Monthly Archives: பிப்ரவரி, 2010

இளமைத்தோற்றம் தரும் இனிய ஆடைகள்

இளமையாக இருப்பதற்கு அனைவருமே விரும்புகின்றனர். வயதானவர்கள் கூட பியூட்டி பார்லருக்குச் சென்று தங்கள் தோற்றத்தை இளமையாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கின்றனர். என்னதான் பியூட்டி பார்லருக்குச் சென்றாலும், ஒருவருடைய இளமைத் தோற்றத்தைத் தீர்மானிப்பது அவர் அணியும் ஆடைகளே. ஒருவருடைய நிறத்துக்கும், உருவத்துக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்தால், அவர் அதிக வயதுடையவராக இருந்தாலும், குறைந்த வயதுடையவர் போல இளமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பார்.

இன்றைக்கு பெரும்பாலானவர்கள் விரும்புவது தொளதொளவென்று இல்லாமல், அளவு குறைவாக இருக்கும் ஆடைகளைத்தான். முட்டியைத் தொடும் சட்டையும், தரையைக் கூட்டும் பேண்ட்டும் அணிந்த காலம் மலையேறி போய்விட்டது. அதேபோல பெண்களும் முழங்கை வரை நீளும் ரவிக்கையையும்,

8 கஜம் புடவையைம் மறந்து, ஸ்கர்ட், டி-சர்ட், டாப்ஸ், கவுன் என்று மாறிவிட்டனர். அதிலும் தற்போது மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் மற்றும் டாப்ஸ் என்று ஆடைகளின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.

தற்போது நீங்கள் விரும்பும் பிரபல கம்பெனிகளின் ஆடைகளை தவணை முறையில் பணம் கொடுத்து வாங்கும் வசதியும் வந்துவிட்டதால், உங்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்குவதற்குத் தடையேதுமில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்திவிட்டு, மீதியைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தினால் போதும். இதனால் கொண்டு செல்லும் பணத்துக்கு ஏற்ற ஆடையாக பார்த்து தேர்ந்தெடுப்பது குறைந்து, நமக்கு விருப்பமான அதிக விலையுள்ள ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது அதிகரித்து வருகிறது.
`
இந்தியாவில் சேலை கட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாகத் தென்னிந்தியாவின் பாரம்பரிய உடையாகவும் சேலை இருப்பதால், இங்கு விதவிதமான சேலைகள் கிடைக்கின்றன. எப்போதும் அணியாவிட்டாலும், விழாக்காலங்களில் சேலை அணிவதை பெரும்பாலான இளம்பெண்கள் விரும்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சேலை கட்டத் தெரியாததால், அவர்களின் அம்மாக்களே சேலை கட்ட உதவி செய்கின்றனர்.

இவர்களின் கவலையைத் தீர்க்கும் விதமாக தற்போது `ரெடிமேட் சேலைகள்’ தயாரிக்கபட்டுள்ளன. இதை 2 நிமிடத்திலேயே அணிந்து கொள்ளலாம். கொசுவம், மடிப்பு என எந்தத் தொந்தரவும் இல்லாமல், எல்லாம் ஏற்கனவே மடிக்கபட்டு `பின்’ செய்யபட்டிருக்கும். இதுதவிரவும், இரண்டு பக்கமும் அணிந்து கொள்ளக்கூடிய ரிவர்சபிள் சேலைகள், பாக்கெட் வைத்த சேலைகள், வஸ்திரகலா பட்டு என்று புதிய வடிவமைப்புடன் கூடிய சேலைகளைத் தயாரிப்பதில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

ஆடை உலகில் ஒவ்வொரு நாளும் புதுபுது மாற்றங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாவாடை, சல்வார் கம்மீஸ், சுடிதார் ஆகியவற்றில் உள்ள நாடாவுக்கு பதிலாக எலாஸ்டிக் வைத்து பயன்படுத்துவது. சிலருக்கு இடுப்பு மட்டும் பெரியதாக இருக்கும். இவர்களுக்கு எலாஸ்டிக் வைத்த ஆடைகள் நன்கு பொருந்தி போகும். இதுதவிர, ஜிப் வைக்க வேண்டிய இடத்தில் பட்டன் வைப்பது, ஒரு பக்கம் மட்டும் ஸ்லீவ் வைத்துக் கொள்வது என்று மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

தற்போது கர்ப்பமான பெண்களுக்கான உடைகளும் வடிவமைக்கபடுகின்றன. கர்ப்பிணிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் அவர்களின் உடலில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சில சமயம் முதல் வாரம் அணிந்த ஆடையை மறுவாரம் அணிய முடியாமல் போய் விடும். இதைத் தவிர்ப்பதற்காக கர்ப்பிணிகளுக்கென்று தனி உடைகள் வடிவமைக்கபடுகின்றன. இந்த ஆடைகள் அணிவதற்கு எளிதாகவும், உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்ச்சி அடைவதாகவும் இருக்கும். அதேநேரம் துவைப்பதற்கும் எளிதானதாக இருக்கும்.

சிந்தடிக், காட்டன் போன்ற துணிகளில் இவை தயாராகின்றன. இவற்றில் பிரிண்டட் மற்றும் எம்ராய்டரி செய்யப்பட்டவை, பிளெய்ன் என பல வகைகள் உள்ளன. இதைபோன்ற ஆடைகள் பெரும்பாலும் அதிக நீளமுடையதாக இருக்கும். சில ஆடைகளில் ஸ்லீவ் குறைவாகவும், நீளம் அதிகமாகவும் இருக்கும். பல வகையான வண்ணங்களில் இவை கிடைக்கின்றன. இவற்றுடன் சல்வார், பேண்ட், கோட் ஆகியவற்றை அணிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் மட்டும்தான் அணிய வேண்டும் என்றில்லாமல், எப்போது வேண்டுமானாலும் இவற்றை அணிந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளசுகளை மட்டுமல்லாமல், நடுத்தரவயதினரைம் ஈர்த்துள்ள ஆடைகளுள் ஒன்று ஜீன்ஸ். அணிவதற்கு எளிதாக உள்ளது, துவைக்காமல் பயன்படுத்தலாம், நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம், உடற்கட்டை நன்கு எடுத்துக் காட்டுகிறது போன்ற காரணங்களால் ஜீன்சை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முதலில் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஜீன்ஸ், இன்று பெண்களாலும் பரவலாக பயன்படுத்தபடுகிறது. பூட்கட், ஸ்ட்ரெய்ட் பிட் என பலவகையான ஜீன்ஸ்கள் உள்ளன. பெண்களுக்கெனத் தனியாக ஜீன்ஸ்கள் வடிவமைக்கபடுகின்றன. தற்போது கரப்பிணிகளுக்கான ஜீன்ஸ்களும் கிடைக்கின்றன.

சுடிதாரை போலவே இருக்கும் லெகின்ஸ், சுடிதாரிலிருந்து சற்றே மாறுபடுகிறது. சுடிதாரில் இருக்கும் நாடாவுக்கு பதிலாக இதில் எலாஸ்டிக் வைக்கபட்டிருக்கும். மெல்லிய துணியால் தயாரிக்கபட்ட இவை, உடலின் வெப்பநிலையை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றன. லைட் வெயிட் சுடிதார்கள் அணிவதற்கு எளிதாகவும், ஸ்டைலாகவும் இருக்கும்.

தற்போது அம்மா – மகள் டிரண்ட் வெகுவேகமாக பரவி வருகிறது. அதாவது தாய், மகள் இருவரும் உடை உடுத்துவதில் தொடங்கி, ஹேர் ஸ்டைல், நகைகள், ஒப்பனைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது இதன் சாராம்சம்.இப்போதுள்ள அம்மாக்கள் தங்களுடைய மகள்களை போலவே இளமையாக இருக்க விரும்புகின்றனர். அதற்கேற்றவாறு உடற்பயிற்சி செய்து தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றனர்.

விளம்பரங்களில் கூட அம்மா – மகள் இணைந்து வருவது தற்போது அதிகரித்துள்ளது. அம்மா – மகளுக்கான பேஷன் ஷோ, சிறந்த அம்மா-மகள் போட்டி ஆகியவையும் பெரும்பாலான இடங்களில் நடத்தபடுகின்றன. இவை தாய்க்கும், மகளுக்கும் இடையே அதிகபடியான நெருக்கத்தை உருவாக்குகின்றன. தவிரவும், சின்னக் குழந்தைகள் அணியும் உடைகளில் உள்ள டிசைன்களை போலவே, அம்மாவின் உடைகளிலும் டிசைன்கள் வடிவமைக்கபடுகின்றன.

பாய்பிரண்ட் டிரெண்டும் தற்போது அதிகரித்து வருகிறது. அதாவது, தங்களுடைய காதலன் அல்லது கணவருடைய ஜீன்ஸ், சட்டை, டி-சர்ட், பேட், கோட் போன்றவற்றை அணிந்து கொள்வார்கள். அதாவது ஆண் உடைகளை பெண்ணும் அணிவது இந்த கலாசாரம் ஆகும். வீட்டில் இருக்கும் ஆடைகளையே அணிந்து கொள்வதால், இதற்கெனத் தனியாக செலவு செய்ய வேண்டியதில்லை.

தற்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஆடைகள் தயாரிக்கபடுகின்றன. அதாவது பருத்தி, வாழைமட்டை போன்ற இயற்கை பொருட்களிலிருந்து நுல் தயாரித்து, அதில் இயற்கையாகத் தயாரிக்கபட்ட வண்ணங்களைச் சேர்த்து ஆடைகள் நெய்யபடுகின்றன. இந்த மாதிரியான ஆடைகளை தற்போது பெரும்பாலானவர்கள் விரும்பி வாங்குகின்றனர்.

சிலந்தி மனிதன் போல சுவரில் நடக்க உதவும் ஷூ’

ஸ்பைடர் மேன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிலந்தி மனிதனான ஸ்பைடர்மேன் அநாயசமாக சுவர் விட்டு சுவர் தாவிச் செல்லும் காட்சியை குழந்தைகள் பிரமிப்புடன் ரசிப்பார்கள். அதுபோல் உண்மையிலேயே சுவரில் தாராளமாக நடந்து செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் ஆம் விஞ்ஞானிகள் இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். இதற்காக ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கருவி ஷூவின் நவீன வடிவம்போல உள்ளது. துணையாக குச்சியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை விரும்பாதவர்கள் குச்சியின்றியும் நடக்கலாம். அவர்களுக்கு ஒருவித உபகரணம் வழங்கப்படும்.

இந்த ஷூவை மாட்டிக் கொண்டு சிலந்தி மனிதன் (ஸ்பைடர் மேன்) போல நீங்களும் சுவரில் நடக்கலாம். இந்த ஷூ இரு அடுக்குகளைக் கொண்டிருக்கும். அடியில் உள்ள அடுக்கில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும். ஷூவின் அடியில் உள்ள தகட்டில் ஏராளமான ண்துளைகள் இருக்கும். நாம் நடக்க ஆரம்பிக்கும்போது ஏற்படும் அழுத்தம் முதல் அடுக்கில் உள்ள நீரை மேலேறச் செய்யும். இதனால் கீழடுக்கில் ஏற்படும் வெற்றிடம் சுவருடன் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. இது மனிதனை தாங்கி நிறுத்தும். இதனால் நாம் சுவரில் நடந்து செல்ல முடியும்.

அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக்கழகம் இதை வடிவமைத்துள்ளது.

கண்ணாடி தேவையில்லை : தூரப் பார்வைக்கு தீர்வு!

தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது. கண்ணாடி கான்டாக்ட் லென்ஸ் லேசர் சிகிச்சை எதுவும் வேண்டாம். புதுமையான முறையில் தீர்வுகாண வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கண் ஆராய்ச்சி மையம் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. 551 இளைஞர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் தூரப்பார்வையால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

பாதிக்கப்பட்டவர்களும் இயல்பானவர்களுக்கும் இடையே உள்ள டி.என்.ஏ. வேறுபாடுகளை ஆராய்ந்ததில் தூரப்பார்வைக்கான ஜீன்கள் இனம் காணப்பட்டன. இவற்றுக்கு ஹெபாடோசைட் குரோத் பேக்டர் (எச்.ஜி.எப்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து தூரப் பார்வைக்கு தீர்வு காண முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது புதிய மருந்து தயாரிக்க உதவுவதோடு உலக கண் மருத்துவத்துறையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஆய்வாளர் பால் பெய்டு கூறும்போது “பொதுவாக பார்வையைப் பாதிப்பதில் ஜீன்களும் சுற்றுச்சூழலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஜீன்களின் பங்கை அறிந்துவிட்டதால் அவற்றின் போக்கை திசைதிருப்பிவிடுவதன் மூலம் பார்வை பாதிப்பில் இருந்து விடுபட முடியும். இந்த முறையில் தற்போது தூரப்பார்வைக்கு மட்டுமே கண்ணாடி லேசர் சிகிச்சை இல்லாமல் தீர்வு காண முடியும்” என்றார்.

பயர்பாக்ஸ் ஆட் ஆன் வைரஸ்

இரு வாரங்களுக்கு முன் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்புகளுடன் ட்ரோஜன் வைரஸ் கம்ப்யூட்டர்களைப் பாதிப்பதாக, உறுதியான செய்திகள் கிடைத்தன. Sothink Web Video Downloader என்னும் தொகுப்பின் பதிப்பு 4 மற்றும் Master Filer என்னும் இரு தொகுப்புகளில் இந்த பிரச்னை இருந்ததாக மொஸில்லா குற்றம் சாட்டியிருந்தது. இவற்றுடன் வைரஸ் மறைந்து ஒட்டிக் கொண்டு வந்து தொல்லை கொடுத்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் தொகுப்புடன் Win32.LdPinch.gen என்ற வைரஸும், இரண்டாவது தொகுப்புடன் Win32.Bifrose.32 என்ற வைரஸும் பரவுவதாகக் கூறப்பட்டது. ஆனால் சென்ற வார இறுதியில் வெளியான தகவல் அறிக்கையில் முதல் ஆட் ஆன் தொகுப்புடன் வைரஸ் இல்லை என்று சொல்லப்பட்டது. இரண்டாவது ஆட் ஆன் தொகுப்பில் மட்டும் ட்ரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதுவும் இப்போது மொஸில்லாவினால் சரி செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் இந்த வைரஸ் புரோகிராம் எப்படி ஆட் ஆன் தொகுப்புகளுடன் கலந்தன என்று விளக்கப்படவில்லை. இது மொஸில்லாவுக்கு ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வுதான். ஆட் ஆன் தொகுப்புகள் பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் பெருமையைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படி நிகழ்ந்திருப்பது மொஸில்லா இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதனைக் காட்டுகிறது.

பெண் அதிகம் சிரிப்பது ஏன்!

அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.

சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா…

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.

கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.

இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களுக்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச்’ வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு.

பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலைக்கு இன்னொரு பெயர் சிரகிரி. இந்த மலை உச்சியில் வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் முருகப்பெருமான்.

350 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை சென்றடைய மலையடிவாரத்தில் இருந்து 1320 படிகள் உள்ளன.

சாதாரணமாக பக்தர்களே பாதயாத்திரை செல்லும்போது ஆங்காங்கே உட்கார்ந்து முருகா… முருகா…’ என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தவாறுதான் மலையேறுவார்கள். இப்படிப்பட்ட செங்குந்தான படிகள் வழியே இரட்டை மாட்டு வண்டி ஒன்று மலையேறும் என்று சென்னிமலையை அடுத்த வேட்டுவபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் அருள்வாக்கு கொடுத்து இருந்தார்.

அவர் குறிப்பிட்ட நாள் 12-2-1984.

இந்த தகவல் காற்றைவிட வேகமாக பரவியதால் குறிப்பிட்ட அந்த நாளில் சென்னிமலை நகரமே மக்களால் நிரம்பியது. லட்சக்கணக்கானவர்கள் மலைப்படிகளில் குழுமி இருக்க அந்த மக்கள் மத்தியில் இரட்டை மாட்டு வண்டி எந்த தடையும் இன்றி சிரகிரி வேலவனின் பூஜை பொருட்களை சுமந்துகொண்டு எந்த தடங்கலும் இன்றி மலையேறிய அதிசயம் நடந்தது.

கூடி இருந்த பக்தர்களின் “அரோகரா…” பக்திகோஷம் விண்ணதிர முழங்கியது. முருகப்பெருமான் நடத்திய இந்த திருவிளையாடலை பார்த்து பக்தி பரவசம் அடைந்தவர்கள் சுமார் 10 லட்சம் பேராம்.

அன்று முதல் இன்று வரை தினமும் 2 பொதிக்காளைகள்தான் முருகனின் பூஜை பொருட்களை படிகள் வழியாக சுமந்து வருகின்றன என்பது தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத அற்புதக் காட்சியாகும்.

இப்படி சிறப்பு மிக்க சென்னிமலை முருகப்பெருமான் கோவிலின் பிற சிறப்புகள் : சென்னிமலை கோவிலுக்கு தென்புறம் மாமாங்க தீர்த்த விநாயகர் சந்நதி உள்ளது. கொஞ்சமும் மழை இல்லாத கடுமையான கோடைக்காலத்தில் பக்தர்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு இந்த மாமாங்க தீர்த்தம் அதிசயமாக பொங்கி வழிகிறது. கடந்த 1988-ம் ஆண்டில் அவ்வாறு பொங்கி வழிந்தது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு கழித்து 2000-ம் ஆண்டில் பொங்கியது. 18 சித்தர்களில் ஒருவரான புண்நாக்கு சித்தர் பின்நாக்கு சித்தர் என்று அழைக்கப்படும் சித்தர் வாழ்ந்தது இந்த சென்னிமலையில்தான். இவர் தவம் இருந்த குகையும் இவருடைய சமாதியும் இன்னும் சென்னிமலையில் உள்ளன. அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல்பெற்ற தலமாக சென்னிமலை விளங்குகிறது. செவ்வாய் தோஷ பரிகார தலமாக விளங்கும் சென்னிமலையில் மூலவரை சுற்றி வந்தால் நவக்கிரகங்களை சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகன் அருளால் குழந்தை பாக்கியம் பெற்று வருகின்றனர். சென்னிமலை முருகனை கிருதா யுகத்தில் மகாவிஷ்ணு பூஜை செய்ததால் கனககிரி என்றும் திரேதாயுகத்தில் மகாலட்சுமியால் பூஜிக்கப்பட்டதால் மகுடகிரி என்றும் துவாபர யுகத்தில் துர்கை மற்றும் லட்சுமியால் வழிபட்டதால் புஷ்பகிரி என்றும் கலியுகத்தில் இந்திரன் பூஜித்ததால் சிரகிரி என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது சென்னிமலை.

மருத்துவக் காப்பீடு… அறிய வேண்டிய விஷயங்கள்!

மருத்துவக் காப்பீடு என்பது ரிஸ்க்’ சார்ந்த பாலிசி என்பதால் என்பதால் பலரும் அதை அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று தள்ளிப்போடும் நிலை இருக்கிறது.

ஆனால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு மன அழுத்தம் ஆரோக்கியமற்ற உணவு முறை போதுமான உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் மருத்துவமனைக்கு நடக்கும் நடை கூடிக் கொண்டே இருக்கிறது. மருத்துவ பில்’கள் உங்கள் சட்டைப் பையைக் காலி செய்துவிடும்.

சரியான பொருளாதார நிலையைப் பராமரிப்பதற்கு மருத்துவக் காப்பீடு அவசியம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மருத்துவக் காப்பீடு பெறும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சுருக்கமாக உங்களுக்காக… ஒற்றை பாலிசியால் மட்டும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் சமாளிக்க முடியாது. அவ்வளவாகத் தீவிரமான வியாதியாக இல்லாவிட்டாலும் தற்போது 2 லட்ச ரூபாய் வரையிலும் கூட செலவாகிறது. எனவே நீங்கள் குழு கம்பெனி திட்டத்தில் இருந்தாலும் இன்னொரு மருத்துவக் காப்பீடு பெறுவது பயனுள்ளது. தற்போது பல புதுமையான வருமான வரிச் சலுகை பெற்றுத் தரக்கூடிய காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. ஒரு பேமிலி புளோட்டர்’ என்பது நல்ல தேர்வாக இருக்கும். உங்கள் பட்ஜெட்’டை பொறுத்து 5 முதல் 10 லட்சத்துக்குக் காப்பீடு பெறலாம். குறிப்பிட்ட காப்பீட்டு பாலிசி பல் மருத்துவம் மருந்துகள் நர்ஸ் கவனிப்பு நீண்ட கால கவனிப்பு ஆகியற்றுக்கு உத்திரவாதம் அளிக்கிறதா என்று தெளிவாக ஆராயப்பட வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதற்கு அளவற்ற வகையில் தொகையைத் திரும்பிப் பெறுவது மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய பின் சிறப்புக் கவனிப்பு போன்ற ஆட்- ஆன்’ வசதிகள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். பாலிசியின் சீலிங்’ வயது என்னவென்று பார்க்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் 70 வயதை எல்லையாகக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் காப்பீட்டுடன் ரிட்டர்னை’யும் அளிக்கும் புதுமையான திட்டங்கள் இருக்கின்றன. இவை இரட்டைப் பலன்கள் கொண்டவை. இந்தத் திட்டங்களில் ஒருவர் பணிபுரியும் வரை சேரும் தொகையிலிருந்து ஓய்வுக் காலத்தில் ரிட்டர்னை’ பெறலாம். வயது கூடக் கூட பிரீமிய தொகை அதிகரிக்கும் என்பதால் இளம் வயதிலேயே காப்பீடு மேற்கொள்வது நல்லது.

அதிகரித்து வரும் `அழகு அதிர்ச்சி’-அழகுச் சிசிச்சை ஒரு பார்வை

டீன் ஏஜ் வயதில் அடியெடுத்து வைக்கும் பெண்பிள்ளைகள், முகச்சுருக்கக் கோடுகள், புருவத்தை மென்மையாக்குவது, உயர்த்துவது, சிரிக்கும்போது ஏற்படும் கோடுகளை அகற்றுவது, கரும்புள்ளிகளை அகற்றுவது ஆகியவற்றுக்கு அழகுச் சிசிச்சை நிபுணர்களை நாடி வருகிறார்கள். ஆனால் இந்த வழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பதே நல்லது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

`போட்டாக்ஸ்’ என்று சுருக்கமாக அழைக்கபடும் `பொட்டுலினம் டாக்சின்’ என்பது தீவிர நச்சுத் தன்மை வாய்ந்த வேதிபொருள். இதைச் செலுத்தியும் அழகுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தோல் மருத்துவ நிபுணரும், பிரபல `காஸ்மெட்டிக்’ சிகிச்சை வல்லுநருமான டாக்டர் ராஷ்மி ஷெட்டி, “எனது கிளினிக்குக்கு `போட்டாக்ஸ்’ சிகிச்சைக்காக வருபவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் டீன் ஏஜ் வயதினர். பெரும்பாலும் 15 முதல் 17 வயதைச் சேர்ந்தவர்கள். டீன் ஏஜ் வயதினர் அதிகமாகக் கேட்பது, தாடை அகலத்தைக் குறைக்க வேண்டும், சிரிக்கும்போது கண்கள் குறுகித் தோன்றுவதை மாற்ற வேண்டும் என்று கேட்டுத்தான்” என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், அகன்ற தாடையைச் சரிபடுத்துவதற்கு மெல்லும் தசைகளுக்குள் `போட்டாக்ஸ்’ செலுத்தபடுகிறது. அது முகத்துக்கு அழகான, நீள்வட்ட வடிவத்தை அளிக்கும் என்கிறார்.

சிரிக்கும்போதும் கண்கள் குறுகலாவதைத் தவிர்க்க கண்களுக்குக் கீழே புரதம் செலுத்தபடுகிறது. அதன் முலம், நன்றாகச் சிரிக்கும்போது கூட கண்கள் பெரிதாகவும், பிரகாசமாகவும் இருப்பதை உறுதிபடுத்த முடியும்.

பருத் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்த விசாரணையும் அதிகரித்து வருகிறது.

“மிகச் சிறிதளவு, நீர்த்த `போட்டாக்ஸ்’, முகத்தின் வியர்வைச் சுரபிகளுக்குள் செலுத்தபடுகிறது. அதன் முலம் வியர்வைச் சுரபிகள் அதிக நேரம் வேலை செய்வதைத் தடுத்து, முகத்துக்கு மென்மையான, `பளிச்’சென்ற தோற்றம் தரபடுகிறது” என்கிறார் ராஷ்மி.

மற்றொரு ஆர்வ ட்டும் விஷயம், இவரிடம் அழகுச் சிகிச்சைக்காக வருபவர்களில் பெரும்பாலானவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாரிசுகள். இந்தியாவில் தங்கி படிக்கும் அவர்கள் இங்கு நிலவும் காலநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடலைச் சீர்திருத்திக்கொள்ள வருகிறார்கள். அவர்கள் அதிகமாகக் கேட்பது, நெற்றிக்கோடுகள், சுருக்கங்களைச் சரிசெய்யும்படி.

தங்களை நாடிவரும் டீன் ஏஜ் பெண்களுக்கு அழகுச் சிகிச்சை செய்வதற்கு முன் அந்த நிபுணர்கள் கூடுமானவரை தவிர்க்கவே முயலுகின்றனர், நிறைய விசாரிக்கின்றனர். ஆரோக்கியமான மாற்றுவழிகளை நாடும்படி அறிவுரை கூறுகின்றனர். அதாவது, சரியான உணவுமுறை, தோல் பராமரிப்பை மேற்கொள்ளும்படி கூறுகின்றனர்.

டீன் ஏஜ் வயதினருக்குத் தான் `போட்டாக்ஸை’ பயன்படுத்த மறுப்பதாகக் கூறுகிறார் மற்றொரு அழகுச் சிகிச்சை நிபுணர் அனில் ஆபிரஹாம்.

“போட்டாக்ஸ் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு எங்களை நாடிவரும் 10 பேரில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 பேர் டீன் ஏஜ் பெண்கள். அவர்களில் சிலருக்கு 13 வயதுதான் ஆகியிருக்கிறது. நான் அவர்களிடம், வெளியே போகும்போது `சன் ஸ்கிரீன்’ பயன்படுத்துமாறும், சமச்சீரான, சத்தான உணவு முறையை மேற்கொள்ளுமாறும், அது அவர்களின் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் அறிவுரை கூறுகிறேன். இந்த இளம்வயதிலேயே அழகு சிகிச்சைக்கு முயற்சிப்பதற்கு பதிலாக `ரெகுலராக’ `மாஸ்சரைசர்’ பயன்படுத்தும்படி எடுத்துச் சொல்கிறேன்” என்கிறார் ஆபிரஹாம்.

`போட்டாக்ஸ்’ பயன்படுத்துவதால் தலைவலி, சுவாசத் தொற்று, `புளூ’ காய்ச்சல், கண்ணிரப்பை தொய்வு, குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.

மயங்கும் விண்டோஸ் எக்ஸ்புளோரர்

பெரிய போல்டர்களை பிரவுஸ் செய்திடுகையில்,  கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்கத் தொடங்கி, சில வேளைகளில் பொறுமையைச் சோதிப் பதாக நீண்ட கடிதம் எழுதி உள்ளார் .இதற்கு கம்ப்யூட்டர் ஷட் டவுண் செய்து மீண்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கினால், இந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா என்றும் கேட்டுள்ளார்.
விண்டோஸ் டாஸ்க் மானேஜர் (Windows Task Manager) குறித்துக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனைச் சார்ந்து கண்ட்ரோல்+ஆல்ட்+ டெலீட் என்ற சொல் தொடரும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏதேனும் கிராஷ் ஆனாலோ, அல்லது வழக்கத்திற்கு மாறாக இயங்கினாலோ, இதனை இயக்கிப் பார்ப்பதுதான் சிறந்த தீர்வு. இதனைத் திறந்து பார்த்து வேறு ஏதேனும் ஒரு புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரின் திறன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இயங்குகிறதா என்று கவனிக்கவும்.
பெரிய போல்டர்களைப் பார்க்கும் போது அல்லது கரப்ட் ஆன தம்ப் நெயில் படங்கள் அடங்கிய பைல்கள் இருக்கும் போது, எக்ஸ்புளோரர் சற்று பின் வாங்கும். அப்போது உங்கள் பைல் பிரவுசிங் பணி தடைப்படும். முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் செயல்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இடையே செயல்படும் ஒரு யூசர் இன்டர்பேஸ். டெஸ்க்டாப், போல்டர், விண்டோஸ் என அனைத்தையும் நீங்கள் காண ஒரு பாலமாக இயங்குகிறது. எக்ஸ்புளோரர் மெதுவாக இயங்கும்; ஆனால் கிராஷ் ஆகாது. எனவே தான் விண்டோஸ் தானாக ரீஸ்டார்ட் ஆகாமல், உங்களிடம் அந்த வேலையை எதிர்பார்க்கிறது.
எக்ஸ்புளோரரை நிறுத்த விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் செல்லவும். இதில் Processes என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இது பார்ப்பதற்குச் சற்று குழப்பமாக இருந்தாலும், இதில் கிடைக்கும் தகவல்கள் எளிமையானவையே. இங்குதான் உங்கள் கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். சில புரோகிராம்களின் பெயர்கள் வித்தியாசமாக இருக்கும். இதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் பார்க்க வேண்டியது Explorer.exe தான். இதனைக் கண்டறிந்த பின், இதன் மீது ஒரு முறை லெப்ட் கிளிக் செய்திடவும். இது ஹைலைட் ஆகும். பின் ரைட் கிளிக் செய்தால் ப்ராசஸ் மெனு கிடைக்கும். அடுத்த ஸ்டெப் எடுக்கும் முன், வேறு விண்டோக்கள் திறக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் Explorer.exe என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இது எக்ஸ்புளோரர் இயங்குவதை நிறுத்தும். இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள ஐகான்கள் அனைத்தும் மறைந்து போகும். கவலைப்பட வேண்டாம். அதைத்தான் எக்ஸ்புளோரர் செய்கிறது. இனி விண்டோஸ் இயக்கத்தினை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும். டாஸ்க் மேனேஜரில் ஒரு பைல் மெனு கிடைக்கும். டாஸ்க் மேனேஜரில் மேலாக உள்ள File என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். அடுத்து New Task என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது Create New Task என்று ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு கிடைக்கும் பாக்ஸ், ரன் பாக்ஸ் போல செயல்படும். பாக்ஸில் explorer என்று டைப் செய்து ஓகே கிளிக் செய்திடவும். இனி உங்கள் டெக்ஸ்டாப், அதன் ஐகான்களுடன் காட்டப்படும். ஆஹா! இயங்கி, முடங்கிய ஒரு புரோகிராமினை நிறுத்தி மீண்டும் இயக்கிவிட்டீர்கள். பெரிய அளவில் பைல் பிரவுசிங் செய்து, தளர்ச்சி அடையும் போதெல்லாம், டாஸ்க் மேனேஜர் மூலம் இந்த புத்துணர்ச்சி கிடைக்கும் வேலையை மேற்கொள்ளலாம்.