தொடை சதையை குறைக்க எளிய 7 வழிகள்

ஸ்லிம் ஆக இருக்க வேண்டும் என்பது பல பெண்களது ஆசை – கனவு. ஆனால், ஸ்லிம் ஆசை எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. பெண்களில் பலர், திருமணம் ஆகி ஒரு குழந்தை பெற்றவுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் விடுகிறார்கள்.

சில பெண்களுக்கு தொடைப் பகுதியில் மட்டும் அதிக சதை போட்டுவிடும். அப்படிப்பட்ட பெண்கள் சில எளிய உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்தபடி செய்து வந்தாலே, அந்த தேவையற்ற சதையை கரைத்துவிடலாம்.

அந்த உடற்பயிற்சிகள் :

சேரில் அமர்ந்து கொண்டு கால்களை மடக்கியபடி மேல் நோக்கி தூக்கி இறக்கவும். கால்களை மாற்றி மாற்றி இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும். சுமார் 20 முறை இப்படிச் செய்தால் போதும்.

சேரில் அமர்ந்துகொண்டு கால்களை அப்படியே நேராக மேலே தூக்கி இறக்கவும். முடிந்தவரை இப்படிச் செய்தாலே போதும். கீழே படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே தூக்கி இறக்கவும்.

ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு கால்களை 20 முறை மேலே தூக்கி இறக்கவும். இடது பக்கமும், வலது பக்கமும் மாறி மாறி படுத்துக்கொண்டு இதைச் செய்ய வேண்டும்.

நேராக நின்றபடி உங்கள் இரண்டு கால்களையும் விரித்துக் கொள்ளவும். கைகளை தலைக்கு மேல் தூக்கி கை தட்டவும். 30 முறை இப்படி செய்யவும். நின்றபடியே கால்களை மாறிமாறி இடுப்பு வரை தூக்கி இறக்கவும்.

– இந்த எளிய உடற்பயிற்சிகளை தொடைப் பகுதியில் அதிக சதை கொண்டவர்கள் தொடர்ந்து செய்து வந்தால், அந்த பகுதி சதை குறைந்து தொடைப் பகுதியானது ஸ்லிம் ஆகி அழகாகும்.

ஒரு மறுமொழி

%d bloggers like this: