வேர்ட் தொகுப்பில் உங்கள் டூல்பாரை உருவாக்க

வேர்ட் தொகுப்பில் நீங்களே உங்களுக்குத் தேவையான டூல்பாரினை உங்கள் வசதிப்படி உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கான வழிகளை வேர்ட் தொகுப்பு தன் பதிப்புகள் அனைத்திலும் வைத்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
1. டூல்ஸ் (Tools) மெனு சென்று கஸ்டமைஸ் (Customize) என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இப்போது Customize டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
2. இதில் டூல்பார்ஸ் என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3.இனி New என்பதில் கிளிக் செய்திடவும். நியூ டூல்பார் (New Toolbar) என்ற டயலாக் பாக்ஸ் இப்போது திறக்கப்படும்.
4. உங்கள் டூல்பாருக்கு ஏதேனும் பொருத்தமான பெயர் தரவும்.
5. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக, நீங்கள் அமைக்க இருக்கும் டூல்பார் எந்த டெம்ப்ளேட்டில் கிடைக்க வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து சுட்டிக் காட்டவேண்டும். Normal.dot என்ற டெம்ப்ளேட்டினைத் தேர்ந்தெடுத்தால், இந்த டூல்பார் அனைத்து வேர்ட் டாகுமெண்ட்களிலும் எல்லா நேரங்களிலும் கிடைக்கும்.
6. இனி நியூ டூல் பார் டயலாக் பாக்ஸை ஓகே கிளிக் செய்து மூடலாம். இப்போது கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில், டூல்பார்ஸ் பட்டியலில் கடைசியாக இந்த டூல்பார் கிடைக்கும்.
7.கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் உள்ள Commands டேப்பில் அடுத்து கிளிக் செய்திடவும்.
8. பின் Categories பட்டியலில், புதிய டூல்பாருக்கு எந்த கட்டளையைத் தர விரும்புகிறீர்களோ, அந்த மேஜர் கேடகிரியைத் தேர்ந்தெடுக்கவும்.
9. கட்டளைப் பட்டியலில், எந்த கட்டளையை இணைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
10.மவுஸைப் பயன்படுத்தி கமாண்ட்ஸ் லிஸ்ட்டில் இருந்து, குறிப்பிட்ட கட்டளையை இழுத்து வந்து உங்கள் டூல்பாரில் விடவும். மவுஸின் கர்சரை விட்டவுடன், சம்பந்தப்பட்ட ஐகான் அல்லது டூல்பாருக்கான சொல் அங்கு காட்டப்படும்.
11.இதே போல மேலும் டூல்பார்களை உருவாக்க மேலே 8 முதல் 10 வரை தரப்பட்டுள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
12. இறுதியாக கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸை மூட குளோஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.

One response

  1. தகவலுக்கு நன்றி.

%d bloggers like this: