வேர்ட் டிப்ஸ் -29.1.2010

டாகுமெண்ட் விண்டோவைப் பிரித்து வேலை
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் பணிபுரிய விருப்பமா? எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா? வேர்டில் அதற்கான செட் அப் செய்துவிட்டல் முடியும். டாகுமெண்ட் விண்டோவினைப் பிரித்து, ஒவ்வொன்றிலும் அந்த டாகுமெண்ட்டின் இரு வேறு இடங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றலாம்.
வேர்ட் 2003 வைத்திருப்பவர்கள், கீழே காட்டியுள்ளபடி செட் செய்திடவும். குறிப்பிட்ட டாகுமெண்ட்டைத் திறக்கவும். மெனு பாரில் விண்டோ (Window) என்பதில் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைல் இரு பிரிவுகளாகக் காட்டப்படும். புதிதாய்த் திறக்கப்பட்ட பிரிவில் டாகுமெண்ட்டின் தொடக்க பக்கம் காட்டப்படும். இனி நீங்கள் ஒரே டாகுமெண்ட்டில் இரண்டு இடங்களில் செயல்படலாம்.
வேர்ட் 2007 வைத்திருப்பவர்கள் ரிப்பனில் வியூ (View) டேப்பில் கிளிக் செய்திடவும். அதன்பின் விண்டோ குரூப்பில் ஸ்பிளிட் Split டூலில் கிளிக் செய்திடவும்.
நீங்கள் ஸ்பிளிட் கட்டளை கொடுத்தவுடன், நீளமான படுக்கைக் கோடு ஒன்று டாகுமெண்ட்டில் காட்டப்படும். இதனை மவுஸ் மூலம் நகர்த்தலாம். பின் கிளிக் செய்தால், எங்கு அந்த கோட்டினை வைத்தீர்களோ, அந்த இடத்தில் கோடு அமைக்கப்பட்டு, டாகுமெண்ட் பிரித்துக் காட்டப்படும்.
இந்த பிரிவு தேவையில்லை என்று முடிவு செய்தால், மீண்டும் அதே மெனுவில் சென்று நீக்கலாம்.
நெடும் பத்திகள் அமைக்க
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கிறோம். டெக்ஸ்ட்டை தொடர்ந்து டைப் செய்துவிடுகிறோம். முடித்தபின் இதனை இரண்டு அல்லது மூன்று நெடும் பத்திகளில் (Columns) அமைத்தால் நன்றாக இருக்கும் என்று திட்டமிடுகிறோம். அல்லது குறிப்பிட்ட டெக்ஸ்ட் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட காலம் களில் அமைந்தால் சிறப்பான தோற்றம் கிடைக்கும் என எண்ணுகிறோம். ஆனால் டெக்ஸ்ட்டை டைப் செய்து முடித்துவிட்டோமே என்று கவலைப்பட வேண்டாம். எந்த டெக்ஸ்ட்டைப் பிரித்து ஒன்றுக்கு மேற்பட்ட காலம்களில் அமைக்க விரும்புகிறீர்களோ, அந்த டெக்ஸ்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கவும். பின் மெனு பார் சென்று பார்மட் பிரிவில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் என்பதைத் தேர்ந்தெடுத்தால் அதற்கான சிறிய விண்டோ கிடைக்கும். இதில் எத்தனை நெடும் பத்திகள் அமைக்க வேண்டும் என்பதனை வரையறை செய்திடவும், ஒவ்வொரு பத்திக்குமான அகலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதனையும் அமைக்கலாம். எந்த பத்தி எந்த பக்கம் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால், தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட், கொடுக்கப்பட்ட பத்திகளில் அமைக்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.

%d bloggers like this: