நகம் ஏலம்!

நியுசிலாந்தில் உள்ளூர் உணவு வங்கிக்கு நிதி திரட்டியவர்கள், அதற்காக ஏலம் விட முடிவெடுத்தது ஒரு வித்தியாசமான பொருளை- நகம்!

ஒருவரின் கால் விரலில் ஓராண்டு காலமாக வளர்ந்து வரும் அந்த நகம் இன்னும் வெட்டபடவில்லை. ஏலம் எடுப்பவர்களுக்கு அதை வெட்டிக் கொடுத்துவிடுவார்களாம் (!). இதுவரை அதிகபட்சமாக 350 ருபாய்க்கு ஏலம் கேட்கபட்டுள்ளது. இணையதள நிறுவனத்தின் பக்கத்தில் அந்த நகம் பற்றிய குறிப்பில் `ஒரு நேர்மையான நியுசிலாந்து ஆணின் நகம்’ என்று குறிபிட்டிருக்கிறார்கள். ஏலத்தில் வெல்பவருக்கு 12 மி.மீ. நீளமுள்ள, மத்திய நிற, செயற்கை வண்ணம் பூசப்படாத நகம் கிடைக்கும், நகத்தை `நன்கொடை’யாக அளிப்பவர் ஊக்கமருந்து எதுவும் சாப்பிடாதவர் (ரொம்ப முக்கியம்!) என்றும் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

நகத்தை வாங்கிக் கொண்டுதான் பணம் கொடுக்க வேண்டுமா, நன்கொடை கொடுப்பது என்று முடிவெடுத்துவிட்டால் சும்மாவே கொடுக்கலாமே என்று முணுமுணுக்கிறீர்களா?

%d bloggers like this: