எல்லை மீறாமல் எல்லாமும்..!- டீன் ஏஜ் பருவத்தில்

டீன் ஏஜ் பருவத்தில் தேடலும், கேள்விகளும், குழப்பமும், பக்குவமின்மையுடன் கலந்து வெளி படும். ஆனாலும் அடிபடை குணங்கள் மாறாது. இதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளாததால்தான் பெற்றோர், பிள்ளைகள் இடையே பிரச்சினைகள் தோன்றுகின்றன. டீன் ஏஜில் எவ்வளவு மாற்றம் வந்தாலும், அவர்களின் நேர்மையையும், உயர் நோக்கத்தையும் சந்தேகிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது அவர்கள் மனதை வெகுவாய் புண்படுத்தும்.

விடலை பருவத்தில் அவர்களின் நட்பை பற்றி, மற்றவர்களின் அங்கீகாரத்தை பற்றி, பிரகாசமான எதிர்காலத்தை பற்றி, உயர்ந்த லட்சியங்கள் பற்றி… மேன்மையாக விளக்குங்கள்.

அவர்களின் நடை, உடை, பாவனையை வைத்து அவர்களை தவறாக எடை போட வேண்டாம். உங்கள் மகன் உங்களைக் கேட்காமல் ஊர் சுற்றிவிட்டு வந்ததற்காக வீட்டுக்கு வெளியில் நிற்க வைத்து கத்த வேண்டாம். மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அடிக்கடி அவமான படுத்த வேண்டாம். ஒப்பிடுவதும், போட்டி மனபான்மையும் அவர்களுக்கு தவறான சிந்தனையைக் கொடுத்து விடும்.

அவர்களுடன் உட்கார்ந்து மனம் விட்டு பேசுங்கள். அதை விட முக்கியமான வேலை வேறு ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய டீன் ஏஜ் பிள்ளைகளிடம் நண்பனை போல பாவித்து நடந்து கொண்டால், தங்களுடைய ஆதங்கங்களையும், பிரச்சினைகளையும், கேள்விகளையும் உங்களிடம் கொட்டித் தீர்ப்பார்கள். மொட்டு விரிவது போன்று தான் இந்த பகிர்தலும் நடக்கும். அவர்கள் தலை சாய்ந்து கொள்ள உங்கள் தோளைக் கொடுங்கள்.

டீன் ஏஜ் பருவத்தினருக்கு சுதந்திரம், சுவாசக் காற்று போல! தங்களுடைய விருப்பபடி எல்லாமே நடக்க வேண்டும் என்று எதிர்பார்பார்கள். டீன் ஏஜ் பெண்கள் நிறைய விஷயங்களை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்கிறாள்.

அவர்களுக்கென ரகசியங்கள் உண்டு. பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் அவள் புரியாத புதிராகிறாள். வெளியே செல்வது, தோழிகளைச் சந்திப்பது முக்கியமாகிறது. தன் ஆடைகள், தன் தனித்துவத்தையும், தன் விருபத்தையும் வெளிபடுத்த வேண்டுமென நினைக்கிறாள்.

தன் உணர்வு, தன்னம்பிக்கை, போட்டி மனபான்மை ஆகியவை டீன் ஏஜ் பருவத்தினரின் சுதந்திர உணர்வு அடையாளங்கள்! தன்னை பற்றி தனக்கிருக்கும் பெருமித உணர்வு மற்றவர்களுக்கு எட்ட வேண்டும் என்பதும், தனது பெரிய நண்பர்கள் வட்டத்தை பார்த்து மற்றவர்கள் பெருமை அல்லது பொறாமை கொள்ள வேண்டும் என்பதும் பெரும்பாலான விடலை பருவத்தினரின் விருப்பம்!

சுதந்திரம் என் பிறப்புரிமை என்பது போல வாய் சவடால் பேசி, கடமைகளை புறக்கணிக்கும் இளம் பருவத்தினர், பிற்காலத்தில் தங்களுடைய வாழ்க்கையை நினைத்து ஏங்குவர். சுயக் கட்டுபாட்டுடன் கூடிய சுதந்திரம், தார்மீக அற உணர்வு மேலோங்கி நிற்கும் குடும்பம், படிபையும், கனவையும், கலைகளையும், கட்டுபாடுகளையும் குழைத்து வழங்கும் பள்ளி, கல்லூரி என இன்றைய டீன் ஏஜ் பருவத்தினருக்கு அரண்கள் அதிகமாக தேவை.

%d bloggers like this: