Daily Archives: பிப்ரவரி 1st, 2010

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து

கூகுள் நிறுவனத்தின் சர்வர்களில் சில ஹேக்கர்கள் நுழைந்து மெயில்களை நாசம் செய்ததாக சில வாரங்களுக்கு முன் பெரிய அளவில் பிரச்னைகளும் அதன் பின்விளைவுகளும் நடந்தேறின. இதன் காரணமாக சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் தகராறு முற்றி, சீனாவிலிருந்து கூகுள் வெளியேறும் எல்லை வரை இந்த பிரச்னை சென்றுவிட்டது.
கூகுள் மெயில் சர்வருக்குள் புகுந்து நாசம் செய்தவர்கள் சீனாவில் இயங்கும் ஹேக்கர்கள் தான் என்பது பலரின் வாதம். யார் என்பதைக் காட்டிலும், இந்த சர்வர் இயக்கத்தில் எங்கு பிழை ஏற்பட்டு ஹேக்கர்கள் நுழைந்தனர்? கூகுள் நிறுவனத்திற்கே இந்த கதி என்றால் நம் மெயில்கள் எல்லாம் என்ன ஆவது? என்ற கவலை நம்மில் பலரைத் தொற்றிக் கொண்டது. இதற்கான மூலகாரணம் என்ன என்று பார்க்கும் போது, மைக்ரோசாப்ட் நிறுவனம், கூகுள் மீது ஏற்பட்ட பாய்ச்சலுக்குத் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள பிழைகளே காரணம் என்று ஒத்துக் கொண்டது. அதனைச் சீர்செய்திடும் வழிகளையும் காட்டி உள்ளது. அந்த வழிகளை நாமும் பின்பற்றி நம் சர்வர்களையும், கம்ப்யூட்டர் களையும் பாதுகாத்துக் கொள்ளலாமே என்ற ஆவல் உங்களுக்கு உள்ளதா! ஆசை எழுவது இயல்பு தானே. மிக எளிதாக இந்த பாதுகாக்கும் வழியை மேற்கொள்ள லாம். அதனை இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் 2000 சிஸ்டத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5 வரை, இத்தகைய பிரச்னை எதுவுமில்லை. IE 6, IE 7, மற்றும் IE 8 ஆகிய பதிப்புகள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, சர்வர் 2003, விஸ்டா, சர்வர் 2008, விண்டோஸ் 7 மற்றும் சர்வர் 2008 E2 ஆகியவற்றில் தான் இந்த பிழை உள்ளது தெரியவந்துள்ளது. இந்த இயக்கங்கள் எல்லாமே இப்போது அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன. இன்றைய நிலையில் இவற்றால் ஏற்படும் ஆபத்தினை முழுமையாகத் தவிர்க்க இயலவில்லை என்று மைக்ரோசாப்ட் ஒத்துக் கொண்டுள்ளது. இருந்தாலும் பிழை இருப்பதனை ஓரளவிற்கு மறைத்து வைக்க முடியும் என்று கூறி உள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள Protected Mode என்பதனை இதற்குப் பயன்படுத் தலாம். இது விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும்போது கிடைக்கிறது. இத்துடன் Data Execution Protection என்பதனையும் இயக்கை வைக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள IE security zone I “High” என வைப்பதும் ஒரு வழியாகும்.
புரடக்டட் மோட்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7ல் தரப்பட்டுள்ள புரடக்டட் மோட் (விண்டோஸ் விஸ்டா மற்றும் 7ல் கிடைக்கும்) ஹேக்கர் ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரில் தன்னுடைய டேட்டா அல்லது புரோகிராமினைத் திணிக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. எனவே இந்த வழியை இயக்கி வைப்பது நல்லது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இது தானாக இயக்கிவைக்கப்படுகிறது. ஆனால் முந்தைய பதிப்புகளில் நாம் தான் இதனை இயக்க வேண்டும். அடுத்ததாக, ஆக்டிவ் ஸ்கிரிப்டிங் இயங்குவதைத் தற்காலிகமாக நாம் நிறுத்தி வைக்க வேண்டும். இதனால் இதனை இயக்கும் முன் நமக்கு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அப்போது இதனைத் தற்காலிகமாக இயக்க அனுமதிக்கலாம். ஆனால் அவ்வாறு அனுமதிக்கும் முன் இன்டர்நெட் செக்யூரிட்டி செட்டிங்ஸை “High” என செட் செய்திட வேண்டும்.
புரடக்டட் மோட் வழியை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம். IE 7 மற்றும் IE 8 பதிப்புகளில் இது மிகவும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Enable Protected Mode என்பதற்கு முன்பாக உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். இவ்வாறு அமைத்த பின் மாற்றங்களை இயக்குவதற்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும்.
இதே போல் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி ஸோனை “High” ஆக வைப்பதும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து அங்கு காணப்படும் ஸ்லைடரை “High” என்பதை நோக்கித் தள்ளிவிடவும். இந்த செட்டிங்ஸ் இயக்கத்திற்கு வர, நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோ ரரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதில்லை.
டி.இ.பி. (DEP Data Execution Protection) இயக்க: இந்த பாதுகாப்பு வழி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இயக்கப்பட்டே கிடைக்கிறது. அதை உறுதிப்படுத்தவும், பதிப்பு 7ல் இயக்கவும், கீழே தரப்பட்டுள்ளபடி செயல்பட வேண்டும். Tools —> Internet Options சென்று Advanced டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின் Security பிரிவுக்கு ஸ்குரோல் செய்து செல்லவும். அடுத்து “Enable memory protection to mitigate online attacks” என்று இருப்பதன் முன் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றம் செயல்பட, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடிப் பின் மீண்டும் இயக்கவும்.
இதனை எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ல் இயக்குவது என்று பார்க்கலாம். மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் அட்வான்ஸ்டு டேப்பில் கிளிக் செய்திடவும். இனி Performance என்பதில் செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுத்து, Data Execution Prevention என்ற டேப்பிற்குச் செல்லவும். அடுத்து “Turn on DEP for all programs and services except those I select” என்ப தனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply மற்றும் OK கிளிக் செய்து மூடவும்.
மைக்ரோசாப்ட் ஈஉக தானாக இயங்க டூல் ஒன்றை தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதனைப் பெற http://support.microsoft. com/kb/979352 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அதில் தரப்பட்டுள்ள குறிப்புகள் படி செயல்படவும்.
மேலே கண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டால், ஹேக்கர்களிடமிருந்து முழுமையான பாதுகாப்பு பெற முடியுமா? சந்தேகம்தான். இருப்பினும் ஓரளவிற்கு பாதுகாப்பினை இது தரும்.
மைக்ரோசாப்ட் விரைவில் இதற்கான பேட்ச் பைல் ஒன்றை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்த செய்தியை எழுதும் நேரத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஒரு ஸ்பெஷல் பேட்ச் பைல் ஒன்றை வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால் ஜெர்மனியில் பயர்பாக்ஸ் பிரவுசர் டவுண்லோட் திடீரென அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சீன கூகுள் ஹேக்கர் பிரச்னையால், ஜெர்மனியில் இயங்கும் இணைய பாதுகாப்பு மையம், Federal Office for Information Security, , இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நீக்கிவிட்டு, வேறு ஏதேனும் ஒரு பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்குமாறு அறிவித்துள்ளது. இதனால் நான்கு நாட்களில் மட்டும் ஜெர்மனியில் 3 லட்சம் பேர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்துள்ளனர். காண்க: http://blog.mozilla.com/metrics/2010/01/19/peopleingermanyareswitchingbrowsers/ இதே போல் பிரான்ஸ் நாட்டின் இன்டர்நெட் பாதுகாப்பு மையமான CERTA வெளியிட்ட அறிக்கையில், இன்டர்நெட் பிரவுசரை நிறுத்திவிட்டு வேறு பிரவுசரைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதே போன்ற ஒரு எச்சரிக்கை ஆஸ்திரேலியாவிலும் வெளியாகியுள்ளது.

சிறந்த ஆரோக்கியத்திற்கு சிவகரந்தை -மூலிகைக் கட்டுரை

பலவகையான நோய்கிருமிகள் நம்மை தாக்காமல் இருக்கவும், நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு என்னும் ஐந்து அவஸ்தைகள் நம்மை நெருங்கவிடாமல் தள்ளிப்போடவும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை வீணாக்கிவிடாமல் அதிகரித்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உடலின் அத்தியாவசிய உறுப்புகளான நுரையீரல், இருதயம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகம் கெட்டுவிடாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி இவற்றை கட்டுப்படுத்தும் மூளையும் சீராக இயங்க அதற்கு தேவையான ஆக்சிஜனும் கிடைக்கவேண்டும். அப்பொழுது தான் பல்லாண்டு நோயின்றி வாழ முடியும். ரத்த செல்கள் முறையாக பல்கி, பெருகவும், அத்தியாவசிய உறுப்புகள், நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்,
உடலில் நுழைந்த நுண்கிருமிகள் அழியவும் உதவுவதுடன், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆயுளை கூட்டும் அற்புத மூலிகை சிவகரந்தை.ஸ்பேரான்தஸ் அமரன் தாய்ட்ஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த சிறு செடிகளின் இலைகளே காயகற்ப மருந்தாக பயன்படுகின்றன. இதன் இலைகளில் அடங்கியுள்ள சேவிக்கால், கேடினின், ஸ்பேரான்தின், ஸ்பெரன்தனோலைடு, பீட்டா சைட்டோஸ்டீரால் மற்றும் நறுமண எண்ணெய் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பலவகையான பாக்டீரியாக்களை உடலில் வளரவிடாமல் தடுத்து, செல் அழிவை தடுக்கும் தன்மையுடையதாக ஆய்வுப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளன.
பூக்காத அல்லது இளம் பூக்களையுடைய சிவகரந்தை செடிகளில் இலைகளை நிழலில் உலர்த்தி, பொடித்து, இரண்டு கிராமளவு பாலுடன் கலந்து சாப்பிட பசி நன்கு அதிகரித்து பலஹீனம் நீங்கும். இலைகளை ஒரு கைப் பிடியளவு எடுத்து 500மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து, 120 மிலியாக சுண்டியப் பின்பு வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 10 நாட்கள் குடித்துவர கல்லீரலில் தோன்றும் கிருமித்தொற்று நீங்கும். இதன் வேரை பொடித்து, ஒரு கிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட, பலவகையான ரத்தப்போக்கு நீங்கும்.
இளம் பூக்களையுடைய சிவகரந்தை செடிகளை நிழலில் காயவைத்து, பொடித்து, சலித்து ஒருகிராமளவு தேனுடன் 40 நாட்கள் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் மினுமினுப்படையும், இலையை இடித்து, சாறெடுத்து சமஅளவு தேனுடன் கலந்து சாப்பிட நாட்பட்ட இருமல் நீங்கும்.

உறவைத் தூண்டும் முத்தம்


காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு.

முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம்தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களை பொறுத்தும், வாங்கிக்கொள்கிறவர்களை பொறுத்தும் மாறுபடுகிறது.

தாய் மகனுக்கு கொடுக்கும் முத்தம் பாசம் மட்டுமே கொண்டது. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளபடும்போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு.

துணை அடுத்து என்ன செய்யபோகிறான் அல்லது என்ன செய்யபோகிறாள் என்ற எதிர்பாரப்பு காதலர்களுக்குள் இருப்பதால், அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.

இப்போதெல்லாம், முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தபடுவதால், பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன.

காமசூத்ராவை தந்த வாத்சாயனாரின் `டிப்ஸ்’களையே அந்த முத்தங்கள் மிஞ்சிவிட்டன. அதற்கு சிறந்த உதாரணம் உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்’.

இந்த முத்தத்தின்போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.

பாலுறவின்போது ஆண் பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக்கொள்ளும்போதும் அடையலாம் என்பதை நி ருபித்தது, அமெரிக்காவில் நடத்தபட்ட அந்த ஆய்வு.

அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும்போது, அதை பரிமாறும் ஆண் பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டபடுவது அப்போது தெரிய வந்தது.பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை; மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னி பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம்.

பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.

அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, அந்த முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை.

அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனபாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.

காமசூத்ராவை தந்த வாத்சாயனார் கூட, முத்தத்தை பற்றி அழகாக வர்ணிக்கிறார். “உணர்ச்சிகளின் எல்லையைத் தாண்டிய அவள், சடை இட்டுக்கொள்வதுபோல் அவனது தலை முடியை பற்றி இழுத்து, முகத்தோடு முகம் வைத்து, அவனது கீழ் உதட்டில் முத்தமிடுகிறாள். சித்தபிரமை கொண்டவள்போல் அவனது உடம்பெங்கும் கடித்துக் கொள்கிறாள். இந்த நேரத்தில் அவளது கண்கள் முடியிருக்கும்…” என்று, காதல் பாடம் சொல்லிக்கொண்டே போகிறார் வாத்சாயனார்.

பொதுவாக சொல்வது என்றால்… ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளபடுகிறது.

பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகம்-பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.

வெளிறிய நாக்கு…? அப்படீன்னா ரத்தசோகை.. உஷார்

ஜாலிக்காக தோழிகளுடன் “ஜங்க் புட்’ சாப்பிடலாம்; ஆபீசில் வேலை…வேலை என்று வெறும் கோக் குடித்து பசியை போக்கிக்கொள்ளலாம். ஆனால், சுறுசுறு…வென இருந்த நீங்கள், திடீரென சோர்ந்து போவீர்கள்; டாக்டரிடம் போனால் ரத்த சோகை என்பார்.
அப்புறம் தான், சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற “ஞானோதயமே’ வரும் உங்களுக்கு. இப்படி உங்களுக்கு மட்டுமல்ல, “டீன் ஏஜில்’ உள்ள பல பெண்களுக்கும் உள்ள பிரச்னை தான்.
நம் உடலுக்கு வைட்டமின், கனிம சத்துக்கள் தேவை; அதற்கான உணவு வகைகளை சாப்பிட்டால் தான், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும்; அதனால், பல உறுப்புகளுக்கும் போதுமான அளவில் ரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு நீடிக்கும்.
ஹிமோ இல்லாட்டி…
ரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவு சீராக இருக்க வேண்டும்; அப்போது தான் ரத்தத்தில் முழு ஆக்சிஜன் இருக்கிறது என்று பொருள். உடலில் இரும்புச்சத்து சேர்ந்தால் தான் ஹிமோ குறையாமல் இருக்கும்.
உடலில் இரும்பு சத்து சேர வேண்டுமானால், அதற்கான சத்தான உணவுவகைகளை அடிக்கடி சாப்பாட்டு மெனுவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி சேர்த்தால் தான் ரத்த சோகை எட்டிக்கூட பார்க்காது.
என்னென்ன உணவுகள்
முன்பெல்லாம், ஆண்களை விட, பெண்களுக்கு அதிக அளவில் ரத்த சோகை ஏற்பட்டது. ஆனால், இப்போது “ஜங்க் புட்’ உணவுப்பழக்கம் வந்ததில் இருந்து, இளம் பருவத்தினர் இருபாலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். பருப்பு கீரை முதல் புதினா வரை கீரை வகைகள், தானிய வகைகள், தண்டு, பீட்ரூட் போன்ற காய்கறிகள், மீன் உணவுபோன்றவற்றில் இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், பொட்டாசியம் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. டானிக்கோ, மாத்திரைகளோ வேண்டாம்; இவற்றை சாப்பிட்டு வந்தாலே “அயர்ன்’ உட்பட மினரல் தட்டுப்பாடே வராது.
நாக்கை பாருங்க
ஒருவருக்கு ரத்த சோகை இருப்பதாக சந்தேகித்தால் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும்; டாக்டர் பரிசோதிக்கும் போது, கண்கள், நகக்கண்களை பார்த்துச் சொல்வர்; ஆனால், அது கூட போதுமான ஆதாரமாக கருத முடியாது என்று நிபுணர்கள் இப்போது கூறுகின்றனர். நாக்கை பார்த்தாலே தெரியும் என்று சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாக்கு மேற்பரப்பு, கருஞ்சிவப்பாக இருந்தால் முழு ஆரோக்கியம் இருக்கிறது; ரத்தத்தில் பழுப்பு நிறம் கலந்து வெளுப்பேறி இருந்தால் ரத்த சோகை ஆரம்பம் என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
“டீன் ஏஜ்’ யுவதிகளே
ஆண்களை விட, இளம் வயது பெண்கள் தான் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு போன்ற பெண்களுக்கே உரிய பிரச்னைகளால் ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. ரத்த சோகையின் முதல் அறிகுறி சோர்வு தான். அடிக்கடி சோர்ந்து விழுவர். ஆனால், ரத்த சோகை என்றே தெரியாமல், தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருப்பர். டாக்டரிடம் போனால் மட்டுமே பிரச்னை பெரிதாகிவிட்டது புரியும்.
“ஙே’ என்று இருப்பதேன்
சோமாலியா போன்ற ஏழை நாடுகளில், குழந்தைகள், எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருப்பர்; காரணம், இரும்புச்சத்து அறவே இல்லாமல் இருப்பது தான். சாப்பாட்டுக்கே வழியில்லாத நாட்டில் சத்தில்லாததால் குழந்தைகள் மிகவும் நோஞ்சானாக இருக்கும்.
உடலில் உள்ள முதுகுத்தண்டு
வடத்தில் உள்ள எலும்பு மஜ்ஜை தான், ஹிமோக்ளோபின் எனபபடும் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் பகுதி. இரும்புச்சத்து இருந்தால் தான் வலுவான சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய முடியும்.
அப்படி இல்லாவிட்டால், சிவப்பு அணுக்களில் சக்தி இருக்காது; அதனால் ரத்தம் வலுவிழந்து இருப்பதால், ஆக்சிஜன் குறைந்து காணப்படுகிறது. போதுமான ஆக்சிஜனுடன் ரத்தம் போகாவிட்டால், அந்தந்த உறுப்புகள் வலிமை குறைந்து சோர்ந்து விடுகின்றன.
கண்டபடி சாப்பிடாதீங்க
இப்போது இளைய தலைமுறையினரிடம் உணவுப்பழக்கம் மாறி விட்டது. அதனால், அவர்கள் உடலில் வைட்டமின், இரும்பு, மக்னீசியம் உட்பட கனிம சத்து குறைந்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் தான் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். எப்போதுமே, “ஜங்க் புட்’ என்று சாப்பிடாமல், சத்தான காய்கறி, பழங்கள், தானிய வகைள் கலந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும், அனீமியா என்ற ரத்த சோகை எட்டிக்கூட பார்க்காது.

பகவானை வணங்கும்போது… (ஆன்மிகம்)

நமஸ்காரம் என்பது பகவானுக்கும், பெரியோருக்கும் செய்யப்படும் மரியாதைக்கான காரியம். இதை மிகவும் வினயத்தோடும், பக்தி பூர்வமாகவும் செய்யச் சொல்லி இருக்கின்றனர். நமஸ்காரம் என்பதை எட்டு அங்கங்களும் பூமியில் படுகிற மாதிரி செய்ய வேண்டும்.
சிலர் சைக்கிளில் போகும்போதே கோவில் வாசலை பார்த்து, ஒற்றைக் கையால், “குட்மார்னிங்’ சொல்வது போல், கையை நெற்றியில் வைத்து விட்டுப் போவது உண்டு. இதெல்லாம் நமஸ்காரத்தில் சேர்த்தியே இல்லை.
“ஏதோ பிள்ளையாண்டானுக்கு சாமி கும்பிட வேண்டுமென்று தோன்றியதே… அதுவே பெரிய பாக்கியம்…’ என்று வேண்டுமானால் மற்றவர்கள் திருப்திபட்டுக் கொள்ளலாம். ஸ்த்ரீகள், திருமாங்கல்யம் கீழே தரையில் படக்கூடாது என்பதற்காக மண்டியிட்டு நமஸ்காரம் செய்யச் சொல்லி இருக்கிறது.
பகவானை வணங்கும் போது விபூதி இட்டுக் கொள்வது முக்கியம்; மற்றொன்று, ருத்ராட்சம் அணிந்து கொள்வது. இதுவும் ரொம்ப விசேஷம். இது, பரமேஸ்வரனின் மூன்றாவது கண்ணாக சொல்லப்பட்டுள்ளது. ருத்ராட்சம் அணிந்தவரை எமதூதர்கள் அண்டமாட்டார்களாம். எமதூதர்கள் அண்டமாட்டார்கள் என்றால், எமதூதர்கள் கடைசி காலத்தில் கத்தி, கம்பு, தடி, ஈட்டியுடன் வரமாட்டார்கள்; திவ்ய தேகத்துடன் கூடிய பூத கணங்கள் வந்து அழைத்துச் செல்வராம்.
அடுத்து, வாக்கால் பஞ்சாட்சர ஜெபம் செய்த படி, வில்வத்தால் சிவார்ச்சனை செய்தால், சிவானுக்ரகம் பெறலாம் என்று உள்ளது. சிவானுக்ரகம் ஏற்பட்டால் எல்லா, ஐஸ்வர்யங்களும் பெற்று மோட்ச சாம்ராஜ்ஜியமும் கிடைக்குமாம்!
“விபூதிர் பூதிரைச்வர்யம்’ என்பதால் விபூதி இட்டுக் கொண்டால் ஐஸ்வர்யம் கிடைக்குமாம். ஒரு வில்வ தளத்தைப் போட்டால் மோட்ச சாம்ராஜ்ஜியமே கிடைக்கிறதாம். பரமேஸ்வரனுக்கு விலை உயர்ந்த புஷ்பங்களைக் கொண்டு வந்து பூஜிக்க வேண்டும் என்பதே இல்லை; தெருவெல்லாம் காணப்படும் தும்பைப் பூ, எருக்கம் பூ இவைகளை அர்ப்பணம் செய்தாலே அவன் மகிழ்ந்து போகிறான்.
இப்படி தினமும் செய்ய முடியாதே என்றும் தோன்றலாம். பரவாயில்லை, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற காலங்களிலாவது செய்தாலும் போதும்; தினசரி சிவநாமம் சொன்னாலும் போதும். ஏதாவது ஒரு விதத்தில் அவனது தொடர்பு இருந்தாலே போதும்!
விபூதி மகிமை, ருத்ராட்ச மகிமை, துளசி மகிமை என்றெல்லாம் தனித்தனியாக உள்ளது. அதையெல்லாம் கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லது! சிவநாமம் மங்களத்தைத் தரும்!