உணவில் `அலர்ஜி’ ஒன்றுமில்லை! “எல்லாமே எனர்ஜிதான்,

அலர்ஜி என்று ஒன்றுமில்லை”

இது அலர்ஜி ஆய்வாளர்களின் புதுமொழி.

“எனக்கு பால் ஒத்துக்காதுப்பா”, “எனக்கு கோதுமை ஒத்துக்காது” என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். காரணம் கேட்டால் பிடிக்காது, பழக்கமில்லை, உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்று அடுக்குவார்கள். அப்படி அலர்ஜி என்று எதுவுமில்லை. எல்லாம் மனக்குழப்பம்தான் காரணம் என்கிறார்கள் டாக்டர்கள்.

* பத்தில் ஒன்பது பேர் ஏதாவது ஒரு உணவுப் பண்டத்தை அலர்ஜி என்று ஒதுக்குகிறார்களாம். குறிப்பாக பால், முட்டை, கோதுமை போன்றவற்றை ஒதுக்குபவர்கள் நிறையப் பேர் இருக் கிறார்கள்.

* இப்படி ஒதுக்குபவர்களுக்கு ஏதும் வியாதிகள் இருக்குமோ என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அவர்களாகவே சில பொருட்களை ஒதுக்கி வைத்து விடுகிறார்களாம்.

* அலர்ஜி என்று ஒதுக்குபவர்களை ஆய்வு செய்தபோது வெறும் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே உண்மையில் உணவு ஒவ்வாமை இருந்தது தெரிய வந்துள்ளது. மற்றவர்கள் தங்களை பழக்கப் படுத்திக் கொண்ட விதமே சில உணவுகளை அலர்ஜி என்று ஒதுக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

* உதாரணமாக தனக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ ஒரு வியாதி ஏற்பட்டால் அதற்கு காரணமான உணவுப் பொருளை தொடர்ந்து தவிர்க்கப் பழகுகிறார்கள். சிலர் இதை நல்ல பழக்கமென்றுகூட கருதுகிறார்கள்.

* உண்மையில் அலர்ஜி என்பது மனம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. மற்றபடி இப்படி உணவுப் பொருட்களை தடை செய்து கொள்வதால் பிற்காலத்தில் வேறு சில வியாதிகள் தோன்றக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

* அதாவது கோதுமை சாப்பிடுவதை ஒதுக்கி வந்தால் `வைட்டமின் பி’ பற்றாக்குறை ஏற்படும். பால்பொருட்களை தவிர்த்து வந்தால் `கால்சியம்’ பற்றாக்குறை ஏற்படும். இவை பிற்காலங்களில் வேறு ஏதாவது வியாதிகளைக் கொண்டு வரக் கூடும்.

* குழந்தைகள் சாப்பிட்டவுடன் வாந்தியெடுப்பதற்கும் ஒவ்வாமை காரணமாக இருக்காது. வேளை தவறிய உணவு குழந்தைகளுக்கு இதுபோன்ற நிலையை ஏற்படுத்தும். எனவே தாய்மார்கள் தவறான முடிவுக்கு வந்து குழந்தைகளுக்கு சில உணவுகளை கொடுக்காமல் நிறுத்துவதை கைவிட வேண்டும்.

* “பொதுவாக வியாதி என்பதே ஒரு இயற்கை எதிர்விளைவுதான். அதற்கான காரணத்தை அறிந்து தடுக்க வேண்டுமேயொழிய, சாப்பாடுதான் காரணம் என்ற முடிவுக்கு உடனடியாக வந்துவிடக் கூடாது” என்பதுதான் அலர்ஜி குறித்து டாக்டர்கள் கூறும் அறிவுரை.

இந்த ஆய்வில் ஈடுபட்டது தெற்கு இங்கிலாந்தை சேர்ந்த போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக டாக்டர்கள் குழுவாகும்.

%d bloggers like this: