நீங்களும் பெறலாம் பட்டு போன்ற மேனி

தினமும் நமக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் உணவுகள் முலம் கிடைத்தால்தான் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதற்கு சரிவிகித உணவு அவசியம்.

அந்தவகையில், என்னென்ன சருமம் கொண்டவர்கள் என்னென்ன உணவு வகைகளை சாப்பிடலாம்? அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

எண்ணெய் பசை சருமம் :

எண்ணெய்ப் பசை சருமம் ஒருவரது அழகையே பாழா க்கிவிடும். எப்போது பார்த்தாலும் முகத்தில் எண்ணெய்ப் பசை வழிந்து கொண்டே இருக்கும். இதை துடைத்து அப்புறப்படுத்துவதற்கு என்றே ஒரு கர்ச்சிப் வைத்திருக்க வேண்டும். இந்த எண்ணெய்ப் பசை சருமத்தால் பொடுகு, பருக்கள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால், இந்த சருமம் உள்ளவர்கள் தலையினை சுத்தமாக வைக்க வேண்டும். இவர்கள் வாரம் ஒருமுறை முகத்துக்கு ஆவி பிடிப்பதும் நன்மை தரும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியாகும்.

இவர்கள் உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை தவிர, சாலட், பழங்கள் அதிகம் சேர்க்கலாம். கொழுப்பு நீக்கிய பால், தயிர், மோர் ஆகியவையும் நன்மை தரும். உணவில் அடிக்கடி முளைக் கட்டிய பயிறு வகைகளை சேர்த்துக்கொள்வது இன்னும் நன்மையளிக்கும்.

உலர்ந்த சருமம் :

இவர்களின் சருமம் எப்போதும் `டல்’ ஆகவே இருக்கும். இவர்களுக்கு சீக்கிரமே முகச்சுருக்கம் வர வாய்ப்புகள் உண்டு. இவர்கள் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளையும், தாது உப்புசத்துகள் நிறைந்த உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவதும் அவசியம்.

சாதாரண சருமம் :

இவர்களுக்கு சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. இவர்கள் எந்த வகை உணவையும் எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும், அளவுக்கு மிஞ்ச வேண்டாம்.

அதிகமாக மோர், தண்ணீர் குடிப்பதும், எண்ணெய் உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வதும் இவர்களது சருமத்தை பட்டுப்போன்ற அழகுடன் வைத்திருக்கும்.

%d bloggers like this: