Daily Archives: பிப்ரவரி 13th, 2010

23 பைசாவுக்கு அரண்மனை!

ஹங்கேரி நாட்டில் அந்தக் கால அரண்மனை ஒன்று வெறும் 23 பைசாவுக்கு விற்பனைக்கு வருகிறது. `ஆகா!’ என்று சப்புக் கொட்டாதீர்கள். அந்த அறிவிப்புக்கு பின்னால் ஒரு `கொக்கி’ இருக்கிறது. ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டி லிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள கிலா நகரத்தில் அந்த `ஆல்மாசி அரண்மனை’ அமைந் திருக்கிறது. 1725 -ம் ஆண்டில் கட்டபட்ட அந்த 13 ஆயிரம் சதுர அடி அரண்மனை, 1801-ம் ஆண்டில் ஒரு தீ விபத்தில் சேதமடைந்தது. அதன் பின் மறுசீரமைப்புச் செய்யபட்ட அந்த அரண்மனை பல ஆண்டுகளாக யாரும் குடியேறாமலே இருந்தது. தற்போது அதன் விற்பனை அறிவிப்பை வெளியிட்டுள்ள கிலா மேயர் விதிக்கும் நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். அது, அரமனையை 23 பைசாவுக்கு வாங்குபவர், அதைச் சீரமைப்பதற்கான 33.46 கோடி ருபாய்ச் செலவை ஏற்க வேண்டும். என்ன, முச்சு விடாமல் அடுத்த பத்திக்கு நகர்றீங்க?

உணவில் `அலர்ஜி’ ஒன்றுமில்லை! “எல்லாமே எனர்ஜிதான்,

அலர்ஜி என்று ஒன்றுமில்லை”

இது அலர்ஜி ஆய்வாளர்களின் புதுமொழி.

“எனக்கு பால் ஒத்துக்காதுப்பா”, “எனக்கு கோதுமை ஒத்துக்காது” என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். காரணம் கேட்டால் பிடிக்காது, பழக்கமில்லை, உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்று அடுக்குவார்கள். அப்படி அலர்ஜி என்று எதுவுமில்லை. எல்லாம் மனக்குழப்பம்தான் காரணம் என்கிறார்கள் டாக்டர்கள்.

* பத்தில் ஒன்பது பேர் ஏதாவது ஒரு உணவுப் பண்டத்தை அலர்ஜி என்று ஒதுக்குகிறார்களாம். குறிப்பாக பால், முட்டை, கோதுமை போன்றவற்றை ஒதுக்குபவர்கள் நிறையப் பேர் இருக் கிறார்கள்.

* இப்படி ஒதுக்குபவர்களுக்கு ஏதும் வியாதிகள் இருக்குமோ என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அவர்களாகவே சில பொருட்களை ஒதுக்கி வைத்து விடுகிறார்களாம்.

* அலர்ஜி என்று ஒதுக்குபவர்களை ஆய்வு செய்தபோது வெறும் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே உண்மையில் உணவு ஒவ்வாமை இருந்தது தெரிய வந்துள்ளது. மற்றவர்கள் தங்களை பழக்கப் படுத்திக் கொண்ட விதமே சில உணவுகளை அலர்ஜி என்று ஒதுக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

* உதாரணமாக தனக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ ஒரு வியாதி ஏற்பட்டால் அதற்கு காரணமான உணவுப் பொருளை தொடர்ந்து தவிர்க்கப் பழகுகிறார்கள். சிலர் இதை நல்ல பழக்கமென்றுகூட கருதுகிறார்கள்.

* உண்மையில் அலர்ஜி என்பது மனம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. மற்றபடி இப்படி உணவுப் பொருட்களை தடை செய்து கொள்வதால் பிற்காலத்தில் வேறு சில வியாதிகள் தோன்றக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

* அதாவது கோதுமை சாப்பிடுவதை ஒதுக்கி வந்தால் `வைட்டமின் பி’ பற்றாக்குறை ஏற்படும். பால்பொருட்களை தவிர்த்து வந்தால் `கால்சியம்’ பற்றாக்குறை ஏற்படும். இவை பிற்காலங்களில் வேறு ஏதாவது வியாதிகளைக் கொண்டு வரக் கூடும்.

* குழந்தைகள் சாப்பிட்டவுடன் வாந்தியெடுப்பதற்கும் ஒவ்வாமை காரணமாக இருக்காது. வேளை தவறிய உணவு குழந்தைகளுக்கு இதுபோன்ற நிலையை ஏற்படுத்தும். எனவே தாய்மார்கள் தவறான முடிவுக்கு வந்து குழந்தைகளுக்கு சில உணவுகளை கொடுக்காமல் நிறுத்துவதை கைவிட வேண்டும்.

* “பொதுவாக வியாதி என்பதே ஒரு இயற்கை எதிர்விளைவுதான். அதற்கான காரணத்தை அறிந்து தடுக்க வேண்டுமேயொழிய, சாப்பாடுதான் காரணம் என்ற முடிவுக்கு உடனடியாக வந்துவிடக் கூடாது” என்பதுதான் அலர்ஜி குறித்து டாக்டர்கள் கூறும் அறிவுரை.

இந்த ஆய்வில் ஈடுபட்டது தெற்கு இங்கிலாந்தை சேர்ந்த போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக டாக்டர்கள் குழுவாகும்.

வேளாண்மை குறிப்புகள்

காலநேரம் பார்த்துத்தான் வாழையை நடவு செய்யணும்.

கண்ட கண்ட நேரத்துல வாழையை நடவு செய்யக் கூடாது. எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் வாழை யிலிருந்து பலன் எடுத்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் பலரும் அடிக்கடி வாழையை அழித்துவிட்டு, புதிதாக பயிர் செய்வார்கள். அது தேவையற்றது. இதனால் பணமும், மண்வளமும்தான் விரயமாகும். ஆடி, பங்குனினு ரெண்டு பட்டம் இருக்கிறது. இந்த காலங்களில் பக்குவமாக பயிர் செய்தால் வாழை நம் வாழ்வை செழிக்க வைக்கும். அதே போல் சிறுதானியமான கம்புக்கு சித்திரை பட்டம்தான் ஏற்றது. கேழ்வரகை ஆனி, ஆடி, மார்கழினு முன்று பட்டத்துலம் விதைக்கலாம்.

தண்ணீர்புல் எனப்படும் எருமைபுல்,

பெரும்பாலும் வாய்க்கால், குளங்களில்தான் மண்டிக்கிடக்கும். வருடக் கணக்கில் முழ்கிக் கிடந்தாலும் அழுகாது. வறட்சிக் காலங்களில் வளர்ச்சிக் குறைந்தாலும் பட்டு போகாது. கொஞ்சம் தண்ணீர் கிடைத்தவுடனேயே வளரத் தொடங்கிவிடும். நிழல், வெயில் என எந்த சூழலாக இருந்தாலும் வளரும். குளக்கரைகளில், சரிவான நிலங்களின் ஓரத்தில் இதை வளர்த்து மண் அரிப்பை தடுக்கலாம். அறுவடை செய்த தண்ணீர் புல்லைக் காயவைத்து ஒரு வருடம் வரை பயன்படுத்த முடியும்! கலப்பைக் கோணியத்தையும் அதேபோல உலர வைத்து ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். இவை கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக பயன்படும். கேரட், பீட்ருட், உருளைன்னு வெளிநாட்டுக் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு பழகியதால், நம் நாட்டு பாரம்பரியக் கிழங்கு வகைகளை நாம் மறந்து போய்விட்டோம். அதில் முக்கியமான கிழங்கு வெத்திலை வள்ளிக் கிழங்கு. இதை மற்ற பயிரோடும் ஊடுபயிராக விதைக்கலாம். ஒரு கொடியில் பத்து கிலோ கிழங்கு விளையும். இந்த செடியை பூச்சியும், நோய்களும் கூட தாக்குவதில்லை. சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

சுவைக்காக மட்டுமே இதுவரை பயன்படுத்தபட்ட வெங்காயம், இனி உணவின் வண்ணத்துக்காகவும் பயன்பட போகிறது. எத்தகைய இயற்கை வண்ண பொருள்களை உணவில் சேர்க்கலாம் என்பது பற்றிய ஆராய்ச்சி ஜப்பானில் உள்ள `ஹோஹென் ஹெய்ன்’ பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது. இதில் உணவில் பயன்படுத்தக் கூடிய மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண பொருட்களை வெங்காயத்திலிருந்து பிரித்தெடுக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

புடலங்காய் முன்று மாத பயிர். களிமண் மற்றும் உப்பு மண் தவிர, மற்ற அனைத்து வகையான மண்ணிலும் புடலையை பயிர் செய்யலாம். குறிப்பாக மணற்பாங்கான நிலங்களில் நல்ல மகசூல் கிடைக்கும். புடலைக்கு பட்டமெல்லாம் கிடையாது. புடலையை எல்லாக் காலங்களிலும் விதைக்கலாம். விதைகளை எட்டுமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின் நடவு செய்தால் முளைப்புத் திறன் நன்றாக இருக்கும்.

ஆதியில் இயற்கை கொடுத்த மாதிரி, எந்த கலப்படமும் இல்லாமல் கிடைக்கும் ஒரே பழம் சீத்தா பழம்தான்! `அனோனா ரெடிகுலேட்டா’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட சீத்தா பழத்தை தனிபயிராக பெரும்பாலும் சாகுபடி செய்வதில்லை. ஆடியில் மொட்டுவிடும் சீத்தா, பிஞ்சாகி, காயாகி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் விற்பனைக்கு வந்து விடும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனம் சார்ந்த பகுதிகள் அதிகம் இருப்பதால் இங்கே சீத்தா பழ விளைச்சல் அதிகம்.

வெண்டைக் காய்க்கு மாசி, பங்குனி பட்டமும், வெங்காயத்துக்கு வைகாசி பட்டமும் நடவுக்கு சரியான நேரம். மிளகாய், கொத்தவரங்காயை வைகாசி, ஆனி, ஆவணி, தை, மாசி பட்டத்தில் விதைக்கலாம். கரும்பு பயிரோடு சோயா பீன்ஸ், கொளுஞ்சி, தக்கைபூடு என காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்ணுக்கு இழுத்துக் கொடுக்கும் பயிர்களை ஊடு பயிராக விதைக்கவும். இவை மண்ணை வளபடுத்தி, மகசூலை பெருக்கும். பழங்கள் விளையும்போது தோட்டங்களில் அணில் தொல்லை அதிகமாக இருக்கும். பழத்தை கடிச்சி ஆங்காங்கே போட்டு விடும். இதற்காக அணிலை அழிக்கிறதுக்கான வேலைகளை செய்ய வேண்டாம். ஒரு கையளவு வெள்ளை பூண்டு அரைச்சு எடுத்துக் கொண்டு, அதை 4 லிட்டர் தண்ணீரில் கலந்து பழ மரத்து மேல் தெளித்து விடுங்கள். பண்டு வாசனைக்கு பயந்து அணில்கள் மரத்துக்கு அருகில்கூட வராது. மேலும் பூச்சி தொல்லையும் இருக்காது.

எல்லா வகை மண்ணிலும் தீவன பயிர்கள் நன்கு வளரும். நிலம் முழுவதும் இரண்டு சால் உழவு ஓட்டி மண்ணை நன்கு பொல பொலபாக்க வேண்டும். பின் பத்து டன் தொழுவுரம் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். 20 சென்ட்டில் ஆயிரம்நுல் தண்ணீர்புல் விதைக் கரணைகளை ஊன்ற வேண்டும். இது வேகமாக மண்டும் என்பதால் குறைந்த அளவு நிலத்தில் விதைத்தாலே போதுமானது. மண்ணை நன்றாக சேறாக்கி, இரண்டடி இடைவெளி விட்டு, கரணையின் கணு மண்ணில் புதைமாறு நடவு செய்ய வேண்டும். முன்றாவது நாளில் இருந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 90-வது நாளிலிருந்து இந்த புல்லை அறுவடை செய்யலாம்.

பெற்றோரைக் கவனிக்கிறீர்களா? வரிவிலக்கு உண்டு!

நீங்கள் உங்களது பெற்றோரைக் கவனித்துக்கொள்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு வருமான வரிவிலக்குச் சாதகம் உண்டு. பெற்றோர் உங்களைச் சார்ந்திராவிட்டாலும் நீங்கள் உங்கள் பெற்றோருக்கும் சேர்த்து மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தால் வரித் தளர்வு கிடைக்கும்.

பெற்றோர், ` முத்த குடிமக்களாக’ இல்லாவிட்டால்…

உங்கள் பெற்றோர் 65 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் என்றால் நீங்கள் அவர்கள் சார்பில் 15 ஆயிரம் ருபாய் வரை வரிவிலக்குக் கோரலாம். நீங்கள் உங்களுக்காக எடுத்த மருத்துவக் காப்பீட்டுக்கும் 80 டி பிரிவின் கீழ் 15 ஆயிரம் பாய் வரிவிலக்குப் பெறலாம். ஆக மொத்தம், இரண்டையும் சேர்த்து நீங்கள் 30 ஆயிரம் பாய்க்கு வரிவிலக்குக் கோரலாம்.

உங்களின் பெற்றோர் ` முத்த குடிமக்கள்’ என்றால்…

நீங்கள் உங்களின் முத்த குடிமக்கள் பெற்றோருக்கும் சேர்த்து மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தால், நீங்கள் 20 ஆயிரம் பாய் வரை வரிவிலக்குக் கோரலாம். உங்களின் சொந்த மருத்துவக் காப்பீட்டுக்கு 15 ஆயிரம் ருபாய் வரிவிலக்குக் கிட்டும். ஆக, இரண்டுக்கும் சேர்ந்து 35 ஆயிரம் ருபாய் வரிவிலக்குக் கோரலாம்.

நீங்கள் ஒரு முத்த குடிமகன் என்றால்…

நீங்கள் ஒரு முத்த குடிமகன் என்றால், உங்களின் சொந்த மருத்துவக் காப்பீட்டுக்கு .20 ஆயிரம் வரை வருமான வரி விலக்குப் பெறலாம். நீங்கள் உங்கள் பெற்றோரின் மருத்துவக் காப்பீட்டுக்கும் பணம் செலுத்துகிறீர்கள் என்றால், மொத்தமாக 40 ஆயிரம் ருபாய் வரிவிலக்குக்குத் தகுதி உடையவர் ஆகிறீர்கள்.

பொடுகே போ… போ..

பொடுகுத் தொல்லை இன்றைய சூழலில் பலருக்கு பெருந்தொல்லையாக உள்ளது. தலை முடியை தலையாய பிரச்சினையாக கருத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் இந்த தொல்லையை நீங்களும் சந்திக்கலாம்.

பொடுகுத் தொல்லை அப்போதுதான் ஆரம்பித்து இருந்தால் எளிதில் தடுத்துவிடலாம். கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் முதலில் தலைமுடியில் இருந்து ஒருவித வாடை வரும். அதன்பின் அரிப்பு, புண், எரிச்சல், முடி உதிர்தல்… என்று தொல்லைகள் நீண்டு கொண்டே போகும்.

பொடுகினை இரண்டு வகையாக பிரிப்பார்கள். ஒன்று… கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. இரண்டு… எண்ணெய் பசையுடன் இருப்பது.

முதல் வகையினை கவனிக்காமல் விட்டால் அது சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இதன் முலம் நெற்றியில் சின்ன சின்ன பருக்கள் வந்து முக அழகும் பாழாகிவிடும்.

இரண்டாம் வகையில் முடி உதிர்தல் அதிகமாக நிகழும். தலையில் இருந்து ஒருவித துர்நாற்றமும் வரும். இதன் முலம் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக தெரிந்து அழகு `மிஸ்’ ஆகிவிடும்.

இந்த தொல்லைகளை நீங்களும் அனுபவிக்க வேண்டுமா என்ன?

சரி… பொடுகு வர என்னதான் காரணம்?

இதற்கு முக்கிய காரணங்கள் ஹார்மோன் கோளாறு, தலை முடியை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுதல், தவறான உணவு பழக்கம், டென்ஷன் மற்றும் பரம்பரைத் தன்மை.

– இவை எல்லாம் சரியாக இருந்தால் பொடுகை வராமல் தடுத்துவிடலாம்.

ஒருவேளை பொடுகு வந்துவிட்டால்…

அதை தடுக்க சில டிப்ஸ் : வாரத்திற்கு 2 முறை தலைக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளியுங்கள். நீங்கள் வாங்கும் ஷாம்பு அல்லது சீயக்காய் பவுடர் தரமானதாக இருக்கட்டும். பொடுகு வந்த பின்பு தலையில் அரிப்பு அதிகமாக ஏற்படும். அதனை விரல் நகம் வைத்து சுரண்டக் கூடாது. முக்கியமாக, கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட கிரீம்களை வாங்கி தலைக்கு தேய்க்கக் கூடாது. அதிகமாக தண்ணீர் குடிக்கவும். எண்ணெய் அதிகம் உள்ள உணவு பண்டங்களை தவிர்த்து விடுங்கள். தலையணை உறைகள் மற்றும் தலையணையை சுத்தமாக வைத்து பயன்படுத்தவும். சீப்பு, தலை துடைக்கும் டவல், ஹேர் கிளிப்… என்று தலைக்கு பயன்படுத்தும் அனைத்தையுமே தனியாக பயன்படுத்தவும். அடுத்தவர்கள் பயன்படுத்தியதை எக்காரணம் கொண்டும் உபயோகிக்காதீர்கள். சீப்பை 3 நாளுக்கு ஒரு முறை வெந்நீரில் போட்டு அலசிய பின்பு பயன்படுத்துங்கள். கோபம் வரவே கூடாது. மீறி வந்தால் உடனே கட்டுப்படுத்தி விடுங்கள். வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும். எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு, வெள்ளை முள்ளங்கி சாறு – இவற்றில் ஏதாவது ஒன்றை தலையில் தேய்த்து குளிப்பதும் நல்லது.

– இவற்றை பின்பற்றி வந்தால் பொடுகுத் தொல்லை இல்லவே இல்லை, உங்களுக்கு!