திருடனின் `திருட்டு விளையாட்டு’!

அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள `போக் கவுன்டி’ பகுதியில் ஒரு 1998 மாடல் `டாட்ஜ் டுராங்கோ’ காரை காணவில்லை என்று போலீசாருக்கு புகார் வந்தது. அது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், காரை அலசித் தேடினர். அப்போது, அருகே உள்ள ஹெய்ன்ஸ் நகர வீடு ஒன்றின் முன் அந்தக் கார் நிற்பதை போலீசார் கண்டனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அந்த வீட்டின் உரிமையாளரான ஏக்ஸ், `கிராண்ட் தெப்ட் ஆட்டோ’ என்ற பிரபலமான வாகனத் திருட்டு விளையாட்டை வீடியோவில் வெகு சுவாரசியமாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆசாமியை போலீசார் அப்படியே அமுக்கி விசாரித்தபோது, அவர் குறிப்பிட்ட காரைத் திருடியவர் மட்டுமல்ல, ஏற்கனவே ஒரு கார் திருட்டில் சிறைத் தண்டனை பெற்று, விடுப்பில் வீடு வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

எப்படி திருடுவது என்று இவர், `திருட்டு’ வீடியோ முலம்தான் தெரிந்துகொண்டார் போல் தெரிகிறது.

%d bloggers like this: