Daily Archives: ஜனவரி 28th, 2010

எல்லை மீறாமல் எல்லாமும்..!- டீன் ஏஜ் பருவத்தில்

டீன் ஏஜ் பருவத்தில் தேடலும், கேள்விகளும், குழப்பமும், பக்குவமின்மையுடன் கலந்து வெளி படும். ஆனாலும் அடிபடை குணங்கள் மாறாது. இதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளாததால்தான் பெற்றோர், பிள்ளைகள் இடையே பிரச்சினைகள் தோன்றுகின்றன. டீன் ஏஜில் எவ்வளவு மாற்றம் வந்தாலும், அவர்களின் நேர்மையையும், உயர் நோக்கத்தையும் சந்தேகிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது அவர்கள் மனதை வெகுவாய் புண்படுத்தும்.

விடலை பருவத்தில் அவர்களின் நட்பை பற்றி, மற்றவர்களின் அங்கீகாரத்தை பற்றி, பிரகாசமான எதிர்காலத்தை பற்றி, உயர்ந்த லட்சியங்கள் பற்றி… மேன்மையாக விளக்குங்கள்.

அவர்களின் நடை, உடை, பாவனையை வைத்து அவர்களை தவறாக எடை போட வேண்டாம். உங்கள் மகன் உங்களைக் கேட்காமல் ஊர் சுற்றிவிட்டு வந்ததற்காக வீட்டுக்கு வெளியில் நிற்க வைத்து கத்த வேண்டாம். மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அடிக்கடி அவமான படுத்த வேண்டாம். ஒப்பிடுவதும், போட்டி மனபான்மையும் அவர்களுக்கு தவறான சிந்தனையைக் கொடுத்து விடும்.

அவர்களுடன் உட்கார்ந்து மனம் விட்டு பேசுங்கள். அதை விட முக்கியமான வேலை வேறு ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய டீன் ஏஜ் பிள்ளைகளிடம் நண்பனை போல பாவித்து நடந்து கொண்டால், தங்களுடைய ஆதங்கங்களையும், பிரச்சினைகளையும், கேள்விகளையும் உங்களிடம் கொட்டித் தீர்ப்பார்கள். மொட்டு விரிவது போன்று தான் இந்த பகிர்தலும் நடக்கும். அவர்கள் தலை சாய்ந்து கொள்ள உங்கள் தோளைக் கொடுங்கள்.

டீன் ஏஜ் பருவத்தினருக்கு சுதந்திரம், சுவாசக் காற்று போல! தங்களுடைய விருப்பபடி எல்லாமே நடக்க வேண்டும் என்று எதிர்பார்பார்கள். டீன் ஏஜ் பெண்கள் நிறைய விஷயங்களை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்கிறாள்.

அவர்களுக்கென ரகசியங்கள் உண்டு. பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் அவள் புரியாத புதிராகிறாள். வெளியே செல்வது, தோழிகளைச் சந்திப்பது முக்கியமாகிறது. தன் ஆடைகள், தன் தனித்துவத்தையும், தன் விருபத்தையும் வெளிபடுத்த வேண்டுமென நினைக்கிறாள்.

தன் உணர்வு, தன்னம்பிக்கை, போட்டி மனபான்மை ஆகியவை டீன் ஏஜ் பருவத்தினரின் சுதந்திர உணர்வு அடையாளங்கள்! தன்னை பற்றி தனக்கிருக்கும் பெருமித உணர்வு மற்றவர்களுக்கு எட்ட வேண்டும் என்பதும், தனது பெரிய நண்பர்கள் வட்டத்தை பார்த்து மற்றவர்கள் பெருமை அல்லது பொறாமை கொள்ள வேண்டும் என்பதும் பெரும்பாலான விடலை பருவத்தினரின் விருப்பம்!

சுதந்திரம் என் பிறப்புரிமை என்பது போல வாய் சவடால் பேசி, கடமைகளை புறக்கணிக்கும் இளம் பருவத்தினர், பிற்காலத்தில் தங்களுடைய வாழ்க்கையை நினைத்து ஏங்குவர். சுயக் கட்டுபாட்டுடன் கூடிய சுதந்திரம், தார்மீக அற உணர்வு மேலோங்கி நிற்கும் குடும்பம், படிபையும், கனவையும், கலைகளையும், கட்டுபாடுகளையும் குழைத்து வழங்கும் பள்ளி, கல்லூரி என இன்றைய டீன் ஏஜ் பருவத்தினருக்கு அரண்கள் அதிகமாக தேவை.

முதலுதவி அளிப்பது எப்படி?

முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:

1. உயிரை பாதுகாக்க வேண்டும்.
2. நிலமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3. சீக்கிரத்தில் குணமளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களை தேற்றி, ஆறுதல் சொல்ல வேண்டும். பயப்படக் கூடாது. தவிரவும் வேறு சில பொறுப்புகளும் உள்ளன.

1. உடனடியாக நிலமையை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். பதட்டபடக் கூடாது. தகுந்த மருத்துவ உதவி கிடைக்க உதவ வேண்டும்.

2. தீ விபத்தில் சிக்கி கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால் முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னை பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு பாதிக்கப்பட்டவர், பிறகு அருகில் இருப்பவர்.

3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

4. உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர் மீது நம் கவனம் முதலில் திரும்ப வேண்டும்.

5. சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத்துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்-.

6. மருத்துவ உதவி கிடைக்கும்வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.

7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.

எப்படிச் சமாளிப்பது?

நிதானத்துடன், பதற்றமில்லாமல், இவை இரண்டும் மிக மிக முக்கியம். மேலும் சில குறிப்புகள் கீழே,

1. சூழ்நிலையை உணர்தல்
2. பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல்
3. அவசர சிகிச்சை அளித்தல்
4. உதவி பெறுதல்
5. மீண்டு வருதல்

மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது

மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் “கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்” பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

அண்மைக் காலமாக, மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்று நோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ÔÔமாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது” என கலிபோர்னியாவின் டாரேட்டில் உள்ள சிட்டி ஆப் ஹோப் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின் இணை தலைவர் ஷியுவான் சென் தெரிவித்துள்ளார்.

ÔÔமனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான அமிலம் இருப்பது தெரியவந்துள்ளது. மாதுளையில் மருத்துவ குணங்கள் அதிகம். எனினும், இது ஆய்வக முடிவுதான். நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது” என ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இன்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர் கூறினார்.

உருவாகப் போகும் விரைவுவழிச் சாலைகள்

2012-ம் ஆண்டில் இந்தியாவில் 11 விரைவுவழிச் சாலைகளை (எக்ஸ்பிரஸ் வேஸ்) உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ன்று கட்டமாக நடைபெறவிருக்கும் விரைவுவழிச் சாலைப் பணியில் முதல் கட்டமாகும் இது.

இந்த 3 ஆயிரத்து 140 கிலோமீட்டர் தூரச் சாலைகள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மராட்டியம், குஜராத், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் அமைகின்றன.

விரைவுவழிச் சாலை அமைப்பது தொடர்பான ஆய்வில், அவற்றின் நீளத்தை 19 சதவீதம் அதிகரிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது 2022-ம் ஆண்டுவாக்கில் 15 ஆயிரத்து 600 கிலோமீட்டர் சாலைகள் அமைக்க முடிவெடுத்திருந்ததைத் தற்போது 18 ஆயிரத்து 637 கிலோமீட்டராக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவுவழிச் சாலைப் பணி ன்று கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் அதிகபட்சமாக 580 கி.மீ. சாலை முதல், குறைந்தபட்சமாக 175 கி.மீ. வரை அமையும். இப்பணி 2012-ம் ஆண்டில் தொடங்குகிறது.

இரண்டாவது கட்டப் பணி 2013-ம் ஆண்டில் தொடங்கி 2017-ம் ஆண்டில் முடிவுறும். இதன் மொத்த நீளம் 3 ஆயிரத்து 690 கி.மீ. ஆகும். இதில் நீளமான சாலை 700 கி.மீ. அளவில் அமையும். 2018-ல் தொடங்கி 2022-ல் முடிவடையும் ன்றாவது கட்டப் பணியில் மேலும் 6 ஆயிரத்து 31 கி.மீ. விரைவுவழிச் சாலை உருவாக்கப்படும்.

இந்த அனைத்துச் சாலைப் பணிகளும், உருவாக்கி, இயக்கி, ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

தேவைக்கேற்ப ன்றாவது கட்டத்தில் கூடுதலாக 5 ஆயிரத்து 275 கி.மீ. சாலை சேர்க்கப்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முதலாவது கட்டத்தில் கோவை- சேலம் இடையே 175 கி.மீ. சாலை, கன்னியாகுமரி- திருச்சூர் 400 கி.மீ. சாலை அமையும்

விரைவுவழிச் சாலைகளுக்கான ஒரு நிதித் திட்டத்தை உருவாக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அத்திட்டத்தில், விரைவுவழிச் சாலைகளை ஒட்டிய நிலங்களை மேம்படுத்துவதும் அடங்கும்.

ஒரு கட்டுப்பாட்டு அமைப்பாக, இந்திய தேசிய விரைவுவழிச் சாலை ஆணையத்தை உருவாக்குவதற்கான வரைவு மசோதாவைத் தயாரிக்கும் பணியிலும் திட்ட கமிஷன் ஈடுபட்டுள்ளது.

விரைவுவழிச் சாலை அமைப்பது தொடர்பான ஆய்வில், நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவுவழிச் சாலைப் பணியால் பாதிக்கப்படுபவர்களை, வெற்றிகரமாக முடிக்கப்பட்ட திட்டங்களில் ஒரு பங்குதாரராகச் சேர்ப்பதற்கான நடைமுறையை உருவாக்கவும் கூறப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் புனர்வாழ்வுப் பணிகளில் மாநில அரசுகள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது.சுற்றுச்சூழல் அனுமதி போன்ற பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு தனிப் பிரிவை உருவாக்கவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளது. விரைவுவழிச் சாலை போன்ற பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயமானதாகும்.

விரைவுவழிச் சாலைப் பணிகளை அமைப்பதற்கான அளவுகோல்களாக தொழில்துறை மற்றும் விவசாயப் பகுதிகள், பெரிய துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவை அமைந்துள்ளன. எதிர்காலத் திட்டங்கள் அமையும் இடங்கள் (ஒப்புதல் அளிக்கப்பட்டவை மற்றும் திட்டமிடப்பட்டவை), பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புள்ள இடங்களும் கவனத்தில் கொள்ளப்படும். பெருநகரங்களுக்கான தொடர்பு வசதி மற்றொரு முக்கியமான அம்சமாகும்.

எக்ஸெல் பார்முலா

எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பலவகை பார்முலாக்களை அமைக்கிறோம். இவற்றில் சில பார்முலாக்கள் ஒர்க்ஷீட்களில் உள்ள மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்படும். அப்படிப்பட்ட பார்முலா ஒன்றைக் காப்பி செய்து வேறு ஒரு செல்லில் காப்பி செய்கையில், எக்ஸெல் அந்த பார்முலாவினை, காப்பி செய்யப்படும் செல்லுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளும். ஆனால் பல ஒர்க் ஷீட்கள் அமைந்த ஒர்க் புக்கில் ஒர்க்ஷீட் பெயர் உள்ள பார்முலாவினைக் காப்பி செய்கையில், எக்ஸெல் அந்த செல்களுக்கு ஏற்றவகையில்தான் மாற்றங்களை மேற்கொள்ளும். ஒர்க்ஷீட்களின் பெயர்களில் மாற்றம் செய்யாது. அதனையும் மாற்றிக் கொள்ளும் வழியை இங்கு காணலாம்.
எடுத்துக்காட்டாக, B7 செல்லில் =B6+A7 என்னும் பார்முலாவினை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். இதனை D7 என்னும் செல்லுக்கு காப்பி செய்கையில், எக்ஸெல் தானாக செல் தொடர்புகளை மாற்றிக் கொள்கிறது. மேலே சொன்ன பார்முலா =D21+C22 என மாற்றப்படும். ஆனால் ஒர்க்ஷீட் பெயர் இணைந்த பார்முலாவில் இந்த மாற்றம் முழுமையாக நடைபெறாது. ஒர்க்ஷீட் பெயர் மாற்றம் இருக்காது. எடுத்துக்காட்டாக, ஒர்க்புக் ஒன்றில் January, February, மற்றும் March என மூன்று ஒர்க்ஷீட்கள் வைத்துள்ளீர்கள். பிப்ரவரி ஒர்க்ஷீட்டில் =January!B7*1.075 என்ற பார்முலாவினை அமைத்திருக்கிறீர்கள். இந்த செல் பார்முலாவினை மார்ச் ஒர்க்ஷீட்டிற்கு மாற்றுகையில், எக்ஸெல் பார்முலாவில் உள்ள செல் தொடர்பை (B7) நீங்கள் மாற்றம் செய்திடும் செல்லுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும். ஆனால் ஒர்க்ஷீட்டின் பெயர் பிப்ரவரி என மாறாது. உங்கள் ஒர்க்ஷீட்டில் ஒன்றிரண்டு ஒர்க்ஷீட்கள் இருந்தால், நீங்களாக இந்த மாற்றத்தினை மேற்கொள்ளலாம். அதிக எண்ணிக்கையில் ஒர்க்ஷீட்கள் இருந்தால் அது சிரமமான வேலையாக இருக்கும். இந்த சிரமத்தைப் போக்கும் வழியைப் பார்க்கலாம்.
1. முதலில் அனைத்து பார்முலாக்களையும் தேவையான ஒர்க்ஷீட்டிற்கு, தேவைப்படும் செல்லிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது செல் பெயர்களில் எக்ஸெல் மாற்றத்தை மேற்கொண்டிருக்கும். அனைத்து காப்பி மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்ட பின், காப்பி செய்யப்பட்ட ஒர்க்ஷீட்டிற்குச் செல்லவும்.
2. இனி Ctrl+A அழுத்தவும். இது அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கும்.
3. பின் எடிட் மெனு சென்று அதில் Replace தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl+H அழுத்தவும். இப்போது Find and Replace டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. இதில் Find What பாக்ஸில் January! என டைப் செய்திடவும்.

5. அடுத்து Replace With பாக்ஸில் February! என டைப் செய்திடவும்.
6. பின் Replace All என்பதில் கிளிக் செய்தால் காப்பி செய்யப்பட்ட பார்முலாக்களில் உள்ள அனைத்தும் மாற்றப்படும். இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் மேலே உள்ள ஸ்டெப் 4 மற்றும் 5ல் மாற்றுவது மாதங்களின் பெயரை அல்ல. பார்முலாவில் உள்ள சிறப்பு குறியீட்டுடன் உள்ள பெயரை மட்டுமே. ஏனென்றால் ஒர்க்ஷீட்டில் உள்ள மற்ற செல்களில் மாதங்களின் பெயர் இருந்தால், அவையும் இந்த மாற்றத்தில் மாற்றம் அடையும் அல்லவா!
எக்ஸெல்: பார்முலா கண்காணிப்பு
எக்ஸெல் தொகுப்பில் பெரிய அளவிலான ஸ்ப்ரெட் ஷீட்டில் பணியாற்றிய அனுபவம் பலருக்கும் உண்டு. அதில் பல்வேறு செல்களில் பார்முலாக்களைப் போட்டிருப்போம். செல்களில் மதிப்புகளைத் தருகையில் இந்த பார்முலாக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் கணக்குகளை மேற்கொண்டு முடிவுகளை செல்களில் அமைக்கும்படி ஏற்பாடு செய்திருப்போம். இதனால் புதிய பார்முலாக்கள் அமைக்கையில் அவை தொடர்புடைய செல்களில் சரியாகச் செயலாற்றி விடைகளைத் தருகிறதா என்பதைக் கண்காணிக்க பல இடங்களில் உள்ள செல்களுக்குச் சென்று பார்க்க வேண்டியதிருக்கும். சில நேரங்களில் தவறான செல்களைப் பார்த்து தவறான தகவல்கள் மற்றும் பார்முலாக்களைத் தரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இவற்றைத் தவிர்க்க எக்ஸெல் தொகுப்பு தரும் வசதி தான் எக்ஸெல் வாட்ச் விண்டோ.
அடுத்தடுத்து எக்ஸெல் பார்முலாக்கள் கணக்கிடுவதனைக் கண்காணிக்க நமக்குக் கிடைத்திருக்கும் வசதிதான் வாட்ச் விண்டோ. நாம் செல்களின் மதிப்பை மாற்றும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட செல்களில் என்ன மாறுதல்கள் ஏற்படுகிறது என்று நமக்குக் காட்டும் ஜன்னல் தான் இந்த வாட்ச் விண்டோ. இதனால் நாம் ஒவ்வொரு செல்லுக்கும் தாவிச் சென்று கண்காணிக்கும் வேலை மிச்சமாகிறது. இந்த வாட்ச் விண்டோவினை அமைத்திட முதலில் Tools மெனு சென்று அதில் துணை மெனுவான Formula Auditing என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் உள்ள Show Watch Window என்பதனைக் கிளிக் செய்திட வேண்டும். Formula Auditing விண்டோவில் கண்கண்ணாடி படத்துடன் உள்ள சிறிய பிரிவுதான் Watch Window. இதனை கிளிக் செய்தவுடன் நமக்கு வாட்ச் விண்டோ கிடைக்கும். இப்போது எந்த செல்லில் உள்ள பார்முலா செயல்படுவதனைக் கவனிக்க விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுத்து Add Watch என்னும் பட்டனை அழுத்த வேண்டும். இப்போது வாட்ச் விண்டோவில் பார்முலா சம்பந்தப்பட்ட செல்கள் அவற்றின் மதிப்பு, கணக்கிடப்பட்ட விடை ஆகியவை தெரியும். இதே போல எந்த பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க விரும்புகிறீர்களோ அவற்றை வரிசையாகத் தேர்ந்தெடுத்து Add பட்டனை அழுத்தினால் அவை அனைத்தும் Watch விண்டோவில் சேர்க்கப்படும். இந்த விண்டோனை மானிட்டரின் எந்த மூலையிலும் வைத்துக் கொள்ளலாம். இனி செல்களில் மதிப்புகளை மாற்றும் போதெல்லாம் இந்த பார்முலாக்கள் மூலம் எந்த செல்களில் மதிப்புகள் மாறுகின்றன என்று இந்த ஒரே விண்டோவில் கண்காணிக்கலாம். ஏதாவது ஒரு பார்முலா செயல்படுவதனைக் கண்காணிக்க விரும்பவில்லை என்றால் அதனை தேர்ந்தெடுத்து Delete Watch button ஐ அழுத்தி நீக்கிவிட்டு மற்ற பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம். ஒவ்வொரு செல்லுக்காய் மவுஸ் மூலம் ஓடி ஓடிப் பார்ப்பதனைத் தவிர்த்து ஒரே ஜன்னலில் அனைத்தையும் கண்காணிப்பது எவ்வளவு எளிது பாருங்கள்.

எக்ஸெல் ஷார்ட்கட் கீகள்
காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.

இப்படித்தான் சாப்பிடணும் பழங்களை…

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.