Daily Archives: பிப்ரவரி 4th, 2010

30 வயதில் கருமுட்டையை இழக்கும் பெண்கள்

“”பெண்கள் தங்களது 30வது வயதில் பெருமளவு கருமுட்டைகளை இழந்து விடுகின்றனர்; 40வது வயதில் வெறும் 3 சதவீத கருமுட்டைகளே அவர்களிடம் தங்குகின்றன,” என்று புதிய ஆராய்ச்சி ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

பிரிட்டனிலுள்ள ஆண்ட் ரூஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள், பெண்களிடம் உள்ள கருமுட்டைகள் பற்றி ஓர் ஆய்வு நடத்தின. இந்த ஆய்வுக்காக, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 325 பெண்கள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில், 30 வயதிலிருந்து 95 சதவீதப் பெண்கள் அனைவரும் 12 சதவீதமும், 40 வயதுப் பெண் கள் 3 சதவீதமும் கருமுட்டைகளைக் கொண்டிருந்திருக்கின்றனர்.ஒரு பெண் பிறக்கும் போது சராசரியாக மூன்று லட்சம் கருமுட்டைகளோடு பிறக் கிறாள். பெண்கள் பலர், வயதான பின்னும் கருமுட்டைகள் உற்பத்தியாவதால், குழந்தைப் பேற்றுக்குத் தகுதியாக இருப்பதாக தவறாகக் கருதுகின்றனர்.

ஆனால் உண்மையில், வயதாக ஆக கருமுட்டைகள் குறைந்து கொண்டே வருவதால், குழந்தைப் பேறு என்பது கடினமாகி விடுகிறது என்பது தெரியவந்துள்ளது.மேலும், ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் கருமுட்டைகளின் எண்ணிக்கையில் பெருத்த வித்தியாசம் காணப்படுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி, ஒரு பெண்ணிடம் 20 லட்சம் முட்டைகள் இருந்ததாகவும், இன் னொரு பெண்ணிடம் 35 ஆயிரம் முட்டைகள் மட்டுமே இருந்ததாகவும் ஆய்வுக் குறிப்புகள் கூறுகின்றன.காலத்தைத் தள்ளிப் போடாமல் கருத்தரிப் பதை விரைவுபடுத்தும் படி அந்த ஆய்வு, பெண்களுக்கு அறிவுரை கூறுகிறது. மேலும், யாருக்கு சீக்கிரம் “மாதவிலக்கு’ நின்றுவிடும் என்பதையும், சினைப்பை புற்றுநோய் வரும் என்பதையும் இந்த ஆய்வு கண்டுபிடிக்க உதவியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேர்டில் டெக்ஸ்ட் பாக்ஸ் ஷேடோ

வேர்ட் டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட் பாக்ஸ்களை உருவாக்கி, டாகுமெண்ட் தோற்றத்தினை அழகு படுத்துவோம். இந்த பாக்ஸ்களை இன்னும் அழகாகத் தோற்ற மளிக்க அதன் கீழாக நிழல் படிந்தாற்போன்ற தோற்றத்தினைத் தரலாம். இதற்கு வேர்ட் வழி தருகிறது. இதனை ஆங்கிலத்தில் drop shadow என அழைப்பார்கள். பொதுவாக டெக்ஸ்ட் பாக்ஸில் தரப்படும் டெக்ஸ்ட், டாகுமெண்ட்டின் மையப் பொருளுக்குத் துணை சேர்க்கும் கருத்துக்கள் அல்லது தகவல்களாக அமையும். எனவே இந்த பாக்ஸை நன்றாக எடுத்துக் காட்டும் வகையில் அமைப்பது, பக்க வடிவமைப்பில் ஒரு அம்சமாகும். இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம்.
நீங்கள் வேர்ட் 2007க்கு முந்தைய வேர்ட் புரோகிராம் பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்கண்ட வழிகளில் செட் செய்திடவும்.
1. முதலில் ட்ராயிங் டூல்பார் காட்டப்படுவதை உறுதி செய்திடவும். இதற்கு ஸ்டாண்டர்ட் டூல் பாரில் உள்ள டிராயிங் டூல்பாரினைக் கிளிக் செய்தால் போதும்.
2. அடுத்து நீங்கள் எந்த டெக்ஸ்ட் பாக்ஸ் பார்மட்டை விரும்புகிறீர்களோ, அந்த டெக்ஸ்ட் பாக்ஸினைத் தேர்ந்தெடுக்கவும். அந்த டெக்ஸ்ட் பாக்ஸின் எல்லைக் கோடு களை ஒட்டி சிறிய செலக்ஷன் ஹேண்டில் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம்.
3. ட்ராயிங் டூல்பாரில் ஷேடோ டூல் ஒன்று கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2002 மற்றும் வேர்ட் 2003 புரோகிராம்களில் இது Shadow Style என அழைக்கப்படுகிறது. இதில் இங்கு செட் செய்யக் கூடிய பல ஸ்டைல் வகைகள் காட்டப்படுகின்றன.
4. எந்த ஷேடோ உங்களுக்குப் பிடிக்கிறதோ, அதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக் கவும்.
அடுத்து வேர்ட் 2007 வைத்திருப் பவர்களுக்கு. வேர்ட் 2007ல் ட்ராயிங் டூல்பார் பயன்படுத்தப்படுவதில்லை.
1. நீங்கள் பார்மட் செய்திட வேண்டிய டெக்ஸ்ட் பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வழக்கம்போல அதன் எல்லைகளில் செலக்ஷன் ஹேண்டிலைக் காணலாம்.
2. இப்போது ரிப்பனில் பார்மட் டேப்பினைக் கிளிக் செய்திடவும். இது 1ல் சொல்லியபடி, நீங்கள் டெக்ஸ்ட் பாக்ஸைத் தேர்ந்தெடுத்தால் தான் காட்டப்படும்.
3. இனி ஷேடோ எபக்ட்ஸ் Shadow Effects) என்னும் குரூப்பில் உள்ள ஷேடோ ஸ்டைல் (Shadow Style) என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு வேர்ட் கிடைக்கக் கூடிய அனைத்து ஷேடோக்களையும் காட்டும்.
4. எந்த ஷேடோ வேண்டுமோ அதனைக் கிளிக் செய்தால், டெக்ஸ்ட் பாக்ஸில் ஷேடோ கிடைக்கும்.
உங்கள் மனதிற்குப் பிடித்த வகையில் ஷேடோ கிடைக்கும் வரை இதனை மாற்றி மாற்றி அமைக்கலாம்.

போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்…தொல்லை தருவதேன்

“நான் ஆரோக்கியமான உணவுகளை தான் சாப்பிடுகிறேன்; ஆனாலும், எனக்கு ஏதாவது பிரச்னை வரத்தான் செய்கிறது’ “நான் காய்கறி, பழங்கள் தான் அதிகம் சாப்பிடுகிறேன்; பால், தயிர் அதிகம் சேர்த்துக்கொள்கிறேன்; இருந்தாலும், ஏதாவது உடல் கோளாறு வந்து விடுகிறது!’
– இப்படி , ஆரோக்கியமான உணவுகளை கடைபிடிக்கும் பலருக்கும் சந்தேகம் எழுவது உண்மை தான். ஆனால், அதற்கான காரணத்தை அறியமாட்டர். ஏதாவது வைட்டமின், டானிக், குறிப்பிட்ட கோளாறுக்கான மருந்து எடுத்துக்கொண்டால், ஆரோக்கிய உணவு பலனை தராது.

இதோ சில டிப்ஸ்கள்:

ஆன்டிபயாடிக்
வைரஸ் காய்ச்சல் உட்பட தொற்று நோய் வராமல் தடுக்க ஆன்டிபயாடிக் மாத்திரை, மருந்துகளை சாப்பிடும் போது, பால், யோகர்ட் போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. வயிற்றுக்குள் இந்த உணவுகள் போனால், வயிற்றில் உள்ள அமிலச்சத்துக்களை திறனற்று செய்து விடும். அதனால், ஆன்டிபயாடிக் மருந்து வேலை செய்யாமல் வீரியம் குறைந்து விடும். அப்புறம் என்ன…தொற்று நோய் கிருமிகள் அதிகரித்து விடும்.

வயிறு அப்செட்
திடீரென பேதி ஆகிறது; வயிற்றில் கடமுடா சத்தம்; எந்த வேலையும் செய்ய முடியவில்லை; வெளியேயும் போக முடியவில்லை. அப்போது பேதி மருந்து மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்; ஆன்டிபயாடிக் உட்பட வேறு மருந்துகளுடன் பேதி மருந்தை எடுத்துக்கொண்டால் அது வேலை செய்யாது என்பது மட்டுமல்ல, பேதியும் நீடிக்கும்.
பிளாக் டீ, பாலாடைக்கட்டி போன்ற சமாச்சாரங்களை அப்போது அறவே நீக்க வேண்டும். தானிய வகை பிரட், வெள்ளரிக்காய், சுவீட் ப்ளம் போன்ற காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

அலர்ஜி உண்டா
அலர்ஜியை போக்கும் மருந்து எடுத்துக்கொண்டால், ஒயின் குடிப்பது கூடாது; அதுபோல, சில வகை இறைச்சிகளை கைவிட வேண்டும். முட்டை, வாழைப்பழம், முள்ளங்கி போன்றவையும் ஒத்துக் கொள்ளாது.
குறிப்பாக, ப்ரோட்டீன் சத்துள்ள அசைவ உணவுவகைகள், அலர்ஜியை அதிகப்படுத்தும். அதனால், அவற்றை தவிர்ப்பது நல்லது.

தைராய்டு மருந்தா
நீங்கள் தைராய்டு மருந்து எடுத்துக்கொள்பவரா? அதை எப்போது எடுத்துக்கொள்கிறீர்கள்? காலையிலா , சாப்பாட்டுக்கு முன்பா, பின்பா? தைராய்டு மருந்து எடுத்துக்கொள்வோர், அதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு பின் தான் சாப்பாடே சாப்பிட வேண்டும். காரணம், தைராய்டு மருந்து எடுத்துக்கொண்டு, உடனே சாப்பிட்டால், உடலில் ஜீரணம் நடக்காது. பிரச்னை தான் மிஞ்சும். மருந்து சாப்பிட ஏதுவான நேரம், தூங்கி எழுந்த காலைப்பொழுது தான். அப்படி சாப்பிட்டால், உணவு பாதிக்காது.

வலி நிவாரணியா
வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்வோரெனில், நார்ச்சத்துள்ள கீரை, காய்கறி வகைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், ஜீரணமாகாமல் மலச்சிக்கலில் விடும். வலி நிவாரணி மருந்துகள், நார்ச்சத்துள்ள உணவுகளின் சத்துக்களை பறித்துவிடும்; உடலுக்கு பலன் போய்ச்சேராது.

சுடு நீரில் மருந்து
எந்த ஒரு மாத்திரை, மருந்தையும் , தண்ணீருடன் கலந்து சாப்பிட வேண்டும் என்றால், சுடுநீர் கூடவே கூடாது. சாதாரண தண்ணீரில் தான் மாத்திரையை விழுங்க வேண்டும்; மருந்தை குடிக்க வேண்டும். சுடுநீரில் மருந்தை எடுத்துக் கொண்டால், மருந்தின் பலன் கிடைக்கவே கிடைக்காது. வெதுவெதுப்பான நீரைக் கூட, மருந்து சாப்பிட்ட சில நிமிடங்களுக்கு பின் தான் அருந்தலாம்.

கலக்கி குடிப்பதா
மாத்திரை, மருந்தை சிலர் தண்ணீரில், உணவில் கலந்து சாப்பிடுவதுண்டு. இது தவறான வழி. டாக்டர் சொல்லாத நிலையில், இப்படி செய்யவேகூடாது; காரணம், மருந்தின் பலன் முழுமையாக கிடைக்காது என்பது தான்.
மாத்திரையை நான்கு துண்டாக்கி கூட விழுங்கலாம்; ஆனால், பால், காபியில் கலந்து குடிப்பதோ சரியல்ல.

வைட்டமின் “நோ’
ஏதாவது உடல் கோளாறு தீர மருந்து , மாத்திரை எடுத்து வரும் போது, அத்தோடு நீங்களே டாக்டராகி வைட்டமின் மாத்திரைகளை விழுங்கக்கூடாது. வைட்டமின் மாத்திரையும் பலன் தராது; கோளாறுக்காக விழுங்கிய மாத்திரைகளும் பலன் தராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.