`கட்டுப்படியாகும் விலை’: இதுவே மந்திரம்!-சொந்த வீடு

சொந்த வீடு தேடுவோர் முதல், குடியிருப்பு அமைப்பு நிறுவனங்கள், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், வங்கிகள் வரை 2010-ல் எல்லோரது `தாரக மந்திரம்’- கட்டுப்படியாகக்கூடிய விலை.

இந்த ஓர் அம்சம்தான் இத்துறையின் வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது, இதன் உண்மையான வளர்ச்சி சாத்தியத்தையும் எட்டுவதற்கு உதவப் போகிறது.

`கட்டுப்படியாகும் விலை’ என்பது, எப்போதையும் விட வீட்டு வசதித் துறையில் பெரும் பணப் பரிமாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது, நாடு முழுவதும் வீடு தேடும் கோடிக்கணக்கானோரின் கனவுகளைப் பூர்த்தி செய்யப் போகிறது.

நாட்டு மக்களின் குடியிருப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதில் அரசு கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. இந்நிலையில், `இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர் சங்கங்களின் கூட்டமைப்பு’, `நாட்கான் 2010′ என்ற மாநாட்டைச் சமீபத்தில் துபாயில் நடத்தியது. `ரியல் எஸ்டேட்’ துறையில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து, இத்துறையின் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதே இம்மாநாட்டின் நோக்கம்.

இந்த முன்று நாள் மாநாட்டின்போது பல்வேறு விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெற்றன. முக்கியமான விஷயங்களான செலவு, தொழில்ட்ப உயர்வு, வாடிக்கையாளர்களுக்குக் கடனுதவி அளிப்பது, சந்தைகள், வீட்டை விற்ற பிறகும் அதைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்கான முறை, தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் அதிகமான கட்டுமானத்தை மேற்கொள்வது போன்றவை விவாதிக்கப்பட்டன. இவையெல்லாம் சேர்ந்து, நம் நாட்டில் கட்டுப்படியாகக் கூடிய குடியிருப்பு என்ற விஷயத்தை நனவாக்கும் என்பது நோக்கம். காரணம், `நாட்கான்’ மாநாட்டில், `கட்டுப்படியாகக்கூடிய விலை’ என்பதே அடிப்படைக் கருத்தாக எடுத்துக்கொள்ளப்பட்டது. வீட்டு வசதித் துறையின் முக்கியமான விஷயங்கள் குறித்த கருத்துகள், பார்வைகள் வெளியிடப்படும் இடமாகவும் இம்மாநாடு அமைந்திருந்தது.

விவாதங்கள், ஆய்வுக் கண்டுபிடிப்புகள், தீர்வு சார்ந்த விவாதங்கள் முலமாக, `ரியல் எஸ்டேட்’ துறையில் அண்மைக்கால மாற்றங்கள், எதிர்காலத்துக்கான வழியைத் தீர்மானித்தல் என்பவை குறித்துக் கருத்தில் கொள்ளப்பட்டது.

`கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதி’ என்பதன் பல்வேறு பரிமாணங்கள் அலசப்பட்டன. அது தொடர்பான விஷயங்கள், தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் குறித்து நீளமாகப் பேசப்பட்டது. அதன் முலம் வளர்ந்து வரும் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் முன்னணி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், நிதி மேலாண்மை நிறுவனங்கள், வங்கியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ரியல் எஸ்டேட் தொழில் நிபுணர்கள், மதிப்புமிக்க சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்று, `கட்டுப்படியாகக்கூடிய விலை’ என்ற கருத்தின் அடிப்படையில் தகவல்களை அளித்தனர், விவாதித்தனர்.

இந்த மாநாட்டின் தலைமை விருந்தினராகப் பங்கேற்றவர், தீபக் பரேக். இவர், `ஹவுசிங் டெவலெப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டின்’ (எச்டிஎப்சி) தலைவர் ஆவார். இந்திய அரசால் உருவாக்கப்பட்ட, `அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய வீடு’ திட்டத்துக்கான உயர்மட்டச் செயற்குழுத் தலைவராகவும் தீபக் பரேக் உள்ளார்.

`கட்டுப்படியாகக் கூடிய விலை’ என்பதன் தற்போதைய நிலை, இத்துறையில் எதிர்கால நிலை குறித்த முக்கியமான விஷயங்களை இவர் பகிர்ந்துகொண்டார்.

`கட்டுப்படியாகும் விலை’ என்பது சார்ந்த, அம்மாதிரியான வீடுகள் அமைப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வுகள், நிதி வசதி, இவ்விஷயத்தில் அறிந்துகொள்ளப்பட்ட முக்கியமான விஷயங்கள், வங்கி, நிதித் துறையில் முன்னணியில் உள்ளவர்களின் ஆய்வுகள் `நாட்கான்’ மாநாட்டில் முக்கிய இடம் பெற்றன.

இவை எல்லாம் சேர்ந்து, `கட்டுப்படியாகும் விலையில் வீடு’ என்ற சாதாரண மக்களின் கனவை நனவாக்கும் பயணத்தைத் தொடங்கிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: