குண்டு பயணிகள் ‘பறக்க’ இரண்டு மடங்கு கட்டணம்

குண்டாக இருப்பவர்களுக்கு, ஏர் – பிரான்ஸ் விமான நிறுவனம், இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, ஏர் – பிரான்ஸ் விமானத்தில் பயணித்த குண்டு மனிதருக்கு, அந்த விமான நிறுவனம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலித்தது. இது, அந்த பயணியின் மனதை பாதிக்கும் செயல் என்பதால், ஏர் – பிரான்ஸ் நிறுவனத்துக்கு, கோர்ட் அபராதம் விதித்தது. இருப்பினும் இந்த நடைமுறையை கட்டாயமாக்க, ஏர் – பிரான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, ஏர் – பிரான்ஸ் அதிகாரி மோனிக் மேட்சிகூறியதாவது: பயணிகளின் பாதுகாப்பை கருதித் தான், குண்டு பயணிகளுக்கு, இரட்டை கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம். குண்டு பயணிகள், ஒரே இருக்கையில் கஷ்டப்பட்டு உட்கார்ந்தாலும், பாதுகாப்பு பெல்ட் அவர்கள் இடுப்பில் பொருத்த முடியாது. எனவே, குண்டான பயணிகளுக்கு, ஒரு சீட்டுக்கு முழு கட்டணமும், அடுத்த சீட்டுக்கு 75 சதவீத கட்டணமும் வசூலிக்கப்படும்.

விமானத்தில் பயணிகள் அதிகமாக இருக்கும் போது மட்டுமே இந்த கட்டணம். விமானம் காலியாக செல்லும் போது, இந்த கட்டணம் இல்லை. எனவே, விமானத்தில் போதிய பயணிகள் இல்லாத போது, வசூலிக்கப்பட்ட இரட்டைக் கட்டணத்தில் பாதியை திருப்பி கொடுத்து விடுவோம்.அடுத்த மாதம் முதல், விமானத்தில் பயணம் செய்ய பதிவு செய்பவர்களிடம் இந்த இரட்டைக் கட்டணம் வசூலிக்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது.இவ்வாறு மோனிக் கூறினார்.

%d bloggers like this: