Daily Archives: பிப்ரவரி 10th, 2010

ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை

ஆயிரத்தில் ஒருவருக்கு பிறக்கும் போதே ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மட்டுமே பிறக்க வாய்ப்பு உண்டு. இவர்களில் பலருக்கு இதனால எந்த தொந்திரவும் இல்லாமல் வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் வயிற்றுக்கு ஸ்கான் செய்த போது எதேச்சையாக கண்டுபிடிக்கப்பட்டது உண்டு. சிலருக்கு சிறுநீரகத்தில் கட்டி அல்லது சிறுநீரகக் குழாயில் கல், மற்ற காரணங்களால் அடைப்பு கிருமித் தாக்கம், விபத்தில் சிறுநீரகம் சிதைவு ஆகிய காரணங்களால் ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையில் அகற்ற வேண்டிய கட்டாயம் வரலாம். இன்னும் சிலர் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு அவர்களின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால் தங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகத்தைத் தானாமாக தருவது உண்டு. இம்மூன்று வகையிலும் அவர் இனி ஒரு சிறுநீரகத்துடன் தன் வாழ்நாளை வாழ வேண்டியுள்ளது. இது குறித்து அவர்களுக்கு பல கவலைகள் இருக்கலாம். இக்கையேடு இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும். நிஜத்தில் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்த பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உண்டு என்பதை அறியாமலேயே தங்கள் முழு வாழ்வையும் வாழ்ந்து முடித்து விடுகின்றனர். இதில் சிலரே எதேச்சையாக வேறு காரணங்களுக்காக பரிசோதிக்கப்படும் போது அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளது என்பதை அறிகின்றனர். இரண்டு சிறுநீரகங்களும் நன்கு ஆரோக்யமாக இயங்கும் ஒரு நபர் ஒன்றை இன்னொருவர் உயிர் காக்க தானமாக தந்த பிறகு அவர்களுடைய மற்ற சிறுநீரகம் அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நன்கு இயங்கி அவரை ஆரோக்யமாகவே வைத்திருக்கின்றது. (உண்மையில் ஒரு ஆய்வு சிறுநீரக தானம் கொடுத்தவர்கள் அவரது வயதொத்தவர்களை விட அதிக காலம் உயிர் வாழ்வதாக சொல்கின்றது). அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகிய சில சிறிய எளிதில் சிகிற்சிக்கக் கூடிய தொந்திரவுகள் வரலாம். என்றாலும் ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளதாக சிறுவயதிலேயோ பின்னாளிலோ கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஒரு சிறுநீரக மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். அவர் இந்த ஒரு சிறுநீரகத்தின் முழு ஆரோக்யத்தை எளிய பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வார். மேலும் சிறுநீரகம் நன்றாகவே இருந்தாலும்

முறையான இடைவெளிகளில் (வருடம் ஒரு முறை) தொடர்ந்து சிறுநீரக மருத்துவரை கலந்து கொள்வது சிறந்தது. இது சிறுநீரக தானம் கொடுக்கதவர்களுக்கும் வேறு காரணங்களுக்காக ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டி வந்தவர்களுக்கு பொறுந்தும். அபூர்வமாக ஒற்றை சிறுநீரகத்தில் பாதிப்பு ஏதும் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டால் சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்; படி நடந்து கொள்ள வேண்டும் ஒற்றை சிறுநீரகம் ஆரோக்யமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உணவிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. குழந்தை பெறுவதிலும் எந்த சிக்கலும் கிடையாது.

புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்தும் செம்மறி ஆடுகளின் `ஏப்பம்’!

புவி வெப்பமடைதலை தடுக்க உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் நடக்கும் ரகசிய யுத்தம் இது.

பல்வேறு வழிகளில் புவி வெப்பமாவதை தடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. செம்மறி ஆடுகளின் ஏப்பம், புவி வெப்பமாவதை தடுப்பதாக தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் செம்மறி ஆடுகள் கூட்டுறவு ஆராய்ச்சி மைய ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது.

பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவதில் சில விலங்கினங்கள் நமக்கு உதவுகின்றன. குறிப்பாக மீத்தேன் வாயுவை கட்டுப்படுத்துவதில் இவை பங்காற்றுகின்றன. மாடுகள் இந்தப் பணியில் உதவுவதாக ஏற்கனவே அறியப்பட்டு இருந்தது. தற்போது இந்தப் பட்டியலில் செம்மறி ஆடுகளும் சேர்ந்துள்ளன.

செம்மறி ஆடுகளின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிரிகள், மீத்தேன் வாயுவை அதிகமாக கிரகிக்கின்றன. குறிப்பாக ஆடுகள் ஏப்பமிடும் சமயத்தில் அதிகப்படியான மீத்தேன் உள்ளிழுக்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அளவில் காற்றில் மீத்தேன் அளவு உறிஞ்சப்படுவதால் புவி வெப்பமடைவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஆஸ்திரேலிய ஆய்வுக்குழு ஆடுகளில் பல்வேறு செயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி ஆய்வு செய்து வருகிறது. அங்குள்ள ஆடுமேய்க்கும் இடையர்களையும் ஊக்குவித்து வருகிறார்கள்.

ஏனெனில் ஆடுகள் அதிகம் ஏப்பமிட்டால் நமக்கு ஏற்படும் ஆபத்து குறையுமே!

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தேதி பார்மட்

எக்ஸெல் ஒர்க் ஷீட்களை அமைக்கையில் தேதிக்கான பார்மட்களை செட் செய்கையில் பலரும் தடுமாற்றம் அடைகின்றனர். ஏனென்றால் நாம் அமைக்கும் தேதி பார்மட்டும், எக்ஸெல் தொகுப்பில் கிடைக்கும் மாறா பார்மட்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருப்பதுதான். இருப்பினும் நாம் விரும்பும் வகையில் தேதிக்கான பார்மட்டை அமைத்திட வழி தரப்பட்டுள்ளது. இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் எந்த செல்களில் தேதி அமைய வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின் Format மெனு சென்று அதில் Cells என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + 1 அல்லது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells தேர்ந்தெடுக்கலாம். பின் கிடைக்கும் பார்மட் செல்ஸ் டயலாக் விண்டோவில்

Number டேபினைக் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில் இடது பக்கம் கேடகிரி என்பதன் கீழாக Custom என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Type என்பதில் பல ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் நீங்கள் விரும்பும் வகையில் தேதி மற்றும் ஆண்டினை அமைக்கும் வகையைக் காணலாம். அவை என்னவென்று இங்கு பட்டியலிடலாம்.
தேதி வகைகள்:
d என்பது ஒரு நாளின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 … 30, 31)
d d என்பது நாளின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
d d d என்பது நாளினைச் சுருக்கித் தரும் (Mon, Tue ….)

d d d d என்பது நாளினை அதன் முழு பெயரில் தரும் (Monday, Tuesday, etc).

மாதத்திற்கான குறிப்புகள்:
m என்பது ஒரு மாதத்தின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 … 30, 31)
mm என்பது மாதத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
mmm என்பது மாதத்தினைச் சுருக்கித் தரும் (Jan, Feb,….)

mmmm என்பது மாதத்தினை அதன் முழு பெயரில் தரும் (January, February etc).

mmmmm என்பது மாதத்தின் முதல் எழுத்தினைத் தரும் (J, F, M, A,)

ஆண்டுக்கான குறிப்புகள்:
yy என்பது வருடத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (07,08,09)
yyyy என்பது வருடத்தின் எண்ணை நான்கு இலக்கங்களில் தரும் (2007, 2008, 2009)
ஓ, இப்போது நாள், மாதம் மற்றும் ஆண்டுக்கான குறியீடுகளைக் கற்றுக் கொண்டீர்கள். இனி இவற்றை எப்படி அமைப்பீர்கள் என்று பார்க்கலாம்.
Custom கேடகிரியில் கிளிக் செய்கையில் வலது பக்கத்தில் Type என்ற சொல்லுக்குக் கீழாக ஒரு பீல்டு கொடுக்கப்பட்டு அதில் உங்கள் தேதியின் பார்மட்டை டைப் செய்திட இடம் கொடுக்கப்பட்டிருக்கும். இங்கு ஏற்கனவே நீங்கள் கற்றுக் கொண்டதன் அடிப்படையில் உங்களுக்கு எப்படி தேதி இருக்க வேண்டுமோ அதன்படி அமைக்கவும். பின் நீங்கள் தரும் தேதி அதற்கேற்றபடி அமைக்கப்படுவதனைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக dddd, mmmm d, yyyy என நீங்கள் தேர்ந்தெடுத்தால், 52609 என டைப் செய்திருந்தால் அது Friday, May 26, 2009 எனக் காட்டப்படும். ஒன்றைக் கவனித்தீர்களா! நாம் இடையே செருகிய கமாக்களும் அதற்கான இடத்தில் காட்டப்பட்டுள்ளன. கமா இடத்தில் சிறிய இடைக்கோடு மற்றும் வேறு அடையாளங்களையும் பயன்படுத்தலாம். Type பீல்டின் மேலாக Sample என ஒரு பிரிவியூ பாக்ஸ் இருப்பதனைக் காணலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த வகையில் செல்களில் உள்ள டேட்டா எப்படிக் காட்டப்படும் என இங்கு காட்டப்படுவதனையும் காணலாம். இதன் மூலம் நீங்கள் விரும்பும் வகைக்கான பார்மட்டினை நீங்கள் அமைக்கிறீர்களா என்று இதில் செக் செய்து கொள்ளலாம். இவ்வாறு செட் செய்துவிட்டு ஒர்க் ஷீட்டிற்குள் நுழைந்தால் நீங்கள் செட் செய்தபடி செல்களில் உள்ள தேதி பார்மட் மாற்றப்பட்டிருப்பதனைக் காணலாம்.

நௌலி

உட்டியான செய்யச் செய்ய நௌலி தானாக வந்துவிடும். கால்களை அகற்றி நின்று கைகளை படத்தில் காட்டியபடி தொடை மேல் அமர்த்தி உடலை முன்னால் குனிந்து கொள்ளவும்.சுவாசம் முழுமையும் மெதுலவாய் வெளியில் விட்டு வயிற்றை உட்டியானா செய்யவும். பின் தளர்ச்சியடைந்த வயற்றின் சதைகளை இருகச் கட்டிச் செய்யவும். இப்படி
இறக்கியவுடன் மேல் சென்ற வயறு தானாக முன்னால் துருத்தும். பின் வயறு தடிபோல் முன் வந்து நிற்கும். சில வினாடிகள் நின்ற பிறகு சதையை நழுவ விட்டி சுவாசத்தை உள்ளிழுத்து 2 முதல்  3 முறை செய்யலாம். வலது கை, இடது கையைத் தொடைகளிள் அதிகமாக அதிகமாக குடலை வலது பக்கம், இடதுபக்கம் தள்ளலாம்.

பலன்கள்

உன்னதமான ஆசனம் இழந்த ஆண்மையை மீண்டும் பெறலாம். விந்து ஒழுங்குவதைத் தடுக்கும் விந்து கட்டிப்படும் வயிற்றுக்கிருமி பூச்சி ஒழியும்.  மலச்சிக்கள் நீக்கி பசி உண்டாகும்.குடலில் அமிலங்கள் உண்டாகாது. வயற்று வலி குடல்புண் குணமடைபும், உடலில் தேஜஸ் உண்டாகி புத்துணர்வு ஏற்படும். விந்து நோய், வெள்ளை, வெட்டை நீக்கி இளமை மேலிடும். மன கட்டுப்பாடு உண்டாகும்.பெண் வியாதி தீரும். ஜீரண உறுப்புக்கள் அனைத்திற்கும் நல்ல ரத்தம் கிடைக்கும்.