Daily Archives: பிப்ரவரி 7th, 2010

ஆறுவகை ‘ஹார்ட் அட்டாக்!’ 2010ன் புதிய கண்டுபிடிப்பு

மாரடைப்பா… இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

ஆறு வகை மாரடைப்பு
மாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது; இவற்றில், ஐந்து, ஆறாவது வகை மாரடைப்புகளுக்கு காரணம், ஸ்டென்ட்டையும், பைபாஸ் கிரங்குகளையும் சரியாக பாதுகாக்காததால் தான். பெரும்பாலான சர்ஜன்களும், மருத்துவர்களும் வேறு மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவோர் தான்; இவர்களுக்கு மொழி சரியாக தெரியாது, நோயாளிகளிடம் பேசும் நேரம் குறைவு, நிறைய நோயாளிகளை ஸ்டென்ட், பைபாஸ் செய்து நிறைய எண்ணிக்கையைக் கட்டி பெரும் பணம் பார்க்கும் நோக்கமாகிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளை போல மருத்துவர், நோயாளி இவர்களின் ஆலோசனை பல மணி நேரம் ஆகிறது. இதனால், நோயாளிகள் எது எப்போது, என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்கின்றனர்.

முதல் வகை மாரடைப்பு
முதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்டக்கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது; இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர்; இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவமனையாக இருந்தாலும், 2 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோ கிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரணமான ரத்தக் கட்டியை கரைக்க பல்வேறு ஊசிகளை போடுவதுண்டு. கட்டியை கரைத்தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண்டும்.

கோல்டன் ஹவர்
முதல் 2 மணி நேரம் “கோல் டன் ஹவர்’ என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.

இரண்டாவது வகை
இந்த இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது; இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் வேறுப்பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும். ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இந்த வகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும்; ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தால், கரோனரி ரத்தக்குழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.
கள்ளக்குறிச்சி பெண்
என்னிடம் சிகிச்சைப் பெற்ற பெண்மணி வயது 42, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர். ஒரு மாதம் முன், ஆஞ்சியோ கிராம் செய்துப் பார்த்ததில் ஆஞ்சியோ கிராமில் எந்த அடைப்பும் இல்லை. மறுநாள் ஊர் திரும்பும் வழியில் மூச்சிரைப்பு படப்படப்பு ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார். இதற்கு காரணம், ரத்த நாள சுருக்கம், கண்ணுக்கு தெரியாத மைக்கிராஸ் கோப் இதயத்தினுள் இருக்கும் நாளங்களில் சுருக்கம் அடைப்பும், இஸ்மியாவும், அர்த்திமியாவும் தான் காரணம்.
கூலித்தொழிலாளி
இதே போல இருபது ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக இருந்த போது, 20 வயது திருமணமான கூலித் தொழிலாளி பெண் சேலத்தைச் சேர்ந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தேன். இதை மருத்துவ சங்கத்தில் பேசும் போது, சில மருத்துவர் சிரித்தனர். இந்த செய்தியை மக்களுக்கு கொண்டுப் போனேன். இன்று ரத்த நாளத்தின் சிறியக் குழாய்கள் ஸ்பெசம் என்ற சுருக்கம் என்பது உலகுக்கு தெரிய வந்துள்ளது.

மூன்றாவது வகை
நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.

நான்காவது வகை
மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும் இது, இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்துவிடலாம். கேத்லேப்பில் நல்ல உயிர்காக்கும் வசதிகளும் உள்ளன.

ஐந்தாவது வகை
ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந்த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வர வேண்டும். அதாவது ஸ்டென்ட் வைத்த டாக்டர் அல்லது ஸ்டென்டைப் பற்றி நல்ல தெளிவாகவும் தெரிந்த ஊருடுவல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, ஸ்டென்டின் இன்றைய நிலை. அதில், கொழுப்பு படிந்துள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டென்ட் மூடி மாரடைப்பு வராமல் தடுக்க நிபுணரின் கண்காணிப்பில் பரிசோதனைகள் செய்து காத்துக் கொள்ள வேண்டும். ஸ்டென்ட் சிகிச்சை செய்து, இருபது ஆண்டுகள் என்னிடம் மருத்துவம் பார்த்து நலமாக உள்ளவரும் உண்டு. இரண்டு ஆண்டுகளில் ஸ்டென்ட் மூடி மாரடைப்புடன் வந்தவரும் உண்டு. முதலாமவர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்; இரண்டாமவர், தான் தோன்றிய முறையில் வாழ்பவர்; ஸ்டென்ட் முழுவதும் மூடினால் மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராமல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.

ஆறாவது வகை
மாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபாஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமில்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான பல பரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பைபாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண்காணிக்க வேண்டும்.

என்ன செய்யணும்?
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள்ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ளவர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபாஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனி மனித ஒழுக்கம், மது மங்கை, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாமல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக்கநெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லுனர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

பேராசிரியர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம்

வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது

இப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா?

ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று.

அப்படி என்ன நோய் என்கிறீர்களா?

பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்குபின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள்இருக்கும்.

இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல்போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாகபாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள்ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும்வாய்ப்புண்டு.

அட இதுதான் வெரிகோஸ் வெயின் நோயா? இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமே… என்று நினைக்கத் தோன்றுகிறதா?

உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ,வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இதுஅலட்சியப் படுத்தக்கூடிய நோய் அல்ல.

நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரியது அல்ல என்பதுதான் உண்மை. தலைவலிகூட தலை போகும் பிரச்சனையாக மாறலாம். நோய் என்றால் நோய்தான். அவற்றால்ஏற்படும் விளைவுகளிலும், வேதனைகளிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம்.எப்படி இருந்தாலும், எந்த நோயாக இருந்தாலும் அதனைக் குணப்படுத்த முயலவேண்டும் என்பதே மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.

அது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்தரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களுக்கு வெயின் (திஞுடிண) என்றுபெயர்.

வெரிகோஸ் (Varicos) என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள்.

இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்றுஅழைக்கிறோம்.

வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது

மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித்தொங்கியபடி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின்பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது, ரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லதுவீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆக,மலச்சிக்கல்தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப்படுகிறது.

அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது,ஒரே இடத்தில் கால்களை தொங்கவிட்டபடியே அசைவற்று உட்கார்ந்திருப்பதுபோன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற்கானவாய்ப்பு உள்ளது.

ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய்ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதங்களில் இருந்து ரத்தத்தைஇதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளது. அது இயலாமல் போகும்போது,ரத்தம் மீண்டும் கீழ்நோக்கியே செல்லத் தொடங்கும். இதனால், ரத்தநாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத்தும் வீங்கியும் காணப்படும்.

ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவைஎன்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

வெரிகோஸ் வெயின்  (Varicose vein)  நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்

· அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதியபராமரிப்பின்மை, அசைவற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு வரவாய்ப்பு அதிகம்.

· பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும்.

· வயது முதிர்ந்தவர்களுக்கு ரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு

· கருவுற்றிருக்கும் பெண்களக்கு கால் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில்ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது.

அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும்.

பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கானவாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டே வேலை செய்வது, (நர்ஸ், போலீஸ்,செக்யூரிட்டி வேலைகளில் இருப்பவர்கள்) அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய்க்கான அறிகுறிகள் என்ன?

· தோலின் உட்புறத்தில் ரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும்.

· கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல்.

· பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல்.

· பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல்.

· கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில்உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாககருதிவிடுவது உண்டு)

· வெரிகோஸ் வெயின்  (Varicose vein) இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல்.

வரும்முன் தடுக்க

இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனைஅவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும்.

எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பது நல்லது.

தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது. தளர்ந்த ஆடைகளையே அணியவேண்டும். எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்கவேண்டும். எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதைமுற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை

வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கானசிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரிகோஸ் வெயின் புதிதாகஉருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும்வேதனைகளைக் குறைக்க முடியும்.

அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறைகள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாகபயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு ரத்த நாளத்தின் மூலமாக இந்நோய்ஏற்பட வாய்ப்புண்டு.

· Microsclerotheraphy, Laser surgery, Endovenous Ablation Theraphy, Endoscopic Vein surgery, ambulatory phlebectomy, Vein stripping and ligation,  உள்ளிட்ட முறைகளில் இந்நோய்க்குசிகிச்சை அளிக்க இயலும்.

வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும்,வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சங்கள்.

ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள்உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையானபஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றன.

ஒற்றை தலைவலி

ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

காரணம்:குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.

அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்

தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.

1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.

7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு
(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு
இந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.

8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.

செய்ய வேண்டியவை:

1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை
இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.

3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.

4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:
1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.
2. வெயிலில் அலைவது.
3. காரமான உணவு வகைகள்.
4. வயிறு முட்ட சாப்பிடுதல்.
5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை.

ஐ.பி.எல். போட்டி லைவ்வாக இன்டர்நெட்டில்

மீண்டும் ஒரு கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 12 முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறது. இந்த திருவிழாவினை சோனி மேக்ஸ் டிவி சேனல் இந்தியாவில் ஒளிபரப்ப இருக்கிறது. இந்த சேனல் இல்லாத கேபிள் வைத்திருப்பவர்கள் கிரிக்கெட் போட்டியை இன்டர்நெட்டிலேயே கண்டு மகிழலாம். இதற்கான ஒப்பந்தம் ஒன்றை கூகுள் இந்தியா நிறுவனமும் ஐ.பி.எல். அமைப்பும் அண்மையில் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. www.youtube.com/ipl என்ற ஒரு தனி இணைய தளம் ஒன்று இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஐ.பி.எல். போட்டிகள் குறித்த தகவல்களுக்கான ஆன்லைன் உரிமையை இரண்டு ஆண்டுகளுக்குக் கொண்டிருக்கும். தள ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் விளம்பரம் மற்றும் ஸ்பான்ஸார்ஷிப் வருமானத்தினை கூகுள் மற்றும் ஐ.பி.எல். பகிர்ந்து கொள்ளும்.
கூகுள் முதல் முறையாக ஒரு பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் தன் தளத்தில் ஒளி பரப்ப இருக்கிறது. 45 நாட்களில் நடைபெறும் 60 போட்டிகள் ஒளி பரப்பப்படும். போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு மட்டுமின்றி, ரசிகர்களுக்கு போட்டிகளின் ஹை லைட்ஸ், விளையாட்டு வீரர்களுடனான பேட்டிகள், விக்கெட் வீழ்ச்சி, டாப் சிக்ஸ், பரிசு வழங்கும்விழா, பிட்ச் குறித்த அறிக்கை என இன்னும் பல சிறப்பு ஒளிபரப்புகளும் இருக்கும். இவற்றை ரசிகர்கள் அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை என்றாலும், எப்போது வேண்டு மானாலும் தளத்திலிருந்து பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பாகும்.
இவற்றுடன் இன்னொரு சிறப்பான ஏற்பாட்டி னையும் கூகுள் மேற்கொள்கிறது. இந்த போட்டிக்கென ஸ்பெஷல் ஆர்குட் தளம் ஒன்றை அமைக்கிறது. இதன் மூலம் ரசிகர்கள், விளையாட்டு வீரர்களுடன், குறிப்பாக மேன் ஆப் த மேட்ச் ஆகத் தேர்ந்தெடுப்பவர்களுடன் சேட்டிங்கில் ஈடுபடலாம். இவர்களுடன் மட்டுமின்றி போட்டிகளுடன் தொடர்பு டைய அனைவருடனும் சேட் செய்து மகிழலாம்.
இப்போதே இவற்றைத் திட்டமிட விரும்புபவர்கள் http://webtrickz.com/ipl3schedule என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, ஐபிஎல் போட்டி கால அட்டவணையைப் பெற்றுக் கொள்ளலாம். வரும் மாதங்களில் அலுவலகங்களில் கம்ப்யூட்டர் களில் தங்கள் அலுவலக சர்வர்களில் பணிபுரிபவர்கள், கூடுதலாக ஐ.பி.எல். கூகுள் தளங்களையும் திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டே பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

வெள்ளைப்பூண்டின் மகத்துவம் மிக்க மருத்துவ குணங்கள்

வெள்ளைப்பூண்டை உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கு மலேரியா நோய் வராது. பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் தேவையற்று சேரும் கொழுப்பு குறையும். உடல் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலையில் 4 வெள்ளைப்பூண்டுத் துண்டுகளை சாப்பிடுவது நல்லது. வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம். இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்குள் சாப்பிட கொடுக்க எளிதில் குணம் கிடைக்கும். டான்ஸில் என்கிற உள் நாக்கு வளர்ந்திருப்பவர்கள், அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது பூண்டுசாறினை தடவி வர நல்ல குணம் கிடைக்கும். பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட உடல் கொழுப்பு குறையும். ரத்தக்கொதிப்பு, மனஅழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து. பூண்டில் பலவித சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம்தான். எனவே பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் முலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பக்கவாதத்தை தடுக்க இதய பாதுகாப்பு `

பை’ இதயம் உடலியக்கத்தில் அத்தியாவசியமான பணியைச் செய்கிறது. இதயத்துடிப்பு நின்றுபோனால் மரணம்தான். அதேபோல் இதய செயல்பாட்டில் ஏற்படும் பல்வேறு கோளாறுகள் பல வியாதிகளை உருவாக்கும்.

அவற்றில் ஒன்று பக்கவாதம். ரத்தக் கட்டிகள் ஏற்பட்டு முளையின் செயல் பாதிக்கும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 7 லட்சம் பேருக்கு பக்கவாத நோய் தாக்குகிறது.

ரத்தக் கட்டிகள் ஏற்படுவதை தடுப்பதன் முலம் பக்கவாதத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இதற்காக இதயத்தை பாதுகாக்க ஒரு விசேஷ பையை உருவாக்கி உள்ளனர்.

இந்த உறையானது இதயத்தின் இடது பகுதியை சூழ்ந்து கொண்டிருக்கும். ரத்த ஓட்டத்தை கண்காணித்து ரத்தக் கட்டிகள் உருவாவதை ஆரம்பத்திலேயே தடுக்கும், எச்சரிக்கை செய்யும்.

இதனால் முளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனியில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து பக்கவாத நோய் கட்டுப்படுத்தப்படும்.

இந்த இதய பாதுகாப்பு உறையை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இதயவியல் நிபுணர் குழு உருவாக்கி உள்ளது. இந்த ஆய்வுக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் சுப்பிரமணியம் கிருஷ்ணன் என்ற இந்தியராவார்.

சிறுநீரில் இரத்தமாக போகுதல்


பல காரணங்களால் சிறுநீரில் இரத்த சிவப்பு அணுக்கள் கலந்து வருவதை சிறுநீரில் இரத்தம் அல்லது ஹெமச்சூரியா (Heamaturia) என்று ஆங்கிலத்தில் சொல்கின்றோம். பெரும்பாலும் இது கண்ணுக்கு தெரியாத அளவு (சிறுநீர்ப் பரிசோதனையில் உருப்பெருக்கியிலோ அல்லது டிப்ஸ்டிக்ஸ் Dipstix)) எனப்படும் பரிசோதனையில் மட்டுமே கண்டுபிடிக்கப்படும். சில சமயம் சிறுநீரில் அதிக இரத்தம் போகும் போது சிறுநீர் சிவப்பாகவோ அல்லது பழுப்பு (பாலில்லாத டீ) கலரிலோ போகலாம்.

சிறுநீரில் இரத்தம் போவதன் காரணங்கள் என்னென்ன

பொதுவாக சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் (Red Blood Cells) வெளியே வருவதில்லை. இவை சிறுநீரகங்களின் வடிகட்டியில் தடுக்கப்பட்டு விடுகின்றன. சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்த பாகத்தில் இருந்து வேண்டுமானாலும் வரலாம்.

கீழ்கண்டவை சில காரணங்கள
சிறுநீரகங்களின் வடிகட்டிகளில் அழற்சி (சிறுநீரக நுண்தமனி அழற்சி புடழஅநசரடழnநிhசவைளை)
சிறுநீரகங்களில் நீர்க் கட்டிகள், (Cysts in Kidney)
சிறுநீரகங்களில் சாதாரண கட்டிகள், புற்று நோய்க் கட்டிகள் (Menign and Cancerous tumours in Kidney)
சிறுநீரகங்களில் கற்கள், ;> (Kidney Stones)
சிறுநீரகங்களில் கிருமித் தாக்கம் ;> (Kidney Stones)
சிறுநீரகங்களைப் பாதிக்கும் சில பரம்பரை வியாதிகள் (Inherited disorders of Kidney)
உள்சிறுநீர்க் குழாய்களில் கற்கள், கட்டிகள், கிருமி பாதிப்புகள்
(Stones, tumours, infections of Ureters)
சிறுநீர்ப்பையில் கற்கள், கட்டிகள், கிருமித் தாக்கம் ; (Stones, tumours, infections of Bladder)
ப்ராஸ்டேட் சுரப்பியில் கட்டி, கிருமி, கல் (Swelling, Infection and stone in Prostate Gland)
அபூர்வமாக இரத்த உறைவில் குறைபாட்டு நோய்களாலும், இரத்த உறைவை தடுக்கும் சில மருந்துகளாலும் (உதாரணம்-சில இதய் நோய்களுக்கு தரப்படும் வார்பாரின்- Warfarin) வரலாம்.

சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் அது எப்போதும் ஆபத்தானதா?
சிறுநீரில் இரத்தம் கீழ்கண்ட சமயங்களில் மட்டும் அவ்வளவு முக்கியமானதில்லை.
பெண்கள் மாத விடாய் சமயத்தில் செய்யப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனை சிறுநீரில் கிருமித் தாக்கத்தின் போது செய்யப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனை நன்கு தெரிந்த சிறுநீரை சிவப்பாக்குகின்ற சில மருந்துகளை எடுக்கும் போது (உதாரணம்-ரிபாம்பிசின்- Rifampicm)
அதீத உடற்பயிற்சியின் போது மட்டும் வருகின்றது.

இதை அறிந்து கொள்ள என்ன பரிசோதனைகள் தேவைப்படும்?

சாதாரண சிறுநீர்ப் பரிசோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சிலருக்கு கீழ்கண்ட பரிசோதனைகள் தேவைப்படும்.
இரத்தத்தில் முழு அணுக்களின் சோதனை
சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை அறிய உதவும் யூரியா, கிரியேட்டினின் போன்ற பரிசோதனைகள்.
சிறுநீரில் புரதம் மற்றும் கிருமி உள்ளதா என்பதை அறிய உதவும் பரிசோதனைகள்(Urine Culture)
சிறுநீரகங்களில் கட்டிகள், கற்கள் உள்ளதா என்பதை அறிய உதவும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கான்
சில சமயம் சிறுநீரகப்பை சிறுநீர்க் குழாய்களை உள்ளிருந்து பார்க்க உதவும் சிறுநீரக உள்நோக்கி கருவி பரிசோதனை (சிஸ்டோஸ்கோபி- Cytoscopy)
இவைகளுக்கு தனிப்பட்ட நோயாளியின் உடல்நிலையை அனுசரித்து தேவைக்கு தகுந்த படி செய்யப்படும். இவைகளில் எல்லாம் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் சிலருக்கு சிறுநீரக சதைக் துணுக்கு பரிசோதனை (கிட்னி பயாப்ஸி- Kidney Bipsy) தேவைப்படும். அதிலும் சிறுநீரில் புரதம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக உயர் இரத்த அழுத்தம் ஆகியன உள்ளவர்களுக்கு முக்கியமாக தேவைப்படலாம்.

பார்க்க-சிறுநீரக சதை துணுக்கு பரிசோதனை

சிறுநீரில் இரத்த சிவப்பணுக்களுக்கு என்ன சிகிச்சை தேவைப்படும்?
சிறுநீரில் இரத்தம் என்பதற்கு என்று தனியாக சிகிச்சை தேவையில்லை. ஆனால் அது எதனால் வந்தது என்று அறிந்து மூல காரணத்தை சரியாக சிகிச்சை செய்ய வேண்டும்.

சிறுநீரில் இரத்தத்திற்கு காரணம் எதுவும் கண்டு பிடிக்காவிட்டால் என்ன செய்வது?
சில சமயம் எல்லா பரிசோதனைகளுக்கு பின்பும் சிலருக்கு சிறுநீரில் இரத்தம் வருவதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை. இவர்களுக்கு தனிப்பட்ட சிகிச்சை எதுவும் தேவையில்லை. ஆனால் சில மாதங்களுக்கு மாதா மாதம் சிறுநீர்ப் பரிசோதனை, இரத்த அழுத்தம் அவ்வப்போது சிறுநீரக செயல்திறன் பரிசோதனைகள் சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பில் செய்து பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கும். இது பின்னாளில் தெரிய வரும் சில ஆபத்தான சிறுநீரக வியாதிகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளத்தான்.

திரிகோணாசனம்

கால்களை 2 அடி அகற்றி நின்றுகொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் ஒரு நேர்கோடுபோல் இருக்கும்படி உயர்த்தவும். மூச்சை வெளியே விட்ட நிலையில் இடது பக்கம் படத்தில் காட்டியபடி வளைந்து கை இடதுபாதப் பெருவிரலைத் தொடும்படியாகவும் தலையை மேலே திருப்பி, கண்கள் இடதுகைப் பெருவிரலைப் பார்க்கும்படியும் நிற்கவும், பின் மெதுவாக நேராக நிமிர்ந்து வலது பக்கம் திருப்பி வலது கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று மெதுவாக நிமிரவும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யலாம். கால் மூட்டு வளையவிடக் கூடாது.

பலன்கள்:

முதுகுத் தண்டு சக்தி வளரும். நுரையீரலுக்கு நல்லது. குடல்களிலிருந்து மலம் சுலபமாய்க் கழியும். முதுகுத் தசை புத்துணர்வு பெறும். இடுப்புவலி, முதுகுத் தசை புத்துணர்வு பெறும். இடுப்புவலி, முதுகுவலி, பக்கபிளவை, கண்டமாலை, கிளாண்டு முதலிய நோய்கள் நீங்கும்.