Daily Archives: பிப்ரவரி 6th, 2010

தாயின் மனநிலையே சேயின் மனநிலை

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.

· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.

· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.

மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

வீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர். கூகுள் தேடல் தளம் சென்று “youtube video download” என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.
இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
http://www.youtube.com/results?search_query =thillana+remix&search_type=&aq=f இதில் youtube என்ற சொல்லில் ‘y’ என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும். http://www.3outube.com/results? search_query=thillana+ remix&search_type=&aq=f அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கிளப் உள்ளது. இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்

குழந்தை பிறப்பை தள்ளிப் போடுறீங்களா..?

இப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் இளம் ஜோடிகள், குழந்தை பெற்றுக்கொள்வதை சிறிது காலத்திற்கு தள்ளிப்போட்டுவிடுகிறார்கள்.

ஒன்றிரண்டு வருடத்திற்கு வாழ்க்கையை அனுபவித்துவிட்டும், எதிர்காலத்திற்கு தேவையானதை சேர்த்துவிட்டும் குழந்தை பற்றி பார்த்துக்கொள்ளலாம் என்பது அவர்களது கணிப்பாக இருக்கிறது.

இப்படி தள்ளிப்போடுவதில் தவறில்லை. குறிப்பிட்ட வயதையும் மீறித் தள்ளிப்போடுவது குழந்தையின்மைக்கு காரணமாகிவிடலாம் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர் கள்.

குழந்தையை தள்ளிப்போடுவது பற்றி யோசிப்பவர்களுக்கு டாக்டர்கள் கூறும் அறிவுரை :

முக்கியமான காரணம் என்றால் அதிகப்பட்சம் ஒரு வருடத்திற்கு மட்டும் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுங்கள். அதுவும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் செய்ய வேண்டும். குழந்தையை தள்ளிப்போடுவதற்காக மருந்துகளையும், ஊசியினையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி கர்ப்பம் தரித்துவிட்டால் கருக்கலைப்பு செய்ய வேண்டாம்.

அதிகப்பட்சம் 30-35 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது. இந்த வயதில்தான் பெண்களின் உடல் நிலை சீராக இருக்கும். கருமுட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும், இடுப்பு எலும்புகள் எல்லாம் நன்றாக வளைந்து கொடுத்து சுகப்பிரசவம் ஆகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

காலம் தாழ்த்தி குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, அந்த குழந்தை வளர்ந்து ஆளாகும்போது, அதன் பெற்றோர் தாத்தா, பாட்டிபோல் ஆகிவிடுவார்கள். அந்த குழந்தைக்கு திருமணம் செய்து பேரன், பேத்தியை பார்ப்பது என்பது சாத்தியமற்று போகலாம்.

35 அல்லது அந்த வயதுக்கு மேல் குழந்தையைப் பெற்றுக்கொள்வது, அந்த தாய்க்கும், குழந்தைக்கும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சிலருக்கு குழந்தை பிறப்பதிலேயே பிரச்சினைகள் வரலாம்.

குழந்தை பாக்கியம் என்பது மிகப்பெரிய `கிப்ட்’. எல்லாவித வசதி வாய்ப்புகள் இருந்தும் அந்த `கிப்ட்’ கிடைக்காமல் ஏங்கும் தம்பதியர் பலரை பார்க்கலாம். அதனால், குறிப்பிட்ட வயதிற்குள் குழந்தை பெற்றுக்கொள்வதுதான் ஆனந்தமான வாழ்க்கைக்கு வழிக்காட்டும்.

தானியங்கி தேய்ப்புப் பெட்டி! “

ஆள் பாதி ஆடை பாதி” என்பார்கள். ஒருவர் நேர்த்தியாக உடை அணிந்து வர பின்புலத்தில் உதவியாக இருப்பது தேய்ப்புப் பெட்டி (அயர்ன் பாக்ஸ்).

ஆடையை அழகாக தேய்த்து மடிப்பது ஒரு கலை என்று சொல்லலாம். தேய்ப்பு பெட்டியில் ஆடையை தேய்க்கும்போது துணி கருகிய அனுபவம் பலருக்கு இருக்கலாம். அவசர கதியில் உபயோகிப்பது, அணைக்காமல் மறந்துவிடுவது, கவனமின்றி பயன்படுத்துவது போன்ற காரணங்களால் அயர்ன் பாக்ஸ் வெப்பம் துணியை கருக்கிவிடும்.

இந்த தானியங்கி தேய்ப்புப் பெட்டியில் அப்படி எதுவும் நடந்துவிடாது. தேய்ப்புப் பெட்டி சூடாக இருக்கும்போது வைப்பதற்கு தனி இடம் தேட வேண்டாம்.

பெட்டியைவிட்டு நாம் கையை விலக்கினால்போதும், சென்சார் செயல்பட்டு தானாக ஒரு குமிழ் கீழ்நோக்கி வந்து தேய்ப்புப் பெட்டியை தளத்திலிருந்து சற்று உயர்த்தி நிறுத்திவிடும். இதனால் துணிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

அதேபோல 8 நிமிட நேரம் தொடர்ந்து தேய்ப்புப்பெட்டியை பயன்படுத்தாவிட்டால் தானாகவே சுவிட்ச் ஆப் ஆகி குளிரத் தொடங்கிவிடும்.

இனிமேல் கவலையின்றி அனைவரும் அழகாக ஆடை தேய்க்கலாம்!