பால் அருந்தாவிட்டால் என்ன?

உலக அளவில், பெண்களில் 3 பேரில் ஒருவரும் ஆண்களில் 5 பேரில் ஒருவரும் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளி விபரம் காட்டுகிறது.

ஆண்களைவிட பெண்களுக்கு இந்தச் சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை பிரச்சனை அதிகமாகவே இருக்கிறது. மாதவிலக்கு நின்று போகும் காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹாரர்மோன் சுரப்பு குறைந்துவிடுகிறது. சிலருக்கு சுத்தமாக இல்லாமல் போய்விடுகிறது. அதனால் வரக்கூடிய பிரச்னையே இந்தச் சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை.

பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களில் சுண்ணாம்பு இருந்தாலும் கூட, பால் உணவுப் பொருட்களில் செய்யப்படும் இரசாயனக் கலப்படம் பலரையும் அச்சுறுத்தி வருகிறது.

சுண்ணாம்பு சத்துக்குப் பால் உணவே முக்கியம் என்று விளம்பரங்கள் மக்கள் மனங்களில் பதிய வைத்துவிட்டன. சொல்லப்போனால் பாலைவிட இன்னும் அதிகமான சுண்ணாம்புச் சத்தை அள்ளித்தருகின்ற உணவுப் பொருட்கள் நம்மிடைம் நிறையவே உள்ளன. 100 கிராம் பாலில் வெறும் 194 மில்லிகிர¡ம் சுண்ணாம்பு மட்டுமே உள்ளது. பாலை விட நாம் ஒரு பொருட்டாகக் கருதாத இன்னும் நிறைய உணவுப்பொருட்களில் சுண்ணாம்பு அதிகமாக இருக்கிறது. அவற்றை நம் உணவில் சேர்த்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு கிடைத்துவிடும்.

உண்மையில் சுண்ணாம்புத் சத்துக்காக நாம் பாலை நம்பி இருக்கவே தேவையில்லை.

100 கிராம் உணவில் உள்ள சுண்ணாம்பின் அளவு

எள் – 1450 மிகி சீரகம் – 1080 மிகி
அகத்திக்கீரை – 1130 மிகி
ஓமம் – 1584 மிகி
முளைக்கீரை – 800 மிகி
கறிவேப்பிலை – 830 மிகி
மல்லி – 630 மிகி
கேழ்வரகு – 344 மிகி
குப்பைமேனி – 667 மிகி

%d bloggers like this: