சின்ன சின்ன செய்திகள் -உடல் நலம்

2 மணி நேர “டிவி’
நீங்க “டிவி’ பார்ப்பீங்களா? இதென்ன கேள்வி “டிவி’ பார்க்காதவங்க இருக் காங்களா என்று கேட்கலாம். ஆனால், “டிவி’ பார்த்து “ஒபிசிட்டி’ வந்து, இப் போது அந்த பக்கமே தலைவைத்து படுக்க மாட்டேன் என்பவர்கள் இருக்கத் தானே செய்கின்றனர். நீங்கள் தொடர்ந்து 2 மணி நேரம் “டிவி’ பார்ப்பவர் என்றால், “ப்ளீஸ்’ மாறுங்க; இல்லே, அடுத்த ஐந்தாண்டில் நீங்களும் “ஒபிஸ்’ பட்டியலில் சேர்ந்து , மருத்துவ செலவுக்கு மாத பட்ஜெட் போட வேண்டி வரும்.
“டென்ஷன் பார்ட்டியா?’
சென்னை உட்பட நகரங்களில் நடைபாதை குறைவு; அதனால் வாக்கிங் போக முடியாது; அப்படியே பூங்காவுக்கு செல்லலாம் என்றால், ஆபீஸ் ஓட வேண்டிய நிலை. “டென்ஷன்’ என்று பறக்கும் சிலர் யோசிப்பது நல்லது.
இதுபோல, வார இறுதி ஓட்டல், இப்போது நாள்தோறும் ஓட்டல் சாப்பாடு என்று ஆக்கி விட்டனர். சத்தாக சாப்பிட, வீடு ஏற்றது. ருசியாக சாப்பிட ஆரம்பத்தால், கொழுப்பு ஏறி, குண்டாக வாய்ப்பு அதிகம். இவர்கள் எல்லாம் இதை மாற்றிக்கொள்வது எப்போது?
கவர்ச்சியா – காய்கறியா?
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் பார்த்து, கவர்ச்சியான பளபள பாக்கெட்களில் வரும் எதையும் வாங்கி சாப்பிடுவதில் தான் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். காய்கறி, பழங்களில் உள்ள சத்துக்கள் பற்றி அவர்களுக்கு ஏனோ தெரிவதில்லை. கலோரி விழிப்புணர்வு வந்தால் தான் இது புரியும். காய்கறி, பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் அழகு கூடும்; “சிக்’கென்று எப்போதும் இளமை குன்றாமல் இருக்கும்.
“ஹைபோ தைராய்டிசம்’
தைராய்டு சுரப்பி இயங்குவதில் பாதிப்பு ஏற்பட்டால், இப்படி அழைப்பதுண்டு. தைராய்டு சுரப்பி போதுமான அளவில் வேலை செய்தால், உடல் சுறுசுறுப்பாக இருக்கும். குண்டாக இருப்பவர்களுக்கு இது வேலை செய்வது குறையும். விளைவு, பலவீனம், சோர்வு .
குண்டாக இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மட்டுமல்ல, சுரப்பி பிரச்னைகளும் ஏற்படும். ஆண்களை விட, பெண்களுக்கு இந்த பிரச்னை வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
ஓடியாடி விளையாடு
ஓடி விளையாடு பாப்பா என்பது வெறும் புத்தகத்தில் தான் இருக்கிறது; எந்த பள்ளியிலும் உடற்பயிற்சி வகுப்பு இருப்பதாக தெரியவில்லை. குழந்தைப்பருவத்திலேயே “ஒபிஸ்’ ஆக இதுவும் ஒரு காரணம்.
ஒரு பக்கம் கம்ப்யூட்டர், வீடியோ கேம், இன்னொரு பக்கம் மொறுமொறு பாக்கெட் உணவுகள்… போதுமே, பிளஸ் 2 வரும் போதே குட்டீஸ் குண்டாகிவிடும். அதனால், ஓடியாட விளையாட விடுங்கள் பெற்றோரே.
“கஷ்ஷிங் சிண்ட்ரோம்’
உடலில் உள்ள அட்ரினலின் சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் போது ஏற்படும் பாதிப்பு இது. தேவையில்லாமல் அதிக அளவில் டானிக், மாத்திரைகள் எடுப்பவர்கள் குண்டாகி விடுவர்; அவர்களுக்கு இந்த பிரச்னை வரும். இதனால், உடலின் மேல் பகுதி, அதிக பருமனாக இருக்கும். குறிப்பாக, வட்ட முகம் உப்பியது போல இருக்கும். அதுபோல, கழுத்து, கை, கால்களில் சதை தொங்கி விழும். எல்லாம் கொழுப்பு தான்.
கண்டபடி சாப்பிடுவதால்
கோபம் வந்தால் அடுத்தவர் மீது எரிந்து விழுவர் என்று தான் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், கோபம் வந்தால் அதிகம் சாப்பிடுவதும் உண்டு. ஆம், கோபம், சோர்வு, கவலை, மன அழுத்தம் போன்றவை ஏற்படுவது பலருக்கும் இப்போது சகஜம். இந்த “டென்ஷன்’ பேர்வழிகள், கோபத்தை அடுத்தவர் மீது காட்ட மாட்டார்கள்; அதற்கு பதில், கண்டபடி “உள்ளே’ தள்ளுவர். கடைசியில் குண்டாகும் போது தான் காரணம் புரியும்.
5 மணி நேர தூக்கமா?
சராசரியாக எந்த வயதினராக இருந்தாலும், தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை இரவு தூங்க வேண்டும். ஆனால், இப்போதுள்ள கம்ப்யூட்டர் உலகில், படுக்கைக்கு நள்ளிரவு 12 மணிக்கு போவதை பலரும் பழக்கப்படுத்தி உள்ளனர். டாக்டர்கள் செய்யும் எச்சரிக்கை; 5 மணி நேரம் தூங்கியவர்கள் தான் குண்டாகி உள்ளனர் என்பதே. நீங்கள் இப்படியா, மாறுங்க.
பசியால் தவிப்பீர்கள்
என்ன தான் பட்டினி கிடந்தாலும், குறிப்பிட்ட நேரம் வரை தான் தாங்க முடியும். அதற்கு நமக்கு உதவுவது சுரப்பிகள் தான். “பசிக்குதடா’ என்று நமக்கு நினைவுபடுத்துவது, “க்ரெலின்’ என்ற சுரப்பி. அதுபோல, பட்டினி ஏற்பட விடாமல், சமாளிக்க கைகொடுப்பது “லெப்டின்’ சுரப்பி. தூக்கத்தை தியாகம் செய்வோருக்கு, முதல் சுரப்பி அதிகமாக சுரக்கும்; இரண் டாவது, மிகக்குறைவாக சுரக்கும். அதனால் தான் தூக்கத்தில் இருந்து எழுந்தால் அதிகமாக அள்ளிப் போட்டுக்கொள்கின்றனர். புரிகிறதா?

%d bloggers like this: