உருவாகப் போகும் விரைவுவழிச் சாலைகள்

2012-ம் ஆண்டில் இந்தியாவில் 11 விரைவுவழிச் சாலைகளை (எக்ஸ்பிரஸ் வேஸ்) உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ன்று கட்டமாக நடைபெறவிருக்கும் விரைவுவழிச் சாலைப் பணியில் முதல் கட்டமாகும் இது.

இந்த 3 ஆயிரத்து 140 கிலோமீட்டர் தூரச் சாலைகள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மராட்டியம், குஜராத், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் அமைகின்றன.

விரைவுவழிச் சாலை அமைப்பது தொடர்பான ஆய்வில், அவற்றின் நீளத்தை 19 சதவீதம் அதிகரிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது 2022-ம் ஆண்டுவாக்கில் 15 ஆயிரத்து 600 கிலோமீட்டர் சாலைகள் அமைக்க முடிவெடுத்திருந்ததைத் தற்போது 18 ஆயிரத்து 637 கிலோமீட்டராக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவுவழிச் சாலைப் பணி ன்று கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் அதிகபட்சமாக 580 கி.மீ. சாலை முதல், குறைந்தபட்சமாக 175 கி.மீ. வரை அமையும். இப்பணி 2012-ம் ஆண்டில் தொடங்குகிறது.

இரண்டாவது கட்டப் பணி 2013-ம் ஆண்டில் தொடங்கி 2017-ம் ஆண்டில் முடிவுறும். இதன் மொத்த நீளம் 3 ஆயிரத்து 690 கி.மீ. ஆகும். இதில் நீளமான சாலை 700 கி.மீ. அளவில் அமையும். 2018-ல் தொடங்கி 2022-ல் முடிவடையும் ன்றாவது கட்டப் பணியில் மேலும் 6 ஆயிரத்து 31 கி.மீ. விரைவுவழிச் சாலை உருவாக்கப்படும்.

இந்த அனைத்துச் சாலைப் பணிகளும், உருவாக்கி, இயக்கி, ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

தேவைக்கேற்ப ன்றாவது கட்டத்தில் கூடுதலாக 5 ஆயிரத்து 275 கி.மீ. சாலை சேர்க்கப்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முதலாவது கட்டத்தில் கோவை- சேலம் இடையே 175 கி.மீ. சாலை, கன்னியாகுமரி- திருச்சூர் 400 கி.மீ. சாலை அமையும்

விரைவுவழிச் சாலைகளுக்கான ஒரு நிதித் திட்டத்தை உருவாக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அத்திட்டத்தில், விரைவுவழிச் சாலைகளை ஒட்டிய நிலங்களை மேம்படுத்துவதும் அடங்கும்.

ஒரு கட்டுப்பாட்டு அமைப்பாக, இந்திய தேசிய விரைவுவழிச் சாலை ஆணையத்தை உருவாக்குவதற்கான வரைவு மசோதாவைத் தயாரிக்கும் பணியிலும் திட்ட கமிஷன் ஈடுபட்டுள்ளது.

விரைவுவழிச் சாலை அமைப்பது தொடர்பான ஆய்வில், நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவுவழிச் சாலைப் பணியால் பாதிக்கப்படுபவர்களை, வெற்றிகரமாக முடிக்கப்பட்ட திட்டங்களில் ஒரு பங்குதாரராகச் சேர்ப்பதற்கான நடைமுறையை உருவாக்கவும் கூறப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் புனர்வாழ்வுப் பணிகளில் மாநில அரசுகள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது.சுற்றுச்சூழல் அனுமதி போன்ற பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு தனிப் பிரிவை உருவாக்கவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளது. விரைவுவழிச் சாலை போன்ற பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயமானதாகும்.

விரைவுவழிச் சாலைப் பணிகளை அமைப்பதற்கான அளவுகோல்களாக தொழில்துறை மற்றும் விவசாயப் பகுதிகள், பெரிய துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவை அமைந்துள்ளன. எதிர்காலத் திட்டங்கள் அமையும் இடங்கள் (ஒப்புதல் அளிக்கப்பட்டவை மற்றும் திட்டமிடப்பட்டவை), பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புள்ள இடங்களும் கவனத்தில் கொள்ளப்படும். பெருநகரங்களுக்கான தொடர்பு வசதி மற்றொரு முக்கியமான அம்சமாகும்.

%d bloggers like this: