டி’ குண்டாக இருந்தாலும் இரண்டு தரப்பினருமே கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், உணவு முறை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால் மேற்சொன்ன உடல் பிரச்னைகள் அணிவகுப்பது உறுதி.
“எனக்கு தான் கொழுப்பே இல்லைன்னு டாக்டர் சொல்லிட் டாரே என்று கண்டபடி சாப்பிட்டாலோ, பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டாலோ, அடுத்த சில ஆண்டில் உங்கள் சாதா குண்டு, “ஒபிஸ்’ குண்டாக மாறி விடும் என்பதை மறந்து விட வேண்டாம். வைட்டமின், கனிம, நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடுவது முக்கியம்; போதுமான உடல் பயிற்சியும் முக்கியம். “டென்ஷன்’ வாழ்க்கையில் பயிற்சிக்கு எங்கே போவது என்று கடுப்பாக வேண்டாம்; வீட்டு வேலையை செய்தோ, தோட்ட வேலை செய்தோ உடலில் இருந்து கலோரியை குறைத்து கொள்ளலாமே.
எனர்ஜி இன் – அவுட்
உணவு, உடற்பயிற்சியில் சம நிலையை கடைபிடித்தாலே, ஒருவர் சீரான உடல் எடையை கொண்டிருக்கலாம். நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் மற்றும் இதர நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் மூலம் நம் உடலில் சேரும் கலோரியை “எனர்ஜி இன்’ என்று டாக்டர்கள் அழைக்கின்றனர். அதுபோல, சுவாசம், ஜீரணம் மட்டுமின்றி, நடப்பது, குனிந்து ,கை, காலை மடக்கி வேலை செய்வது போன்ற உடலை அசைத்து செய்யும் சில செய்கைகள், தனியாக செய்யும் உடற்பயிற்சிகள் போன்றவை மூலம் வெளியேற்றப்படும் கலோரி தான் “எனர்ஜி அவுட்’ என்பது.
நீங்கள் எந்த அளவுக்கு “எனர்ஜி இன்’ சேர்க்கிறீர்களோ, அந்த அளவுக்கு “எனர்ஜி அவுட்’ டில் சமப்படுத்தி விட்டால், உங்கள் ஆரோக்கியம் சூப்பராக இருக்கிறது என்று பொருள்.
இப்போது புரியுமா?
ஏன் கொழுப்பு, இனிப்பு கலந்த பர்கர், பிட்சா, கூல் டிரிங்க், பாக்கெட் நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை குறைவாகவும், காய்கறி, பழங்களை அதிகமாகவும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் “கத்தோ கத்து’ என்று கத்துகின்றனர்.
டாக்டர்கள் இப்படி கத்துவதை பலரும் கண்டுகொள்ளாமல் வியாதிகளை வரவழைத்துக்கொண்டு, கடைசியில் “அந்த டாக்டர் பகல் கொள்ளைக்காரன்பா…’ என்று மட்டும் வாய் நோகாமல் சொல்வது சரியா?
சமமான “எனர்ஜி இன்’ + “எனர்ஜி அவுட்’ = ரத்த அழுத்தம், ஷுகர் வரவே வராதுங்க.
அதிக “எனர்ஜி இன்’ + குறைவான “எனர்ஜி அவுட்’ = ஒபிசிட்டி நிச்சயம்.
குறைவான “எனர்ஜி இன்’ + அதிக “எனர்ஜி அவுட்’ = எடை குறையும்; ரத்த சோகை உட்பட தொல்லை அணிவகுக்கும்.

பிறையாசனம்

இவ்வாசனத்தை அர்த்த (பாதி) சக்கராசனம் எனக் கூறுவர். நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொண்டு கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு பின்னால் வளைய வேண்டும். கொஞ்ச நாளில் படத்தில் காட்டியபடி இரண்டு கால்களையும் கைகளினால் பிடித்தபடி பின்னால் வளையும் தன்மை கிடைக்கும். சாதாரண மூச்சு ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.

பலன்கள்:

முதுகுத் தண்டு பலம் பெறும். இளமை மேலிடும். உடலில் உள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்பெற்று புத்துணர்ச்சி பெறும். சோம்பல் ஒழிந்து சுறுசுறுப்பு உண்டாகும். கூன் முதுகு நிமிரும். நெஞ்சுக் கூடு விரிந்து நுரையீரல், சுவாச உறுப்புகள் பலம் பெறும்.

பகவானுக்கு நன்றி செலுத்துவது எப்படி? (ஆன்மிகம்)

பகவானால் படைக்கப்பட்டது தான் இந்த உலகமும், உலகில் உள்ள புழு, பூச்சி முதல் மனிதன் வரை சகலஜீவராசிகள் யாவுமே. இந்த ஜீவன்கள் ஜீவிப்பதற்காகவே நீர், நெருப்பு, காற்று இவைகளையும், மரம், செடி, கொடி, புல், பூண்டு, காய், கனி, கிழங்கு போன்றவைகளையும் படைத்தான்.
மனிதர்களுக்காக இவ்வளவையும் படைத்துள்ள பகவானுக்கு, மனிதன் நன்றி தெரிவிக்க வேண்டாமா? மனதால் அவனை நினைத்து துதிக்கலாம்; பூ, பழம் முதலியவற்றை அவனுக்கு அர்ப்பணம் செய்யலாம்; அவன் நாமாவளியைச் சொல்லிச் சொல்லி நன்றி தெரிவிக்கலாம். இந்த நன்றியை அவன் எதிர்பார்க்கிறானா, இல்லையா என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். படைத்தல், அழித்தல், காத்தல் என்ற மூன்று காரியங்களையும் அவன் கடமையாகச் செய்கிறான்; நன்றியை எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனாலும், நன்றி செலுத்த வேண்டியது மனிதனின் கடமை.
பகவான், ரொம்பவும் எளிமையானவன். அவனிடம் பக்தியோடு இருப்பவர்களுக்கு தன் சுய ரூபத்தைக் காண்பிக்கிறான்; பக்தரல்லாதவருக்கு உக்ரமான ரூபத்தோடு தோன்றுகிறான். பிரகலாதனுக்கு நாராயணனாகவும், அவனது தந்தையான இரணியனுக்கு நரசிம்மனாகவும் காட்சியளித்தான். பக்தனை ரட்சித்தான்; துஷ்டனை சம்காரம் செய்தான்.
எந்த சின்ன பொருளை பகவானுக்கு, அர்ப்பணம் செய்தாலும், அதை மிகப் பெரியதாக எண்ணி, ஏற்று சந்தோஷப்படுகிறான். மனமுவந்து அவனுக்கு எந்த விதத்திலாவது நன்றி செலுத்துபவர்களை அவன் தன் பக்தனாக பாவிக்கிறான். பக்தர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான்; செய்கிறான்.
சபரி என்கிற வேடுவ ஸ்த்ரீ, பகவானிடம் பக்தியோடு இருந்தாள். காட்டில் உள்ள கனிகளை சேகரித்து பகவானின் வரவுக்காக காத்திருந்தாள். அவளது ஆசிரமத்தைத் தேடிச் சென்று அவள் அளித்த பழங்களை உண்டு மகிழ்ந்து, அவளுக்கு முக்தியும் அளித்தார் ராமர்.
பாண்டவர்களுக்காக தன் பெருமைகளை மறைத்து, தூதுவனாக சென்றான்; பார்த்தனுக்கு தேரோட்டியாக இருந்தான் பார்த்தசாரதி! என்ன காரணம்? பக்திக்குக் கட்டுப்பட்டான். பக் தனுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும் என்பது அவனது கொள்கை.
இதே நாராயணன் தானே மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவும், நரசிம்மனா கவும் உருவெடுத்தான்! எதற்காக? பக்த ரட்சணம்! ஆகவே, அவன் சிறுமையாகவும் இருப்பான்; பெருமையாகவும் இருப்பான். அவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாமும் ஏதா வது ஒரு வழியில் அவனிடம் ஈடுபாடு கொண்டு விட்டால் அவன் அருள் செய்வான்!
“சாமியாவது, பூதமாவது…’ என்று சொன்னால் சாமி வராது; பூதம் தான் வரும்!