வேர்டில் டெக்ஸ்ட் பாக்ஸ் ஷேடோ

வேர்ட் டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட் பாக்ஸ்களை உருவாக்கி, டாகுமெண்ட் தோற்றத்தினை அழகு படுத்துவோம். இந்த பாக்ஸ்களை இன்னும் அழகாகத் தோற்ற மளிக்க அதன் கீழாக நிழல் படிந்தாற்போன்ற தோற்றத்தினைத் தரலாம். இதற்கு வேர்ட் வழி தருகிறது. இதனை ஆங்கிலத்தில் drop shadow என அழைப்பார்கள். பொதுவாக டெக்ஸ்ட் பாக்ஸில் தரப்படும் டெக்ஸ்ட், டாகுமெண்ட்டின் மையப் பொருளுக்குத் துணை சேர்க்கும் கருத்துக்கள் அல்லது தகவல்களாக அமையும். எனவே இந்த பாக்ஸை நன்றாக எடுத்துக் காட்டும் வகையில் அமைப்பது, பக்க வடிவமைப்பில் ஒரு அம்சமாகும். இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம்.
நீங்கள் வேர்ட் 2007க்கு முந்தைய வேர்ட் புரோகிராம் பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்கண்ட வழிகளில் செட் செய்திடவும்.
1. முதலில் ட்ராயிங் டூல்பார் காட்டப்படுவதை உறுதி செய்திடவும். இதற்கு ஸ்டாண்டர்ட் டூல் பாரில் உள்ள டிராயிங் டூல்பாரினைக் கிளிக் செய்தால் போதும்.
2. அடுத்து நீங்கள் எந்த டெக்ஸ்ட் பாக்ஸ் பார்மட்டை விரும்புகிறீர்களோ, அந்த டெக்ஸ்ட் பாக்ஸினைத் தேர்ந்தெடுக்கவும். அந்த டெக்ஸ்ட் பாக்ஸின் எல்லைக் கோடு களை ஒட்டி சிறிய செலக்ஷன் ஹேண்டில் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம்.
3. ட்ராயிங் டூல்பாரில் ஷேடோ டூல் ஒன்று கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2002 மற்றும் வேர்ட் 2003 புரோகிராம்களில் இது Shadow Style என அழைக்கப்படுகிறது. இதில் இங்கு செட் செய்யக் கூடிய பல ஸ்டைல் வகைகள் காட்டப்படுகின்றன.
4. எந்த ஷேடோ உங்களுக்குப் பிடிக்கிறதோ, அதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக் கவும்.
அடுத்து வேர்ட் 2007 வைத்திருப் பவர்களுக்கு. வேர்ட் 2007ல் ட்ராயிங் டூல்பார் பயன்படுத்தப்படுவதில்லை.
1. நீங்கள் பார்மட் செய்திட வேண்டிய டெக்ஸ்ட் பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வழக்கம்போல அதன் எல்லைகளில் செலக்ஷன் ஹேண்டிலைக் காணலாம்.
2. இப்போது ரிப்பனில் பார்மட் டேப்பினைக் கிளிக் செய்திடவும். இது 1ல் சொல்லியபடி, நீங்கள் டெக்ஸ்ட் பாக்ஸைத் தேர்ந்தெடுத்தால் தான் காட்டப்படும்.
3. இனி ஷேடோ எபக்ட்ஸ் Shadow Effects) என்னும் குரூப்பில் உள்ள ஷேடோ ஸ்டைல் (Shadow Style) என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு வேர்ட் கிடைக்கக் கூடிய அனைத்து ஷேடோக்களையும் காட்டும்.
4. எந்த ஷேடோ வேண்டுமோ அதனைக் கிளிக் செய்தால், டெக்ஸ்ட் பாக்ஸில் ஷேடோ கிடைக்கும்.
உங்கள் மனதிற்குப் பிடித்த வகையில் ஷேடோ கிடைக்கும் வரை இதனை மாற்றி மாற்றி அமைக்கலாம்.

%d bloggers like this: